jeyamohan.in

ஹனீஃபாக்கா
மதராசப்பட்டணம் படத்தை இன்னொருதடவை பார்க்கச் சென்றிருந்தேன், முதல்தடவை சைதன்யா பார்க்கவில்லை. நான் திரையரங்கில் இருந்து ‘உன் படத்தை மீண்டும் பார்க்கப்போகிறேன். எப்படி தாங்கப்போகிறேன் என்று தெரியவில்லை’ என்று ஆரியாவுக்கு வேடிக்கையாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். உரக்கச்சிரித்தபடி  ‘ஏன் அந்த விஷப்பரீட்சை?’ என்று தொலைபேசியில் கேட்டார். முதலில் பார்த்தபோது வெகுநேரம் எனக்கு படத்துடன் இணைய முடியவில்லை. காரணம் கொச்சின் வி.எம்.சி. ஹனீஃபா.

படத்தின் தொடக்கத்தில் அவரது படத்தைக் காட்டி அவர் நடித்த கடைசிப்படம் என்றார்கள். அதன் பிறகு படம் முழுக்க நான் அவரது கண்களைச் அண்மைககட்சியில் சந்திக்கும்போதெல்லாம் ஓர் அதிர்ச்சியை அறிந்துகொண்டிருந்தேன். படத்தில் அவரை அவராகவே கண்டுகொண்டிருந்தேன். அமைதியிழந்தவனாக நினைவுகளில் அலைந்து அலைந்து மீண்டேன்.

மதராசபப்ட்டினம் ஹனீஃபாக்காவின் தேர்ந்த நுண்ணிய நடிப்புக்கு மிகச்சிறந்த உதாரணம். நகைச்சுவை என்றால் வசனங்களை கத்தவேண்டும் முகபாவனைகளில் மிகை வேண்டும் என்ற வழக்கமான நம்பிக்கைகளை மிக எளிதாகக் கடந்துசென்றிருக்கிறார். அதில் அவர் செய்வது நம்பி என்ற கதாபாத்திரத்தை. அந்தக்கதாபாத்திரத்தின் இயல்புமூலம் உருவாகும் மெல்லிய வேடிக்கையையே நகைச்சுவையாக முன்வைக்கிறார். சிரிக்க வைப்பதில்லை, புன்னகைக்கச் செய்கிறார்.

புகைப்படம் என்ற நவீன காலகட்டத்தில் தானும் பதிந்துவிடவேண்டும் என்று தவிக்கும் எளிமையான ஆத்மா. கொஞ்சம் நல்லியல்புகள், கொஞ்சம் அற்பத்தனங்கள், கொஞ்சம் கோழைத்தனம். முகபாவனைகள் சரளமாக மாறிக்கொண்டே இருக்கின்றன. ‘உன் கழுதையைப்பிடிச்சிருக்கு’ என்று சொல்லுமிடத்தில் அந்த முகம், அது அவருக்கே உரியது.

கஸ்தூரிமானுக்காக லோகி திட்டமிட்டுக்கொண்டிருந்தபோது லோகியின் பாலக்காட்டில் லக்கிடி கிராமத்து வீட்டில்தான் ஹனீஃபாக்காவை சந்தித்தேன். அந்த நாளில்தான் முரளியையும் சந்தித்தேன். மாலை ஏழுமணிக்கு நான் செல்லும்போது மூவரும் முற்றத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். மூவருமே மது அருந்துவதுபோல தோன்றியது. ஹனீஃபாக்கா குடிக்கமாட்டார் கம்பெனிமட்டும் கொடுப்பார் என்று பிறகு தெரிந்தது.

நான் அறிமுகம் செய்துகொண்டதுமே ஹனீஃபாக்கா சகஜமாக பேச ஆரம்பித்துவிட்டார். அது அவரது இயல்பு.  என்னைப்போல அவருக்கு பழக்கமானவர்கள் பத்தாயிரம்பேராவது இருந்திருக்கலாம். எல்லாரிடமும் அவருக்கு ஆத்மார்த்தமான உறவும் இருந்திருக்கும். ‘நீ நாயரா?’ என்றார் என்னிடம். ‘ஆமாம்’ என்றேன். ‘குடித்துப்பார். நல்ல நாயரென்றால் மூன்றாம் ரவுண்டுக்குப் பின் லெஃப்ட் ரைட் வைப்பான்’ என்றார்.

முரளி மூன்றாம் ரவுண்டுக்குப் பின்னர் அவரது லங்காலட்சுமி நாடகத்தைப்பற்றிச் சொல்லி அதன் சில காட்சிகளை நடித்தும் காட்டினார். ஒயிலாக்க நாடகத்துக்குரிய வகையில் அவர் காலெடுத்து காலெடுத்து வைத்தபோது ஹனீஃபாக்கா என்னிடம் சீரியஸாக ‘நான் சொன்னேன் இல்லை?’ என்றார். அந்த தீவிர கணத்தில் சிரித்திருந்தால் அங்கே கொலை விழுந்திருக்கும். சிரிப்பை அடக்க நான் பல்லைக் கிட்டித்துக்கொண்டேன்.

அதன்பின்னர் கஸ்தூரிமான் படப்பிடிப்பில் எடுக்கும்போது மீண்டும் ஹனீஃபாக்காவைச் சந்தித்தேன். அந்தப்படத்தில் மீரா ஜாஸ்மினிடம் வழியும் வீட்டு உரிமையாளர் கதாபாத்திரத்தில் மூலத்தில் ஹனீஃபாக்கா நடித்திருந்தார். தமிழில் ஒரு தமிழ்நடிகரை நடிக்கச்செய்யலாமென நான் சொன்னேன். ஆரம்பத்தில் முழுக்கமுழுக்க தமிழ் நடிகர்கள் என ஒத்துக்கொண்டிருந்த லோகி படிப்படியாக மலையாள நடிகர்களையே கொண்டுவர ஆரம்பித்திருந்தார். தமிழ்நடிகர்களின் ஒரேமாதிரியான செயற்கையான உடலசைவுகள் அவருக்குச் சலிப்பூட்டின. நுட்பமாக நடிக்கக்கூடியவர்களுக்குக் கொடுக்குமளவு பணம் இல்லை. ஆகவே ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் நாலைந்து நடிகர்களை வரவழைத்துப் பேசியபின் மலையாள நடிகர்களையே ஒப்பந்தம் செய்ய நேர்ந்தது.  அதே போக்கில் ஹனிஃபாக்காவையும் லோகி கூப்பிட்டார்.

ஹனீஃபாக்கா லோகியின் நண்பர், நண்பருக்கும் மேல். தொலைபேசியில் ‘ஆ ஹனீஃபா…இது நான்தான்.நாளைக்கு நேரமிருந்தால் கோயம்புத்தூருக்கு வா’ என்றார் லோகி. மறுநாள் ஹனீஃபாக்கா வந்திருந்தார். கேப்டன் வீரபாண்டியின் வசனங்களை அவர் ஒருவகையில் பேசி தயாரித்துக்கொண்டார் மொத்தம் மூன்றே நாட்களில் அவரது பங்கை நடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார். அந்த மூன்றுநாளும் நான் அவரிடம் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்தேன்.

தனிப்பேச்சில் ஹனீஃபாக்காவிடம் அதிகம் நகைச்சுவையை பார்க்கமுடியாது. எப்போதும் பயணக்கவலைகளில் இருப்பார். கூடவே செல்பேசி வழியாக தன் சொந்த வீட்டையும் நிர்வாகம் செய்துகொண்டிருப்பார். சிலசமயங்களில் அவரது இயல்பான நகைச்சுவை வரும். லோகி படப்பிடிப்பில் தலையில் ஒரு துண்டு கட்டியிருப்பார். தாடியுடன் அப்போது அவரைப்பார்க்க பரதனின் சாயல் தெரியும். ‘இவன் யாரு, பரதனைக் கொண்டுபோனபோது சிந்தினதா?’ என்றார் ஹனீஃபாக்கா.

தன்னுடைய நடிப்பைப்பற்றி பிறர் புகழ்ந்து பேசினால் குழந்தை மாதிரி உற்சாகமாகக் கேட்பார். அவர் இயக்கிய படங்களை பற்றி எந்தவகையான மதிப்பும் அவருக்கு இல்லை. விதிவிலக்குகள் லோகி எழுதி அவர் இயக்கிய ஜாதகம் மற்றும் வாத்ஸல்யம்.  ‘சினிமா எடுத்து சினிமா செய்ய கற்றவர் பத்மராஜன். நான் சினிமா எடுத்து சினிமா செய்யாமலிருக்க கற்றேன்’ என்றார் ஹனீஃபாக்கா. ‘இனி டைரக்‌ஷன் இல்லை..போதும்’ என்றார்.

அதன்பின் நான் அவரைச் சந்தித்தது டப்பிங்கில்.  உள்ளே இன்னொருவர் பேசிக்கொண்டிருக்க நான் வெளியே அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது இயல்பாக ‘ஹனீஃபாக்கா’ என்று அழைத்தேன். அவர் அதைக் கவனிக்காதவர் போல தெரிந்தது. ஆனால் உள்ளே செல்லும்போது ‘வரட்டே மோனே’ என்றார்.  அன்றுதான் அவரை நான் கடைசியாக பார்த்தது. அதன்பின் எத்தனையோ படங்களில். இப்போது அவர் நடிகராக அல்ல என் சொந்த ஹனீஃபாக்காவாக தெரிந்தார்.

ஹனீஃபாக்காவின் திரைவாழ்க்கையில் திருப்புமுனை என்றால் அது கிரீடம் படம்தான். லோகி உருவாக்கிய ‘ஹைத்ரோஸ்’ என்ற கோழையான ரவுடியின் கதாபாத்திரம் ஹனீஃபாக்காவின் உருவத்துக்கும் முகபாவங்களுக்கும் மிகக்கச்சிதமாகப் பொருந்தி போயிற்று. அதன்பின் ஹனீபாக்கா நடித்த கணிசமான கதாபாத்திரங்கள் ஹைத்ரோஸின் பல்வேறு வடிவங்கள்தான்.’ பலவருடங்களாக ஹைத்ரோஸாகவே நடிக்கிறீர்களே சலிக்கவில்லையா” என்று கேட்டேன்.  ‘சாகரா காலகட்டத்திலே நாங்கள் மத்தியால்தான் காலையிலே பல்தேய்ப்பது. ஆனாலும்  சலிக்காது’ என்றார் ஹனீஃபாக்கா [சாகரா என்றால் கேரளக்கடற்கரையில் மிக அதிகமாக மீன் கிடைக்கும் ஒருகாலகட்டம்]

சலீம் முகமது ஹௌஷ் என்பது ஹனீஃபாக்காவின் சொந்தப்பெயர். என்னுடைய பிறந்தநாள்தான் அவருக்கும் ஏப்ரல் 22. ஆனால் ஒன்பதுவருடம் மூத்தவர், 1951. கொச்சியில் வெளுத்தேடத்து வீட்டில் ஏ.பி.முகமதுவுக்கும் ஹாஜிராவுக்கும் மகனாகப் பிறந்தார். செயிண்ட் ஆல்பர்ட் கல்லூரியில் தாவரவியலில் பட்டப்படிப்பு படிக்கும்போதே மிகச்சிறந்த தனிமனிதநடிப்பு நிபுணராக அறியப்பட்டார்.  கொச்சின் கலாபவன் என்ற கலைநிறுவனம் குரல்போலிக்கலை, மேடைநகைச்சுவைக்கலை ஆகியவற்றில் எழுபதுகள் முதல் பெரும்புகழ்பெற்றிருந்தது. அதில் இருந்து திரைக்கு வந்த ஆரம்பகால நடிகர் ஹனீஃபா.  லோகி இந்த கலாபவனுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். கலாபவன் மணி முதல் திலீப் , பிந்துபணிக்கர் வரை பல கலைஞர்களை லோகிதான் திரைக்குக் கொண்டுவந்தார்

ஹனீஃபாக்கா மிகச்சிறந்த இலக்கிய வாசகர். மாதவிக்குட்டியின் ரசிகர் என்றே சொல்லலாம்.  தொண்ணூறுகள் வரை சமகால இலக்கியம் மீது கூர்ந்த கவனிப்பு அவருக்கிருந்தது.  நடிகராகப் புகழ்பெற்றபின் வாசிப்பு குறைந்தது. அவர் எழுத்தாளராகத்தான் திரைக்கு வந்தார் என்பது பலர் அறியாதது. 1977ல் ஏ.பி.ராஜ் இயக்கிய ’அவள் ஒரு தேவாலயம்’ என்றபடத்துக்கு கதை- திரைக்கதை எழுதியதுதான் அவரது திரைநுழைவு. அதன்பின்னர் 15 படங்களுக்கு கதை- திரைக்கதை எழுதியிருக்கிறார். அவரது  எழுத்தில் சிறந்த படம் என்றால் 1984ல் ஜோஷி இயக்கத்தில் வெளிவந்த சந்தர்ப்பம் என்ற படம்தான்.  மம்மூட்டியும் சரிதாவும் நடித்த இந்த மாபெரும் வெற்றிப்படம் விவாகரத்து குழந்தைகளில் உருவாக்கும் எதிர்மறை விளைவுகளைப்பற்றிய அழுத்தமான கலைப்படைப்பு.

1979ல்  ஒரு சிறு வேடத்தில் ’அஷ்டவக்ரன்’ என்ற படத்தில் தோன்றினார் ஹனீஃபா. சொல்லப்போனால் லோகியின் கண்கள் அவர்மேல் படுவதுவரை அவரது திரைவாழ்க்கை கௌரவமானதாக இருக்கவில்லை.  நண்பருடன் சேர்ந்து சில்க் ஸ்மிதா நடித்த பாலியல்படம் ஒன்றையும் தயாரித்து நடித்திருக்கிறார். அவரது தோற்றம் காரணமாக வில்லன் வேடங்களையே செய்ய வாய்ப்புகள் வந்தன.

1989ல் கிரீடம் வந்தது. அத்துடன் அவர் நகைச்சுவை நடிகராக அறியப்படலானார். விபச்சாரியின் மகனாகப் பிறந்து சிறுவயது முழுக்க விதவிதமான மனிதர்களின் அடிகளையும் வசைகளையும் வாங்கி வளர்ந்து பிழைப்புக்காக கேடியாக வேடமிட்டு உள்ளூர அஞ்சி அஞ்சி வாழும் ஹைத்ரோஸ் இன்றும் மலையாளிகளின் பிரியத்துக்குரிய கதாபாத்திரம்.  கிரீடத்தின் இரண்டாம்பகுதியாக 1993ல்  வெளிவந்த செங்கோலில் அக்கதாபாத்திரத்தை முழுமையாக்கினார் ஹனிஃபாக்கா.

ஹனீஃபாக்காவின் திரைவாழ்க்கையின் வெற்றிகள் அனைத்திலும் லோகி இருந்திருக்கிறார். லோகி எழுதிய பெரும்பாலான படங்களில் அவர் நடித்திருக்கிறார். ஹனீஃபாக்கா ஏழு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 1985ல் ’ஒரு சந்தேசம்கூடி’ அவரது முதல் படம். தமிழில் ஆறுபடங்களை இயக்கினார். கடைசியாக 1994ல் அவரே எழுதி பீஷ்மாச்சாரியா என்ற படத்தை இயக்கினார்.   ஆனால் லோகி எழுதி அவர் இயக்கிய ஜாதகம், வாத்ஸல்யம் ஆகிய இருபடங்களையே அவரது சாதனைகளாகச் சொல்லமுடியும். வாத்ஸல்யம் படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான கேரள அரசு விருதையும் லோகி இயக்கிய சூத்ரதாரன் படத்தின் நடிப்புக்காக சிறந்த குணச்சித்திரநடிகருக்கான விருதையும் பெற்றார்.

பிரியத்தால் கனிந்த குரலுடன் மட்டுமே லோகி ஹனீஃபாவை பற்றிப் பேசியிருக்கிறார். ‘என்னுடைய சினிமா வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் கலந்தே பார்த்திருக்கிறேன். ஒரு எள்முனையளவுக்குக்கூட தீய அம்சங்கள் இல்லாத மனிதர் ஹனீபா.  நான் புனிதர்களை பார்த்ததில்லை. நான் பார்த்தவரையில் ஹனீஃபா ஒரு புனிதர் என்றே சொல்வேன். எனக்குத்தெரிந்த மனிதர்களில் எவர் படத்தையாவது என் பூஜையறையில் வைப்பதாக இருந்தால் அது ஹனீஃபாவின் படம்தான்’

லோகியின் இக்கட்டுகளில் எல்லாம் ஹனீஃபா கூட நின்றிருக்கிறார். தன் பணம் வேறு லோகி பணம் வேறு என்றுகூட அவர் பார்த்ததில்லை. பல தருணங்களை லோகி சொன்னபோது மனிதர்களை மனிதர்களுடன் இணைப்பது வாழ்க்கை மட்டுமல்ல அதற்கும் அப்பால் உள்ள பிறிதொரு பெரும் ஆற்றல் என்றே தோன்றியிருக்கிறது.

மதராசப்பட்டினத்தின் இறுதியில் ஒரு காட்சியில் ஹனீஃபாக்கா படமாக தெரிவார். படமாகவேண்டுமென துடித்த நம்பியின் ஆத்மாவுக்கு பொருத்தமான முடிவு. மலையாள சினிமாவில் ஹனீஃபாக்கா ஓர் அழியாத முகம்தான்

லோகிததாஸ் வாழ்க்கைக்குறிப்பு http://www.jeyamohan.in/?p=5472

லோகி,மலையாளசினிமா:கடிதங்கள் http://www.jeyamohan.in/?p=4686

உப்பிட்ட வாழ்க்கைகள் : லோகிததாஸின் திரைக்கதைகள் 3 http://www.jeyamohan.in/?p=4544

உப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்) 2 http://www.jeyamohan.in/?p=4523

உப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்) http://www.jeyamohan.in/?p=4519

கதையின் காணப்படாத பக்கங்கள்,லோகிததாஸ் http://www.jeyamohan.in/?p=4516

உப்பிட்ட வாழ்க்கைகள்: லோகிததாஸின் திரைக்கதைகள் 4 http://www.jeyamohan.in/?p=4552

http://www.jeyamohan.in/?p=4195

ஏ.கே.லோகிததாஸ்:நீண்ட உரையாடல் 2

ஏ.கே.லோகிததாஸ்:நீண்ட உரையாடல்-1 http://www.jeyamohan.in/?p=4190

http://www.jeyamohan.in/?p=3624

முரளி

http://www.jeyamohan.in/?p=3377 லோகி.5, தனியன்

http://www.jeyamohan.in/?p=3372 லோகி4,

http://www.jeyamohan.in/?p=3352 லோகி. 3, ரசிகன்

http://www.jeyamohan.in/?p=3322

லோகி,2. கலைஞன்

சுஜாதாவை கைவிட்டது எது?
அன்புள்ள ஜெ.

இந்த கேள்வி திரு.சுஜாதா அவர்களைப்பற்றி !

மருத்துவமனையில் இருந்தபோது, மருத்துவர்கள் ஸ்ட்ரோக் என்றதாகவும், கை வரவில்லை என்றதும் “I’m dropped” என்று சொன்னதாகவும் அவர் மனைவியின் விகடன் பேட்டியை பதிவர் நண்பர் மூக்கு சுந்தருடைய பதிவில் படித்தேன். அன்றிலிருந்து எண்ணும்போதெல்லாம் மனதில் உறுத்தல்.

இலக்கியம் மனிதனை எங்கும் இட்டுப்போகாது (அல்லது இலக்கியத்தின் எல்லையை சுட்டும் அதுபோன்ற ஒரு வாக்கியம்) என்று குரு.நித்யாவை கண்டடைந்தபோது நீங்கள் உணர்ந்ததை எழுதியிருக்கிறீர்கள். இருப்பினும் இந்த ஐயம்.

தீவிர வைஷ்ணவராக இருந்தும், (வைஷ்ணவ அடிப்படைக்கோட்பாடு சரணாகதித் தத்துவம் என்று படித்த நினைவு, இதுபற்றியும் அறிந்துகொள்ள ஆவல்) அவரால் பணிந்து வணங்க இயலவில்லையா அல்லது தகுந்த பாதங்கள் கிடைக்க வில்லையா ? (“எழுத்தாளன் தன் அகங்காரத்தைக் கழற்றிவைத்து வணங்கக் கூடிய காலடி ஒன்று இருக்கவேண்டும்”) அல்லது எது குறித்துமான அவரது அறிவியல்பூர்வமான பார்வை இதுபோன்ற உணர்ச்சிகளிலிருந்து அவரை பிரித்து வைத்துவிட்டதா ?

கோர்க்கி பற்றி நித்யாவின் நூல் குறித்த உங்களது கட்டுரையை இணைவைத்து யோசிக்கையில் தேர்ந்த வாசிப்பும் உயர்ந்த ரசனையும் இருந்தும் சுஜாதாவை அவரது அறிவுக்கூர்மையே ஒருவேளை கூன்போட வைத்துவிட்டதோ என்று தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை.

ஏன் தான் கைவிடப்பட்டதாக தோன்றியது அவருக்கு அந்த இறுதி நாட்களில் ? அல்லது, கை செயலற்றுப்போனதை குறியீட்டுரீதியாக எழுத்தை இழந்துபோனதாக நினைத்த ஒரு எழுத்தாளனின் மனச்சோர்வா அது ?

இது குறித்து கொஞ்சம் விளக்க முடியுமா ?

அன்புடன்

முத்துக்குமார்.

அன்புள்ள முத்துக்குமார்,

ஆயுர்வேதத்தில் எல்லா மருந்துக்களிலும் இரு கூறுகள் உண்டு. ஒன்று, வாகனம். பிறபச்சிலைகளின் மருந்துச்சத்துக்களை தன்னில் கரைத்துக்கொண்டு உடலுக்கு கொண்டு செல்வது அது. நெல்லிக்காய் முதலியவை.  இரண்டாவது தாரணம். மருந்து கெடாமல் பாதுகாக்கும் நெய் போன்ற பொருட்கள்.

இலக்கியம் என்பது வாகனம் போலத்தான்.  அது மருந்து இல்லை. அதற்கென தரிசனம் இல்லை. அது பிற தரிசனங்களை தன்னில் கரைத்துக்கொண்டு எடுத்துச் செல்கிறது.   ஆகவே இலக்கியம் தன்னளவில் நமக்கு எதையும் அளிப்பதில்லை. தரிசனத்தை அறிவாக அளிக்காமல் அனுபவமாக ஆக்கித்தருகிறது இலக்கியம், அவ்வளவுதான். சடங்குகளும் அமைப்புகளும் தாரணம் போல, தரிசனத்தைப் பாதுகாத்து நிலைக்கச் செய்கின்றன.

இலக்கியம் மட்டும் மனிதர்களை மேம்படுத்துவதில்லை, விடுதலை செய்வதில்லை என்பதை நான் எப்போதுமே உணர்ந்திருக்கிறேன்.  இது கலைகள் அனைத்துக்குமே பொருந்தும். சொல்லப்போனால் தூயகலை ஒருவனின் நுண்ணுணர்ச்சியை பெருக்கி அவனை பிற அனைத்திலும் பொறுமையற்றவனாக ஆக்கக்கூடும். நல்ல இசை ரசிகர்கள் பிற எல்லா சத்தங்களுக்கும் எதிராக, சிடுசிடுப்பானவர்களாக ஆவதைக் கண்டிருக்கிறேன்

கலையும் இலக்கியமும் எதை ஏற்றிக் கொண்டு வருகின்றன என்பதே முக்கியமானது. நேர்மையான கலை எப்போதும் ஆழமான தரிசனங்களை கொண்டுள்ளது. அந்ததரிசனங்களின் உட்சிக்கல்களையும் நடைமுறைப்பிரச்சினைகளையும் வெளிப்படுத்துகிறது. அதன் உச்சியில் வாசகனை நிறுத்துகிறது. அந்த தரிசனத்தை எழுத்தாளன் தன் வாசிப்பு மூலமும், அனுபவம் மூலமும், உள்ளுணர்வின் மூலமும் அடைகிறான். அவற்றுக்கிடையேயான முரணியக்கம் வழியாக அவற்றை அவன் கண்டடைகிறான்.

சுஜாதாவின் எழுத்து அப்படிப்பட்டதா என்ன? இல்லை, அது கொஞ்சம் தர்க்கஅறிவும் கொஞ்சம் அழகுணர்வும் கலந்த ஒரு விளையாட்டு மட்டுமே.  குறைவான ஆக்கங்களிலேயே சுஜாதா இலக்கியத்தின் நேர்மையான தீவிரத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறார். அவருக்கு இலக்கியம் என்றால் என்ன என்று தெரியும்.  ஆனால் அந்த சவாலை அவர் சந்தித்ததே இல்லை. அவரது எழுத்துமனநிலையை ’தவிர்த்துச்செல்லும் தன்மை கொண்டது’ என்றே நான் சொல்வேன் [Evasive ]அது அவரது ஆளுமையின் ஆதார இயல்பு.  அவரது இலக்கிய இடம் என்பது அவரது ஆர்வமூட்டும் மொழியாட்சிகளுக்காகவும் சில ஆக்கங்களில் வெளிப்பட்ட நடுத்தரவற்க உளவியல்சித்தரிப்புக்காகவும் மட்டுமே

சுஜாதா சொன்ன இறுதி வார்த்தைகளை இந்தப்புலத்தில் வைத்துப் பார்க்கையில் அந்த வார்த்தைகள் வழியாக அவர் எதை உத்தேசித்தார் என்று நம்மால் சொல்லிவிட முடியாது. இந்த வகையான தருணங்களை எளிமையாக வகைப்படுத்தி ஆராய்வதும் சரியாக இருக்காது. ஆகவே சுஜாதாவின் படைப்புகள், கருத்துக்கள், ஆளுமையை வைத்து இதைப்பற்றி யோசிக்கலாம். அதாவது சுஜாதா என்ற எழுத்தாளனை மீண்டும் விவாதிப்பதற்கு இதை பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வளவுதான்.

மேலும் இவ்வகையான அடிப்படை வினாக்களுக்கு நேரடியான எளிய பதில்களை கண்டுபிடிப்பது சாத்தியமல்ல.  அந்த பதில் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் சாரமான பதில் அல்லவா? அதை ஒருவர் தன் சிந்தனையும், அனுபவமும், நுண்ணுணர்வும் சந்திக்கும் ஒரு புள்ளியில் உண்ர்ந்துகொள்ளத்தான் முடியும். இலக்கியம் எழுதப்படுவது அப்படி உணரவைப்பதற்காகவே.

சாதாரண மனிதர்களின் அகம் செயல்படும் விதமே மிகச்சிக்கலான ஒன்று என்னும்போது இலக்கியவாதியின் மனம் பற்றி சொல்லவேண்டியதில்லை. இலக்கியவாதியின் மனம் படிமங்கள், சொற்கோவைகள் வழியாக தனக்கான தனித்த தர்க்கம் ஒன்றில் செயல்படக்கூடியது. அந்த தர்க்கம் இலக்கிய ஆக்கத்துக்கு பயனுள்ளதாக இருக்கும்போதே இலக்கியத்திற்கு வெளியே பொதுத்தளத்தில் அபத்தமாகவும் இருக்கக் கூடும். இத்தனை நிபந்தனைகள் மற்றும் முன்ன்ச்சரிக்கைகளுடன் பேசவேண்டிய ஒன்று இது

எந்த ஒரு நல்ல எழுத்தாளனையும்போலவே சுஜாதாவும் ஒன்றுக்கு மேற்பட்ட அக இருப்புகளின் கலவை. அவற்றுக்கு இடையேயான போராட்டமே அவரது எழுத்தின் செயல்விசை. ஒருமுறை சுஜாதாவிடம் ‘வசந்த் விலாசம் குடுங்க சார்’ என்று ஒரு பெண் கேட்டபோது  ’என் விலாசம்தான்’ என்று சொன்னார் என்று கேள்விப்பட்டேன். கணேஷின் விலாசமும் அவரதுதான்.

சுஜாதாவை நேரில் பழகியவர்களுக்கு தெரியும், அவர் எழுத்தில் எப்போதுமிருக்கும் துள்ளலும் அலட்சியமும் கொண்ட நகைச்சுவை அவரது ஆளுமை அல்ல என்று. அவர் பெரும்பாலான நேரங்களில் நடைமுறைவாதியான, கொஞ்சம் சிடுசிடுப்பான, உள்வாங்கிய மனிதராகவே காணப்படுவார்.  சொல்லப்போனால் தமிழ் எழுத்தாளர்களில் அவருடன் உற்சாகமாக, அவரை கிண்டல்செய்தெல்லாம் பேசிக்கொண்டவர்களில் நானும் ஒருவன். ஆனால் எனக்கே அப்படித்தான் தோன்றியிருக்கிறது. பிறரது அனுபவங்கள் இன்னும் மோசம்.

பழகக் கிடைக்கும் சுஜாதா இரண்டு மனிதர். மிக அபூர்வமான தருணங்களில் பேசிக்கொண்டே இருப்பார். பேச்சு தாவித்தாவிச் செல்லும். நிறைய தகவல்கள், நிறைய இடதுகை புறக்கணிப்புகள்.  மற்ற சமயங்களில் மனிதர்களிடம் பேசவே அவருக்கு பிடிக்காதென்று தோன்றும். இரு தருணங்களிலும் அவரிடம் உரையாடலில் நகைச்சுவை அரிதாகவே வெளிப்படும்.

ஆனால் எழுத ஆரம்பிக்கும்போது அவருக்கு நகைச்சுவை தன்னிச்சையாகவே வெளிப்படுகிறது. நகைச்சுவையை அவர் உருவாக்கவில்லை அது வந்தது. ‘சீரியஸா எழுத என்னால முடியலை.  உன்னை மாதிரி ஒரு கட்டுரை எழுதிரணும்னு ஆசை. முடியாது’ என்றார். ‘அன்றாட லௌகீக வாழ்க்கையிலே நான் ரொம்ப நெர்வஸான ஆளு. உள்ளுக்குள்ள பதறிட்டே இருப்பேன்.  எங்கோ எதுவோ தப்பா ஆயிடப்போகுதுன்னு தோணும். எல்லாமே சீரியஸ்தான். என் ரூமுக்குள்ள கதவ சாத்திட்டாத்தான் நான் சேஃபா, கம்ஃபர்டபிளா இருக்கேன். ஆனா எழுத ஆரம்பிச்சதுமே மொத்த லைஃபே ஒருவேடிக்கைன்னு தோணிடுது.  இந்த அபத்த உணர்ச்சி இல்லாமல் என்னால எதையுமே பாக்க முடியறதில்லை’ சுஜாதாவின் ஆளுமையின் ஒரு முரணியக்கம் இது.

நான் அவரிடம் ‘நீங்க எவ்ளோ பெரிய ஆபீசர்.  லௌகீகமா வீக்னா எப்டி அந்த வேலைய செய்யமுடியும்?’ என்றேன் ‘ நீ ஒண்ணு. அது ஒண்ணும் வேலையே இல்ல. தப்பு செஞ்சா வேற யாரும் கண்டு புடிச்சு அதட்டமாட்டாங்கள்ல. ஈஸி’ என்றார். சுஜாதாவின் தனி ஆளுமையின் மெல்லிய கடிகளை வாங்கியவர்கள் அவருக்கு அவரது உள்வட்டத்தை சாராதவர்களை உள்ளூரப் பிடிக்காது என்பார்கள். உண்மையில் அவருக்கு எல்லாரையும் பிடிக்கும், வேடிக்கைபார்க்கும் அளவுக்கு அவர் விலகி இருந்தால்.

இந்த வகையான ஒரு முரணியக்கம் அவரது தத்துவநிலைபாட்டிலும் உண்டு. ஒரு சுஜாதா இருபதாம் நூற்றாண்டின் தொழில்நுட்ப அறிவியலின் உருவாக்கம். நிரூபணவாதமே அவரது தத்துவம்.  நிரூபணவாதத்துக்கு அப்பால் செல்லும் அறிவியல் மேல் தனிப்பேச்சில் அவர் முன்வைக்கும் விமரிசனம் சில சமயம் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கும். ‘மொத்த சைக்காலஜியே ஒரு ஃபேக் சயன்ஸ்… அதுக்கு மெதடாலஜியே கெடையாது’ என்பார். ‘சோஷியாலஜி, எகனாமிக்ஸ்லாம் ஒரு சயன்ஸ்னா அத்வைதம்லாம் சூப்பர் டெக்னாலஜி’ என்பார்.

அதேசமயம் அவரது ஆழத்தில் அவர் ஒரு வைணவர். நான் அவரை முதன் முதலில் சந்தித்த 1992ல் அவர் என்னிடம் அதிகமாகப்பேசியது தன் வைணவ ஈடுபாட்டைத்தான்.  ‘பேய் மேலே நம்பிக்கை இல்லை, ஆனா பயமா இருக்குன்னு புதுமைப்பித்தன் சொன்னான். அதுமாதிரித்தான் எனக்கு பெருமாள் மேலே நம்பிக்கை இல்லை ஆனா பக்தி இருக்கு’ வேடிக்கையாகச் சொன்னாலும் மிக நுட்மபான ஒர் உண்மை இது. அவரது நிரூபணவாதம் சராசரி வைணவ நம்பிக்கைகளை மோதி உடைத்தது. அவரது ஆழ்மனத்தில் வைணவத்தின் தொல்படிமங்கள் இருந்துகொண்டு அவரை இயக்கின. அவை இரண்டுக்கும் நடுவே ஒரு முரணியக்கம் நிகழ்ந்துகொண்டிருந்தது

சுஜாதாவுக்கு ஃப்ரிஜோ காப்ரா முக்கியமானவர். அவர் வழியாக தன் ஆழ்மன  வைணவத்தை தன் கொள்கையான நிரூபண வாதத்துடன் இணைக்க முடியும் என அவர் கண்டுகொண்டார். அவருக்கு நான்  காரி சுகோவின் [Gary Zukav  ] ’நடமிடும் வு லி ஞானியர்’ [The Dancing Wu Li Masters ]  நூலை பரிந்துரைத்து நித்ய சைதன்ய யதியின் நூலகத்தில் இருந்து அனுப்பினேன். அவர் நித்யாவை சந்தித்து பேச விருப்பம் என்று ஒருமுறை சொன்னார் .பின்பு ‘இந்த விஷயத்தை ரொம்ப போட்டு இழுக்கவேண்டாம். ஐ ஃபீல் ஓல்ட்’  என்றார்.

மதம்-அறிவியல் சார்ந்து சுஜாதா எழுதியவற்றை [ ‘கடவுள்’ என்ற தலைப்பில் அவற்றை உயிர்மை வெளியிட்டிருக்கிறது]  வாசிக்கும்போது சுஜாதா அந்த முரணியக்கத்தை மிகமிக மேலோட்டமாகவே புரிந்துகொண்டார்  என்று படுகிறது. ஓர் எல்லைக்கு மேல் அது போய்விடுவதற்கு அவர் அனுமதிக்கவில்லை. சொல்லப்போனால் வைகுண்ட ஏகாதசிக்கு ஸ்ரீரங்கம் போய் பெருமாளை சேவிப்பதற்கு  நிரூபணவாத அறிவியல் அனுமதிச்சீட்டு கொடுத்தால்போதும் என்ற அளவில் நின்றுகொண்டிருந்தார். இதுவே அவரது மனநிலை; தப்பித்தல், தவிர்த்தல்.

கடைசியாக நான் சுஜாதாவைப் பார்த்தபோது ’எப்டி போகுது டைம்?’ என்றேன். ‘சிவாஜி’ என்றார். ‘சினிமாவுக்கு வந்திட்ட. இங்க  டீடோட்டலருக்கெல்லாம் பாதிக்குப்பாதிதான் முதலாகும். தண்ணியாத்தான் மிச்சத்த வசூல் பண்ணமுடியும்’  ‘வீட்ல என்ன பண்றீங்க?’ என்றேன். ‘சும்மா கம்ப்யூட்டர்ல எதையாவது நோண்டிக்கிட்டிருக்கிறது. சின்னப்பசங்க பாக்கிற மேட்டர்ஸ்தான்..’

சுஜாதா முதுமையையும் எதிர்கொள்ளவில்லை. அதை ஒத்திப்போடவும் தவிர்க்கவும் முயன்றார்.  மிகச்சிறந்த உடைகள், தலைச்சாயம். முதுமை தெரியாத புகைப்படங்கள். இளமையான மொழிநடை. அபூர்வமாக அவரை வீட்டில் பார்த்தால் திடுக்கிடுவோம். ஒருமுறை நான் சென்றபோது வீட்டில் அவர் மட்டும் இருந்தார். அதிர்ச்சியூட்டும்படி அவர் ஒரு நொய்ந்த கிழவராக தெரிந்தார்.

ஆக, குளிப்பதற்கு இழுத்துச் கொண்டுசெல்லப்படும் குழந்தை மாதிரித்தான் சுஜாதா மரணம் நோக்கிச் சென்றிருப்பார். அவரது நிரூபணவாதம் ‘அவ்ளவுதான். இந்த புரோட்டீன் -டி.என்.ஏ கட்டுமானம் அழியப்போகிறது’ என்று சொல்லியிருக்கும். அவரது ஆழ்மனம் பெருமாளின் அலகிலா விளையாட்டை உணர்ந்திருக்கும். இரண்டையும் ஓரமாக ஒத்திப்போட்டுவிட்டு அவர் மேலோட்டமாக எதையாவது செய்துகொண்டிருந்திருப்பார்.

கீதையின் சரம சுலோகம் பற்றி நான் அவரிடம் ஒருமுறை சொன்னேன் ‘அனைத்து தர்மங்களையும் கைவிடுக, என்னையே சரணடைக’ என்ற கீதையின் வரி வைணவர்கள் மரணப்படுக்கையில் சொல்லிக்கொள்ள வேண்டிய மரணவாக்கியம். ஆனால் அது கீதையின் ஆரம்பத்தில் வருகிறது. அதன் மேல் ஐயம் கேட்ட பார்த்தனுக்குத்தான் கர்மயோகமும்  ஞானயோகமும் எல்லாம் உபதேசம் செய்யப்பட்டன.

அதாவது சரணாகதி அடைய முடிந்தால் மிச்சமேதும் தேவை இல்லை. அதேசமயம் அந்தச் சரணாகதி எளிமையாக சாத்தியமாகாது.  ஞானத்தேடலின் ஒரு விதை  உள்ளுக்குள் இருந்தால் கூட அது சரணாகதியை விட்டு, சாங்கிய யோகத்தை விட்டு, வெளியே இழுத்துவிடும். அதன் பின் போகவேண்டிய தொலைவு அதிகம். அந்தச் சவாலை சுஜாதா ஏற்கவில்லை, தவிர்த்தார். உரைநடையில், கணிப்பொறியில், சினிமாவில் விளையாடிக்கொண்டிருந்தார்.

