கீதாவை நான் சந்தித்ததுமே நான் கவனித்தது அவருடைய மழலையைத்தான். மலையாளக்கவிஞரும் என் குருநாதருமான ஆற்றூர் ரவிவர்மாவின் இல்லத்தில். என்னைக் கண்டதுமே சிறுமிகளுக்குரிய ஆர்வத்துடன் என்னை நோக்கி வந்து படபடப்பும் சிரிப்புமாகத் தனக்குப் பிடித்தமான எழுத்தாளர் நான்தான் என்று சொன்னார். ‘என் ஆதர்சம்…என்னுடைய சொந்த எழுத்தாளன்!’ என்று விசித்திரமான மழலையில் குழறினார் ஆனால் கீதா ஒரு சாதாரண வாசகி அல்ல. ‘இது கீதா ஹிரண்யன்’ என ஆற்றூர் அறிமுகம் செய்தபோது நான் ஆச்சரியத்துடன் ‘அப்படியா? நீங்களா அது?’ என்றேன். …
Category Archive: ஆளுமை
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=31741
எஞ்சிய சிரிப்பு
1998 இல் நான் பின் தொடரும் நிழலின் குரல் என்ற நாவலை எழுதினேன்.சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சியின் பின்னணியில் மார்க்ஸியக் கொள்கையில் உள்ள அறம் என்ன என்று ஆராயக்கூடிய நாவல்.அதற்கு ஆய்வுரைகளோ மதிப்புரைகளோ அதிகம் வரவில்லை, ஏராளமான வசையுரைகள் மட்டுமே வந்தன, வந்துகொண்டும் இருக்கின்றன. நான் பல கடிதங்களின் முதல் வரியை மட்டுமே வாசிப்பேன், என்ன சொல்லப் போகிறார் என்று தெரிந்துவிடும். நாவலை வாசித்துவிட்டு எழுதிய மறுப்புகள் அனேகமாக எவையுமில்லை. வாசித்தால் தங்கள் சொந்த நம்பிக்கை மாறிவிடுமோ என்ற …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=31743
கந்தர்வன்
1986 ல் ஓர் உரையாடலில் சுந்தர ராமசாமி சொன்னார், ”பூவுக்கு கீழே’ன்னு ஒரு தொகுப்பு வந்திருக்கு. நீங்க படிச்சுப்பாக்கலாம்.” கந்தர்வனின் கதைகளை நான் வாசிப்பது அதுவே முதல்முறை. எனக்கு அவரது கதைகள் மேல் மதிப்பு உருவாகவில்லை. சுந்தர ராமசாமியிடம் அதைச் சொன்னேன். அவர் ”நீங்க அவரை அவர் இருக்கிற சூழலிலே வச்சுப்பாக்கணும். அவர் ஒரு மார்க்ஸிஸ்டு. கட்சியில இருக்கார். டிரேட் யூனியன் வேலை செய்றார். அந்தமாதிரி ஆட்கள் எழுதிட்டிருக்கிற மாதிரி பெரும்போக்கா வர்க்கவேறுபாடு, சுரண்டல், போராட்டம்னு எழுதாம …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=6196
பிரிவின் விஷம்
”வாழ்க்கையை வகுத்துச்சொல்லச் சொன்னால் நான் இப்படிச் சொல்வேன். உறவும் பிரிவும். அவ்வளவுதான்”என்றார் மலையாளக்கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு முழுப்போதையில். பயங்கரமான ஒரு ஏப்பம். இமைகளை முழுமூச்சாக உந்தி மேலே தூக்கி சிவந்த விழிகளால் என்னைப்பார்த்து ”..ஆனால் என்ன விஷயம் என்றால் பிரிவுக்கு உறவை விட நூறுமடங்கு எடை அதிகம்”. ஒருநிமிடநேரம் தூங்கியபிறகு கண்ணைத்திறந்து, சட்டைப்பையை மார்பெங்கும் தேடிக் கண்டுபிடித்து, மொத்தக்கையையும் உள்ளே விட்டுத் துழாவி, கசங்கி முதுமை எய்திவிட்டிருந்த சிகரெட்டை எடுத்து, வாய்க்காகத் தேடியபடி ”தீப்பெட்டியை எடுடா மயிரே” …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=774
நடைபயணி
2002 ல் சிவகாசியில் நான் ஒரு கல்லூரியில் பேசுவதற்காகச் சென்றிருந்தேன். கல்லூரிகளில் பேசுவதென்பது மிகத் துன்பமான அனுபவம். அக்கல்லூரியில் நமக்குத்தெரிந்த ,நம் மீது உண்மையான பிரியம் கொண்ட வாசகர் எவரேனும் இல்லை என்றால் கல்லூரிகளைத் தவிர்ப்பதே நல்லது என்பது என் அனுபவம். ஏனென்றால் தமிழகத்துக்கல்லூரிகளைப்போலப் பாமரர்கள் உலவும் இடத்தை எங்குமே பார்க்கமுடியாது. வேறு எந்த அலுவலகத்திலும், ஏன் கருப்பட்டியோ கருவாடோ மொத்தவிற்பனைசெய்யும் இடத்தில்கூட, ஒரு குறைந்தபட்ச அறிவார்ந்த தன்மை இருக்கும். தினத்தந்தி வாசித்துவிட்டாவது தங்கள் கருத்துக்களைச் சொல்வார்கள். …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=31750
அறைக்குள் ஒரு பெண்
