தினசரி தொகுப்புகள்: September 2, 2014

மலைச்சாரலில்…

இருபத்துநான்கு முதல் குற்றாலத்தில் இருந்தேன். பழையகுற்றாலம் அருகே எசக்கி விடுதியில். பாபநாசம் படப்பிடிப்பு. கருமேகம் மூடிய மலையடுக்குகள். ஒருநாளில் ஐம்பதுமழை. வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. மொத்தப்படப்பிடிப்பையும் ஜித்துவுக்கும் மழைக்குமான போராட்டம் என்று...

ஒரு வெறியாட்டம்

அன்புள்ள ஜெமோ கண்ணனைப் பற்றி உருகி உருகி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் ஃபேஸ்புக்கில் இந்த இணைப்பைப் பார்த்தேன். அதற்குமேல் ஒன்றும் சொல்வதற்கில்லை ராம் https://www.facebook.com/video.php?v=891871817509696 அன்புள்ள ராம் இந்த மோசடி ஆசாமியைக் கண்டுபிடித்து கூண்டிலேற்றுவது மிக எளிது. குழந்தையைக் கொடுத்துவிட்டு கடைசியில் சென்று வாங்கும்...

கண்ணனை அறிதல்- பாலா

சென்னையிலும் கொஞ்சம் குளிர் தென்படும் மார்கழி மாதம். வருடம் 1998. மாலை 5 மணி இருக்கும். படபடப்புடன் மருத்துவமனையின் பிள்ளைப் பேறு அறைக்கு வெளியே காத்திருக்கிறோம். குரங்குக் குட்டி அன்னையிடம் ஒட்டி இருப்பது...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 14

பகுதி ஐந்து: 2. நறுவெண்ணை மின்னற் கனவுகள் மின்னி மின்னி அணைந்துகொண்டிருந்த மேகக்கருவானை நோக்கியபடி ஆயர்குடியின் சாணிமெழுகிய திண்ணையில் அமர்ந்து மடிக்குழியில் இளையோனும் தோள்சாய்ந்து மூத்தோனும் அமர்ந்திருக்க ரோகிணி கதைசொன்னாள். அவள் முந்தானை முனையை விரலில்...