Category Archive: வாசகர் கடிதம்

எழுத்தாளரைச் சந்திப்பது

அன்புள்ள ஜெயமோகன், இன்று கொற்றவை படித்து முடித்தேன். கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆனது. எனக்கும் எங்கள் குல தெய்வத்திற்குமான உறவை உறுதி செய்தது. அத்வைதி என்றோ, வைதீகன் என்றோ, நாத்திகன், பக்தன் என்றோ அடையாளம் இல்லாத ஆள் நான். குல தெய்வத்தை என் சகோதரியாக பாவிப்பது எனக்கு வசதி. கொற்றவையின் கடைசி அத்தியாத்தில், நீங்கள் அதே பொருள் பட எழுதியிருப்பது எனக்காக எழுதியதைப்போல இருந்தது. உங்களை சந்திக்க விரும்பியதுண்டு. சென்ற நவம்பர் டிசம்பரில் நீங்கள் திருவான்மியூரில் உள்ள …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=61372

வண்ணச்சுழல் – சதீஷ்குமார்

pandavas

பகடியுடன் தொடங்கும் வண்ணக்கடல் இளமையின் செழுமையை எதிர்நோக்க வைத்தது. மாறாக நாம் காண்பதோ ஆணவம், வன்மம், புறக்கணிப்பின் வலி. பெண்களின் அக விழைவுகளுடன் விரிந்த மழைப்பாடலுக்கு பின் வண்ணக்கடல் சிறுவயதில் கௌரவர் பாண்டவர்கள் கொள்ளும் நிலைகளை கோடிட்டு காட்டுகிறது. மாமதுரையில் தொடங்கி மிருத்திகாவதி வரை செல்லும் அஸ்தினபுரி நோக்கிய இளநாகனின் பயணமாக விரியும் இந்நாவலில் நாமும் பண்டைய இந்திய நிலப்பரப்பில் பயணிக்கிறோம். வெறும் இடங்களாக இல்லாமல் நம் ஆசிரியரின் எழுத்தில் நமது நிலப்பரப்பின் தனித்தன்மைகளை, அங்கு இயற்கையுடன் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=61894

சீனு- இருகடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், எழுதுதல் என்பது தன் மனம் செல்லும் வழியே பிரிந்து போனபடி போய்க்கொண்டு இருக்காமல் அதே சமயம் மனதின் போக்குகளில் அது தன்னை தொட்டு கொண்டதை மிக எளிதாக சொன்னபடி போகிறது கடலூர் சீனுவின் கடிதம்….தான் கூட நடந்து வந்தவர் தன் வாக்கில் பேசியபடி போக நாம் நின்று விட்டால் கேட்காத வார்த்தைகளாய் சென்றது அவரின் கடிதம். இன்னும் கூட பேசியபடி போகும் போல அவர் மனது உங்களை தூக்கி கொண்டு … வாழ்வின் கடின …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=61613

பார்த்த ஞாபகம்

unnamed

அன்புள்ள ஜெயமோகன், ஃபேஸ்புக்கில் பதிந்தது உங்கள் பார்வைக்கு, நன்றி Venkada Prakash அட……பாத்துருக்கோம் படிச்சிருக்கோம் ஆனா திருடப்பட்டும் வந்துருக்கலாம்னு நெனைக்கத் தோணலையே நமக்கு!!!!! செய்தி: அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தை அடுத்த ஸ்ரீபுரந்தானில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து நடராஜர் சிலை கடந்த 2008-ஆம் ஆண்டு திருடு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதனிடையே, விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் இருந்த அர்த்தநாரீஸ்வரர் சிலையும் திருடு போனது கண்டறியப்பட்டது. ஆஸ்திரேலியா சென்ற சிலைகள்: …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=61876

இந்திரகோபம்

வணக்கம் ஜெ. இந்திரகோபமோ ஒரு குருதித்துளி. பிடுங்கி வீசப்பட்ட சிறு இதயம். அவ்வுடலைத் தேடி சென்றுகொண்டிருக்கும் தாபம். எஞ்சிய துடிப்பே உயிரானது. தவிப்பே கால்களானது. வியப்பே சிறுவிழிகளானது. இந்திரகோபம் இந்த பூச்சிதான் என்பதை அறியாமலே அறிந்து இருக்கிறேன்.பார்த்திருக்கிறேன். தொட்டு இருக்கிறேன். இந்திரகோபம் என்ற சொல் அறிந்தது திருப்புகழில். அந்த சொல் உருவறியா ஒரு பூச்சியாக, பொருளாக இல்லாமல் ஒரு வண்ணமாக மட்டும் இருந்தது. இன்று இந்தப்படம் பார்த்தபோது திருப்புகழின் எல்லை விரிந்துபோகும் அற்புதத்தை இயற்கையின் ஆடலை, கவிஞனின் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=61844

