மரங்களின் மைந்தர்கள்

திரு. அய்யசாமியைப் போலவே கர்நாடகாவில் ஒரு பெண்மணி இருக்கிறார். அவர்தான் திம்மக்கா. அவரும் அவரது கணவரும் குழந்தைப்பேறு இல்லாத வெறுமையை மாற்ற மரம் வளர்க்க ஆரம்பித்தனர்.

(மாளவிகா சருக்கையின் நாட்டிய நிகழ்ச்சிகளின் மூலம் நான் திம்மக்காவைப் பற்றி அறிந்தேன்.)

இவரைப் பற்றிய சுட்டி http://en.wikipedia.org/wiki/Saalumarada_திம்மக்க

இம்மாதிரி மனிதர்களால்தான் இன்றும் உலகம் உய்கிறது.

இவர்களுக்கு வணக்கங்களுடன்,

சுதா

ஈரோடு அருகே உள்ள ஒரு மிகச் சிறிய நகரம் காஞ்சிக்கோவில். நகருக்குள் நுழைந்து “ஏனுங்க இந்த மரம் நடுவாரே” என்று கேட்க ஆரம்பிக்கும் போதே “அட நாகாராஜண்ணன கேக்றீங்களா, அந்த வழியாப் போங்க” என்று பெருமிதத்தோடும், நம்மை பார்ப்பதில் கொஞ்சம் வெட்கத்தோடும் வழி காட்டுகிறார்கள்.

http://www.erodekathir.com/2010/04/blog-post_10.html

————

இவரை பற்றி எழுதப்பட்ட இந்த பதிவுகளயும் நான் முன்பே வாசித்து இருந்தேன் ,அப்பொழுது எனக்குள் அது ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது உண்மை ..அந்த வேகத்தில் சென்ற வருடம் நண்பர்களோடு இனைந்து பதினைந்து மரக்கன்றுகளை அவரவர் வீடுகள் இருக்கும் தெருக்களில் நட்டோம் ..இன்று அதில் ஒரே ஒரு செடி மட்டுமே பிழைத்து கொஞ்சம் மரமாக வளர்ந்து உள்ளது ..
இவர்களின் ஆத்ம சக்தி அபாரமானது ,இந்த மூவாயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தெடுக்க அவர் பத்தாயிரம் கன்றுகளாவது நட்டிருப்பார் ..எங்களால் பதினைந்து கன்றுகள் நட்டு பரமாரிக்க முடியாமல் அவைகளை இழந்து மனதில் சோர்வு மட்டும் எஞ்சியது ..இதற்கு தேவையான உழைப்பும் கவனமும் சாதாரணம் அல்ல .வீட்டிற்குள் மரம் வளர்ப்பது எளிது .பொது இடங்களில் வளர்ப்பது மிகவும் கடினம் .நிச்சயமாக இவர் ஒரு பெரும் தனி மனித இயக்கம் ,இத்தகைய மனிதர்களுக்கு சரியான அஞ்சலி -அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை அனைவருக்கும் கொண்டு சேற்பதே ஆகும் ,அப்பழுக்கு இல்லாத இத்தகய செயல்பாடுகள் அதன் சக்தியால் மேலும் பலரை இழுத்து அந்த பெரும் கனவை நோக்கி அழைத்து செல்லும் .ஈடு இணையற்ற இவரின் இழப்புக்கு நாம் செய்வது பல அய்யாசாமிகளை உருவாக்குவதே …உண்மையில் இவரை நான் சந்திக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன் ,இப்பொழுது குற்ற உணர்வில் மனம் அல்லல்படுகிறது ,ஏதோ தயக்கத்தில், சோம்பலில் அது முடியாமல் போய்விட்டது .இனி இத்தகைய மனிதர்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும் ,தவற விட்டுவிடக்கூடாது ,ஏனெனில் வாழ்க்கை மிக சிறியது ..

சுநீல் கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஇருகதைகள்