Category Archive: உரை

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஒவ்வொரு நாளும் ஒரு நூல்  படிப்பது போன்ற சுக அனுபவத்தைத் தங்களது வலைத்தளம் வழங்கிவருகிறது. தங்களது குறுந்தொகை பற்றிய உரையைக் கேட்டேன். தமிழ், தமிழின் நிலங்கள், பூக்கள்,பாடுபொருள் மற்றும் ஒரு பாடலை எவ்வாறு புரிந்து கொள்வது என உங்கள் பேச்சு, என்னை கட்டிப் போட்டு விட்டது. பாடலின் உண்மைப் பொருளை உணராமல், செய்யுளை ஒரு சடங்கு போல நடத்திப்போகும் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் இந்தப் பேச்சைக் கேட்க வேண்டும். மலர்களைப் பார்க்காமலே பொருள் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35590

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், அய்யப்பண்ணனும் ஆச்சியும் படித்தவுடன் தங்களின் இணைவைத்தல் (நிகழ்தல் புத்தகத்தில் உள்ளது என்று நினைக்கிறேன்) நினைவிற்கு வந்தது.இணைவைத்தல் ஆணின் பெருங்காதலைப் பேசியது.அதை நான் பத்து முறைக்கு மேல் படித்திருப்பேன்.அதில் நீங்கள் உங்கள் பெருங்காதலை விவரிக்கும் பத்தி வரும்.உங்கள் குழந்தைகளைவிட உங்கள் மனைவி பல படி மேலென்ற ஒரு வரி வரும்.அய்யப்பண்ணனும் ஆச்சியும் ஆக்கத்தின் கடைசிப் பத்தியில் நான் அதை முழுமையாகக் கண்டுகொண்டேன். அய்யப்பண்ணனுக்கு ஆச்சியின் மேலிருந்தது நீங்கள் இணைவைத்தலில் சொல்லும் பெருங்காதலல்வா.ஒரு பார்வையில் ஜெயமோகன்தான் அய்யப்பண்ணன் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35437

மோகனரங்கன் உரை

தமிழ்க் கவிதை உலகில், கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக இடையறாத உத்வேகத்துடனும், இயல்பான வெளிப்பாட்டுத் தன்மையுடனும் தொடர்ந்து இயங்கி வருபவர் தேவதேவன். பதினைந்துக்கும் மேற்பட்ட தொகுப்புகளுடன், ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களுடன் விரிந்து கிடப்பது இவருடைய கவிதை உலகம். தமிழில் இவ்வளவு கூடுதல் எண்ணிக்கையில் எழுதியவர்கள் யாருமில்லை. படைப்புகளின் எண்ணிக்கை கூடும் போது அவற்றின் தன்மை நீர்த்துப் போகும் என்பதே பொதுவான நம்பிக்கை. ஆனால் ஏராளமாக எழுதிக் குவித்த போதும் மலினமடைந்துவிடாத ஒரு தரமும், தன்மையும் தேவதேவனின் படைப்புகளில் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=33339

சொல்லுடன் நிற்றல்

jeyamohan wrapper model full

எழுத்தாளன் சொற்பொழிவாளனாக ஆகக்கூடாதென்று எப்போதும் சொல்லிவந்தவர் சுந்தர ராமசாமி. மேடை ஏறவே மறுப்பவர் ஆற்றூர் ரவிவர்மா. ஆனால் அவர்களும் பேசும்படி ஆகிவிட்டிருக்கிறது. சுந்தர ராமசாமி சொற்பொழிவுகளை ஆற்றியேயாகவேண்டிய கட்டம் வந்தது. தேர்ந்த சொற்பொழிவாளராக ஆகவும் செய்தார். அவர்களின் மாணவன் என்று சொல்லிக்கொள்ளும் நானும் வேறுவழியில்லாமல்தான் மேடைப்பேச்சாளனாக ஆனேன். தமிழ்ச்சூழலில் எழுத்தாளன் எழுதுவதை மட்டும் செய்தால் தன் பணியைச் செய்யாதவனாகிறான். அவன் ஒரு பண்பாட்டுச்செயல்பாட்டாளனாகவும் பணியாற்றவேண்டியிருக்கிறது. இலக்கியம் என்ற இயக்கம் தொடர்ந்து நிகழ அவன் தன் பங்களிப்பை ஆற்றியாகவேண்டும். …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=32707

தி ஹிண்டு செய்தி

Iyothee Thass’s works are weapons for liberation, says Jeyamohan Spirituality functions through images, it does not require tradition or history or life, the language of spirituality is images, we have not understood spirituality within a historical context, we have concern for economics, and for politics but disregard spiritualism, said renowned writer Jeyamohan. தொடர்புடைய பதிவுகள்அயோத்திதாசரின் மாற்று …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=32959

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-3

அயோத்திதாசர் உருவாக்கிய வரலாற்றெழுத்தின் அடிப்படையான கூறுகள் என்னென்ன? அவற்றை என் அவதானிப்பில் நான் இவ்வாறு வகுத்துக்கொள்வேன். அயோத்திதாசர் அவர்களின் இந்திரர்தேசத்து சரித்திரத்தில் நாம் காணும் முதன்மையான அம்சம் அதன் மாற்று வரலாற்றுத் தரிசனம். அதை எழுதப்பட்ட வரலாற்றின் தலைகீழாக்கம் என்று ராஜ்கௌதமன் போன்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த தலைகீழாக்கம் அயோத்திதாசர் அவர்களால் கண்டடையப்பட்ட ஒன்றல்ல. அது ஏற்கனவே இங்கே இருப்பதன் நவீன வடிவம்தான். தலைகீழாக்கம் எப்போதுமே நம் மரபில் இருந்துகொண்டிருக்கிறது. ஒரு தொன்மக்கதை. இக்கதை நிகழும் காலகட்டத்தில் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=32825

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு- 2

நான் அயோத்திதாசரை வாசித்த நாட்களில் அவரது முக்கியத்துவம் ஏதும் என்னை வந்தடையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவரது ஒட்டுமொத்த எழுத்துக்களில் இருந்து ஒவ்வொரு தளத்திலும் அவரது கருத்து என்ன என்பதை தனித்தனியாக தொகுத்து அளிக்காத வரை எந்த பொதுவாசகரும் அவரது கருத்துநிலைகளை எளிதில் புரிந்துகொள்ளவும் முடியாது. அந்நாட்களில் நானும் எம்.வேதசகாயகுமாரும் இணைந்தே அயோத்திதாசர் நூல்களை வாசித்தோம். அவர் அனேகமாக தினமும் மாலை என் வீட்டுக்கு வருவார். நெடுநேரம் எங்கள் வாசிப்புகளை பகிர்ந்துகொள்வோம் அக்காலகட்டத்தில் அயோத்திதாசர் சமணம் பௌத்தம் இரண்டும் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=32823

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-1

இளம் வயதில் நான் கேட்டுப்பிரமித்த மேடைப்பேச்சாளர் என்றால் கேரள சிந்தனையாளரும் மார்க்ஸியருமான பேராசிரியர் எம்.என். விஜயன்தான். கண்ணனூரில் அவரை நான் ஒருமுறை நேரிலும் சந்தித்திருக்கிறேன். விஜயன் ஒருமுறை சொன்னார் ‘மிக அதிகமான புல் தின்று மிகக் கொஞ்சமாக பால் கொடுக்கும் ஒரு பசுதான் அழகியல் என்பது’ மாடு வளர்த்தவர்களுக்கு இந்த வரி இன்னும் புரியும். மாடு பகலெல்லாம் மேய்ந்துகொண்டே இருக்கிறது. மாலையில் கைகளைக்க புல் பறித்து, கழுத்தொடிய புல் கொண்டுவந்து போட்டால் அதை அரைமணிநேரத்தில் தின்று முடித்துவிடுகிறது. …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=32821

அம்பேத்கரின் தம்மம் 4

[தொடர்ச்சி] தேடலை கைவிடுதலே தர்மம் என்ற நான்காம் படிநிலை இன்றைய வாசகனுக்கு ஆச்சரியமளிக்கும். தேடல் என்பதை புனிதமானதாக, மனிதனுக்களிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதமாக நாம் அறிந்திருக்கிறோம். ’தேடலின் புனித துக்கம்’ என்ற சுந்தர ராமசாமியின் புகழ்மிக்க வரி நினைவுக்கு வருகிறது. எது தர்மம் என்ற வினாவுக்கு ‘தேடலைகைவிட்ட செயல்பாடு’ என்று பதில் சொல்லப்படும்போது அப்படி ஒருசெயல்பாடு இருக்கமுடியுமா, இருந்தால் அதற்கு என்ன பயன் என்ற வினா மனதில் எழுகிறது. புத்தர் தம்மபதத்தில் சொல்லும் ஒரு வரியை அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார். ’ஆரோக்கியத்தைவிட …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=32436

அம்பேத்கரின் தம்மம் 3

[தொடர்ச்சி] இரண்டாவது படிநிலையாக அம்பேத்கர் சொல்வது வாழ்க்கையின் முழுமையை அடைவதே அறம் என. முழுமை என்பது மொழியாக்கம் மூலம் பலபடிகளாக மாற்றப்பட்டுவிட்ட வார்த்தை. பௌத்த மூலச்சொல் பூர்ணம். சரியானபடி அமைந்த முழுமை என்று அதை மொழியாக்கம் செய்யலாம். மிக இயல்பாக தூய்மை என்ற முதல் படிநிலை இரண்டாவது படிநிலைக்குக் கொண்டுவருகிறது. ஐந்து நெறிகள் மூலம் தன்னை தூய்மைப்படுத்திக்கொண்ட ஒருவன், உடலையும் வாக்கையும் மனதையும் தூய்மையாக்கிக்கொண்ட ஒருவன் இயல்பாக உடலை உடலாகவும் உணர்வுகளை உணர்வுகளாகவும் மனதை மனமாகவும் கருத்துக்களை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=32434

Older posts «

Switch to our mobile site