Category Archive: ஆளுமை

அசோகமித்திரனுக்கு விருது

கோவை கண்ணதாசன் கழகம் அளிக்கும் 2013க்கான இலக்கிய விருது எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு வழங்கப்படுகிறது. கண்ணதாசனின் ரசிகரான கிருஷ்ணகுமார் என்பவரின் அமைப்பு இது. இலக்கியத்திற்கும் கலைக்கும் இது அளிக்கப்படுகிறது. கலைக்குப் பாடலாசிரியர் முத்துலிங்கம் விருது பெறுகிறார் இதற்கு முன்னர் இவ்விருதினை திரு.நாஞ்சில்நாடன்,திரு.எஸ்.ராமகிருஷ்ணன்,திரு. வண்ணதாசன்,திரு.கலாப்ரியா,திருமதி டி.ஆர்.எம்.சாவித்திரி,டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் திரு.இராம.முத்தையா,திரு.பி.ஆர்.சங்கரன் ஆகியோர் பெற்றுள்ளனர். அசோகமித்திரனுக்கு வாழ்த்தும் வணக்கமும் தொடர்புடைய பதிவுகள்சுந்தர ராமசாமி, அசோகமித்திரன்அசோகமித்திரன், தேவதேவன்- கடிதங்கள்அசோகமித்திரனின் இரு கதைகள்எழுத்தாளரைச் சந்திப்பது…நோபல் பரிசு இந்தியருக்குஇருநகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகுகடிதங்கள்நகுலனும் சில்லறைப்பூசல்களும்அசோகமித்திரன் பேட்டிஅசோகமித்திரன் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36617

பகத்சிங் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், இன்று என் நண்பர் ஒருவர், உங்களது தளத்தில் 2009 மே27 காந்தியின் துரோகம் என்ற கேள்விக்கான பதிலில் நீங்கள் பகத்சிங்கைப் பற்றி “வரலாற்றுணர்வும் சமநிலையும் இல்லாத கற்பனாவாதப் புரட்சியாளராகவே பகத் சிங்கை அவரது கடிதங்கள் காட்டுகின்றன.” என்று குறிப்பிட்டிருப்பதாகவும் அதைப் பாருங்கள் என்றும் சொன்னார். அதன்பேரில் அக்கட்டுரையை இன்று வாசிக்க நேர்ந்ததால் இத்தனை கால தாமதமாக இந்தக் கேள்வி. அக்கட்டுரையில் முரண்படுவதற்கு அநேகம் இருந்தாலும் நான் ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையிலும் நீங்கள் ஒரு …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35586

கி.ரா

20-11-2011 அன்று பாண்டிசேரியில் கி.ராவை சென்று சந்தித்தோம். நான் கிருஷ்ணன், அரங்கா, கடலூர் சீனு, செந்தில்குமார் தேவன், மதுரை ரவி. கிருஷ்ணன் எழுதிய கடிதம் ஆசிரியருக்கு , நமது புதுவைப் பயணம் ஒரு எதிர்பாராத சந்திப்பின் மூலம் ஒரு வாழ்வனுபவத்தை வழங்கியது. கி.ரா நான் அதிகமும் படிக்காத, வட்டார வழக்குக் குவியலுக்குள் கரைந்துபோன ஒரு ஆசிரியர் – திராணியற்ற வாசகர்களே அவ்வகை எழுத்துக்குப் பாம்பாடுவார்கள் , பாவனையாக ரசிப்பார்கள் என எண்ணியிருந்தேன். அவருடன் ஆன சந்திப்பும் உரையாடலும் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35607

நித்யாகுருகுலம் பற்றி…

ஜெ இங்கே “scott teitsworth” என்ற ஒருவரை சந்தித்தேன். அவர் தான் ( http://scottteitsworth.tripod.com/ ) அன்பும் ஆசீர்வாதங்களும் என்ற குரு நித்யாவின் சுய சரிதையைத் தொகுத்தவர். இங்கு அவருடைய மகள் வீட்டிற்கு வந்திருந்த பொழுது எனக்கு அதே புத்தகம் வேண்டும் என நான் தொடர்பு கொண்டேன். அருகில் இருக்கிறார் என தெரிந்து போய்ப் பார்த்தேன். ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் குரு நித்யாவை சந்தித்ததைப் பற்றியும் குரு குலத்தைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். “குருவின் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35496

பிம்பங்களை ஏன் உடைக்கவேண்டும்?

வணக்கம் ஜெ.மோ, நான்(24) IAS தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவன் . கடந்தே இரு வருடங்களாகத் தங்களது இணையத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பவன். வாழ்வின் பொருள் அறிய ஆன்மீகத் தேடலில் அங்கும் இங்கும் அலைந்து பின் மீண்டும் என் IAS தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருக்கிறேன். நம் சமூகம் தொடர்ந்து செல்ல சில நாயகர்கள் ( காந்தி , போஸ் , விவேகானந்தர் , பிரபாகரன் , அன்னை தெரசா ,கலாம் , பில் கேட்ஸ்… போன்றோர்) அனைத்துத் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35192

ஞாநியும் பரதேசியும்

ஞாநி பரதேசி பற்றி எழுதியிருந்ததை ஒரு நண்பர் அனுப்பி வைத்திருந்தார். சினிமா பற்றிய எந்த விவாதத்தையும் நடத்தவேண்டாமென்பதே என் முடிவு. ஆனல் இந்த விஷயத்தில் சிலவற்றைச் சொல்லியே ஆகவேண்டும். இது சினிமாபற்றியது அல்ல. இந்த ஞாநி வகையறாக்கள் ஊடகங்களில் உருவாக்கும் புழுதி பற்றியது. ஞாநி முன்பு கடல் வெளிவரவிருந்தபோது இதேபோன்ற உச்சகட்ட வெறுப்பைக்கொட்டி எழுதியிருந்தார். ஊடகவியலாளன் என்றால் அவன் உக்கிரமாக வசைபாடவேண்டும் என்ற மனச்சிக்கலின் விளைவு என்ற எண்ணம் மட்டுமே அப்போது எனக்கிருந்தது. இல்லை, இது இணையம் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35407

குடிக்கு எதிரான போராட்டம்

ஜெ பூரண மதுவிலக்கு கோரி சசிப்பெருமாள் என்ற காந்தியவாதி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததை செய்திகளில் அறிந்திருப்பீர்கள். அதைப்பற்றி நீங்கள் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். அப்படி ஒரு கோரிக்கையுடன் உண்ணாவிரதமிருந்து அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்துவது சரியா? அது காந்தியவழிதானா? அது இன்னொருவரின் சுய உரிமையிலே தலையிடுவது அல்லவா? மேலும் குடியை இன்றைய நிலையில் தடுக்கமுடியுமா? பூரணமதுவிலக்கு நடைமுறைச்சாத்தியம்தானா? அதைப்பற்றி யோசிக்காமல் இந்தமாதிரி செய்வது ஸ்டண்ட் அடிப்பது அல்லவா? கணேஷ் பெரியசாமி அன்புள்ள கணேஷ் எந்த ஒரு சமூகப்போராட்டம் நடந்தாலும் இணையத்தில் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34880

பஷீர்- கடிதம்

காலை மூன்று மணிக்கே எழுந்து தடக் தடக் என்று தரையை அதிர வைத்து, நாள் துவக்கும் மின் வண்டிகளின் ஊரில் இருக்கிறேன். நாயர்கள் மட்டுமல்ல – சில மசக் கவுண்டன்களும் புலி வாலைப் பிடித்து விட்டுப் படும் பாடுகளை எழுத ஒரு பஷீர் வேண்டும். ஏதேனும் ஒரு நாளில் புலியால் கடித்துண்ணப் பட்டு, எலும்புக் கூடாய்த் துப்பப்பட்ட பின்பும், சாய்வு நாற்காலியும், கட்டன் சாயாவுமே துணையாக, வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து விடலாம் என்னும் நம்பிக்கையைப் புன் சிரிப்போடு …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34459

கீதா ஹிரண்யன்- இருகடிதங்கள்

என் மகள் ஜீன்ஸ் போடும் வயது ஆகவில்லை….அவள் ஜீன்ஸ் அணிந்து குதிரைபோல நடப்பதைப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்’ அவரது வலிகளில் மிகப்பெரிய வலி இது போன்ற நினைவுகளாகத்தான் இருக்கும்… வலியை விட மரணம் வலியதுதான் இல்லையா… நன்றி ரத்தன் அன்புள்ள ஜெ கீதா ஹிரண்யன் பற்றிய கட்டுரை நெகிழச்செய்தது. நீங்கள் சமீபமாக இரு பெண் எழுத்தாளர்களைப்பற்றி எழுதினீர்கள். சுகந்தி சுப்ரமணியன், கீதா இருவரையுமே வலியின் எழுத்தாளர்கள் என்று சொல்லிவிடமுடியும் அல்லவா? விஸ்வநாதன் தொடர்புடைய பதிவுகள்வலியெழுத்துஅஞ்சலி: எஸ்.சுகந்திசுப்ரமணியன்உடலிலக்கியம்

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34474

உருவமும் அருவமும்

உருவம் இல்லாதவற்றுக்கு உருவம் தருவதுதான் புராதனமான இலக்கியங்களில் பொதுவாகக் காணப்படும் தனித்தன்மை. ஆனால் வேதகாலத்தில் இங்கு வாழ்ந்தவர்கள் முற்றிலும் மாறுபட்ட வகையில் தங்கள் கற்பனையைச் செலுத்தியிருந்தார்கள். நாம் ஆராய வேண்டியது இதைத்தான். ரிக் வேதத்தின் முதல் குறிப்பு அக்கினியைப் பற்றியதாகும். கண்முன் எரியும் அக்னி உரு யதார்த்தம். ஆனால் வேதங்களில் உள்ள அக்னி முற்றிலும் அருவமானது. அதாவது உருவத்திலிருந்து உருவின்மைக்கு, பருண்மையிலிருந்து சூட்சுமத்திற்குப் போவதற்கான யத்தனத்தை நாம் வேதங்களில் காண்கிறோம். அக்னியிலிருந்து அக்னித்துவத்திற்கு நகர்கிறது அக்கற்பனை. நித்ய …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34497

Older posts «

Switch to our mobile site