சுஜாதாவால் ஒரு நல்ல வைணவரின் பரிபூரண சரணாகதியை நிகழ்த்திக்கொள்ள இயலாது. அவருள் உள்ள நிரூபணவாதி குறுக்கே நிற்பான். ஞானத்தின் விதை உள்ளே இருப்பவன் எங்கும் எதிலும் மிச்சமில்லாமல் பணிய முடியாது. அந்த ஞானம் முற்றிக்கனிந்து யோகமாக ஆனதென்றால் அது நம்மை விடுதலை செய்யக்கூடியதுதான். அது சுஜாதாவில் நிகழ்ந்ததா? ஆம் என சொல்ல அவரது ஆக்கங்கள் இடம் அளிக்கவில்லை.

’கைவிட்டது’ அவர் தனக்கென உருவாக்கிக் கொண்டிருந்த பிம்பங்களாக இருக்கலாம். எழுத்தின்மூலமே அவர் அவற்றை உருவாக்கினார். அல்லது கைவிட்டது அவர் தப்பிப்பதற்காகப் பற்றிக்கொண்டிருந்த எளிய உலகியல் செயல்களாககளாக இருக்கலாம். பெருமாள் கைவிட்டாரா? அதை சுஜாதா ஒருவேளை தன் கனவில் உணர்ந்திருக்கலாம். மரணத்துக்கு முந்தைய சுஷுப்தியில் உணர்ந்திருக்கலாம். அது இலக்கியத்துக்கு அப்பால் உள்ள ஒரு தளம்

ஜெ

நம்மாழ்வார்-ஒரு கடிதம் http://www.jeyamohan.in/?p=304

சுஜாதாவுக்காக ஓர் இரவு http://www.jeyamohan.in/?p=288

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்

http://www.jeyamohan.in/?p=174

சுஜாதா: மறைந்த முன்னோடி http://www.jeyamohan.in/?p=286

விளிம்புகளில் ரத்தம் கசிய…[சுஜாதாவின் நாடகங்கள்]  http://www.jeyamohan.in/?p=3288

சுவையாகி வருவது…
இப்போதுகூட ஏதாவது வாசித்துக்கொண்டிருக்கும்போது அருண்மொழியின் காலடி ஓசை கேட்டால் மெல்லிதாக ஓர் எதிர்பார்ப்பு ஓடிச்செல்லும் – அவள் ஏதோ சாப்பிடக்கொண்டுவருகிறாள் என்று. உண்மையில் அப்படி எதுவும் அவள் கொண்டு வருவதில்லை. நானேதான் அடிக்கடி போய் கறுப்புத் தேநீர் போட்டுக்கொள்வேன். ஏதாவது தின்பதற்கு எடுத்துக்கொண்டு வைத்திருந்தாலும்கூட ‘என்ன சும்மா சும்மா கொறிச்சுகிட்டு? உக்காந்து எழுதி எழுதி குண்டடிக்கிறதுக்கா?’ என்று திருப்பி எடுத்துக்கொண்டு போய்விடுவாள். கல்லூரியில் அவளுக்கு உணவும் ஊட்டமும் சம்பந்தமான பாடங்கள் இருந்தன. இந்த கலோரி என்ற கெட்டவார்த்தையை என் மண்டைக்குள் ஏற்றியதே அவள்தான்.

அது உண்மையில் நினைவில் தங்கிவிட்ட அம்மாவின் காலடி ஓசை. சின்னவயதில் நான் வாசித்துக்கொண்டிருக்கும்போது அம்மா மெல்லிய காலடிகளுடன் வருவாள். என்னருகே எதையாவது தின்பதற்காக வைத்துக்கொண்டு ஓசையில்லாமல் திரும்பிப் போவாள்.  அப்போதெல்லாம் எதையுமே கடையில் வாங்கி சாப்பிடும் வழக்கம் இல்லை – திருவரம்பில் கடையும் இல்லை. கிராமத்தில்  தின்பதற்கு ஏதாவது கிடைத்துக்கொண்டே இருக்கும். கொய்யாப்பழம்,  அயனிப்பழம், அன்னாசிப்பழம், வாழைப்பழம், மாம்பழம், அத்திப்பழம்   என பழங்கள் ஏராளம். அம்மா அவற்றை மென்மையாக தோல்சீவி ,எடுத்துச் சாப்பிட வசதியாக நறுக்கி,  என் வலது கையருகே கொண்டுவந்து வைப்பாள்.  நான் பெரும்பாலும் ஏறிட்டுக்கூட பார்ப்பதில்லை. புன்னகையைக்கூட திருப்பி அளிப்பதில்லை. அனிச்சையாக என் கை நீண்டு அதை எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும்

அம்மா எந்நேரமும் என்னை நினைத்துக்கொண்டிருப்பாள் என இப்போது தோன்றுகிறது. அதிகபட்சம் அரைமணிநேர இடைவெளியில் ஏதேனும் ஒன்று வரும். தின்பதற்கும் குடிப்பதற்கும். டீ இரண்டுவேளை மட்டுமே. மிதமாக உப்பு போட்டு தேங்காய் துருவல் சேர்த்த சூடான கஞ்சித்தண்ணீர் மழைக்காலத்தில் அருமையான பானம். மோரில் கறிவேப்பிலை போடமாட்டாள்,  கவனக்குறைவாக குடிக்கும் என் தொண்டையில் சிக்கும் என. காலை என்றால் பதநீர். அதில்கூட பலவகையான பதங்கள். கொஞ்சம் கொதிக்க வைத்தால் பதநீர் ஒருவகையான சாக்லேட் பானமாக ஆகிவிடும். அதில் நாலைந்து பச்சைப்புளியங்காய்களைப் போட்டு லேசாகக் கொதிக்கவிட்டால் இன்னும் பெயரிடப்படாத ஒரு அமுதம்.

நனகிழங்கு, முக்கிழங்கு, காய்ச்சில்கிழங்கு, செறுகிழங்கு, சீனிக்கிழங்கு என அக்காலத்தில் எங்களூரில் கிழங்குகள் ஏராளம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி. சீனிக்கிழங்கு என்னும் சக்கரைவள்ளி கிழங்கு இனிப்பானது. நனகிழங்கு, முக்கிழங்கு இரண்டும் சுட்டால் மேலும் சுவையாக இருக்கும். செறுகிழங்கை ஆவியில் அவிக்க வேண்டும். சீனிக்கிழங்கு, செறுகிழங்கு இரண்டுக்கும் மெல்லிய இனிப்பு உண்டு, ஆகவே உப்பு சேர்க்கக்கூடாது. வேகவைத்த கிழங்கை தோல் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி அம்மா கொண்டுவந்து வைப்பாள்.

சீனிக்கிழங்கு, செறுகிழங்கு போன்றவற்ற வேகவைத்து நீரில் போட்டு கொதிக்கச் செய்து கலக்கி கஞ்சித்தண்ணீர் போல ஆக்கி கொஞ்சம் தேங்காய் துருவிப்போட்டால் அபாரமான மணமுள்ள சூடான பானம். எங்களூரில் கிட்டத்தட்ட இலவசமாக கிடைக்கும் அரைக்கீரை தண்டுக்கீரை சிவப்புக்கீரை போன்றவற்றை வேகவைத்து குழைத்து அதன் மேலே ஊறும் சிவப்புச்  சாறை தாளித்து கொண்டுவருவாள்.  காய்த்து கேட்பாரில்லாமல் கிடக்கும் பூசணிக்காயைக்கூட அப்படிச் செய்யமுடியும். அவை ஓரு வகை சூப்புகள் எனலாம்.   தேனில் பாதிக்குப் பாதி நீர் சேர்த்து குடிக்க கொண்டுவருவாள். மச்சு அறைகளில் புளி உருட்டி வைத்திருக்கும் பெரும்பானைகளில் ஓரிரு வருடம் பழைமைகொண்ட புளியின்மீது இனிப்பான தேன் போல ஊறி நிற்கும் விழுதுடன் நீரும் கருப்புகட்டியும் சேர்த்து ஒரு ஜிர்ர்ரென்ற பானம்.

அம்மாவின் மனம் எனக்கு ஏதாவது புதிதாக தரவேண்டுமென்ற கற்பனையுடன் சுற்றும் பார்த்துக்கொண்டே இருக்கும் போலும். வாழைக்காயை வேகவைத்து லேசாக வறுத்து தாளித்து கொடுப்பாள். ஒருமுறை அப்போதுதான் பால்விட்ட பச்சை நெற்கதிர்களை மெல்ல அரைத்து வெண்சாறாகப் பிழிந்து கொஞ்சம் இனிப்புசேர்த்துக் கொடுத்தாள். அன்னாசி போன்ற புதர்ச்செடிகளின் இலைகளின் அடிக்குருத்துக்கள் தின்பதற்குச் சுவையானவை.  தவிட்டைப்பழம் போன்ற புதர்ப்பழங்களைக்கூட விடுவதில்லை. ஆற்றுக்கு வரும் வழியில் தேடிப்பறித்து மடியில் கட்டி கொண்டுவந்து வைப்பாள்.

அம்மா புதிதாகத் தின்பண்டங்கள் செய்துகொண்டே இருந்தாள். புளியின் ஓட்டுக்குள் முறுகிய பதநீரை நல்லமிளகாய் ஏலக்காய் சேர்த்து விட்டு உறையச்செய்த சாக்லேட். முறுகிய பதநீர் விழுதுடன் மணமான பச்சரிசித் தவிடை கலந்து பரப்பி செய்த கேக். வறுத்த பயறுடன் கருப்பட்டி விழுதை கலந்து உருட்டிய பொரிவிளங்காய்.  விதவிதமான சுண்டல்கள். கிராமத்தில் உள்ள எந்த பயறும் சுண்டலாகும். உளுந்துச் சுண்டல். ஏன், கோதுமையை வேகவைத்துக்கூட சுண்டல் செய்ய முடியும். பலவிதமான கொட்டைகள். பலா, அயனிக் கொட்டைகளை சுட்டு, வறுத்து கொண்டு வருவாள். அவற்றை வேகவைத்து தாளித்தும் கொண்டுவருவாள்.

கண்ணால் பார்த்து இந்த பூமியை அறிந்து முடிக்கமுடியாது. அதேபோலத்தான் நாவும். நாக்கின் தேடலுக்கு எல்லையே இல்லை. ருசிகளின் பெருவெளி இந்த பூமி. ஒருமுறை உண்ட உணவை மீண்டும் உண்ணாமல் உண்டால்கூட வாழ்நாளில் இதன் சுவைகளில் சில துளிகளையே உண்ண முடியும். பெருங்கருணை ஒன்று நாம் வாழும் வெளிக்கு அப்பால் கனிந்த கண்களுடன் நின்று நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. மெல்லிய மர்மப்புன்னகையுடன் காலடியோசை கேட்காமல் வந்து நம் கையருகே முற்றிலும் புதிய சுவை ஒன்றை வைத்துவிட்டுச் செல்கிறது.

எந்தக்குழந்தையை எப்போது பார்த்தாலும் சாப்பிட ஏதாவது கொடுப்பாள் . அம்மாவின் உடைகளுக்குள் அவள் சந்திக்கும் அடுத்த குழந்தைக்காக ஒரு தின்பண்டம் இனித்து இனித்துக் காத்திருக்கும். முலைகள் வற்றியபின் மொத்த உடலே ஒரு நிறைந்த முலையாக ஆனதுபோல. அம்மாவைப்பார்த்ததுமே தெரிந்த குழந்தை ‘த்தா’ என்றுதான் பேசும். ’தருபவள்’-  அதுதான் அவள். வீட்டுக்கு வந்த எந்த அன்னியனுக்கும் அவன் வயிறு நிறைய உணவிடாமல் அனுப்பியதில்லை. கிராமத்தில் அது சாதாரணம். கூடைக்காரர்கள், குறவர்கள் முதல் யாரோ வழிப்போக்கர்கள் வரை வந்து சாதாரணமாக ‘கஞ்சி குடுங்க தாயி’ என்று கேட்டு சாப்பிடலாம். அவர்கள் கேட்கும்படி வைக்காமல் மேலும் மேலும் போடவேண்டும் என அருகே நின்று பரிமாறுவாள். உணவை அள்ளி வைக்கும் கரத்தில் தெரியும் பிரியம் கண்டு கண்கலங்கி கன்னங்களில் வழிய சாப்பிடுபவர்களை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

ஆனால் அம்மாவுக்கு சாப்பிடுவதில் ஆர்வமே இருந்ததில்லை. மிக மெலிந்த வலுவான உடல் கொண்டவள். பகலில் எந்நேரமும் வேலை. மாடுகள் ,கோழிகள், மனிதர்கள்… இரவில் நெடுநேரம் வரை வாசித்துக்கொண்டிருப்பாள். தமிழில், ஆங்கிலத்தில், மலையாளத்தில். அம்மா உலக இலக்கிய அசைவை நுட்பமாக பின்தொடர்ந்துகொண்டிருந்த மகத்தான வாசகி. அவள் ருசி அதில்தான் இருந்தது.

காலை எழுந்ததும் ஒரு ’கட்டன் டீ’ சாப்பிட்டால் அடுத்த உணவு மதியம்தான். அதுவும் அனைவரும் சாப்பிட்டபின்னர் தன் தோழியும் வேலைக்காரியுமான தங்கம்மாவுடன் பேசியபடி புழக்கடை உரல்புரையில் அமர்ந்து சாப்பிடுவாள். மிகவேகமாக ஏதோ கடமையை முடிப்பதுபோலத்தோன்றும். இரவு வெகுநேரம் கழித்து எது இருக்கிறதோ அதை அள்ளிப்போட்டுக்கொள்வாள். ஒன்றும் மிஞ்சாமல் போகும், அப்பாவுக்கு திடீர் விருந்தினர்கள் வந்தால். கவலைப்படாமல் ஒரு பெரிய மரவள்ளிக்கிழங்கை எடுத்து தணலில் சுட்டு உடைத்துக் கொறித்துக்கொண்டு கடும்சாயா குடித்து முடித்துவிடுவாள். எங்கும் எப்போதும் அம்மா ஆர அமர சாப்பிடுவதைக் கண்டதில்லை. உணவைப்பற்றி பேசியதே இல்லை. அம்மாவின் சுவை நரம்புகள் நெடுநாட்கள் முன்னரே மங்கிவிட்டிருந்தன என்று படுகிறது. சுவை பார்க்கக்கூட எதையும் நாவில் விடுவதில்லை. சமையலின் பக்குவம் அவள் கைகளில்தான் இருந்தது.

வீட்டில் யார் நன்றாகச் சாப்பிடவில்லை என்றாலும் அம்மாவுக்கு தெரியும். அனைவருடைய மனத்தையும் அம்மா வயிறுவழியாக அளந்து அறிந்துகொண்டிருந்தாள்: ஆனால் அம்மா சாப்பிட்டாளா இல்லையா என எவருமே கவனித்ததில்லை. நிலத்தின் மீது நிற்கும் எவரும் நிலத்தை கவனிப்பதில்லை என்பதுபோல. எனக்கென சமைக்கும் எதிலும் ஒரு துண்டேனும்  அவள் வாயில் போட்டுக்கொண்டதைப் பார்த்ததில்லை. அம்மாவுக்கென நான் எதையும் எப்போதும் கொடுத்ததில்லை.

நேற்று ஒருநண்பர் வாங்கிவந்து கொடுத்துப்போன ஆப்பிள்களில் கடைசி ஆப்பிளை மெல்லிய துண்டுகளாக வெட்டி தட்டில் பரப்பி படித்துக்கொண்டிருக்கும் சைதன்யாவின் அருகே மெல்ல வைத்துவிட்டு வந்தபோது நினைத்துக்கொண்டேன் , அவற்றில் ஒரு துண்டைக்கூட நான் அதுவரை வாயில் போடவில்லை.  சைதன்யாவோ அஜிதனோ சாப்பிடும் தின்பண்டங்கள் என்னுடைய அகநாக்கு ஒன்றில் பலமடங்கு தித்திக்கின்றன. ஒரு தின்பண்டத்துடன் அவர்கள் அருகே செல்லும்போது நடைகூட கனிந்து மென்மையாக ஆகிவிடுகிறது.

பிரபஞ்சத்தை அறிவதில் பத்து நிலைகள் உண்டு. தசதர்சனங்கள் என அவற்றை அத்வைதம் வகுக்கிறது. [அத்யாரோபம், அபவாதம், அசத்யம்,மாயை, ஃபானம், கர்மம், விக்ஞானம், பக்தி,யோகம், முக்தி] அவற்றில் எட்டாவது தரிசனமாகிய பக்திக்கு விஷ்ணுபுரம் நாவலில் மகாநாமபிட்சு எழுதிய சிறுநூலில் அளிக்கும் விளக்கக் கவிதை இது

’கேள் பிட்சுவே, தாயைப் பின் தொடர்கிறது குழந்தையின் ஆத்மா, ஒருபோதும் பிரியாத பிரியத்துடன். ஏனெனில் தாயின் முலைப்பாலின் சுவை அதற்கு அழைப்பாகிறது

கேள் பிட்சுவே, தாய் ஒருபோதும் குழந்தையின் பின்னிருந்து விலகுவதில்லை. ஏனெனில் முலையருந்தும் குழந்தை ஊட்டுகிறது தன் அன்னைக்கு – ஆயிரம் மடங்கு இனிய அமுததை’

அள்ளியள்ளிப்பெருகுவது… http://www.jeyamohan.in/?p=5243

அப்பாவுக்கு மூன்று கவிதைகள் http://www.jeyamohan.in/?p=2756

வீடு http://www.jeyamohan.in/?p=1477

அப்பாவின் தாஜ்மகால் http://www.jeyamohan.in/?p=1158

முதற்சுவை:கடிதங்கள் http://www.jeyamohan.in/?p=950

கடைசிக் குடிகாரன் http://www.jeyamohan.in/?p=970

முதற்சுவை  http://www.jeyamohan.in/?p=807

பூதம் http://www.jeyamohan.in/?p=870

தோன்றாத்துணை http://www.jeyamohan.in/?p=775

தெய்வ மிருகம் http://www.jeyamohan.in/?p=832

பிரிவின் விஷம் http://www.jeyamohan.in/?p=774

பூக்கள் பூக்கும் தருணம்
மதராசப்பட்டணம் படத்தை பார்த்துவிட்டு வரும்போது நான் ஏதோ முனகுவதை நானே அதிர்ச்சியுடன் கவனித்தேன். அந்தமாதிரி கெட்டவழக்கமெல்லாம் பொதுவாக என்னிடமில்லை. எனக்கு இசை தெரியாது. பாமரக்காதுதான். நான் சீராக முறையாக இசை கேட்பதில்லை. ஓர் இளைப்பாறலுக்காக அவ்வப்போது கேட்பேன். ஒரு பாட்டு மூளைக்குள் மாட்டிக்கொண்டு பலநாட்கள் கூடவே வரும்.  பல வாரங்களுக்கு கூட வந்த பாட்டுகள் உண்டு. வருடக்கணக்காக நீடிப்பவையும் உண்டு. சினிமாப்பாட்டை நானே கவனிப்பதே இல்லை. அதுவே நாய்க்குட்டி மாதிரி என்னுடன் வந்து வளர்ந்தால்தான் உண்டு.  அப்படி வந்து என்றும் கூட இருக்கும் பாட்டுகள் எத்தனையோ.

தமிழ் சினிமாப்பாடல்களில் ’எங்குமே ஆனந்தம்.ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்’ ‘உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளித்தெளித்தேன்’  ‘கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்’   ’ஆயிரம் மலர்களே மலருங்கள்’ ‘தெய்வீகராகம் தெவிட்டாத பாடல்..’  என என்னை கிறுக்குக்குக் கொண்டுபோன பாட்டுகள் பல உண்டு.

