ஜெமோ, நீங்கள் சொல்வது மிகவும் சரிதான் ஐரோப்பிய மையவாதம் எப்போதுமே மற்ற சிந்தனைகளை மிகவும் கீழாக மட்டுமே மதிப்பீடு செய்கிறது. அது எந்தக் கீழைநாட்டவனையும் கசப்படையச்செய்யும். சராசரிகளை விட்டுத் தள்ளலாம் ஆனால் இந்த White’s Men Burden மனப்பான்மை அறிவியலை தங்களுடைய வாழ்கை லட்சியமாகக் கொண்ட ஐரோப்பியர்களையும் ஆட்சி செய்வதுதான் மிகவும் கசப்பைத் தருவதாகும். ‘Guns, Germs, and Steel’ புத்தகத்தை சமீபத்தில்தான் வாசித்தேன், நீங்கள் அந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதியிருக்கீர்கள் என்று நினைக்கிறேன். அந்தப் புத்தகம் …
Category Archive: கட்டுரை
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35122
சாதி-கடிதங்கள்
மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். சமீபத்திய சாதியாதல் கடிதம் படித்தபோது என்னுடன் படித்த மார்த்தாண்டம் நண்பன் ஒருவன் சொல்வதுதான் ஞாபகத்திற்கு வந்தது. கல்லூரியில் , “நாமெல்லாம் ஹாஸ்டல் குரூப் ” என்பான். ஹாஸ்டலில் , ” நாமெல்லாம் மெக்கானிக்கல் குரூப் ” என்பான் . மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் மட்டும் இருக்கும் இடத்தில் , ” நாமெல்லாம் குமரி மாவட்ட குரூப் ” என்பான். அனைத்து மாணவர்களும் குமரிமாவட்ட மாணவர்களாய் இருந்தால் , …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36237
இணைவைத்தல்- கடிதங்கள்
திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, நீங்கள் எழுதிய ‘இணைவைத்தல்’ படித்தேன். இப்படியும் இருந்திருக்க முடியுமா என்ற ஆச்சரியம் தோன்றியது. பொதுவாய் உங்கள் எழுத்துகளை, முக்கியமாய் அசாதாரணத்தன்மை நிறைந்த கதைகளை விரும்பிப் படித்துவருகிறேன். மிக்க நன்றி -ஹேமா அன்புள்ள ஹேமா ஒரு விஷயம் கவனியுங்கள். பெரும்பாலான ஆழமான விஷயங்கள் ‘இப்படியும் இருக்குமா’ என்ற எண்ணத்தை உருவாக்கும்விதமாகவே உள்ளன. ஏனென்றால் நம் வாழ்க்கை பெரும்பாலும் மேலோட்டமான தளத்திலேயே நடந்துகொண்டிருக்கிறது ஜெ வணக்கம் ஜெயமோகன் அவர்களே…! “இணைவைத்தல்“ கட்டுரையை இன்று அதிகாலையில் வாசித்தேன். …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35124
பெண்களிடம் சொல்லவேண்டியவை-கடிதங்கள்
அன்புள்ள ஜெ., என் தனிப்பட்ட வாழ்வில் சில விஷயங்களைக் கவனித்துள்ளேன்: 1) அலுவலகத்தில் ஒரு இக்கட்டான முடிவெடுக்கும் நேரத்தில் ‘நீ செய் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்ன ஒரு பெண் மேலாளரைக் கூட நான் பார்த்ததில்லை… பல ஆண்கள் இதைச் சொன்னதுண்டு… 2) பெண்கள் நிர்வகிக்கும் கடைகள், தன் வாடிக்கையாளர்களை நம்புவதே இல்லை.. மாதக்கணக்கில் தினம் சென்றால் கூட, குறிப்பாகப் பண விஷயத்தில் கறாரான பெண்களை மட்டுமே பார்த்திருக்கிறேன்… 3) காதலர்கள் சாலையைக் கடக்கும்போது பாருங்கள்… …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36345
சராசரிகளின் சாரம்
அன்புள்ள ஜெ உங்கள் கட்டுரை [ விற்பனையும் இலக்கியமும்] வாசித்தேன். நானே சிலநாட்களாக அமெரிக்க எழுத்திலும் சினிமாவிலும் உள்ள ‘டெம்ப்ளேட்’ தன்மை பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். இவை யாரால் இப்படித் திட்டமிடப்படுகின்றன என்று எனக்குப்புரியவேயில்லை. யாரோ எங்கோ அமர்ந்து இவற்றை உருவாக்குகிறார்கள் என்றும் தோன்றவில்லை. அப்படியென்றால் சராசரி மனிதமனம் மாற்றங்கள் இல்லாமல் இருக்கிறதா என்ற கேள்விக்கும் பதில் இல்லை நான் சிலவருடங்கள் முன்பு வரைக்கும்கூட தொடர்ந்து ஹாலிவுட் சினிமாக்கள் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது சிலசமயம் சீரியசான ஆக்ஷன் படங்களைப்பார்க்கும்போதுகூட …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36285
புண்படுதல்-கடிதங்கள்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு.. புண்படுதல் குறித்த உங்களது நெடிய விளக்கம் கண்டேன்.. நிறையவே புண்பட்டு இருக்கிறீர்கள் என்பது புரிந்தது.. உண்மைதான், தமிழர்களிடம் ஏதோ ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை இருக்கத்தான் செய்கிறது… பிராமண எதிர்ப்பு இயக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையாகக் கூட இருக்கலாம்.. அல்லது இதனால்தான் இன்றும் கழக அரசியல் வெற்றிபெறுகிறது என்று கூடச் சொல்லலாம்.. எல்லாவற்றிலுமே எதிரியைப் பார்க்கப் பழகிவிட்டார்கள்.. பாவம் தமிழன்..! சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால்.. தில்லியில் சக நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்த …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35447
கோயில்நிலங்கள்-கடிதம்
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். இன்று தங்கள் வலைத்தளத்தில் ” கோயில்நிலங்கள்” சம்பந்தமாக தாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சரியே.உண்மையிலேயே அவை பெரும்பாலும் இன்று தகுதியற்றவர்கள் கையில்தான் உள்ளது.கோயில் சம்பந்தப்பட்ட எல்லாமே இன்று வணிகமயமாக்கபட்டுள்ளது. குறிப்பாக இதே போல் சமீபத்தில் என்னை பாதித்த நிகழ்வு திருப்பதி தேவஸ்தானம் மூலமாக ஊர் ஊராக சென்று ஸ்ரீனிவாச கல்யாணம் நடத்துவது. மேலும் திருப்பதி தேவஸ்தானம் மூலமாக பக்தர்கள் இலவசமாக கொடுத்த இடத்தில் கன்யாகுமரியிலும்,சென்னையில் பிரதான இடத்திலும் கோயில் கட்டுவது.எத்தனையோ …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35450
புண்படுதல்-கடிதங்கள்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு.. புண்படுதல் குறித்த உங்களது நெடிய விளக்கம் கண்டேன்.. நிறையவே புண்பட்டு இருக்கிறீர்கள் என்பது புரிந்தது.. உண்மைதான், தமிழர்களிடம் ஏதோ ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை இருக்கத்தான் செய்கிறது… பிராமண எதிர்ப்பு இயக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையாகக் கூட இருக்கலாம்.. அல்லது இதனால்தான் இன்றும் கழக அரசியல் வெற்றிபெறுகிறது என்று கூடச் சொல்லலாம்.. எல்லாவற்றிலுமே எதிரியைப் பார்க்கப் பழகிவிட்டார்கள்.. பாவம் தமிழன்..! சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால்.. தில்லியில் சக நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்த …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35453
கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் சார், தங்களுக்கே உரித்தான நகைச்சுவையுடன் கூடிய இந்தக் கட்டுரையை ரசித்துப் படித்தேன். கல்லூரி நாட்களில் இந்த அரண்மனைக்குச் சென்றிருக்கிறேன். மனதில் ஒருவகை இனம் புரியாத உணர்வுகளை உருவாக்கியது அதன் தோற்றமும் அதன் அலங்காரப் பொருட்களும். உடன் வந்த நண்பர் ஒருவர் ஒரு கோழி இறகைத் தலையில் சொருகிக்கொண்டு, ‘நான்தான் திருவிதாங்கூர் மகாராஜா’ என்று வலம் வந்தது இன்றும் நினவில் நிற்கிறது (இன்று அவர் ஒரு பெரிய தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார்). முதல் மாடியில் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35183
அன்னியமுதலீடு -சில கடிதங்கள்
அன்புள்ள ஜெ, FDI இதன் காரணம் பற்றி சில கேள்விகள்,மற்றும் மூன்று வருடங்களாக அலைந்து பல விவசாயிகளிடம் பேசிய அனுபவத்தில் இருந்தும் , சில மாற்று விவசாய நண்பர்களுடன் வேலை செய்து , நாற்று நட்டு , அறுவடைக்கு சென்றுள்ளேன் என்ற தார்மீக அடிப்படையில் இருந்தும் சில புரிதல்கள் . “கண்டிப்பாக விவசாய மக்களுக்கு லாபம் இல்லை , வேறு தொழிலுக்கு செல்வதுதான் அவர்களது கனவு என்ற உங்களது கருத்திற்கு மாற்றுகருத்து இல்லை ” , ஆனால் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35404