நாகம்

balarama1-copy

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, “நாகலோகம்” என்றால் என்ன? நமக்கும் நாகங்களுக்கும் ஏன் அதனை தொடர்பு? நாகலோகம் பற்றி இன்னும் பல இடங்களில் காணமுடிவதால் ஒருவேளை பாரதம் எழுதப்பட்ட காலங்களில் பாம்பு மிகப்பரவலான விலங்காக இருந்து அதனாலோவென்று தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை. அல்லது ஏன் அந்த சொல்லாடல் என்று சற்றே விளக்க முடியுமா? மிக்க நன்றி. அன்புடன், TKB காந்தி அன்புள்ள காந்தி இதைப்பற்றி பல ஆய்வுகள் உள்ளன. சமூகவியல் நோக்கிலும் அழகியல் நோக்கிலும் மெய்யியல் நோக்கிலும் சமூகவியல்நோக்கில் இப்படிச் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=60892

இருவழிப்பாதை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நலமாய் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் பதிவுகள் மூலம் அறிந்துகொண்டிருக்கிறேன். நானும் முன்னால் அடிக்கடி கடிதம் எழுதிக்கொண்டிருந்தவன்தான். பின்னர் தொடர்ந்து படித்தாலும் கடிதம் எழுதுவதில் எனக்கு விருப்பமின்றி போனது. நான் உங்களை தொடர்ந்து வாசிப்பதும் உங்கள் புத்தகங்களை பொக்கிஷமாக கருதி வாங்கிப்படிப்பதுமாக இருந்தாலும் நீங்கள் என்னை சரி, ஆர்வக்கோளாறில்முதலில் கடிதம் எழுதிவிட்டு காணாமல் போன கூட்டம் என நினைத்திருப்பீர்கள்என அவ்வப்போது நினைத்துக்கொள்வதுண்டு. இன்றைக்கு மகிழவன் என்பவர் குறித்து எழுதிய கட்டுரையின் கீழ்க்கண்டபகுதியை படிக்கையில் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=60856

மலைச்சாரல்,கடிதங்கள்

அன்புள்ள ஜெ மலைச்சாரலில் கேட்டேன். என்ன ஒரு இனிமையான நாஸ்டால்ஜியா! நாற்பதுகளின் பிற்பகுதியில் வருவது தப்பில்லை. செய்யும் வேலையை விட்டுவிட்டு கொஞ்சம் கிறங்கிப் போனேன். எங்கள் வீட்டின் பின்புறம் இருக்கும் மரங்கள் அடர்ந்த கொல்லையும், கிணற்றடியும், மழை கால மாலைகளும், ஈரம் மின்னும் புல்லும் – துவைக்கும் கல்லில் எதையுமே யோசிக்காமல் நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்து இருந்ததும், யாரையும் காதலிக்காத போதும் காதல் வயப்பட்ட மனநிலையும் எந்த நிர்பந்தமும், அவசரமும் இல்லாமல் எல்லாவற்றையும் அப்பா அம்மாவிடம் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=61122

எழுத்தாளனுக்கு பேஸ்புக் தேவையா?

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். என்னுடைய அகவை 29. நான் கடந்த 12 ஆண்டுகளாக இலக்கியம் வாசித்து வருகிறேன். தமிழ் இலக்கியம் மாத்திரம் அல்லாமல் தாஸ்தாவ்ஸ்கி, டால்ஸ்டாய், மாப்பசான், போர்ஹெஸ், கொர்த்தஸார், காம்யூ, மார்க்கேஸ், ஓரான் பாமுக், சார்த்தர் போன்றோரின் இலக்கிய ஆக்கங்கள் மீதும் தீராத தாகமுண்டு. ஆனால் எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற வேட்கை ஓராண்டுக்கு முன்புதான் என்னுள் எழுந்தது. எனினும் அதை என்னால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதற்கு ஃபேஸ்புக் ஒரு காரணமாக இருக்குமோ என்ற ஐயம் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=61056

பட்டாம் பூச்சி-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், பாப்பிலான் (Papillon) குறித்த உங்களது கட்டுரையைப் படித்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். பாப்பிலான்தான் என்னுடைய ஹீரோ. அது குமுதத்தில் தொடராக வரும்போதே படித்திருக்கிறேன். எனக்குப் பத்து அல்லது பன்னிரெண்டு வயதிருக்கலாம் அப்போது. தமிழில் படிக்கையில் அதன் தாக்கம் எதுவும் பெரிதாக என்னுள் இல்லை. ஒரு வித்தியாசமான, சுவாரசியமான தொடராகத்தான் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் கல்லூரி நூலகத்தில் படிக்கக் கிடைத்த ஆங்கிலப் பதிப்பு எனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது எனலாம். பாப்பிலான் ஒரு குற்றவாளியாக, கொலைகாரனாகக் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=60852

Older posts «