அந்தவரிசையில்  இப்போது ஒன்று. சிலநாட்களாகவே ஒரு வேதாளம்போல தோளில் தொங்கிக்கொண்டிருக்கிறது. மதராசப்பட்டினத்தில் வரும் ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே’  இசையும் வரிகளும் மிகச்சிறப்பாக இணைந்த ஒரு அபூர்வமான கலைத்தருணம் என இந்தப்பாட்டை நினைக்கிறேன். இரண்டுவகையான ஆலாபனைகள் ஒன்றுடன் ஒன்று தழுவி பின்னி உரசிச்செல்லும் விதம் பூமரங்கள் நிறைந்த வெளியில் கைவிரித்து ஓடச்செய்கிறது. ’வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை’ என்றவரிகளுக்கு முன்வரை ஒலிக்கும் இசைக்கோலம் தமிழ் திரையில் ராஜாவும் ரஹ்மானும் அவர்களின் பொற்காலங்களில் நிகழ்த்திய தரத்தில் இருக்கிறது.

முத்துக்குமார் அந்த இசையில் கொப்பளிக்கும் நெகிழ்வையும் காதலின் பிடிபடாது நழுவும் மன எழுச்சிகளையும் அற்புதமான படிமங்களுடன் எழுதியிருக்கிறார். ‘காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும், இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!’ என்ற படிமத்துக்காகவும் ’பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே

பார்த்ததாரும் இல்லையே’ எனர் இரண்டாம் முறை சொல்லை மாற்றiியிருக்கும் நுட்பத்துக்காகவும் அவரை மார்புடன் தழுவிக்கொள்கிறேன்.

கற்பனாவாதக் கலை வாழ்க்கைமேல் ஓர் வெயிலிளமழையை பெய்ய வைத்துவிடுகிறது. கற்பனாவாதத்தை தாண்டிச்செல்லும் ’முதிர்ச்சி’ எனக்கு ஒருபோதும்  வந்துவிடலாகாதென எண்ணிக்கொள்கிறேன்

பூக்கள் பூக்கும் தருணம்

[தான தொ தனன,தான தொ தனன]

ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே,

பார்த்ததாரும் இல்லையே

பெண் : புலரும் காலை பொழுதை

முழுமதியும் பிரிந்து போவதில்லையே

பெண் : நேற்றுவரை நேரம் போக வில்லையே,

உனதருகே நேரம் போதவில்லையே

பெண் : எதுவும் பேசவில்லையே,இன்று ஏனோ

எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ?……!

ஆண் : இரவும் விடியவில்லையே, அது விடிந்தால்

பகலும் முடியவில்லையே பூந்தளிரே……!

[தான தொ தனன,தான தொ தனன]

ஆண் : வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை,

பாவை பார்வை மொழி பேசுமே!

பெண்: நேற்று தேவையில்லை, நாளை தேவையில்லை,

இன்று இந்த நொடி போதுமே!

ஆண்: வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி

இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே?

பெண்: வாளின்றி, போரின்றி, வலியின்றி, யுத்தமின்றி

இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே?

ஆண்: இதயம் முழுதும் இருக்கும் இந்த  தயக்கம்,

எங்கு கொண்டு நிறுத்தும்

பெண் : இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்,

அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

ஆண்: பூந்தளிரே ……

பெண்:

Oh where would I be without this joy inside of me?

It makes me want to come alive; it makes me want to fly into the sky!

Oh where would I be if I didn’t have you next to me?

Oh where would I be? Oh where, oh where?

ஆண் : எந்த மேகம் இது? எந்தன் வாசல் வந்து

எங்கும் ஈர மழை தூவுதே!

பெண்: எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை

என்றபோதும் இது நீளுதே!

ஆண் : யாரென்று அறியாமல், பேர்கூட தெரியாமல்,

இவளோடு ஒரு சொந்தம் உருவானாதே!

பெண்: ஏனென்று கேட்காமல்,தடுத்தாலும் நிற்காமல்

இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே!

ஆண் : பாதை முடிந்த பிறகும், இந்த உலகில்

பயணம் முடிவதில்லையே

பெண்: காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்,

இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!

ஆண்/பெண்e: இது எதுவோ!

[தான தொ தனன,தான தொ தனன]

ஆண்: பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே

பார்த்ததாரும் இல்லையே

பெண்: புலரும் காலை பொழுதை

முழுமதியும் பிரிந்து போவதில்லையே

ஆண்: நேற்றுவரை நேரம் போக வில்லையே,

உனதருகே நேரம் போதவில்லையே

பெண் : எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ

எதுவும் தோன்றவில்லையே …என்ன புதுமை?

ஆண்/பெண்: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே

ஆண் : இது எதுவோ!!

[தான தொ தனன,தான தொ தனன]

தொகையறா

நான் என்ற சொல் இனி வேண்டாம் !

நீ என்பதே இனி நான்தான் !

இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை !

இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை !

திரைப்படம் : மதராசபட்டிணம்

வரிகள் : நா.முத்துக்குமார்

இசை : G. V. பிரகாஷ்

பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா

<object width="500" height="306"><param name="movie" value="http://www.youtube.com/v/baaUCiKwRZE&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed  src="http://www.youtube.com/v/baaUCiKwRZE&fs=1" type="application/x-shockwave-flash" width="500" height="306" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>

http://sabaritamil.blogspot.com/2010/07/blog-post_22.html

வாசகர் சந்திப்பு
இந்தமுறை பருவமழைப்பயணத்துக்காக பெரியாறு வனத்தில் இரவு அறையில் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் அரங்கசாமி   ஓர் எண்ணத்தை சொன்னார்.  ஏதாவது ஒரு இடத்தில் நண்பர்கள் சந்தித்து தொடர்ச்சியாக உரையாடும் ஒரு மூன்றுநாள் சந்திப்பை நிகழ்த்தலாம் என்று. அது கடிதம் மூலம் பரஸ்பர அறிமுகம் கொண்ட என் நண்பர்கள் ஒருவரை ஒருவர் அறிவதற்காக மட்டுமல்லாமல் ஆழமான ஓர் உரையாடல் நிகழ்ச்சியாகவும் இருக்கவேண்டும். ஏனென்றால் வாசிப்பு என்ற அனுபவம் போலவே நேர்ச்சந்திப்பும் உரையாடலும் ஆழமான புரிதல்களை உருவாக்கக் கூடியது.

பலவருடங்களாக நான் தமிழ்-மலையாளக் கவிதை உரையாடல் அரங்கை ஊட்டி நாராயண குருகுலத்தில் நடத்தி வந்திருக்கிறேன். அதுவன்றி பொதுவான நண்பர் சந்திப்பு நிகழ்ச்சிகளும் பல நடந்துள்ளன. மொத்தம் 19 சந்திப்புகள்.  அச்சந்திப்புகள் சம்பந்தப்பட்ட நண்பர்களின் நினைவில் இனிய நினைவுகளாக இருப்பதனால் எப்போதுமே இச்சந்திப்புகளுக்காக அவர்கள் கோரிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தமுறையும்  மே மாதம் கவிதை அரங்கை நிகழ்த்தலாம் என்று கவிஞர் நண்பர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். கவிதைகளை மொழியாக்கம் செய்து அனைவருக்கும் அனுப்புவது என்ற கடுமையான பணியை செய்யமுடியாத நிலையில் அப்போது இருந்தேன். ஆகவே சந்திப்பு நிகழவில்லை.

நண்பர்களின் எண்ணப்படி ஆகஸ்ட் 27,28,29 [வெள்ளி, சனி, ஞாயிறு] தினங்களில் ஊட்டி நாராயண குருகுலத்தில் இச்சந்திப்பை நிகழ்த்தலாம் என்றிருக்கிறேன். ஊட்டி நாராயணகுருகுலத்தில் இப்போது சுவாமி தன்மயா மட்டுமே உள்ளார். அங்கேயே போதிய தங்குமிடம் உள்ளது. அதிகமான வசதிகள் இருக்காதென்றாலும் வசதிக்குறைவும் இருக்காது. உணவுப்பொருட்களுக்கான செலவன்றி வேறேதும் இல்லை. அதை நானே ஏற்றுக்கொள்ள முடியும். பிற ஏற்பாடுகளை நிர்மால்யா செய்வார். வருபவர்கள் சொந்தச் செலவில் வரவேண்டும்.

சந்திப்பு நிகழ்ச்சியை வழக்கம்போல மூன்றுநாட்கள் நிகழ்த்தலாம். வெள்ளி காலை 10 மணி முதல் ஞாயிறு மதியம் வரை. தத்துவம் குறித்து ஒருநாளும், தமிழ் மரபிலக்கியம் குறித்து ஒருநாளும், நவீனக்கவிதை ரசனை குறித்து ஒருநாளும் பேசலாம் என்பது இப்போதைய திட்டம். எப்படி அதை நிகழ்த்துவதென இனிமேல்தான் முடிவுசெய்யவேண்டும்.

எப்போதும்போல அந்த ஐந்து நிபந்தனைகள் உண்டு.

1. வரக்கூடியவர்கள் எல்லா அமர்வுகளிலும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும்.

2  தனிப்பட்ட முறையில் விமரிசனம்செய்து பேசக்கூடாது.கடுமையான நேரடி விமரிசனங்களும் கூடாது.

3 சந்திப்பு நிகழும் மூன்று நாட்களிலும் அரங்கிலும் வெளியிலும் மது அருந்தக்கூடாது.

4 சந்திப்புகளின்போது விவாதத்தின் பொதுவான எல்லைக்கு வெளியே அதிகம் செல்லக்கூடாது. மட்டுறுத்தல் உண்டு.

5 வரவிரும்புகிறவர்கள் தகவல் தெரிவித்தால் அழைக்கப்படுவார்கள். அழைக்கப்படாதவர்களுக்கு அனுமதி இல்லை. அனுமதி இல்லாமல் எவரையும் கூட்டி வரக்கூடாது.

சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் தெரிவிக்கலாம்

தொடர்புக்கு jeyamohan.writer@gmail.com

ஜெயமோகன்

http://www.jeyamohan.in/?p=4808 இருகவிஞர்கள்

http://pesalaam.blogspot.com/2008/05/1.html

ஊட்டி நித்யா க‌விதை அர‌ங்கு – 1

ஊட்டி-கவிதையரங்கு http://www.jeyamohan.in/?p=416

நித்யா கவிதை அரங்கு  http://www.jeyamohan.in/?p=329

எந்த அடையாளம்?
திரு ஜெ.. எனது பின்னூட்டத்தை வெளியிடவில்லை. சரி உங்கள் உரிமை. ஆனால் நீங்கள் வசனம் எழுதிய அங்காடித்தெரு படத்தில் ப்ராமணரை கொடுமைக்காரர்களாக காட்டி இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டது உங்களைக் குத்தியதா என்பதையாவது விளக்குங்கள்!

hayyram

சாதியுடன் புழங்குதல்…

http://www.hayyram.blogspot.com/

அன்புள்ள hayyram

உங்கள் பின்னூட்டங்கள் மட்டுமல்ல உங்களுக்கு நேர் மாறான கோணத்தில் போடப்பட்ட சில பின்னூட்டங்களும் மட்டுறுத்தப்பட்டன. அவை மட்டுறுத்தப்பட்டமைக்கான காரணம் ஒன்றுதான். நீங்கள் இருசாராருமே தெளிவான முன்முடிவுகளுடன் கட்டுரைகளை வாசிக்கிறீர்கள். கட்டுரையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதென்பது உங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. கட்டுரையின் கைகால்களை ஒடித்து முடமாக்கி நீங்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்துக்கு இழுத்துக்கொண்டு செல்கிறீர்கள். அங்கே வைத்து ஆர அமர பிய்த்து குதறுகிறீர்கள். இதை நான் விவாதமாகக் கொள்ள முடியாது. விவாதம் நிகழும் தளத்தில் இருந்து வாசகர்களை விலக்கக் கூடியதாகவே அதைக் காண்கிறேன்.

நீங்கள் பிராமணசாதியின் பிரதிநிதியாக உங்களை உறுதியாக அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள். ஆகவே பிராமணசாதியைப்பற்றி பெருமிதமாக அல்லாது ஏதாவது சொல்லப்பட்டால் நீங்கள்  உடனே புண்படுகிறீர்கள். புண்படுவதற்கான உரிமை உங்களுக்கு இருப்பதாக எண்ணிக்கொள்கிறீர்கள். உடனே எதிர்வினை ஆற்றுகிறீர்கள். இந்த எதிர்வினைகளுடன் நான் உரையாட முடியாது. நீங்கள் ஒரு குழுவடையாளத்தைச் சுமந்து கொள்வதும், அதன் பேச்சாளராக உங்களை எண்ணிக்கொண்டிருப்பதும் உங்கள் மனசிக்கல். அதை நான் அங்கீகரிக்க முடியாது. அங்கீகரித்தால் மட்டுமே அதற்கு எதிர்வினை ஆற்றமுடியும். நான் மனச்சிக்கல்களுடன் விவாதிப்பதில்லை. விவாதம் மூலம் நானும் நீங்களும் பொதுவாக ஏதேனும் அறியும்படி இருக்க வேண்டும்.

நீங்கள் எழுதிய இந்தக் கேள்வியை பலர் என்னிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை உதாசீனம்செய்யும்போது அது குற்றவுணர்ச்சியின் மௌனம் என்று விளக்கப்படுகிறது. ஒருபக்கம் பிராமணர்களை தூக்கிப்பிடிப்பவன் என்றும் மறுபக்கம் பிராமணர்களை இழிவுபடுத்துபவன் என்றும் நான் வசைபாடப்படுகிறேன். இப்போதல்ல, விஷ்ணுபுரம் வெளிவந்த காலம் முதலே. இந்த ஆட்டம் எனக்குப் பழகிப்போய்விட்டது. இது, உங்களைப்போன்ற அனைவருக்கும் என் பொதுப்பதில் -விவாதம் அல்ல.

நாம் வாழும் சூழல் எப்படிப்பட்டது? கஸ்தூரிமான் வெளிவந்தபோது பரீக்‌ஷா ஞாநி ஒரு கூட்டத்தில் கர்ஜனை புரிந்தார் – அதில் கதாநாயகியின் அக்காவின் கணவனும் அவள் அன்னையும் கொடூரமானவர்களாக காட்டப்பட்டிருப்பார்கள். அவர்களை தாழ்த்தப்பட்ட சாதியினராகக் காட்டியிருப்பதாகச் சொன்ன ஞாநி ‘தாழ்த்தப்பட்டவர்கள் கொடூரமானவர்கள் என்று எழுதிய ஜெயமோகன் மன்னிப்பு கோரவேண்டும்’ என்றார்

முதல் விஷயம் அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்தவர்களாகக் காட்டப்படவில்லை. என்ன சாதி என்பது படத்திலேயே உள்ளது. அது லோகிததாஸின் வழக்கம், எப்போதும் தெளிவாகச் சாதி சொல்லி படைப்பை எழுதுபவர் அவர். இரண்டு, அப்படத்தின் மலையாள மூலத்தில் லோகிததாஸ் எழுதி உருவாக்கிய கதாபாத்திரத்தின் நேரடியான தமிழ் வடிவம் அது.  அதை எழுதி இயக்கியவர் அவர், நான் மொழிபெயர்ப்பாளன். நான் அதில் எதையுமே சேர்க்கவில்லை, ஆகவே அது என் உருவாக்கம் அல்ல. கடைசியாக, லோகிததாஸே தாழ்த்தப்பட்ட சாதியொன்றைச் சேர்ந்தவர்.

அங்காடித்தெரு வந்தபோது ‘அரசியல்’ என்ற வார இதழில் பாமரன் என்பவர் ஒரு கட்டுரை எழுதினார். அதில் கங்காணி கதாபாத்திரம் ‘அருந்ததியப்பயலே’ என்று வசைபாடுவதாகவும் அதை எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன் உடனே  தீண்டப்படாதார் வன்கொடுமைச் சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும் என்று சொன்னார்.  படத்தில் திட்டவட்டமாக தெளிவாக ‘அறுதலி’ என்றுதான் வசனம் ஒலித்தது. பாமரனுக்கு அச்சொல் புரிந்திருக்காது, அல்லது அவர் வேண்டுமென்றே அதை எழுதினார்

அறுதலிப்பயல் என்பது தென்னாட்டின் சாதாரண வசை. பொதுவாக ’அவிழ்த்துவிடப்பட்டவன்’ என்று அதற்கு பொருள். அந்த விளக்கம் இயக்குநர் தரப்பில் அளிக்கப்பட்டபோது பாமரன் பேசாமல் இருந்தார். அந்தக்கட்டுரை வெளிவந்ததுமே ஒரு கும்பல் வந்து எழுதியவனை வெட்டியிருந்தால் யார் பொறுப்பேற்பது? இதழா, விமரிசகரா? யாருக்குக் கவலை?  மன்னிப்பு கோரும் நாகரீகமெல்லாம் பாமரன் போன்றவர்களிடம் எதிர்பார்ப்பதற்குரியதல்ல.

இங்கே முக்கியமான விஷயம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட இருவருமே அந்த ‘பாதிக்கப்பட்ட’ சாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதே. ஒரு கலகம் நடந்தால் நல்லதுதானே என நினைக்கும் எளிமையான மனங்கள். அதன் மூலம் தனக்கு ஒரு முற்போக்கு பிம்பம் வந்தால் வரட்டுமே என ஆசைப்படுபவர்கள். இந்தவகையான நெருக்கடிகளுடன் மட்டுமே இங்கே படங்கள் எடுக்கப்படுகின்றன.

கருத்துச் சுதந்திரம் , படைப்புச் சுதந்திரம் எதுவுமே இல்லாத அரைப்பழங்குடிச் சமூகம் நம்முடையது. அதை மேலும் பாமரத்தனமாக ஆக்குவதே அறிவுஜீவியின் பணி என நம்பும் முற்போக்கு சிந்தனயாளர்களே இங்கே பெரும்பான்மையினர்.  உலகத்தளத்தில் சினிமா ஏன் இல்லை என்று கூவுபவர்களே இவ்வகையான பாமரத்தனத்தின் உச்சத்திலும் நிற்கிறார்கள். இவர்களுடன் போராடியே இங்கே எழுதவேண்டியிருக்கிறது.

இந்தவகையான ஒரு கும்பல் மனநிலையில் நின்றே நீங்களும் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். நான் எப்போதும் எதிர்கொண்டு வரும் மனநிலை அது. எந்தச்சாதியினராக இருந்தாலும் இந்த மனநிலை புறக்கணிப்புக்குரியது, பண்பாட்டுச்செயல்பாட்டுக்கு எதிரானது என்றே எண்ணுகிறேன். ஆகவே அது விவாதத்துக்குரியதே அல்ல.

இந்தக் கும்பல் மனநிலையின் தர்க்கமே அபத்தமானது. ஒரு தலித் அல்லது தேவர் அல்லது பிராமண கதாபாத்திரம் எதிர்மறையாகக் காட்டப்பட்டால் உடனே ஒட்டுமொத்த தலித் அல்லது தேவர் அல்லது பிராமணர்களையும் அது குற்றம்சாட்டுவதாக எண்ணிக்கொள்கிறார்கள். அங்காடித்தெரு எங்கே ’பிராமணர்களை’ காட்டுகிறது? ஒரு பிராமணப்பெண்ணை காட்டுகிறது.  உங்கள் வாதம் சரி என்றால் ஒரே ஒரு பிராமணர்கூட  அப்படி இலலமல் இருக்க வேண்டும். அப்படி நம்பும் மனக்கோளாறு உங்களுக்கு இருக்கலாம். நான் ஏன் அதை ஏற்கவேண்டும்?

