கடிதங்கள்

ஜெயமோகன்

என்னுடைய கருத்தின் தாக்கம் புத்தகக் கண்காட்சியில் சிறிய விளைவயே ஏற்படுத்தியிருக்கும் .

இந்த வருடம் என்று துவங்கி என்று வரை நடைபெறும் என்று பாபாசிக்கு கேட்டு அலுத்துப் போனேன்.(6-மாதங்களுக்கு முன்) தமிழகத்தில் இருப்பவர்கள் ஓரளவு குறுகிய கால இடைவெளியில் பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ள முடியும். வெளியில் இருப்பவர்களுக்கு 6- மாதத்திற்கு முந்தைய திட்டங்கள் தான் தேவையான மற்றும் போதுமான கால இடைவெளி.

முன்னரே தெரிந்தால் அதை ஒட்டி “கல்லூரி-பழைய மாணவர்களின்” வருடாந்திரக் ”கூடல்-2010” நடத்திவிடலாம் என்றும் திட்டம்( சில கூடல்களை 3-வருடம் முன்பே தேதி அறிவித்துவிட்டு நடத்தியிருக்கிறோம்) . இந்த தடவை அதுவும் கைகூடவில்லை. பின்னர் அறிந்து கொண்டது சென்றதடவை “சென்னைச் சங்கமத்துக்கு இடைஞ்சல் இல்லாதவாறு தேதிகளை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள நிர்பந்தமாம். ஆமாம். ரயில் போன பின்பு தானே பஸ் போகணும்.

கவலைப் படாதீகள் பாபாசி . அடுத்த வருடம் உங்களுக்கு இத்தகைய நிர்ப்பந்தங்கள் இருக்காது.

பூபதி.

Dear Jeyamohan

Why does some Tamil writers equate themselves to God ? If Creativity is their alter-ego, why doesn’t other professionals claim it ? Is it a tradition started by Kannadhasan or is there a precedence before him in literary world (both Tamil and World literature) ? I’ll be happy to know.

Thanks
Yugandar

அன்புள்ள யுகாந்தர்

நானறிந்தவரை எந்த எழுத்தாளரும் கடவுள் என்று சொல்லிக்கொண்டதில்லை. கண்ணதாசன் தெரியாமல் பாடிவிட்டார். பாவம் போனால் போகிறார், விடுங்கள்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

கூர்தெரிவு நோக்கு[பீர் ரிவ்யூ] என்ற கலைச் சொல் பற்றி.. எல்லா கலைச் சொற்களுமே முதல் வாசிப்பில் சற்று அந்நியமாகத்தான் இருக்குமென்றாலும், இது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

Peer Review மென்பொருள் துறையில் ஒரு தினசரி செயல்பாடு. ஒரே பொறுப்பில் இருக்கும் ஒருவர் மற்றொருவர் செய்த வேலையைச் சரிபார்க்கும் முறை peer review.

கூர்தெரிவு நோக்கு[பீர் ரிவ்யூ] என்ற வார்த்தையில், review என்ற வார்த்தைக்கு அர்த்தம் இருந்தாலும், peer என்பதற்கான சரியான அர்த்தம் வரவில்லை என்ன நினைகிறேன்.

உங்கள் கருத்தை அறிய விருப்பம்.

அன்புடன்
வேழமுகன்

அன்புள்ள வேழமுகன்

கல்லூரி வட்டாரத்தில் அச்சொல்லே புழக்கத்தில் உள்ளது. முனைவர் பட்டம் ஆய்வில். ஒரு சொல் இருக்கையில் ஏன் வேறு சொல் என்பதே என் கொள்கை. சொல்லில் கொஞ்சம் முன்னுக்குப்பின் மொழியாக்கம் இருந்தாலும் பொருள் காலப்போக்கில் ஏறிவிடும்

ஜெ

அன்புக்குரிய தோழர் ஜெயமோகன் அவர்களுக்கு,

கார்த்திக்கின் மார்க்ஸ்ன் காதல் குறித்த கடிதம்.

.//.எல்லோரும் மார்க்ஸையும், அவரது மூலதனம், அதன் ஆதார சுருதியான உபரிமதிப்பு எனப் பேசுகையில் எனக்கு என்னவோ அந்த சமத்துவச் சிங்கத்தின் சாகாக் காதலே நெஞ்சில் என்றும் நிற்கிறது. இதுக்குப் பெயர்தான் நம் ஊர்ப்பக்கம் சொல்லும் வயதுக் கோளாறோ ?.//..

மார்க்சுடன் இணைந்து நினைவுகூறத்தக்கவைகள் இவையல்ல என்று மிகச் சரியாக கார்த்திக் தன் வயசுக் கோளாறை சுட்டும் தறுணத்தில், நீங்கள் / மார்க்ஸ்- ஜென்னி காதல் என்பது பின்னாளில் மார்க்ஸிய பிரச்சாரகர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று உறுதியிட்டுச் சொல்லியிருப்பது ஏற்புடையதாக இல்லை. // Marx Engels Collected Works // போன்ற நிறைய ஆக்கங்களில் மார்க்ஸ்- ஜென்னி காதல் ஜென்னியின் வாசகங்களாகவே எளிதில் பெறத்தக்கவையே. மார்க்ஸ் குறித்த இன்னொரு பார்வை என்ற அளவில் நீங்கள் கடுமையாக முன்வைத்திருப்பது இன்னொரு தரப்பு என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதானோ – இதுபோன்ற விபரங்களைப் பின் தொடர்ந்து செல்லும்போது நாம் கேட்பது நிழலின் குரலா நிஜத்தின் குரலா என்பது விளங்கவில்லை

அன்புடன்

ரவிச்சந்திரன்.

மார்க்ஸ் ஜென்னி காதலைப்பற்றிய பிரமைகளை அல்லது கதைகளை எங்கல்ஸின் எழுத்துக்களைக்கொண்டு மார்க்ஸ் மறைந்த பின்னர் அவரது மாணவர்கள் உருவாக்கினர். ஹெலன் டெமுத் சார்ந்து மார்க்ஸ் பற்றி உருவான அவச்சித்திரத்தை மறைப்பதற்காக இது உருவாக்கப்பட்டது. பின்னர் மார்க்ஸின் அதிகாரபூர்வ வரலாறுகளில் எல்லாம் சேர்க்கப்பட்டது

ஜெ

முந்தைய கட்டுரைஅறம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅறம், மேலும் கடிதங்கள்