Category Archive: சிறப்புப் பகுதிகள்

கனி

1435

இணையத்தில் உலவிக்கொண்டிருந்தபோது பார்த்த ஓர் ஓவியம் அதன் வண்ணக்கோவையினால் கவனத்தை ஈர்த்தது. ஐரோப்பாவில் நவீன ஓவியத்தின் அலை தொடங்கி இரு நூற்றாண்டுகள் ஆகப்போகிறது. இருந்தாலும் அங்கே யதார்த்தபாணி ஓவியங்களுக்கு இன்னமும் வரவேற்பு இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஓவியக்கூடங்களிலும் வீடுகளிலும் அவை இருப்பதை கவனித்திருக்கிறேன். உடனே அதைத் தரவிறக்கி வைத்துக்கொண்டேன். சிலமாதங்கள் கழித்து மீண்டும் அதைப்பார்த்தபோது அந்நேரத்துத் தனிமையில் என்னென்னவோ எண்ணங்கள். இந்த வகையான ஓவியம் ஏன் இன்னமும்கூட அபாரமான மன எழுச்சியை அளிப்பதாக இருக்கிறது? காரணம் இந்த ஓவியங்கள் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34979

ஹீரோ

OLYMPUS DIGITAL CAMERA

ஹீரோவை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அவன் என்னைத் தேர்ந்தெடுத்தான். 2002 ல் நான் தக்கலையில் ஒரு டீக்கடையில் டீக்குடிக்கச் சென்றேன். அருகே ஒரு ‘பெட் ஷாப்’ . அதில் ஒரு கம்பிக்கூண்டுக்குள் கன்னங்கருமையாக பளபளப்பாக ஹீரோ அமர்ந்திருந்தான். ஒரு பழையபாணி பாக்லைட் டெலிபோன் போல. கடையில் எவருமில்லை. ஹீரோ சாலையைப்பார்த்து சலிப்படைந்திருந்தான். என்னைப்பார்த்து ‘தூக்கு என்னை , என்னைத் தூக்கு’ என்று கத்தினான். நான் அருகே சென்று கம்பி இடுக்கு வழியாகக் கைவிட்டு அவனைத் தொட்டேன். கரிக்குவியலில் இருந்து …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=29242

நினைவுகூர்தல்

சிலநாட்களுக்கு முன் மிகச்சங்கடமான ஒரு நிகழ்ச்சி. நான் கடையில் ஏதோ வாங்கிக்கொண்டிருக்கையில் ஒருவரைக் கண்டேன். புன்னகைசெய்து ‘நல்லா இருக்கியளா?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். ‘இப்ப சோலியிலே இல்லல்லா?’ என்றார். ‘இல்லை’ என்றேன். என் கண்களைச் சந்தித்ததும் அவருக்குப் புரிந்தது. ‘சாருக்கு என்னை ஞாபகமிருக்கா?’ வேறு வழியில்லை .’இல்லை…மன்னிச்சிருங்க..நீங்க?’ என்றேன். அவர் முகம் சுருங்கியது. ‘செரிசார்…போட்டு..இப்ப நினைச்சு என்னத்துக்கு?’ என்று சொல்லிவிட்டார். கூடவே அவரது நண்பரும் இருந்தார். அவர் மேலே பேசாமல் ‘வரட்டா’ என்று போய்விட்டார். மூளையின் சகல …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=29519

வரம்பெற்றாள்

ஞாயிறன்று காலை மூன்றுமணிக்கே எழுந்துவிட்டேன். மூன்றுமணிநேரமே தூங்கினாலும் மனம் துல்லியமாக விழித்திருந்தது. ஆறு மணிவரை எழுதிக்கொண்டிருந்தேன். கீழே சென்று டோராவுக்குச் சில பணிவிடைகள் செய்து குலாவிவிட்டு ஒரு காலைநடை கிளம்பினேன். இருபதடி தூரத்துக்கு அப்பால் தெரியாதபடி நல்ல இருட்டு. சிற்சில நீர்த்துளிகள் காற்றிலேறி வந்து விழுந்தன. மரங்கள் சலசலக்கும் ஒலி. காலையில் எழும் பறவைக்குரல்கள் குறைவாக இருந்தன. பார்வதிபுரம் கால்வாயில் நீர் இருட்டாக ஓடிக்கொண்டிருந்தது. ஏழெட்டுப்பேர் குளித்துக்கொண்டிருந்தனர். ஒரு பெண்மணி துணிதுவைத்தாள். கால்வாயை ஒட்டியே புதிதாக வந்துள்ள …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=29389

ஏன் நாம் அறிவதில்லை?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு 2011 ஆம் வருடம் இயற்பியலுக்காக நோபெல் பரிசு சால் பெர்ல்முட்டேர்,ப்ரைன் மற்றும் ஆடம்ஸ் கிடைத்திருகிறது. அவர்கள் ” Discovery of theaccelerating expansion of the universe through observation of distantsupernovae ” என்ற தலைப்பில் செய்த ஆராய்ச்சியில் அவர்கள் சென்று சேர்ந்தகருத்து இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது. அதுவும்accelerating mode phase . அவர்கள் இதைத் தொடங்கியது பிரபஞ்சம் விரிவடைதல்decelarting phase என்று நிரூபிப்பதற்காக. அப்படியே 180 degree turn …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=29193