அந்த தர்க்கத்தின்படி எந்த சாதியையும் மதத்தையும் சேர்ந்தவராக எதிர்மறைக் கதாபாத்திரம் இருக்கக்கூடாது. பழைய எம்ஜியார் படங்களில் நம்பியார் வருவதுபோல ‘எங்கோ’இருக்கும் கொள்ளைக்கூட்ட தலைவனாக இருக்க வேண்டும், உள்ளங்கையை முஷ்டியால் குத்தி ‘ஜ்ஜ்ஜக்கூ’ என்று கூவ வேண்டும் இல்லையா? இந்த தர்க்கமே அதற்கடுத்தபடிகளுக்குச் செல்கிறது. எதிர்மறைக் கதாபாத்திரம் எந்த தொழிலையும் செய்வதாகக் காட்டக்கூடாது, சம்பந்தப்பட்ட தொழிலைச் செய்பவர்கள் புண்படுவார்கள். போராடுவார்கள்.  இனி இதே தர்க்கம் இடங்களுக்கு பரவும். எந்த ஊரையும் குறிப்பிடக்கூடாது. ஆக, எதைத்தான் திரையில் காட்டவேண்டும் என்கிறீர்கள்?

அங்காடித்தெருவில் அப்பட்டமாக எல்லாருக்குமே சாதி காட்டப்படுகிறது. படம் முழுக்க முற்றிலும் எதிர்மறைக் கதாபாத்திரமாக வருபவர்களுக்கும்கூட. இன்று தமிழில் வெளிவரும் எல்லா யதார்த்தப்படங்களிலும் சாதி தெளிவாகவே உள்ளது.  அச்சாதிகளின் மூர்க்கமும் அறியாமையும் வன்முறையும் காட்டப்படுகிறது. எவரும் கொதித்தெழவில்லை.  அவர்களுக்கு இருக்கும் பொறுமையும் நாகரீகமும் கூட பண்பட்டவர்கள் என்று தங்களைக் கருதிக்கொள்ளும் உங்களைப்போன்றவர்களிடமில்லை என்பதை காலத்தின் கோலம் என்றே கொள்ளவேண்டும்.

அங்காடித்தெரு காட்டுவது ஒரு சமூக யதார்த்தத்தை. ஒருபக்கம் மதம் தீட்டைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறது, மறுபக்கம் தீட்டை புனிதமாகவும் அதே மதம் நினைக்கிறது. அதன் ஒரு கடவுள் சாந்தமானவர், இன்னொரு கடவுள் உக்கிரமானவர்.  உங்கள் சாதிப்பித்தை விட்டுவிட்டு படம் பார்த்தால் அந்தக்காட்சியில் ஒடுக்கப்பட்ட ஒரு பெண் தீட்டையே தகுதியென ஏற்றுக்கொள்ளும் ஒரு உக்கிரமான கடவுளைச் சார்ந்து தன்னை தைரியமானவளாக மாற்றிக்கொள்ளும் பரிணாமத்தின் கதையை காணமுடியும்.

ஏன் அங்கே பிராமணப்பெண் காட்டப்படுகிறாள் என்றால் அவ்வாறு தீட்டை ஒரு சமூக அமைப்பாக நிறுவிய மதத்தரப்பு பிராமணர்களால் தொடர்ச்சியாக நூற்றாண்டுகளாக நிலைநாட்டப்பட்டது என்பதனாலேயே. இன்றும் அந்த தீவிரமான தீட்டை கடைப்பிடிக்கும் பிராமணர்களை நான் நாகரீகச் சென்னையில், திருவல்லிக்கேணியில் கண்டிருக்கிறேன். ஆம், வேலைக்காரியை கொல்லைப்பக்கம் படுக்கவைப்பதையே கண்ணால் கண்டிருக்கிறேன் -போதுமா?

இந்தப்புண்படுதல் சங்கதியை நீங்கள் கொஞ்சம் அடக்கிக்கொள்ளத்தான் வேண்டும். நான் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பிராமண வெறுப்பை ஏற்றுக்கொண்டவன் அல்ல. அது அடுத்தகட்ட சாதியப்படிகளில் நின்றவர்கள் அரசியலதிகாரத்தை கைப்பற்ற கையாண்ட உத்தி மட்டுமே என நினைப்பவன்.  இன்று தங்கள் சொந்த சாதிவெறியை மறைக்கவே அவர்கள் அதைக் கூச்சலிடுகிறார்கள். நாளை தலித் அரசியல் வலுப்பெறும்தோறும் அந்த வேடம் கலையும்.

இந்தியப் பண்பாட்டுக்கு பிராமணர்களின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது என்று நினைப்பவன் நான். அதை இந்த இணையதளத்தில் மிக வலுவாக எழுதியுமிருக்கிறேன். இந்து ஞானமரபின் ஒரு முக்கியமான பகுதி என்றே பிராமண மதத்தை [பூர்வமீமாம்சம்] நினைக்கிறேன். இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பிராமணர்களின் பண்பாட்டு, அரசியல், சமூகவியல் பங்களிப்பு முக்கியமானது. அதை மறந்தோ மறுத்தோ பேசுபவர் நேர்மையானவர் அல்ல.

பிராமணர்கள் இந்துப்பண்பாட்டின் நிலைச்சக்திகள். இந்துப் பண்பாடு அதன் அமைப்பையும் கட்டுக்கோப்பையும் தக்கவைத்துக்கொள்வதற்காக பல்லாயிரம் வருடங்களாக அவர்கள் ரத்தமும் கண்ணீரும் சிந்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்து என உணரும் எவரும் கடமைப்பட்டிருக்கிறார்.

ஆனால் எந்நிலையிலும் பிராமணர்களுக்கு எதிரான கடும் விமரிசனம் இந்து ஞான மரபுக்குள் இருக்கும். கீதையில் இருக்கிறது, உபநிடதங்களில் உள்ளது.  விவேகானந்தரில் உள்ளது. அது நாளையும் இருக்கும். காரணம் நிலைச்சக்திக்கு எதிரானதாகவே செயல்சக்தி, மாற்றத்தின் விசை இருக்க முடியும்.  அது தவிர்க்கமுடியாதது. அது புண்படுத்துகிறது என்றால் அது வரலாற்றின் புண். நீங்கள் பிராமணராக உணரும் வரை அந்த அம்புகள் வந்து தைத்தபடியேதான் இருக்கும்.

ஆகவே நீங்கள் ஒரு மதிப்பீட்டின் அடையாளமாக இருப்பீர்கள், அதேசமயம் அந்த அடையாளத்தை விமரிசித்தால் புண்படுவீர்கள் என்று சொல்கிறீர்கள். மரபின் புனிதப்பசுக்களாக வாழும் உரிமை உங்களுக்கு உண்டு என நினைக்கிறீர்களா என்ன?

ஒரு நாகரீக மனிதன் தன்னை எந்த ஒரு இனக்குழு அடையாளங்களுடனும் பொருத்திக்கொண்டு அதன் உணர்ச்சிகளை அப்படியே பிரதிபலிக்க மாட்டான்.  புறவயமான பார்வையுடன் அதை பரிசீலித்து   சென்றகால அடையாளமாக அவன் அந்த பண்பாட்டு அம்சங்களை அவன் எடுத்துக்கொள்ளலாம். மாறாக ’நாங்கள்லாம் பிறாமணாள்’ என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் நீங்கள் இருப்பது நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில். நவீன காலகட்டம் வந்து உங்களை மோதிக்கொண்டேதான் இருக்கும். நீங்கள் தலைமுதல் கால்வரை புண்பட்டபடியேதான் இருப்பீர்கள்.

’அந்தச் சாதியைச் சொல்வாயா? இந்த மதத்தைச் சொல்வாயா?’ என்ற பாமரத்தனமான கேள்வி எழுந்து வருவதை கண்டிருக்கிறென். ஆம், நேரடியான விமரிசனங்களை எதிர்கொள்ளும் மனப்பயிற்சி இல்லாத மூர்க்கமான இனக்குழுக்கள் பல உள்ளன. அவற்றுடன் போய் மோதுவது பலசமயம் பொருளற்றதுதான். ஆனால் நான் பிராமணர்களை அப்படிப்பட்டவர்களாக நினைக்கவில்லை. உங்களைப்போன்ற சிலர் இருந்தாலும் பிராமணர்கள் பொதுவாக இன்னமும் அறிவுத்தளச் சமநிலை கொண்ட மென்மையான மனிதர்கள்தான்.

சென்னையில் ஒருமுறை பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன், கையில் ’பின் தொடரும் நிழலின்குரல்’ இருந்தது. பெரிய நாமமும் குடுமியும் பூணூலுமாக ஒரு பழுத்த வைணவ முதியவர் ‘குடுங்கோ’ என்று வாங்கி புரட்டிப்பார்த்தார். என் படத்தை பார்த்துவிட்டு ‘நீங்கதானா?’ என்றார். ‘என் பையன் படிப்பான். விஷ்ணுபுரத்தை குடுத்து படிக்கச் சொன்னான்.நன்னா இருந்தது’ என்றார். அவர் ஒரு வைணவ அறிஞர்.

நான் கொஞ்சம் துடுக்காக ’அதிலே நிறைய பிராமண கண்டனம் இருந்ததே’ என்றேன். ‘ஆமா’ என்றார் சிரித்துக்கொண்டு ‘அது நம்ம மதத்திலே எப்பவும் இருக்கறதே… வாதமும் பித்தமும் கபமும் சமமா இருக்கணுமே’ என்றார்.  நான் ’அதிலே பிராமணர்கள் சாப்பிடுற  காட்சி பத்தி என்ன நினைக்கிறீங்க?’ என்றேன். ‘பிரமாதம்’ என்று சிரித்தார். கிளம்பும்போது ‘நல்லா இரு..எல்லா ஷேமமும் வரட்டும். குரு இருக்காரோ இல்லியோ’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். ‘நினைசேன்.நல்லா இரு’ என்றார்.

நான் பிராமணன் என நினைப்பது அவரை, உங்களை அல்ல.  நீங்கள் பெரும்பாலானவர்களப்போல் கற்றும் செய்தும் ஒரு சுயத்தை உருவாக்க முடியாமல் நீங்கள் பிறக்க நேர்ந்த இனக்குழுவையே உங்கள் அடையாளமாகக் கொண்டிருக்கும் பாமர ஆத்மா

ஜெ

http://www.jeyamohan.in/?p=1314

http://www.jeyamohan.in/?p=1460

http://www.jeyamohan.in/?p=3863 சம்ஸ்கிருதம் யாருடைய மொழி?

அ.முத்துலிங்கத்துக்கு வயது ஆறு
அ.முத்துலிங்கத்தின் முதல் கதையை அவரது முதல் தொகுப்பான ’அக்கா’ வில் நான் வாசித்திருக்கிறேன். அந்நூல் அவர் மாணவராக இருந்தபோது எழுதப்பட்டது. வேதசகாயகுமாரின் சேமிப்பில் இருந்து. அதை அவருக்கு பத்மநாப அய்யர் கொடுத்திருக்கலாம். எழுதாமல் போன ஒரு சிறந்த படைப்பாளி என்ற எண்ணம் ஏற்பட்டது. அதை எழுதியிருக்கிறேன். பின்பு ஓய்வுபெற்ற பின்னரே அவர் மீண்டும் எழுத வந்தார். அப்போது அவர் எழுதிய முதல் ஆக்கம் இந்தியாடுடே இதழில் வெளிவந்தது. ஆப்கானிய பின்புலத்தில் ஒரு மரணதண்டனை நிறைவேற்றத்தைச் சித்தரித்த அக்கதையை பாராட்டி அடுத்த இதழில் நான் ஒருவாசகர் கடிதம் எழுதியிருந்தேன். அப்போது முதல் இன்றுவரை தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவராக அவரை நான் முன்வைத்து வருகிறேன்.

அ.முத்துலிங்கம் எனக்கு அளிப்பது ஒரு நுட்பமான வாழ்க்கைத்தரிசனத்தை. ’இன்னல்களும் சிக்கல்கலும் நிறைந்த, அர்த்தமற்ற பிரவாகமான இந்த மானுடவாழ்க்கைதான் எத்தனை வேடிக்கையானது’ என்று அவரது கதைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. சிரித்தபடியே மானுடத்துயரை வாசிக்க நேர்வதென்பது ஒரு மகத்தான கவித்துவ அனுபவம். அபூர்வமான இலக்கியவாதிகளால் மட்டுமே தொடப்பட்ட ஒன்று. ஓர் இலக்கிய விமரிசகனாக நான் ஒன்றைச் சொல்வேன், ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே.

அ.முத்துலிங்கத்தின் இணையதளத்தை பெரும்பாலும் இரவில் கடைசியாக வாசிக்கிறேன். விதவிதமான அன்றாட வாழ்க்கையனுபவங்கள் வழியாக செல்லும் அவரது நாட்குறிப்புகள் எப்போதும் என்னை மெல்லிய புன்னகையுடன் தூங்கச்செல்லவைக்கிறது. நாய்கள் மேல் நீரைவிட்டால் அவை கொஞ்சம் உதறிக்கொள்ளுவதுபோல பூமி மெல்ல உதறிக்கொண்டது என்று அவர் நிலநடுக்கத்தைச் சொல்லுமிடத்தில் அவரிடம் இருப்பது ஒரு ஆறுவயதுப்பையன். ஆறு வயதில் புழுக்கள் இருந்த தேன் தட்டு ஒன்றைப்பார்த்துவிட்டு அஜிதன் சொன்னான், ’ஒரே குழந்தைமட்டும் படிக்கிற கிளாஸ்ரூம் மாதிரி இருக்கு’ முத்துலிங்கத்துக்குள் வயதாவதேயில்லை

http://www.amuttu.com/index.php?view=pages&id=219

ஆத்மானந்தா
ஆத்மானந்தா என்ற பேரில் அறியப்பட்ட கிருஷ்ண மேனன் கேரளத்தில் திருவல்லா பகுதியில் பெரிங்ஙரா என்ற சிற்றூரில் பிறந்தார். 1883 டிசம்பர் 8. அவரது ஒரு நாயர் நிலப்பிரபுக்குடும்பம். அக்கால வழக்கப்படி அவரது அம்மா மூவிடத்து மடம் கோவிந்தன் நம்பூதிரி என்ப்வருடனான மண உறவில் அவரைப்பெற்றார். கிருஷ்ண மேனனின் தாய்மாமன்களில் சம்ஸ்கிருத அறிஞர்களும் சோதிடர்களும் உண்டு. இளமையிலேயே அவர் சம்ஸ்கிருதக் கல்விக்குள் சென்றிருக்கிறார்.

பொதுவாக ஆன்மீகமான எழுச்சியைப் பெற்றவர்களிலும் இலக்கியவாதிகளிலும் ஒரு தனித்தன்மையைப் பார்க்கலாம். ஒன்று, அவர்கள் மிக இளமையிலேயே அபாரமான உடல்,மன வலிமை கொண்டவர்களாக இருப்பார்கள். அசுரத்தன்மை கொண்டவர்கள். எங்கும் எதிலும் ஊடுருவிச்செல்பவர்கள். அச்சமென்பதே இல்லாதவர்கள்.  அவர்களுக்குள் கட்டற்ற உயிர்வேகம் கொந்தளித்துக்கொண்டே இருக்கும். ஆகவே அவர்களுக்கு எப்போதும் சிந்தனையில் புதிய வழிகள் தேவைப்படுகிறது

இரண்டாம் வகையானவர்கள் இளமையிலேயே நோயுற்றவர்கள். அதனாலேயே ஒதுங்கியவர்கள், தனித்தவர்கள்.  இந்தக் காரணத்தால் அவர்கள் வழக்கமான பாதைகளை முழுக்கவெ கவனிக்கப்படாதவர்கள். ஆனால் அவர்களுக்குள் மிக ஆழத்தில் உயிர்சக்தி கொந்தளித்துக்கொண்டிருக்கும். தங்கள் தனிமை காரணமாகவே அவர்கள் பிறர் அறியாத பாதைகளை நோக்கிச் செல்வார்கள். சட்டென்று ஒரு சந்தர்ப்பத்தில் ஆழமான வீச்சுடன் வெளிப்படுவார்கள்.

முதல்வகைக்கு தல்ஸ்தோய் உதாரணம் என்றால் இரண்டாம் வகைக்கு தஸ்தயேவ்ஸ்கி உதாரணம்.  முதல் வகைக்கு நாராயணகுரு  உதாரணம் என்றால் இரண்டாம் வகைக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் உதாரணம். ஆத்மானந்தா இளமையில்மிகப்பலவீனமானவராக இருந்தார். அவரது 10 வயது வரை அவர் திட உணவு உண்ணமுடிந்ததில்லை. அவரது குடல் மிகவும் பலவீனமாக இருந்தது. அப்போது திருவல்லா கோயிலுக்கு வந்த ஒரு துறவி ஏதோ மருந்தை கதலிப்பழத்தில் வைத்துக்கொடுத்தமையால் அவரது நோய் தீர்ந்தது.  கிருஷ்ண மேனனுக்கு மந்திரோபதேசம் அளித்த முதல் குருநாதரும் அவரே.

படிப்பில் மிகச்சூட்டிகையானவராக இருந்த கிருஷ்ண மேனன் 12 வயதில் உயர்நிலைப்பள்ளியை அடைந்தார். இளம் வயதிலேயே மலையாளத்தில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். பத்து வயதுக்குமேல் அசாதாரணமான பசியும் அதற்கேற்ற உடல் வலிமையும் கொண்டவராக ஆனார் . 1896ல் கொல்லம் அருகே வேம்பநாட்டுக்காயலில் ஒருபடகு விபத்து நிகழ்ந்தது. அப்போது கடுமையான புயலடித்து காயல் கொந்தளித்துக்கொண்டிருந்தது.நடுக்காயலில் மூழ்கிய படகில் இருந்த அத்தனைபேரும் இறந்தார்கள். அலைகொதித்த காயலில் இருளில் எட்டு கிலோமீட்டர் தூரம் நீந்தி கிருஷ்ண மேனன் மட்டும் உயிர்தப்பினார்

படிப்பில் புகழ்பெற்றிருந்த கிருஷ்ண மேனன் 1897ல் நடந்த சென்னைப்பல்கலைக்கழகம் நடத்திய மெட்ரிக்குலேஷன் பொதுத்தேர்வில் மலையாளத்தில் வெறும் 9 மதிப்பெண் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார். மலையாளத்தில் அவரது கவிதைகள் புகழ்பெற்ற இலக்கிய இதழ்களில் வெளிவந்துகொண்டிருந்த காலம் அது.  ஒருமாதம் கழித்து சென்னைப் பல்கலைக் கழகம் தற்செயலாக நிகழ்த்திய மறுகூட்டலில் அவர் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 90 மதிப்பெண்ணில் சுழியம் விடுபட்டிருந்தது.

படிப்பின்மீது கிருஷ்ணமேனனுக்கு அபாரமான ஈடுபாடு இருந்தது. மிகப்பெரிய தாய்வழிக்குடும்பத்தில் அக்காலத்தில் படிப்புக்கான வருமானம் இருக்கவில்லை. கிருஷ்ணமேனன் தனியார்பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றி பணம் மிச்சம் செய்து சென்னைபல்கலையில் சேர்ந்து இளங்கலை பட்டம் பெற்றார்.

பட்டப்படிப்பு முடிவதற்கு முன்னரே 1910 ல் தன் 27 வயதில் அவர் பாறுக்குட்டி அம்மாவை மணம்செய்தார். [பார்வதி என்றபேரின் கொச்சைவடிவம் பாறு]  இந்தக்காலகட்டத்தில் கிருஷ்ண மேனன் பிரிட்டிஷ் நாத்திக வாதத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டிருந்தார். குறிப்பாக ஃபாயர்பாக் மீது பெரும் பற்று இருந்தது. பிரிட்டிஷ் பொருள்முதல்வாத தத்துவம் குறித்து விரிவான உரைகள் நிகழ்த்துபவராக அவர் அறியப்பட்டிருந்தார். அதேபோல பதவி ,பணம் ஆகியவற்றிலும் பெரும் ஈடுபாடு இருந்திருக்கிறது. இளங்கலைபட்டம் பெற்ற பின் திருவனந்தபுரம் உயர்நீதிமன்றத்தில் உதவியாளராக வேலைபார்த்தார். இக்காலகட்டத்தில் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம்பயின்றார்.

