நீங்கள் ஒரு குழுவடையாளத்தைச் சுமந்து கொள்வதும், அதன் பேச்சாளராக உங்களை எண்ணிக்கொண்டிருப்பதும் உங்கள் மனசிக்கல். அதை நான் அங்கீகரிக்க முடியாது.


வாசிப்பை விட வம்பு அதிகமாக உள்ள தமிழ்ச்சூழலில் எந்த இலக்கியவாதியும் சந்திக்க நேரும் சிக்கல் இது. ஏளனம், திரிபு, மூட்டிவிடுதல். இதைத்தாண்டித்தான் நாம் எழுத வேண்டியிருக்கிறது. இலக்கு தெளிவாக இருந்தால் அதைமட்டுமே நோக்கவேண்டும். என்ன செய்கிறோம் என்பதே பதிலாக அமையும்


http://www.jeyamohan.in/?p=141


அன்புள்ள ஜெ, ‘கறுப்பர் உளவியல்’ கட்டுரையில் அவர்கள் தாழ்வுணர்ச்சி கொண்டிருப்பதற்கான காரணங்கள் சொல்லப்படுவதில்லையே. அதையும்சேர்த்துத்தானே நாம் சிந்திக்க வேண்டும். அவர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதையும் சேர்த்துத்தானே இதைப்பற்றிச் பேசவேண்டும். உங்கள் கருத்து மொத்தையான ஒரு மனப்பதிவு போல இருக்கிறது அல்லவா? என் நண்பர்களிடம் விவாதித்தபோது இதையே சொன்னார்கள். அதே மாதிரி சாதி பற்றிய கட்டுரையிலும் பொதுவான கருத்துக்கள் தான் இருக்கின்றன. நவீன் வைத்தியநாதன் அன்புள்ள நவீன், என்னைப்பொறுத்தவரை இந்தவிஷயத்தில் வெளிபப்டையாகவும் நேர்மையாகவும் சிந்திக்கவும் பேசவும் மிகச்சிலரால்மட்டுமே [...]


சிறுகதை, பக்க அளவைக் கொஞ்சம் கடந்தால் குறுநாவல், பக்கங்கள் இன்னும் சற்று எல்லை மீறினால் நாவல் என்ற காலம் காலமான கற்பிதம் எந்த அளவுக்குச் சிறுபிள்ளைத்தனமானது என்பதைத் தன் நூலில் எடுத்துக் காட்டும் ஜெயமோகன், மேற்குறித்த மூன்று வடிவங்களுக்குமான தனிப்பட்ட கூறுகளை, படைப்புக்கான சாத்தியங்களைத் தான் அமைத்துக் கொண்ட கருதுகோளின் அடிப்படையில் தெளிவாக விளக்கிக் கொண்டு போகிறார்.


சிறு வயதில் நகரத்தில் பள்ளிக்கூடம் செல்லும் போது சாதி ஏன் பேசி வீணடிக்கிறார்கள் என்று தோன்றும். நீங்கள் கூறுவதை நான் பல ஆண்டுகள் கழித்தே உணர்ந்தேன். நீங்கள் கூறுவது போல் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் சாதாரண பேச்சின் மூலம் புண்படும் மன நிலையை அமெரிக்காவில் கறுப்பின மக்களிடம் கண்கூட காணலாம்.


அன்புள்ள ஜெயமோகன், நீங்கள் ‘சாதி பேசலாமா?’ என்றகட்டுரையில் சொல்லியிருந்த விஷயங்கள் எனக்குக் குழப்பத்தை அளித்தன. ஏன் நாம் சாதியைப்பற்றிப் பேசவேண்டும் என்று தெரியவில்லை. ஒருவருடைய சாதியைப்பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? தெரியாமல் அல்லது அதைப்பற்றி அறிந்துகொள்ளாமல் வாழ்வதுதானே சிறந்த வழிமுறையாக இருக்க முடியும்? நான் எவருடைய சாதியைப்பற்றியும் தெரிந்துகொள்வது இல்லை. அதைப்பற்றிய அக்கறையும் எனக்கு கிடையாது. யாரிடமும் நான் சாதியைச் சொல்வதும் இல்லை. நீங்கள் சாதியை தெரிந்துகொள்ளவேண்டும் என்று சொல்வதுபோல இருக்கிறது. அதனால்தான் இந்த சந்தேகம் [...]


சமகாலத்தில் நடக்கும் நாவலை விட , தத்துவ நாவலில் தங்களை அடையாலபடுத்திகொள்ளும் தன்மை எப்படி ஏற்படுகிறது? இப்படி ஒரு நிலை இருப்பது தங்களுக்கு தெரியுமா ?


கீழ்க்கண்ட செய்தியை ஓர் இணைய இதழில் கண்டேன். நீங்கள் 19 ஆவது படியின் தமிழ் வடிவத்தை எழுதுவதாக இருந்தது. ஆகவே இதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். உங்கள் கருத்து என்ன? எஸ். http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-23-29-27/2009-04-21-23-03-21/7217-storey-director அன்புள்ள எஸ். 19 அவது படி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. பல வடிவம் கண்டது. பலமுறை படமாக்க முயலப்பட்டது. கடைசியாக பரத் பாலாவுக்காக அதன் தமிழ் வடிவை நான் எழுதினேன். கதையை நான் திருவிதாங்கூர் பகுதிக்குக் கொண்டு வந்தேன். [...]


நாம் சாதியைப்பற்றி ஒரு இரட்டைவேடத்தை போடக் கற்றுக்கொண்டிருக்கிறோம். அந்த இரட்டைவேடத்தை அரசியல்சரிநிலையாக ஆக்கிக்கொண்டு அதை அனைத்து இடங்களிலும் ஒரு விதியாக முன்வைக்கிறோம். அதாவது நாம் தனிப்பேச்சுகளில், பழக்கங்களில் சாதி குறித்து ஒரு வகை கள்ளமௌனம் சாதிப்போம். ஆனால் எங்கும் எதிலும் சாதிதான் தீர்மானிக்கும் விசையாக இருக்கும்.