நான் வாழ்ந்த ஊர்களில் எனக்குக் கொஞ்சம்கூட நினைவில் நிற்காத ஊர் என்றால் அது திருப்பத்தூர்தான். இத்தனைக்கும் அங்கிருக்கையில் சில நல்ல இலக்கிய நட்புகள் கிடைத்தன. அங்கேதான் எவரும் தங்கள் வாழ்க்கையின் மிக இனிய நினைவுகளாகச் சொல்லக்கூடியவை நிகழ்ந்தன – எங்கள் முதல்குழந்தை அஜிதன் கைக்குழந்தையாக இருந்தான். அக்காலகட்டத்தில்தான் எனக்கு சம்ஸ்கிருதி சம்மான் உள்ளிட்ட விருதுகள் கிடைத்தன. ஆனாலும் அந்த ஊர் நினைவிலிருந்து நழுவிக்கொண்டே இருக்கிறது. 1992ல் என் மனைவி தபால் குமாஸ்தாவுக்கான பயிற்சி முடித்துத் தபால்துறை ஊழியராக …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=31745
ஓர் அமரகாதல்
சென்னை நீதிமன்றத்தில் பணியாற்றிய ஜஸ்டிஸ் சதாசிவ அய்யர் திரு.வி.கல்யாணசுந்தரனாரின் நண்பர். அவரைக்காண பல்வேறுவகை மக்கள் தினமும் வந்துகூடுவார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் விதவைகள். அவர்களுக்கு என்று ஏதேனும் ஓர் அமைப்பு இருந்தால் அது நிலையான உதவிகளை அளிக்க முடியும் என்று சதாசிவ அய்யர் கருதினார். அதற்கு முன்கையெடுத்த திரு.வி.க 1920 ல் சென்னை சௌந்தரியமகாலில் விதவைநலம் காக்கும் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான ஆலோசனைக்கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.ஸர்.வேங்கடரத்தினம் என்ற பிரமுகர் அதற்கு தலைமை தாங்கினார். சதாசிவ அய்யரின் மனைவி அதில்பேசினார். …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=733
நித்யாவின் கையெழுத்து
நான் காகிதங்களைப் பாதுகாப்பவனல்ல. என் வழியாக சமகால வரலாறு ஓடிச்சென்றிருப்பதை இன்று தாமதமாகவே உணர்கிறேன். பல முக்கியமான வரலாற்றுமனிதர்கள் எனக்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். நூல்கள் அனுப்பியிருக்கிறார்கள். நித்யா எனக்கு இருபது கடிதங்கள் எழுதியிருக்கிறார். ஆனால் எவையும் என்னிடமில்லை. இன்று ஒரு நண்பர் நித்யா கையெழுத்திட்ட ஒரு நூலின் நகலை அனுப்பியிருந்தார். அவரது கையெழுத்தைபபார்க்கையில் ஒரு பெரும் மன எழுச்சியை அடைந்தேன். தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=33482
தேவதேவனைப்பற்றி…
தேவதேவன் பற்றி மலேசிய எழுத்தாளர் சு.யுவராஜன் எழுதிய குறிப்பு அவரது இணையதளத்தில் மரத்தடியில் துயிலும் கவிஞர் தொடர்புடைய பதிவுகள்கவிஞர்களின் முன் விமர்சனம் கொந்தளிப்பும் அமைதியும்மோகனரங்கன் உரைதேவதேவன் கடிதம்தேவதேவனின் பித்து..தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி…கோவைக்கு வருக! தேவதேவனின் கவித்தரிசனம்தேவதேவனின் படிமங்கள்தேவதேவனின் கவிமொழிதேவதேவனின் பரிணாமம்தேவதேவன் ஒரு பேட்டிவிஷ்ணுபுரம் விருது 2012அசோகமித்திரன், தேவதேவன்- கடிதங்கள்தேவதேவனும் நானும்தேவதேவன் மகள் திருமணம்யுவன் வாசிப்பரங்குஊட்டி- பெண்களுக்கு இடமுண்டா?மாசு கவிதை என்னும் கலைத்துக்கொள்ளுதல்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=33518
வற்கீஸ் குரியன்
முழுமை பெறாத கனவு என்ற தனது சுய சரிதையில் அவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார். ” தனது ரத்தத்தை வேர்வையாக சிந்தி நமக்காக உணவைத் தயாரிப்பவன் விவசாயி. தனது உணவை அவன் நிம்மதியாக உண்ணும்போது, மற்ற தொழில் துறைகளுக்கு நிகரான மரியாதையும் வருமானமும் அவனுக்கும் கிடைக்கும்போது மட்டும்தான் எனது கனவுகள் நனவாகும். அறுபதாண்டு முன்பு ஆனந்தில் நான் ஆரம்பித்த பயணம் முடியப்போவதில்லை, நம் நாட்டின் ஒவ்வொரு ஏழை விவசாயியும் வெற்றிபெறும் வரை”. ஷாஜி வற்கீஸ் குரியன் பற்றி தொடர்புடைய …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=33428