கிருஷ்ணமேனன் உருவத்தில் சிறியவர். ஆனால் மிகச்சிறந்த உடல்பலம் கொண்டிருந்தார்.  அவர் நீதிமன்றத்தில் வேலைசெய்யும்போது அந்த வளாகத்தில் வெள்ளைய அதிகாரிகள் குதிரைப்பயிற்சி செய்வதுண்டு. அன்றைய திருவிதாங்கூரின் காவல் ஆணையராக இருந்தவரின் குதிரையை கிருஷ்ணமேனன் வெறும் கையால் பிடித்து அடக்கியதைக் கண்ட அவர் கிருஷ்ண மேனனை காவல் மேலாய்வாளராக நியமித்தார். கிருஷ்ணமேனன் குதிரை ஏற்றத்தில் தனித்தேர்ச்சிகொண்டவராகவும் மிகச்சிறந்த துப்பாக்கிசுடுபவராகவும் புகழ்பெற்றிருந்தார்

பதவியில் இருந்தபடியே படித்து சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றதும் குற்றவியல் ஆய்வாளாராக பதவி உயர்வு கிடைத்தது. அந்த பதவியுடன் அவர் அக்காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் இரண்டாம் தலைநகரமாக இருந்த பத்மநாப புரத்துக்கு வந்தார்.  கோட்டைக்குள் தெற்குத்தெருவில்  ஒரு வீட்டில் குடிபுகுந்தார். இக்காலகட்டத்தில் நாத்திகவாதமும் பதவிமிடுக்குமாக அவர் வாழ்ந்திருந்தார். ஆங்கில இலக்கியத்தில் தீவிரமான ருசி இருந்தது

1919ல் அப்போது இன்றைய தக்கலை அரண்மனைச்சாலையில் இருந்த காவல்நிலையத்தில் இருந்து அவர் வெளியே வந்து பத்மநாபபுரத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது குறுக்காக ஓடிய சிற்றாறின் மீதிருந்த பாலத்தின் விளிம்புச்சுவரில் அமர்ந்திருந்த ஒரு துறவியைச் சந்தித்தார். நீளமான காவி அங்கியும் வங்கபாணி தலைப்பாகையும் அணிந்த அந்த துறவி அவரை அழைத்து ஆங்கிலத்தில் பேசினார்.  கிருஷ்ணமேனன் அவரிடம் விவாதிக்க ஆரம்பித்தார்.  துறவிகளிடம் விவாதித்து அவர்களை அவமதிப்பது அவரது விளையாட்டாக இருந்தது

அந்த வங்கத்துறவியின் பெயர் யோகானந்தா . அவர் கல்கத்தாவில் இருந்து வந்திருந்தார். கொஞ்சம்பேசுவதற்குள்ளேயே கிருஷ்ணமேனன் ஒன்று தெரிந்துகொண்டார். அதுவரை அவர் இந்திய துறவிகளை மேலைநாட்டு தத்துவத்திற்குரிய தர்க்கமுறைகளைக் கொண்டு குழப்பி தோற்கடித்துக்கொண்டிருந்தார். ஆனால் யோகானந்தா மேலைநாட்டு தத்துவமரபை ஆழமாக கற்றவராக இருந்தார். கிருஷ்ணமேனனுக்கு ஆஸ்திரிய-ஜெர்மானிய தத்துவசிந்தனையாளர்கள் அறிமுகமிருக்கவில்லை. உருவாகிவரும் புதிய தத்துவத்துறைகளையும் அறிஞர்களையும் யோகானந்தா கிருஷ்ணமேனனுக்கு எடுத்துரைத்தார்

இருட்ட ஆரம்பித்தது. இருவரும் மெதுவாக மேடேறி பத்மநாபுரம் கோட்டைவாசலுக்கு நேர்முன்னால் உள்ள பழைய வீட்டுத்திண்ணையை அடைந்தார்கள். அப்போது அதில் யாரும் தங்கியிருக்கவில்லை. நிலவு எழுந்தது. அந்த ஒளியில் இரவெல்லாம் இருவரும் பேசினார்கள். ஆரம்பத்தில் அந்த உரையாடல் விவாதமாகத்தான் இருந்தது. கிருஷ்ணமேனன் தன் அனைத்து அறிவையும் தர்க்கத்திறனையும் கொண்டு யோகானந்தாவை மோதி உடைக்க முயன்றார். மெல்ல மெல்ல அவர் யோகானந்தாவின் குரலைக்கேட்டுக்கொண்டே இருக்க ஆரம்பித்தார். விடியற்காலையில் கோழி கூவி கோட்டைக்காவல் மாற்றப்பட்ட ஒலிகள் எழுந்தபோது அவர் யோகானந்தாவின் சீடராக வெளியே வந்தார்

யோகானந்தாவின் வழிகளைப்பற்றி கிருஷ்ணமேனன் பிற்பாடு விளக்கினார். அறிவுத்தர்க்கத்தின் உச்சத்தில் நின்ற கிருஷ்ணமேனனை எந்த தர்க்கமும் உடைத்திருக்க முடியாது. ஏனென்றால் தர்க்கம் என்பது ஒரு ஆடி போல. அது உடனே எதிர்தரப்பில் அதேயளவில் பிரதிபலிக்கும். யோகானந்தா எதைச் சொல்லியிருந்தாலும் அதற்கிணையான எதிர்த்தர்க்கத்தை கிருஷ்ணமேனன் உடனே உருவாக்கிக் கொண்டிருப்பார். யோகானந்தர் தர்க்கம் பிரமித்து நிற்கும் இடங்களை நோக்கி கிருஷ்ணமேனனை நகர்த்திச் சென்றார். ஒன்று உயர்கவித்துவம், இரண்டு முரண்புதிர்கள். அறிவுத்திமிர் அடங்கப்பெற்றதும் சட்டென்று முற்றிலும் ஒரு புதிய வெளி அவரது கண்களுக்கு தெரிய ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் யோகானந்தர் சீடனுக்கு கர்மயோகத்தையே பரிந்துரைத்தார்.  ஆனால் கிருஷ்ணமேனன் மனம் அதற்கு ஒப்பவில்லை. அது ஞானமார்க்கம் நோக்கியே சென்றது. ஞானத்தை தொடுவதற்கே ஞானமார்க்கம் உதவும், ஞானமாகவே ஆவதற்கு யோகமே வழி என்று குரு சொன்னதாக கிருஷ்ணமேனன் பிற்பாடு சொன்னார். ஞானம் ஏதாவது இடத்தில் வழிமுட்டி நிற்கையில் யோகத்தைத் தொடங்கும்படி அறிவுறுத்தினார்.  விடிகாலையிலேயே யோகானந்தர் கல்கத்தாவுக்குச் சென்றார். அதன்பின்னர் அவரை கிருஷ்ணமேனன் சந்தித்ததில்லை. அந்தச் சந்திப்பிலேயே அவரது மறு தொடக்கம் நிகழ்ந்தது. குருவின் ஆணைப்படி தன் பெயரை ஆத்மானந்தா என்று மாற்றிக்கொண்டார்.

யோகானந்தரைப்பற்றி பிற்பாடு சில தகவல்கள் கிடைத்தன. ராஜபுதனத்து அரசகுடும்பத்தைச் சேர்ந்தவரான யோகானந்தர் பன்னிரு வயதில் துறவு பூண்டவர். கல்கத்தாவுக்கு வந்து நான்கு சீடர்களுடன் ஒரு சிறு ஆசிரமத்தில் வசித்தார்.  அவரது மாணவர்களில் கடைசியானவர் கிருஷ்ண மேனன். ஒரே இல்லறச் சீடரும் அவரே. யோகானந்தர் காட்டியவழியில் கிருஷ்ணமேனன் ஞானத்தேடலை ஆரம்பித்தார். பலவருடங்கள் வேதாந்த மூலநூல்களில் ஆழ்ந்திருந்தார்.

ஆச்சரியமென்னவென்றால் கிருஷ்ணமேனன் ஞானத்தேடலில் தன் எல்லையைக் கண்டடைந்ததும் தீவிரமான உணர்ச்சிகர பக்திபாவத்தை நோக்கி திரும்பினார் என்பதுதான். கிருஷ்ணனின் வடிவில் பிரம்மத்தை உணர்ந்து ராதையாக தன்னை நிறுத்திச் செய்யும் ராதாமாதவஃபாவனா என்ற ’ராகயோக’ முறையை மேற்கொண்டார். இக்காலகட்டத்தில் 48 பாடல்கள் கொண்ட ராதாமாதவம் என்ற மலையாள இசைப்பாடல்நுலை எழுதியிருக்கிறார். இன்றும் அதன் பாடல்கள் எழுதியவர் பெயர் தெரியாமல் கேரளத்தில் பாடப்படுகின்றன.

அதை தொடர்ந்து சில குறிப்பிட்ட யோகப்பயிற்சிகளில் ஈடுபட்ட கிருஷ்ணமேனன் நரம்புகள் பாதிக்கப்பட்டு பக்கவாதநோய்க்கு ஆளாகி படுக்கையில் விழுந்தார்.  திருவனந்தபுரத்தின் முக்கியமான மருத்துவர்கள் அவரது நோய்க்குச் சிகிழ்ச்சை அளித்து பயன் ஏற்படவில்லை. அப்போது திருவனந்தபுரத்தில் இருந்த ஞானியான சட்டம்பி சுவாமி [இவர் நாராயணகுருவின் நண்பர்] யிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து பார்த்துவிட்டு நேரடியான குரு உதவி இன்றி மூர்க்கமாகச் செய்யப்பட்ட யோகப்பயிற்சியால் நிகழ்ந்தது அது என்று சொன்னார். சட்டம்பி சுவாமி அளித்த ஆழ்ந்த தூக்கத்தை விளைவிக்கும் ஒரு மூலிகையால் தொடர்ச்சியாக தூங்கவைக்கப்பட்ட கிருஷ்ண மேனன் நோயில் இருந்து மீண்டெழுந்தார்.

சட்டம்பிசுவாமி கிருஷ்ணமேனனுக்கு அளித்த  அறிவுரை தெளிவான ஞானயோகப் பயிற்சியின் பக்கச்செயல்பாடாக மட்டுமே பிற யோகமுறைகளை வைத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான். அதாவது கிருஷ்ணமேனன் அவரது இயல்புக்கு மீறிய எதையுமே வலுக்கட்டாயமாகச் செய்ய முற்படக்கூடாது. கிருஷ்ணமேனன் செய்த யோகப்பயிற்சிகள் அடிப்படை இச்சையான காமம் மூலம் மூலாதார ஆற்றலை எழுப்பும் பயிற்சிகளாக இருக்கலாம். அவர் அதைப்பற்றி பேசியதில்லை.

யோகசாதனைகள் போதிய பலன் தராத நிலையில் 1922ல் கிருஷ்ணமேனன் துறவுபூண்டு கல்கத்தா செல்ல திட்டமிட்டு வேலையை விடுவதற்கு விண்ணப்பித்தார். மனைவியிடம் எதையும் சொல்லவில்லை. ஆனால் அவரது கனவில் குரு வந்து தன்னிடம் வரவேண்டாம் என்றும், இலக்கு தொட்டுவிடும் தொலைவே என்றும் சொன்னதாக ஆத்மானந்தர் சொல்லியிருக்கிறார். சில நாட்களில் 1922 ஜூன் 9 அன்று யோகானந்தர் இறந்துவிட்ட செய்தி கிடைத்தது.  அதன்பின்னர் தன் வாழ்நாள்முழுக்க இல்லறத்தாராகவே ஆத்மானந்தா இருந்தார்

ஆத்மானந்தா தன் மனைவி பாறுக்குட்டியைப்பற்றி பெரிதும் பாராட்டி சொல்லியிருக்கிறார். அவரது அனைத்து யோகசாதனைகளுக்கும் உறுதுணையாக இருந்த பாறுக்குட்டியம்மா அவர் பக்கவாதம் வந்து கிடந்த நாட்களில் குழந்தைபோல அவரைக் கவனித்துக்கொண்டார். சுயநலமில்லாத பேரன்பு எப்போதும் எந்தபாதைக்கும் உறுதுணையாகவே அமையும், தடையாக ஆகாது என்பதற்கான உதாரணமாக ஆத்மானந்தர் தன் மனைவியை குறிப்பிடுவதுண்டு. தன் மனைவியை தன் முதல் மாணவியாக ஏற்றுக்கொண்ட ஆத்மானந்தா அவருக்கு துறவு அளித்தார். ஸ்வரூபானந்தமயி என்று அவரால்  பெயர் மாற்றம் பெற்றார் பாறுக்குட்டியம்மா.  ஆத்மானந்தரின் மகனும் அவரிடம் தீட்சை பெற்று துறவியாக இருந்தார்.

இப்போது பார்க்கையில் நம்பமுடியாத ஒரு விஷயம், ஆத்மானந்தர்  அவரது 60 வயது வரை காவல்துறை உயரதிகாரியாகவே செயல்பட்டு 1943ல் ஓய்வுபெற்றார் என்பதே. இக்காலகட்டத்தில் மிகச்சிறந்த புலனாய்வு அதிகாரியாக கருதப்பட்ட அவர் பல முக்கியமான வழக்குகளை தெளியச் செய்திருக்கிறார். அவரது இல்லத்தில் காலையில் உலகின் முதன்மையான பேரறிஞர்கள் அவரது உரைக்காக காத்திருக்கையில் அவர் காலை எட்டரை மணிக்கு உரையை நிறுத்திவிட்டு அதிகாரபூர்வ சீருடை அணிந்து வேலைக்குச் சென்று மாலை இருள்வது வரை பணியாற்றினார். திருவிதாங்கூர் மகாராஜாவே அவரது உரைகேட்கவரும் பக்தராக இருந்தும் திருவிதாங்கூர் அரசின் ஊழியராக இருந்தார்.  அவரது காவல்துறை நண்பர்கள் பலருக்கு அவரது அறிவுத்தள முகம் கொஞ்சம் கூட தெரிந்திருக்கவில்லை. ஏன் அவரது உறவினர்கள்கூட அதை அறிந்திருக்கவில்லை. முற்றிலும் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமலேயே வாழ்ந்து மறைந்தார்.

1951ல் அவர் தன் ஐரோப்பிய மாணவர்களின் அழைப்பின்பேரில் பிரான்ஸ், இங்கிலாந்து,சுவிட்சர்லாந்து ,ஜெர்மனி போன்ற நாடுகளுக்குச் சென்றார். வெளிப்படுத்தப்படாத காரணங்களுக்காக தன் மாணவர்களுடன் அர்ஜெண்டினாவுக்கும் எகிப்துக்கும் சென்றிருக்கிறார். பணி ஓய்வுபெற்றபின் திருவனந்தபுரத்தில் இருந்து செங்ஙன்னூர் அருகே மாலக்கரை என்ற சிறு கிராமத்தில் வீடுகட்டிக்கொண்டு அங்கே சென்று வாழ்ந்தார்.   1959 மே 14 அன்று சமாதியானார்.  அவரது சமாதியிடம் அந்த கிராமத்தில் உள்ளது.

கிருஷ்ணமேனனின் பேச்சு உரையாடல் போன்றது. அவர் எவருக்காகவும் பேசவில்லை என்று தோன்றும். ஒன்றில் இருந்து ஒன்றாக தொட்டுச் செல்லும் கேள்விகளும் விடைகளுமாக அது நீண்டு இயல்பான முடிவை அடையும். அபாரமான ஆங்கிலத்தில் மூளையைச் சொடுக்கும் கவித்துவச் சொற்றொடர்களுடன் அவை அமைந்திருக்கும். அன்று ஐரோப்பாவில் உருவாகி வந்த உளவியலின் பல வினாக்களை கிருஷ்ண மேனன் மிக ஆழமாகச் சென்று தொட்டிருக்கிறார் என்று சி.ஜி.யுங் கூறியிருக்கிறார். குறிப்பாக சுயம் [Self ] , தன்னிலை [subjectivity] , இருப்பு [Exisitance], தன்முனைப்பு [Ego] ஆகிய கருதுகோள்களைப்பற்றிய அவரது நுண்ணிய அவதானிப்புகள் இன்றும் யுங்கியர்களால் பேசப்படுகின்றன.

ஆனால் அவர் சொன்னவை அனைத்துமே பல நூற்றாண்டுக்காலமாக பேசப்பட்ட தூய அத்வைதக் கருத்துக்கள் மட்டுமே. கிருஷ்ணமேனன் அவற்றுக்கு நவீன மேலைநாட்டு மனம் புரிந்துகொள்ளும் சொல்லாட்சிகளை அளித்தார். அந்த காலகட்டத்தில் அத்வைதத்தை சமகாலச் சொல்லாடலுக்குள் கொண்டுவரவேண்டிய தேவை இருந்தது, அந்த தேவையை அவர் நிறைவேற்றினார் எனலாம்.

தூய அறிவு http://www.jeyamohan.in/?p=7133

இந்துமதம்,நாத்திகம்,ஆத்திகம்  http://www.jeyamohan.in/?p=7018

யோகம், ஒரு கடிதம் http://www.jeyamohan.in/?p=6765

ஞானியர், இரு கேள்விகள் http://www.jeyamohan.in/?p=6752

நித்யானந்தர்  http://www.jeyamohan.in/?p=6700

கென் வில்பர்,ரமணர்,முழுமையறிவு:ஓரு உரையாடல் http://www.jeyamohan.in/?p=536

குருகுலமும் கல்வியும் http://www.jeyamohan.in/?p=204

நாராயண குரு எனும் இயக்கம் -1 http://www.thinnai.com/?module=displaystory&story_id=20404291&format=html

நாராயண குரு எனும் இயக்கம்-2 http://www.thinnai.com/?module=displaystory&story_id=20405065&format=html

அலைகளென்பவை….
1997 முதல் 2000 வரை நான் தக்கலைக்கு அருகில் உள்ள பழைய கேரளத்தலைநகரமான பத்மநாபபுரத்தில் வாழ்ந்தேன். அப்போது பத்மநாபபுரத்தின் கோட்டைவாசலில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் முன்னால் ஒரு வீட்டுச் சுற்றுச்சுவருக்குள் சிறிய பீடத்தைக் கண்டிருக்கிறேன். அதில் ‘இங்குதான் குரு ஆத்மானந்தா தன் குருவைக் கண்டடைந்தார்’ என்று எழுதப்பட்டிருந்தது.  அதில் அந்த வீட்டுக்காரர்கள் தினமும் விளக்கேற்றி வழிபடுவதுண்டு

ஆத்மானந்தா

கிட்டத்தட்ட நான்குவருடம் அனேகமாக தினமும் இருமுறை அந்த நினைவுச்சின்னத்தைப் பார்த்தபடி நான் கடந்துசென்றிருந்தேன். பலமுறை போகிறபோக்கில் அதைப்பற்றிச் சிந்தனை செய்ததுண்டு என்றாலும்  ஆத்மானந்தா  யாரென அறியமுற்பட்டதில்லை.அந்த வீட்டு உரிமையாளரின் ஏதோ மூதாதையாக இருக்கும் என்ற எண்ணம்தான் என்னிடம் இருந்தது. அது நம்மூரில் வழக்கம்தானே. நமது குடும்பங்களில் எல்லாம் யாரோ சிலர் சாமியாராகச் சென்றபடியேதான் இருந்திருக்கிறார்கள். அவர்களின் நினைவு மெல்லமெல்ல ஒரு நினைவுச்சின்னமாக சுருங்கிவிடுகிறது. என் குடும்பத்தில் பல துறவிகள் உண்டு.

