Category Archive: கவிதை

அணிகளின் அணிநடை

கேரளத்தில் நடந்த ஒருவிழாவில் அழகிய இளம்பெண்கள் கேரளமரபுப்படி சரிகையுள்ள வெண்ணிற ஆடை அணிந்து வட்ட முன்கொண்டையில் முல்லைப்பூச்சரம் சுற்றி கையில் தட்டில் மங்கலப்பொருட்கள் ஏந்தி வரிசையாக நின்றிருந்தார்கள். தாலப்பொலி என்ற தூயதமிழ்ச் சொல்லால் அது அங்கே குறிப்பிடப்படுகிறது. என்னுடன் வந்த இளம் மலையாள எழுத்தாளர் கடும் சினத்துடன் ”கொடுமை”என்று குமுறினார். தேநீர் அருந்த அமர்ந்திருந்தபோது என்னிடம் ”பெண்களை அவமதிப்பதற்கு இதைவிட வேறு வழியே தேவையில்லை…”என்றார். எங்களுடன் அந்த விழாவின் முக்கியப்பேச்சாளரான மிக வயதான மலையாளப்பேராசிரியரும் இருந்தார். ”…அதில் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=512

அறைக்குள் ஒரு பெண்

நான் வாழ்ந்த ஊர்களில் எனக்குக் கொஞ்சம்கூட நினைவில் நிற்காத ஊர் என்றால் அது திருப்பத்தூர்தான். இத்தனைக்கும் அங்கிருக்கையில் சில நல்ல இலக்கிய நட்புகள் கிடைத்தன. அங்கேதான் எவரும் தங்கள் வாழ்க்கையின் மிக இனிய நினைவுகளாகச் சொல்லக்கூடியவை நிகழ்ந்தன – எங்கள் முதல்குழந்தை அஜிதன் கைக்குழந்தையாக இருந்தான். அக்காலகட்டத்தில்தான் எனக்கு சம்ஸ்கிருதி சம்மான் உள்ளிட்ட விருதுகள் கிடைத்தன. ஆனாலும் அந்த ஊர் நினைவிலிருந்து நழுவிக்கொண்டே இருக்கிறது. 1992ல் என் மனைவி தபால் குமாஸ்தாவுக்கான பயிற்சி முடித்துத் தபால்துறை ஊழியராக …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=31745

குறள் – கவிதையும், நீதியும்.

குறைந்தது பத்து நூற்றாண்டுகளாகவாவது குறள் தமிழ் சமூகத்தின் நீதியுணர்வின் சாரமாக இருந்து வந்துள்ளது. குறளுக்கு எழுதப்பட்ட புராதன உரைகள், குறள் குறித்த பாமாலைகள் என இதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. ஆயினும் அந்த இடம் அறிஞர் மத்தியில் தான் இருந்தது. கல்வி எல்லைக்குட்பட்டு வழங்கப் பட்ட சென்ற காலங்களில் அது இயல்பும் கூட. பிற்பாடு மக்களாட்சியின் சாத்தியங்களுக்கு உட்பட்டு கல்வி பரவலாக்கப் பட்ட போது தமிழில் மிக அதிகமாக வெகு ஜன மயமாக்கப் பட்ட பேரிலக்கியம் குறளேயாகும். …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=105

கவிமொழி

அன்புள்ள ஜெ, பல கடிதங்கள் உங்களுக்கு எழுத வேண்டும் என்று நினனத்து எப்படியோ அதை செய்ய முடியாமல் போய்விட்டது. ஆனால் இந்த முறை எப்படியும் உங்களுக்கு இந்த கடிதத்தை அனுப்பி விடுவது என்றே எழுதுகிறேன். உங்கள் தளத்தில் கவிதையைப் பற்றி நிறையவே எழுதி இருக்கிறீர்கள, அதில் பலவற்றை நான் படித்திருக்கிறேன். அண்மையில் ‘எரிமருள் வேங்கை‘ படித்துவிட்டே இதை எழுதுகிறேன். கவிதை வாசிப்புக்காக தொடர்ந்து சிறிதளவேனும் முயற்சி எடுத்துக்கொண்டே வருகிறேன், இன்னும் ஒரு கவிதையைக் கூட முழுமையாக அடைந்துவிட்டதாக …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=54843

மரபிலக்கியம் – இரு ஐயங்கள்

செவ்விலக்கியங்களை ஏன் படிக்கவேண்டுமென பலசமயம் கேட்கப்படுவதுண்டு. இலக்கிய அரங்குகளில் இளம் கவிஞர்கள் அடக்கமுடியாத கோபத்துடன் “நான் என் அனுபவங்களை என் கண்ணோட்டங்களை எழுதுகிறேன். என் குரல் அந்தரங்க சுத்தியுடன் இருக்கவேண்டுமென்பதே எனக்கு முக்கியம். எதற்காக நேற்று என்ன எழுதினார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்பார்கள். இதன் மறுபக்கமாக வாசகர்கள் “நான் அறிந்து கொள்ள விரும்புவது இன்றைய வாழ்க்கையை. அதன் இன்றைய சிக்கல்களை. ஏன் நான் நேற்று எழுதப்பட்டவற்றை படிக்கவேண்டும்?” என்பார்கள். இவை முதல் பார்வைக்கு …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=387

