ஜீவா வலைப்பூ

ஜீவாவை எனக்கு பத்து வருடங்களாகத்தெரியும். அதற்கு முன்னரே நாஞ்சில்நாடன் நிறையச் சொல்லியிருந்தார். நிறைய விசித்திரங்கள் கொண்டவர். வழக்கறிஞர், ஆனால் அவரது தொழில் விளம்பரப்பலகைகள் உருவாக்குவது. ஓவியர், ஆனால் சினிமாவைப்பற்றிய கட்டுரைகள் வழியாகவே அவர் புகழ்பெற்றிருக்கிறார். ரசனை இதழில் அவர் எழுதும் சினிமாக்கட்டுரைகள்தான் தமிழில் சினிமா குறித்து எழுதப்பட்டும் மிகச்சிறந்த கட்டுரைகள் என்று நான் நினைக்கிறேன். தெளிவான மொழி. மிகையான அரசியல் தத்துவ அலட்டல்கள் இல்லாத கோணம். முக்கியமான படங்களை தேர்வுசெய்யும் முறை முதலியவை அவரது பலங்கள்.

ஜீவா நாஞ்சில்நாட்டுக்காரர். அவரது சொந்த ஊர் பூதப்பாண்டி. தோழர் ஜீவானந்தம் பிறந்த ஊர். அவருடைய பெயரும் அந்நினைவாகவே வைக்கப்பட்டது. ஆனால் ஜீவாவுக்கும் பூதப்பாண்டிக்கும் ‘ஐதீக’ தொடர்பு அல்லாமல் வேறு தொடர்பு ஏதும் கிடையாது. ஊருக்கு வந்தால் ஆட்டோவில் சென்று ஊரை ஒருமுறை சுற்றி வருவார். அவர் பிறந்த ஊர் வேறு, வளர்ந்த ஊர் வேறு , இருக்கும் ஊர் வேறு .நெஞ்சில் உள்ள ஊர் நாஞ்சில் நாடு.

நிறையப்படிக்கும் வழக்கம் கொண்டிருந்தார் ஜீவா. இப்போது படிக்கிறாரா இல்லை சினிமா மட்டும்தானா தெரியவில்லை. அவரது தம்பிதான் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரான மணிகண்டன்.

ஜீவாவின் வலைப்பூ ஒன்று தோன்றியிருக்கிறது

http://jeevartistjeeva.blogspot.com/

முந்தைய கட்டுரைபாவ மௌனம்:விவாதம்
அடுத்த கட்டுரைசாங்கிய யோகம் (39 – 53) : செயலெனும் யோகம்