அதற்கு பன்னிரண்டு வருடம் முன்பு  நான் என் வாழ்க்கையின் விதியை தீர்மானித்த  அகத்திருப்புமுனையை அடைந்தேன். அப்போது கேரளத்தில் காசர்கோடு நகரில் தற்காலிகத் தொலைபேசி ஊழியராக பணியாற்றிக்கொண்டிருந்தேன்.  பெற்றோரின் அவமரணம், ஆன்மீகமான நம்பிக்கை இழப்பு ஆகியவற்றுடன் நுண்மையான நரம்புச்சிக்கல்களும் சேர்ந்துகொள்ள நாட்கள் ஒவ்வொன்றும் லாரியில் அடிபட்டுச் சதைந்த பாம்புபோல இழுத்து இழுத்து நெளிந்து நகர, என் வாழ்க்கையின் துயரம் கப்பிய இருண்ட காலகட்டம் அது.

ஒருநாள் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்துடன் காசர்கோட்டுக்கு அருகே உள்ள கும்பளா என்ற ஊருக்குச் சென்றேன். காலையின் முதல் ரயிலில் விழுவதற்காக  ரயில்பாதையோரமாக சென்றுகொண்டிருந்தேன். அந்தத் தருணத்தை நான் என்  உக்கிரமான இலக்கியப்படைப்பு ஒன்றிலேயே மீண்டும் சொல்லில் நிகழ்த்திக்காட்ட முடியும்.  விடிகாலையின் பேரழகில் தற்செயலாக ,  அல்லது மிக இயல்பாக ஈடுபட்டேன் என்று சொல்லவேண்டும். காலையொளியில் வைரம்போலச் சுடர்விட்டு இலைநுனியில் அமர்ந்திருந்த புழு ஒன்றைக் கண்டேன். வாழ்க்கை என்பது மாபெரும் வரம் என்று அப்போது என் அகம் அறிந்தது.  இந்த உலகின் ஒவ்வொரு துளியும் பேரழகு கொண்டது, மகத்தானது. இதன் ஒவ்வொரு கணமும் அமுதம்.

வாழ்க்கைக்கு அப்பால் ஏதுமில்லை, வாழ்க்கை வழியாகச் சென்றடையக்கூடியதென்றும் ஏதுமில்லை. வாழ்க்கையே தன்னளவில் முழுமையானது. நேற்றிலாது நாளையிலாது இன்றில் வாழமுடிந்தால் அதுவே வீடுபேறு. அதுவே அத்வைதம். இச்சொற்களை இன்று சொல்கிறேன். அப்போது அந்த தரிசனத்தின் அனுபவம் மட்டுமே இருந்தது. சொற்களில்லாமலிருப்பதே உண்மையான பேரனுபவம். இனி என் வாழ்க்கையில் துயரம் இல்லை என அப்போது முடிவெடுத்தேன்.

அன்றிலிருந்து இன்று வரை இருபத்திரண்டு வருடங்கள் தாண்டிச்சென்றுவிட்டிருக்கின்றன. நான் உண்மையில் வாழ்ந்தேனா என்றறிய விடாது நாட்குறிப்புகள் எழுதி வருகிறேன். நான் சோர்ந்திருந்த நாட்கள் மிக அபூர்வம். நம்பிக்கையிழந்த கணங்களே இல்லை.  துயரமடைந்த பொழுதுகள் மிகமிகச்சில. அவற்றை உடனே என் எழுத்தின் கலை மூலம் உவகையாக ஆக்கிக்கொண்டிருக்கிறேன்.  ஒவ்வொரு நாளும் இயற்கையுடனான உறவைக் கொண்டாடுகிறேன். ஒவ்வொரு கணமும் என் உள்ளப்படியே வாழ்கிறேன்.

என் திருப்புமுனை நிகழ்ந்த சிலநாட்களில் எனக்கு ஒரு சோதனை நிகழ்ந்தது.  என் வேலையை நான் இழக்க நேர்ந்தது. கையில் ஒரு பைசாகூட சேமிப்பு இல்லை. என் அண்ணாவும் வேலையில்லாமலிருந்தமையால் அவருக்கும் நான் பணம் அனுப்ப வேண்டிய நிலைமை. மோசமான அவமதிப்புகளையும் சந்தித்தேன். ‘இல்லை, துயரமில்லை’ என்று சொல்லிக்கொண்டேன். ஆனால் மனதின் ஒரு பகுதி அதை ஏற்காமல் தவித்தது. அப்போது மிக இயல்பாக ஒரு வரி நினைவில் எழுந்தது. ‘Waves are nothing but water, so is the sea’

சிலமாதங்கள் முன்பு ஒரு மலையாள வார இதழின் கட்டுரையில் கவனக்குறைவாக வாசித்த வரி அது. திடீரென அது எனக்குள் பேருருவம் கொண்டுவிட்டது. சில வரிகள் அப்படி நம்மை ஆக்ரமித்து பித்துப்பிடிக்க வைத்துவிடும். நாட்கணக்கில் அந்த வரியைச் சொல்லிக்கொண்டு அலைந்தேன். அது என் ஆன்மாவின் வரியாக ஆகியது. எனக்கான ஆப்த வாக்கியம் அதுவே ‘அலைகளென்பவை நீரன்றி வேறல்ல — கடலும்தான்’

பலவருடங்கள் கழித்து சுந்தர ராமசாமியிடம் அந்தவரியைச் சொன்னேன். சுந்தர ராமசாமி உற்சாகத்துடன்  கிட்ட்டத்தட்ட குதித்தெழுந்து ‘என்னை சின்ன வயசில ரொம்ப கவர்ந்த வரி அது. கிருஷ்ணமேனன் சொன்னது… இங்கதான் திருவனந்தபுரத்தில் இருந்தார்… க.நா.சுவுக்கு அவர்தான் பிடித்தமான குரு. அவர்கிட்ட இருந்துதான் க.நா.சு அத்வைதத்தைக் கத்துக்கிட்டார்னு சொல்லணும்.  ‘பொய்த்தேவு’ ‘ஒருநாள்’ ‘வாழ்ந்தவர் கெட்டால்’ எல்லாத்திலயும்  உள்ளோட்டமா இருக்கிற அத்வைதம்கிறது கிருஷ்ண மேனன் சொல்லிக்குடுத்ததுதான்’ என்றார். இந்திய-ஆங்கில எழுத்தாளரான ராஜாராவின் ‘கயிற்றரவு’ ‘காந்தபுரா’ இருநாவல்களும் கிருஷ்ணமேனனின் தத்துவத்தாக்கம் கொண்டவை.

கிருஷ்ண மேனனைப் பார்க்க வரும்போதுதான் க.நா.சு முதன்முறையாக நாகர்கோயிலுக்கு வந்து இளைஞர்களான சுந்தர ராமசாமியையும் கிருஷ்ணன் நம்பியையும் பார்த்திருக்கிறார். கிருஷ்ண மேனன் தன் வீட்டு திண்ணையில் தினமும் ஒருமணி நேரம் வேதாந்த வகுப்புகள் எடுப்பார். அதைக்கேட்க உலகின் பலநாடுகளில் இருந்து அறிஞர்கள் வருவார்கள். ஆல்டஸ் ஹக்ஸ்லி, ஜூலியன் ஹக்ஸ்லி, சாமர்செட் மாம், பால் பிரண்டன், ஹென்ரிச் சிம்மர், ஏ.என்.வைட்ஹெட் என அவரது மாணவர்களில் பல ஐரோப்பிய அறிஞர்கள் உண்டு. அவரைக்காண சி.ஜி.யுங் திருவனந்தபுரம் வந்திருக்கிறார்.

கிருஷ்ண மேனனின் ‘சபையை’ காணச்சென்ற கிருஷ்ணன் நம்பி ‘ஐநா சபை மாதிரி இருக்கு’ என்றார் என்று சுந்தர ராமசாமி சொன்னார். கிருஷ்ண மேனனைப்பற்றிய நினைவுகளை நெடுநாட்கள் கழித்து மீட்டெடுத்து உவகையுடன் பேசிக்கொண்டிருந்தார் சுந்தர ராமசாமி. அவரை நான் அப்படி பார்த்த நாட்கள் குறைவு. கிருஷ்ண மேனன் ஒரு துறவி அல்ல, இல்லறத்தில் இருந்தபடி இயல்பாக ஞானி என்ற இடத்தையும் வகித்தார் என்பது தன்னை எப்படி கவர்ந்தது என்று சொன்னார்.

கிருஷ்ணமேனனை பற்றி மேலும் அறிய நான் முயலவில்லை. ஒரு கட்டுரையை பவன்ஸ் ஜர்னலில் வாசித்தேன். அத்வைத சொல்லாடல்களை விட இலக்கியம் தலைக்கேறியிருந்த வருடங்கள். அந்த ஒரே ஒரு சொற்றொடர் வழியாக எனக்கான அனைத்தையும் அவர் அளித்துவிட்டதாக தோன்றியது.

க.நா.சு அக்காலத்தில் ஒரு கருத்தரங்குக்காக திருவனந்தபுரம் வந்தார். க.நா.சுவுக்கும் சுந்தர ராமசாமிக்கும் அப்போது ஆழமான மன வருத்தம் இருந்தது.  திருவனந்தபுரத்தில் க.நா.சுவை சந்தித்த சுந்தர ராமசாமி ’கிருஷ்ணமேனனை பாக்க வருவீங்களே…’ என்று கேட்டதும் க.நா.சு மகிழ்ச்சியில் சுந்தர ராமசாமியின் கைகளைப் பற்றிக்கொண்டார் என்றார் சுந்தர ராமசாமி. ‘வீட்டுக்கு வாங்கோ’ என்று சுந்தர ராமசாமி அழைத்ததும் க.நா.சு கூடவே வந்து விட்டார். அவர் முன்பு தங்கிய அதே விடுதியில் தங்க விரும்பினார். அதை இடித்துவிட்டிருந்தார்கள். ஆகவே சுந்தர ராமசாமி வீட்டு மாடியிலேயே தங்கினார்

நான் காசர்கோட்டில் இருந்து தொலைபேசியில் அழைத்தேன். ’க.நா.சு கிட்ட பேசறீங்களா?’ என்றார் சுந்தர ராமசாமி. தொலைபேசியில் சரளமாகப் பேசமுடியவில்லை. க.நா.சுவுக்கு சரியாக காது கேட்கவில்லை. ’நலமா?’ என்றபின் முடித்துக்கொண்டேன். ‘கிருஷ்ண மேனனைப்பத்தித்தான் பேச்சு’ என்றார் சுந்தர ராமசாமி. சுந்தர ராமசாமியை அத்தனை உற்சாகமாக நான் அபூர்வமாகவே கண்டிருந்தேன். தனக்கும் க.நா.சுவுக்குமான மனக்கசப்புகளைப்பற்றி சுந்தர ராமசாமிக்கே ஆழமான கண்டனம் இருந்திருக்கலாம். ‘சிறுமை தீண்டாத மனிதர்’ என்றுதான் எப்போதும் க.நா.சு பற்றி சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார்

சில மாதங்கள் கழித்து க.நா.சு மரணமடைந்தார். காலச்சுவடில் சுந்தர ராமசாமி உணர்ச்சிகரமான ஓர் அஞ்சலிக்கட்டுரை எழுதினார்.  ‘க.நா.சு நட்பும் மதிப்பும்’ என்ற அக்கட்டுரை தமிழின் அஞ்சலிக்கட்டுரைகளில் மிக முக்கியமானது. மிக வெளிப்படையாக, தெளிவான இலக்கிய மதிப்பீடுகளுடன் எழுதப்பட்ட அக்கட்டுரையை வியந்துபாராட்டி உணர்ச்சிகரமாக எஸ்.வி.ராஜதுரை ஒரு கடிதம் எழுதியிருந்ததை சுந்தர ராமசாமி காட்டினார்.

ஆனால் வழக்கம்போல அஞ்சலிக்கட்டுரை என்றால் பட்டையான புகழ்பாடலாக மட்டுமே இருக்கவேண்டும், விமரிசனம் இருக்கக்கூடாது என்ற நோக்கில் அக்கட்டுரை க.நா.சுவை அவதூறு செய்கிறது என்று தஞ்சை பிரகாஷ் போன்றவர்கள் வசைபாடினார்கள். எனக்கு அக்கட்டுரை ஒரு முக்கியமான முன்னுதாரணம். அக்கட்டுரையை போன்றே நான் சுந்தர ராமசாமிக்கான அஞ்சலி நூலை எழுதினேன். சுந்தர ராமசாமியின் கட்டுரை எப்படி க.நா.சுவை கண்ணெதிரே நிறுத்துகிறதோ அப்படியே சுந்தர ராமசாமியை கண்ணெதிரே நிறுத்தும் நூல் ’சுரா நினைவின் நதியில்’ அதற்கும்  அதே போல விமரிசனங்கள் வந்தன.

சுந்தர ராமசாமி எழுதிய கட்டுரையை நான் தட்டச்சுப்பிரதியில்தான் வாசித்தேன். என் கருத்துக்களைச் சொன்னேன். அச்சான பின் வாசிக்கவில்லை.  மேலும் பத்து வருடங்கள் கழித்து சுந்தர ராமசாமி அந்தக்கட்டுரையை விரிவாக்கம் செய்து ‘நினைவோடை’ வரிசையில்  ‘க.நா.சு’ என்ற நூலாக வெளியிட்டார்.  அந்நூலில் எனக்கு ஒரு ஆச்சரியம் இருந்தது. சுந்தர ராமசாமி கிருஷ்ண மேனனை பற்றிச் சொல்லும்போது அடைப்புகுறிக்குள் ஆத்மானந்தா என்று சொல்லியிருந்தார்.

அதே ஆத்மானந்தாவா? நான் உடனே பத்மநாபபுரம் சென்று விசாரித்தேன். ஆமாம், அவரேதான்.  அவர் பலவருடம் பத்மநாபபுரத்தில் பணியாற்றியிருக்கிறார். ஒருவகையில் அவர் என் மானசீக குரு. அவரது நினைவுச்சின்னம் வழியாகத்தான் அவரது ஆப்தவாக்கியத்தை மனதுக்குள் ஓடவிட்டபடி அவரை அறியாமல் நான்குவருடம் சென்றுகொண்டிருந்திருக்கிறேன்.

[மேலும்]

http://encyclopediatamilcriticism.com/subira.php க.நா.சு -வேதசகாயகுமாரின் அறிமுகம்

க.நா.சு. – நினைவோடையில் துலங்கும் முகம்:சுகுமாரன் http://www.thinnai.com/?module=displaystory&story_id=60506305&format=html&edition_id=20050630

பார்வதிபுரம் மணி http://www.jeyamohan.in/?p=979

சில வம்புக்கடிதங்கள்…
சமீபகாலமாக ஒரு குறிப்பிட்டவகையான கடிதங்களை நான் தொடர்ச்சியாக பெற்றுக்கொண்டே இருக்கிறேன். அவற்றில் நான் திரைப்பட உலகுக்குச் சென்று என் மதிப்பை இழக்கிறேன் என்றும், இலக்கிய மதிப்பீடுகளில் அதற்காக சமரசம்செய்துகொள்கிறேன் என்றும் ஐயப்படபப்ட்டிருக்கும். நான் இலக்கியத்தில் தீவிரமாக ஈடுபடவேண்டுமென்ற ஆலோசனையும் இருக்கும்

இந்த மனநிலையை எப்போதும் கூர்ந்து கவனிப்பதுண்டு. இலக்கிய மதிப்பீடுகள் மீதும் அடிப்படை அறங்கள் மீதும் ஆழமான பற்றுடன், அவை இழக்கப்படுகின்றனவா என்ற பதைப்பை பாவனை செய்தபடி, இவை எழுதப்படுகின்றன.

உண்மையில் அப்படித்தானா? எழுதுபவர்கள் தங்களைத் தாங்களே பரிசோதனைசெய்துகொள்வார்கள் என்றால் அதில் உள்ள போலித்தனம் அவர்களுக்கு தெரியக்கூடும். ஆனால் பொதுவாக அத்தகைய நுண்ணுணர்வு கொண்டவர்கள் இப்படி எழுத முற்படுவதில்லை. அவர்களின் மனம் இயங்கும்தளமே வேறு.

இக்கடிதங்களின் ‘கவலைகள்’ என்னென்ன? ஒன்று எனக்கு இலக்கியம் மீதுள்ள பற்று மற்றும் அர்ப்பணிப்பு குறித்தது. இரண்டு என் கருத்துக்களில் எனக்குள்ள நேர்மை குறித்தது. அதாவது ஒட்டுமொத்தமாக என்னுடைய தனிப்பட்ட ஆளுமையின் மீதான ஐயம்.

என் அர்ப்பணிப்புக்கான ஆதாரங்கள் என் இலக்கிய ஆக்கங்கள். கடந்த இருபதாண்டுக்காலமாக இலக்கியத்தை மட்டுமே வாழ்க்கையின் தளமாகக் கொண்டு நான் செயல்பட்டு வருவதை அவை எந்த எளிய வாசகனுக்கும் காட்டும். கடும்உழைப்பும் மனக்குவிப்பும் இன்றி, உக்கிரமான தியாகங்கள் இன்றி அவற்றை ஒருவன் எழுதியிருக்க இயலாது என்று அவன் புரிந்துகொள்வான். அந்த வாசகனுக்கு என் அர்ப்பணிப்பு குறித்த எந்த ஐயமும் எழாது. இந்த கடிதங்கள் எழுப்பும் ஐயங்கள் எந்த இலக்கிய ஆக்கத்தையும் வாசிக்காமல் இலக்கிய வம்புகளினூடாகவே இலக்கியப்பயணம் நிகழ்த்துவதன் விளைவுகள்

ஓர் எழுத்தாளனாக என்னுடைய மிகச்சிறந்த வெளிப்பாட்டை நிகழ்த்தவேண்டுமென்பதே என் இலக்கு. என்னுடைய தனி வாழ்க்கையை நான் அதற்காகவே அமைத்துக்கொண்டுள்ளேன் என்பது என் நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் தெரியும். எளிமையான அலுவலகப் பணிக்கு அப்பால் செல்வதில்லை, லௌகீக இலக்குகளை வைத்துக்கொள்வதில்லை என்ற முடிவை எடுத்துக்கொண்டமையால்தான் நான் அதிகமாக எழுத முடிந்தது. இன்றும் எந்த உலகியல் இன்பங்களுக்கும் பின்னால் செல்லாத தன்மையையே என் வலிமையாகக் கொண்டிருக்கிறேன்.

என் எழுத்து அடிப்படையில் ஆன்மீகத் தேடல். நிலையான சீரான வாழ்வல்ல, பயணமும் அலைதலுமே அதன் வழி. அதன் அழுத்தங்களும் தேவைகளும் எப்போதும் ஒன்றல்ல. இந்த பருவத்தில்தான் ஒரு சராசரி குடும்பத்தலைவன் மேல் பொறுப்புகள் அதிகமாகின்றன. அதேசமயம் இந்த வயதில்தான் நான் இதுவரை சேர்த்துக்கொண்டவற்றையெல்லாம் உதறி மேலே செல்லவும் வேண்டியிருக்கிறது. அந்த முன்னகர்வு எளிதல்ல. அதன் தத்தளிப்புகளையும், சங்கடங்களையும், அலைபாய்தல்களையும் இலக்கிய ஆக்கங்கள் வழியாக இலக்கியவாதியை அறிய முடியாதவர்களிடம் விவாதிக்க முடியாது.