தேவதேவன் – கடிதங்கள்

அன்புள்ள திரு.ஜெ வணக்கம். பாலையில் மலர்மரம் வாசித்தேன். திரு.தேவதேவன் உங்கள் மூலம்தான் எனக்கு அறிமுகம். இன்னும் அவரின் முழுநூல் படித்ததில்லை. உங்கள் தளத்தில் படித்தது. நீங்கள் சுட்டிக்காட்டிய கவிதைகள். பயணத்தில் விழியில் படும் மலர்போல அங்கங்கே படித்தது கேட்டது மட்டும்தான். உங்கள் எழுத்து என்னை கிழித்தது உண்டு, அதன்பிறகுதான் அது கிழிக்கவில்லை விரித்து வைக்கின்றது என்று அறிந்தேன். தேவதேவன் கவிதைகள் என்னமோ செய்கின்றன. என்ன செய்கின்றது என்று தெரியவில்லை. முழுக்கவிதையைவிட அவர் வார்த்தைகள் என்னை இல்லாமல் செய்கிறது. …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=55037

பாலையின் மலர்மரம்

கவிதையே வாழ்வெனக்கொண்டவர் தேவதேவன். கவிதை நிகழாத ஒருநாளேனும் அவர் வாழ்வில் கடந்துசெல்லுமா என்பதே ஐயம்தான். ஆகவேதான் அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். சில மரங்கள் அவ்வாறுதான். அவற்றுக்கு இலைகளைவிட மலர்கள் அதிகம். பூத்தலென்பது அவற்றின் வெளிப்பாடல்ல, அவற்றின் இருப்பே அதுதான். தேவதேவன் வேங்கை போல, கொன்றை போல மலருக்காகவே முளைக்கும் மரம். வறண்ட நிலத்தில், மகரந்தங்களை ஏற்கும் பிறமலர்கள் குறைந்த சூழலில், தகவமையும் மரங்களே அவ்வாறு பூத்து நிறைகின்றன என்று தாவரவியல் சொல்லக்கூடும். தமிழ்ச்சூழலில் கவிதைக்கான காதுகள் இல்லாமலிருப்பதே …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=48548

விக்ரமாதித்யனுக்கு சாரல் விருது

2014-ஆம் ஆண்டுக்கான சாரல் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது. விருது வரும் ஜனவரி 25 அன்று சென்னை புக்பாயிண்ட் அரங்கில் [ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில் அண்ணாசாலை] நிகழும். நேரம் மாலை ஆறுமணி. இவ்விருது ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது. ஜேடி ஜெர்ரி இருவரும் இவ்விருதை அவர்களின் பெற்றோர் பேரில் வழங்குகிறார்கள். விக்ரமாதித்யன் தமிழின் முக்கியமான நவீனகவிஞர்களில் ஒருவர். அவரது தனித்துவமும் பங்களிப்பும் தமிழ்க்கவிதையை வளப்படுத்தியவை. தமிழ்நவீனக்கவிதை படிமவியலை தன் முதன்மை அழகியலாகக் கொண்டது என்று சொல்லலாம். எஸ்ரா பவுண்ட் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=45202

ராணி திலக்

ராணி திலக் என்ற பேரில் கவிதைகளும் கவிதைவிமர்சனமும் எழுதிவரும் ஆர்.தாமோதரன் 1972ல் பிறந்தவர். தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம்பெற்றபின் அரசுமேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்.2005ல் இவரது முதல் கவிதைத்தொகுதியான நாகதிசை வெளியாகியது. கவிதை விமர்சன நூலான  சப்த ரேகை [ அனன்யா பிரசுரம்] வெளியாகியது.

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=43874

கடுங்குளிர் கவிதைகள்- 1

எறும்பு தின்னியின் நிதானம். திடமான கால்களுடன் மந்தமான கண்களுடன் கனமாக அசைந்து செல்கிறது. அதன் குளிர்ந்த நாக்கு எறும்புப் புற்றுகளுக்குள்ளே நெளிந்தேறுகிறது. அதன் குளிர்ந்த மூச்சு அங்குள்ள கூடுகளைச் சிதறடிக்கிறது. உள்ளே ஓலங்கள் உயிரின் குருட்டு வெறி தினம் அதுகாண்பது அக்காட்சி. மரணம் ஒரு பெரும் பதற்றம் என அது அறிந்தது. எனவே வாழ்வு ஒரு நிதானமான நடை எனப் புரிந்து கொண்டது. இரு பறவைகள் வல்லூறு ஆற்றல் மிகுந்த பறவை காற்றின் படிக்கட்டுகள் அதன் கண்களுக்கு …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=23094

Older posts «