விவசாயிகள்

 நகைச்சுவை விவசாயிகள் இந்திய அரசியல் சட்டத்தாலும் , இந்திய குற்றநடைமுறைச் சட்டத்தாலும், ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதனால் அது ஒரு தொழில். இதைச் செய்பவர்கள் விவசாயிகள் என்று சொல்லப்படுகிறார்கள். வேறு எந்தத் தொழிலையும் குறிப்பிட முடியாதவர்களையும் விவசாயிகள் என்று சொல்லலாம் என்பது இந்தியக் காவல் துறை மரபு. எனவே இந்திய மக்களில் பெரும்பான்மையினர் விவசாயிகளாவார். விவசாயிகளின் நாட்டின் முதுகெலும்பைப்போன்றவர்கள்.   விவசாயம் செய்பவர்களைப் பல பிரிவுகளாக பிரிப்பது மரபாகும். இவர்களில் இருசாரார் உள்ளனர். விவசாயத்தில் தள்ளப்பட்டவர்கள், விவசாயத்தில் வந்து …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=3152

மூத்த எழுத்தாளர்கள் அடிக்கடி சொல்லும் பொய்கள்

1. விருதுகளினால் இலக்கிய மதிப்புகள் தீர்மானமாவதில்லை. ஆகவே எனக்கு விருதுகளில் நாட்டமில்லை. சென்ற வருடத்திய விருது — க்குக் கொடுக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சியே 2. எனக்கும் மற்ற மூத்த எழுத்தாளர் — க்கும் காழ்ப்பும் போட்டியும் நிலவுவதாகச் சொல்லப்படுவது அவதூறு. நான் அவருடன் உண்மையில் மிகுந்த நட்பு கொண்டவன். அவர் என் வீட்டில் சாப்பிட்டிருக்கிறார் தெரியுமா? 3. நல்ல எழுத்தாளனாக இருக்க நிறையப் படிக்க வேண்டும். நான் நிறையவே படிப்பேன்.[என் நூல்களை] 4. இன்றைய இலக்கியப் போக்குகளை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=478

‘யூத்து’

அன்புள்ள ஜெ பருவமழைப்பயணம் கட்டுரை வாசித்தேன். அற்புதமான அனுபம். ஆனால் இந்தவகையான இயற்கையழகுள்ள இடங்களுக்குப் போவது நல்லது. அதை எழுதுவதுசரியா என்று தெரியவில்லை. நம் இளைஞர்க்ளின் மனநிலை வேறு. அந்த அழகான இடத்திற்கு பீர்ப்புட்டிகளுடன் போய்க் குடித்து நாறடித்து புட்டிகளை உடைத்துப்போட்டுவிட்டு வருவார்கள். யானைடாக்டர் கதைதான் நினைவுக்கு வருகிறது கொஞ்சமாவது சிவிக் சென்ஸும் அழகுணர்வும் உள்ள ஒரு தலைமுறை நமக்கு உருவாகி வருவதுவரை இந்த விஷயங்கள் எல்லாம் கண்ணுக்குத்தெரியாமல் இருந்துகொண்டிருப்பதே நல்லது சரவணன் அன்புள்ள சரவணன், உண்மை. …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=29055

ஃபெட்னாவும் காந்தியும்

Dear Mr Jeyamohan, We have corresponded in the past though not pleasantly. However I chose to write to you out of one shared love we have, Mahatma Gandhi. The only topic on which I almost completely agree with you is on Gandhi. Your articles on Gandhi are a signal service to understand the Mahatma in …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=28904

எனது இந்தியா!

சென்னையில் இருந்து வெளிவரும் விழிப்புணர்வு என்ற சிற்றிதழை புரட்டிக் கொண்டிருந்தேன். அட்டையும் சரி உள்ள பக்கங்களும் சரி பளபளவென உயர்தரக் காகிதத்தில் அச்சிடப்பட்ட மாத இதழ் இது. அதன் பக்கங்கள் பெரும்பாலும் யாரென தெரியாதவர்களால் எழுதப்பட்டிருந்தன. அனேகமாக ஒருவரே எழுதியிருப்பாரோ என்று எண்ணவைக்கும் நடை. ஆசிரியர் கு.காமராஜ். சென்னையிலிருந்து ஏதோ தன்னார்வ அமைப்பு வெளியிடுவது. ஒவ்வொரு மாதமும் இப்படி இருபது சிற்றிதழ்கள் என் பார்வைக்கு வந்துவிடுகின்றன. இவற்றில் பாதிக்குமேல் தமிழகத்தில் உள்ள வெவ்வேறு தன்னார்வக்குழுக்களால் நடத்தப்படுபவை. சுற்றுசூழல் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=685

Older posts «

Switch to our mobile site