மீண்டும் மீண்டும் இந்த  உலகியல் வாழ்க்கை என்னை கட்டிப்போடாத சுதந்திரத்தை நான் தேடிக்கொள்கிறேன். தேவைகளை குறைப்பது ஒருபக்கம். கௌரவங்களையும் பொறுப்புகளையும் ஏற்க மறுப்பது இன்னொரு பக்கம். பொருளியல் சுதந்திரம் அதன் இன்னொரு பக்கம் மட்டுமே. அது எல்லா எழுத்தாளர்களுக்கும் உரிய நிபந்தனை அல்ல. நான் கஞ்சி காய்ச்சும் எழுத்தாளன் அல்ல, வரலாற்றை உருக்கி வார்ப்பவன். என்னையும் என் மொழியையும் மீண்டும் மீண்டும் சிதைத்து வார்த்துக்கொள்பவன்.

என் வாழ்க்கையில் எதையுமே எப்போதுமே ரகசியமாக வைத்துக்கொண்டதில்லை. அதை எனக்கான ஒரு விதியாகவே வைத்திருக்கிறேன்.  என் வாழ்க்கை என் வாசகர்களுக்கு முழுமையாகவே அறிவதற்குரிய ஒன்றே. என் ஆக்கங்கள் வழியாக. என் கட்டுரைகள் வழியாக. என் தத்தளிப்புகளும் தோல்விகளும் கூட அவ்வாறு வெளிப்படையானவை. நான் முழுமையானவன் என்று சொல்லவில்லை. அதை நோக்கிச் செல்பவன்.

என் ஆக்கங்களை தொடர்ச்சியாக வாசிக்கும் எவரும் என் கருத்துக்களின் ஒட்டுமொத்தமான திசையை, அவற்றில் நான் கொண்டிருக்கும் ஒழுங்கை உணர முடியும். அப்பட்டமாக இருப்பது என்பதே நான்  என் குருநாதர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது. அந்த அப்பட்டத்தன்மை பலசமயம் சமகாலத்து அரசியல்சரிகளை அறநெறிகளை பொதுநம்பிக்கைகளைச் சீண்டும்போது நான் விவாதமையமாக ஆகிறேன். வசைபாடப்படுகிறேன்

என் கருத்துக்களை நான் முழுமையான, கடைசியான முடிவுகளாக நினைக்கவில்லை. அவற்றை வேறு கோணத்தில் பார்க்கும் ஒருவாசகனுக்கு அவற்றில் நான் கொண்டிருக்கும் குழப்பங்களோ சிக்கல்களோ பார்வையில்படக்கூடும்.  ஆனால் ஒருபோதும் சுயநலம் சார்ந்த சமரசங்களை பார்க்கமுடியாது என்றே கூறுவேன்.

ஆனால் என் வாசகர்களே அதைப்பற்றி என்னிடம் உரையாடும் தகுதி கொண்டவர்கள். வம்பாளர்களை என் தணிக்கையாளர்களாக வைத்துக்கொண்டு அவர்களின் சான்றிதழ்களை நான் தேடிக்கொண்டிருக்க இயலாது. ஆகவே வம்பின் தரத்தில் வரும் கடிதங்களுக்கு பொதுவாக நான் பதில் அளிப்பதில்லை. பல கடிதங்களுக்கான பொதுவான பதில் இது.

நான் சினிமாவில் நுழைந்து ‘சமரசம்’ செய்துகொண்டதாகவும் சுயகௌரவத்தை இழந்துவிட்டதாகவும் ‘கவலை’ப்பட்டு எழுதப்படும் கடிதங்களை ஆரம்பத்தில் என்னை பரிசீலனை செய்துகொள்ள நான் பயன்படுத்தியிருக்கிறேன். அப்படி நிகழ்கிறதா என்ற ஆவலுக்கும் மேலாக அப்படி நிகழவேண்டுமே என்ற ஆசையே இந்த கடிதங்களின் பின்னால் உள்ள மனநிலை என நாளாடைவில் புரிந்துகொண்டேன். அன்றாட சமரசங்கள் வழியாக, சுயஇழிவுகளினூடாக வாழ்பவர்களின்  அற்ப ஆசை இது.

இதன் உளவியல் என்ன? தங்கள் தனி வாழ்க்கையில் எந்த விதமான மதிப்பீடுகளையும் பேணிக்கொள்ள முடியாது போனவர்கள் சில மதிப்பீடுகளின் பிரதிநிதிகளாக இருப்பவர்களின் சரிவை உள்ளூர ஆசைப்படுகிறார்கள். ‘எல்லாரும் நம்மள மாதிரித்தான் மாப்ள’ என்ற எளிய ஆறுதலை தேடுகிறார்கள்.

சினிமாவில் என் பங்களிப்பு என்ன? நான் அதில் பணியாற்றுவதற்காகச் சென்றிருக்கிறேன். அதில் இன்று ஓர் எழுத்தாளன் ஆற்றியாகவேண்டிய பங்கு அடையாளப்படுத்தப்படவில்லை, வணிகரீதியாக நிரூபிக்கப்படவும் இல்லை. சினிமா எனக்கு இலக்காக இருந்ததில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் அது உருவாக்கும் வாய்ப்பு எனக்கு தெரிந்தது. என் அலுவலகவேலையில் ஓர் உச்சகட்டத்தை நான் கண்டுகொண்ட தருணம் அது.

இன்று, அரசு அலுவலகங்களில் வேலைசெய்யும் அனைவருக்குமே ஒன்று தெரியும், வேலைசெய்தபடி கலையிலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்ட காலம் முடிந்துவிட்டது. அமெரிக்கவேலைமுறை மெல்லமெல்ல உருவாகி வந்துவிட்டது. ஒருவேலையில் இருப்பவன் மொத்த வாழ்க்கையையும் அதற்காகக் கொடுக்கவேண்டும். எளிய சில விடுமுறைகளை மட்டும் அவன் எடுத்துக்கொள்ளலாம். வரும்காலத்தில் இரு வாய்ப்புகளே உள்ளன. மேலைநாடுகளைப்போல முழுநேர எழுத்து உருவாகலாம். அல்லது கீழை ஆசிய நாடுகளைப்போல இலக்கியமும் கலையும் அற்றும்போகலாம்.

இச்சந்தர்ப்பத்தில் நான் கண்டடைந்த வெளியேறும் முறை சினிமா. அது எனக்கு விடுதலை அளித்தது. எழுத்து மீதான அர்ப்பணிப்பினால்தான் நான் என்னை ஒரு மிகச்சிறிய வேலைக்குள் நிறுத்திக்கொண்டிருந்தேன். அதன் காரணமாகவே வெளியேறவும் முடிவுசெய்தேன். சினிமா என் இலக்கோ இடமோ அல்ல. இதன் வழியாக இன்னும் பெரிய ஒரு வெளியேறலை, ஒரு புதிய தொடக்கத்தை உத்தேசித்திருக்கிறேன்.

இன்றைய தமிழ் சினிமாவின் தளத்தில் அதன் படைப்புப் பங்களிப்பு எப்போதுமே கூட்டான ஒன்று. எழுத்தாளனின் பங்களிப்பு என்பது இன்றும் வரையறுக்கப்படாமலேயே உள்ளது. சினிமாவில் எழுத்தாளனாகச் செயல்படும்போது இன்று எழுத்தாளன் என்னென்ன செய்ய முடியும் என்பதை நிரூபித்துக்காட்டவேண்டியிருக்கிறது. ஆகவே நிபந்தனைகள் வைக்கும் தருணம் அல்ல இது. உதாரணமகா பாலாவின் நான்கடவுளில் ஏழாம் உலகம் நாவலின் கூறுகள் இருப்பதை தலைப்பில் அங்கீகரிக்கவில்லை என்றும் ஆகவே நான் அவரிடம் இலக்கியத்தை ஒப்புக்கொடுத்துவிட்டேன் என்றும் சிலரால் சொல்லப்படுகிறது.

நான்கடவுள் பாலாவின் கதை, திரைக்கதை. அதற்கு நான் வசனம் எழுதியபோது என் நாவலின் சூழலின் சில அம்சங்களை மட்டும் அதில் சேர்த்துக்கொண்டேன். அது என் முடிவு. அதை நான் போராடி மெல்லமெல்லத்தான் செய்யமுடிந்தது. ஒரு வணிகசினிமாவில் இலக்கியத்தின் ஒரு கூறு இருக்கமுடியும், ஓர் அப்பட்டமான யதார்த்தத்தை திரையில் காட்டமுடியும் என்று காட்டுவதற்கான ஒரு தருணமாக அதை மேற்கொண்டேன். அது வணிகரீதியாக செல்லுபடியாயிற்று என்றும் அது தேசிய அளவில் விருதுக்கான அங்கீகாரத்தில் ஒரு வலுவான இடத்தை வகித்தது என்றும் அதன் மூலம் காட்ட முடிந்தது.

தமிழ் சினிமாவின் வழக்கமான கருப்பொருட்களில் இருந்து ‘நான் கடவுள்’ விலகியமைக்குக் காரணம் இந்த இலக்கிய அம்சம்தான். அதை தமிழ் சினிமா வேண்டி விரும்பி தேடிவரவில்லை, நிபந்தனைகள் விதிப்பதற்கு. அதை நான் என் முயற்சியால் உள்ளே கொண்டு செல்ல முனைகிறேன். அதன் வெற்றியே மேலும் சில இலக்கியங்கள் திரையில் நிகழ வழி வகுத்தது. ஆனால் இன்று இந்த முயற்சி ஓர் ஆரம்ப நிலையிலேயே உள்ளது.

தமிழ் சினிமாவில் பெரிதாக எதையும் சாதிக்கும் எண்ணம் எனக்கில்லை என்பதைச் சொல்லியிருக்கிறேன். என் நோக்கம் சிறிதுகாலம் அதை ஒரு தொழிலாகக் கொள்வதே. ஆனால் அதில் இருக்கும் காலத்தில் என் பங்களிப்பை அதில் நிகழ்த்தவும் அதன் போக்கில் எதையாவது கொடுக்கமுடியுமா என முயலவும் எண்ணுகிறேன். சினிமாவின் வழக்கமான கட்டமைப்புக்குள் இலக்கியத்தின் இடத்தை கொஞ்சமேனும் சாத்தியமாக்குவதே அதில் என் குறைந்தபட்ச இலக்கு. அதற்காக சில சமரசங்களையும் செய்ய துணிவேன்.

ஆனால் தமிழ் சினிமாவின் தரம் குறித்து ஓயாது பேசுபவர்கள் இப்படி ஒரு முயற்சி நிகழக்கூடாதென்று விரும்புவதன் உளவியல் ஆச்சரியமளித்தாலும் புரிந்துகொள்ளக்கூடியதுதான். இம்முயற்சிகளின் வெற்றி அவர்களை பதற்றப்படுத்துகிறது. அதை நிராகரிக்கவும் குறைத்து மதிப்பிடவும் முயல்கிறார்கள். முடிந்தால் சினிமாவில்செயல்படுபவர்களிடம் மனச்சிக்கல்களை உருவாக்கலாமென நினைக்கிறார்கள்.

காரணம் மிக எளியது. தமிழில் பெரும்பாலானவர்கள் சினிமாவில் நுழைவதையே அந்தரங்கமான கனவாகக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக எந்த சமரசத்தையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். தங்களைப்போன்றவர் என்று நம்பும் ஒருவர் நுழைகையில் பதற்றம் கொள்கிறார்கள். அந்த உளச்சிக்கலே இவ்வகையில் வெளிப்படுகிறது.

சினிமாவில் எழுத்தாளர்கள் கௌரவத்தை இழக்கவேண்டும் என்ற ஆசையை இணையத்திலும் பலரிடம் கண்டுகொண்டிருக்கிறேன். எத்தனை எள்ளல்கள், எத்தனை அற்பக் குதூகலங்கள். உண்மை, சினிமாவில் எழுத்தாளர்களுக்கு இன்று இயல்பான இடம் ஒன்று இல்லை. அதாவது அவன் படைப்புரீதியாக என்ன செய்யமுடியும் என்பது தெளிவாக இல்லை.  அது எழுத்தாளர்கள் உள்ளே நுழைந்து எழுதி, வெற்றி காட்டி நிரூபித்து எடுக்க வேண்டிய ஒன்று. எழுபதுகளில் எம்.டி.வாசுதேவன் நாயரும் பத்மராஜனும் அப்படித்தான் மலையாளத்தில் சாதித்தார்கள். அது மலையாள சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றது.

அது தமிழில் நிகழலாம், நிகழாமலும் போகலாம். ஆனால் பல எழுத்தாளர்கள் வழியாக அந்த முயற்சி நிகழவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அதற்கான போராட்டங்கள் வெற்றி தோல்விகளுடன், பலவகையான சறுக்கல்களுடன், சிக்கல்களுடன், மோதல்களுடன்தான் நிகழ முடியும். எழுத்தாளன் தன் அகங்காரத்தை சோதித்துப்பார்க்க வேண்டிய இடமல்ல சினிமா.

ஆனால் சினிமாவில் எல்லா எழுத்தாளர்களும் தனிப்பட்ட முறையில் அபாரமான மரியாதையைத்தான் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதை பலமுறை சொல்லியிருக்கிறேன். சினிமாவில் நான் சந்தித்தவர்களில் எனக்கு அந்த முதல்மரியாதையை அளிக்காதவர்கள் என எவரும் இல்லை. பணம் என்ற அளவிலும் அப்படித்தான் – ஒருவர்கூட நான் கேட்டு பணம் பெறும் நிலையை எனக்கு உருவாக்கியதில்லை. நான் பணியாற்றிய எந்த இயக்குநரையும் பெயரிட்டு அழைக்கக்கூடிய, அவர்களின் தனிவாழ்க்கையில்கூட பங்கெடுக்கிற நண்பராகவே இருந்திருக்கிறேன். படப்பணி முடிந்த பின்னரும்கூட நீடிக்கும் நட்புகள் அவை.

அது இலக்கியம் உருவாக்கியளிக்கும் இடம். ஏனென்றால் இணையத்திலும், சிற்றிதழ்களிலும்  எந்த இலக்கிய நூல்களையும் வாசிக்காமல் வம்புபேசுபவர்களைவிட அதிகமாகவே சினிமாக்காரர்கள் இலக்கிய நூல்களை வாசித்திருக்கிறார்கள். அவற்றில் மனம் பறிகொடுத்திருக்கிறார்கள். அவற்றின் வழியாக இலக்கியவாதியின் மனத்தை அறிந்திருக்கிறார்கள்.

உண்மையில் தமிழ் எழுத்தாளன் அவனது மிக மோசமான அவமதிப்புகளை அடைவது இலக்கியத்தை வம்புகளாக மட்டுமே அறிந்து இலக்கியச்சூழலில் புழங்குபவர்களிடமே. அந்த அவமதிப்பு அவன் எந்த சாதனை ஆற்றியிருந்தாலும் அதற்காக எந்த தியாகங்களைச் செய்திருந்தாலும் விலகுவதில்லை. அடுத்தபடியாக நம் கல்விநிலையங்களில் அவனுக்கு அவமதிப்பு திரண்டிருக்கிறது. நான் முற்றிலுமாக தவிர்க்க நினைப்பது இந்த இரு சாராரையுமே.

சமீபத்தில் வந்த ஒரு கடிதத்தில் நான் இப்போது திடீரென வைரமுத்துவை புகழ்வதாக சொல்லப்பட்டிருக்கிறது. வைரமுத்துவின் ஆக்கங்களைப்பற்றி நான் என்ன எழுதியிருக்கிறேன் என இந்த ஆசாமிக்கு எதுவுமே தெரியாது என்று உணர்ந்தேன்.எப்போதுமே அவரை வானம்பாடி இலக்கிய அழகியலின் சிறந்த உதாரணமாகவே சொல்லியிருக்கிறேன். அந்த அழகியல் எனக்கு உடன்பாடானதல்ல அவ்வளவே. தமிழின் ஆகச்சிறந்த பாடலாசிரியராக நான் அவரைத்தான் பார்க்கிறேன். அவற்றை மிக விரிவாக எழுதியிருக்கிறேன் — அவருக்கு சாகித்ய அக்காதமி விருது கொடுக்கப்பட்டதைக் கண்டித்து எழுதிய கட்டுரையில்கூட! அவரை புனைகதையாசிரியராகத்தான் நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

வைரமுத்துவின் ஆளுமைச் சித்திரம் குறித்த மரபின்மைந்தனின் நூலில் எப்படி அவரது ஆளுமை கணிசமான இளைஞர்களிடம் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது என்பதை குறிப்பிட்டிருக்கிறேன்.  பொதுவாக கவிஞர்கள் உருவாக்கும் சோர்வுமனநிலைக்கு மாற்றாக அவர் உருவாக்கும் ஊக்கமே அதற்குக் காரணமாக இருக்கலாமென குறிப்பிட்டிருக்கிறேன். அதைப்பற்றியே இந்த புகார்.  ‘அப்ப திட்டினான் இப்ப பாராட்டுறான். ஏதோ இருக்கும்போல’ என்ற வம்பு மனநிலை வேலைசெய்கிறது.

அதேபோல் சென்ற பலநாட்களாக எனக்கு வரும் கடிதங்களின் மையக்கேள்வி நான் ஒரு குறிப்பில் ‘கமல் அவர்கள்’ என்று சொன்னதைப்பற்றியது. அது பெரிய சமரசம் என்றும் வீழ்ச்சி என்றும் எழுதினார்கள். எனக்கு கமல் அவர்கள் நெருக்கமானவரல்ல என்பதனாலும், அவர் என்னை ‘ஜெயமோகன் அவர்கள்’ என்று சொல்வதனாலும்தான் அப்படிச் சொல்கிறேன் என்று சொன்னேன். அதற்கு ‘அதெல்லாமில்லை, நீங்கள் அவருக்கு எழுதப்போகிறீர்கள்’ என்று பதில் வருகிறது. இந்த அற்ப ஆசைகளுக்கு என்ன பதில் சொல்வது? ‘சரி, அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். சமரசம் செய்து வீழ்ந்துபோன ஒருவனை கொள்கைக்குன்றான நீங்கள் மேற்கொண்டு வாசிக்கவேண்டாம்’ என்று பதில் சொன்னேன்.

எனக்கு இந்த வம்புகள் புதியனவல்ல. நான் எழுத ஆரம்பித்தபோதே இதைத்தான் சந்தித்தேன். சுஜாதாவையும் கல்கியையும் அவர்களின் தளத்தில் வைத்து அங்கீகரித்து எழுதிய ஆரம்ப நாட்களில் ‘அந்தப்பக்கம் போய்ட்டீங்களா? குமுதத்திலே எழுதுறீங்களா?’ என்று வம்பாளர்கள் கேட்டதை நினைவுகூர்கிறேன். இந்த வம்புகள் அவதூறுகள் உருவாக்கும் சிக்கல்களின் நடுவேதான் நான் என் சிறந்த ஆக்கங்களை எழுதி என் வாசகர்களைக் கண்டுகொண்டிருக்கிறேன்

புறக்கணிப்பை மட்டுமே கோரும் இந்த வம்புகளைப்பற்றி இந்த விளக்கமே கூட பலர் நேர்ப்பேச்சில் இந்தவகையான சலிப்பூட்டும் வினாக்களை மீண்டும் மீண்டும் கேட்டு நேரவிரயம்செய்வதை தவிர்ப்பதற்காகவே

வாசிப்பை விட வம்பு அதிகமாக உள்ள தமிழ்ச்சூழலில் எந்த இலக்கியவாதியும் சந்திக்க நேரும் சிக்கல் இது. ஏளனம், திரிபு, மூட்டிவிடுதல். இதைத்தாண்டித்தான் நாம் எழுத வேண்டியிருக்கிறது. இலக்கு தெளிவாக இருந்தால் அதைமட்டுமே நோக்கவேண்டும். என்ன செய்கிறோம் என்பதே பதிலாக அமையும்.

ஜெ