Category Archive: விமரிசகனின் பரிந்துரை

இதிகாசங்கள் இன்னொரு பார்வை

மகாபாரதம் மற்றும் ராமாயணம் அதனில் உள்ள கதாபாத்திரங்கள் பற்றியும் வேறு ஒரு வித்தியாசமான இன்றைய வியாபார தளங்களுக்கேற்ப ஒரு பார்வை… http://devdutt.com/category/business-sutra-cnbc இந்த உரையாடலின் எழுத்து வடிவத்தை இந்தச் சுட்டியில் காணலாம் http://www.moneycontrol.com/news/show_transcripts.php?category=62 இப்படியெல்லாம் நம் இதிகாசங்களைப் பார்த்து வியாக்யானம் செய்ய முடியும் போல. எந்தக் காலகட்டத்திலும் நம் இதிகாசங்களின் செய்தி பயனளிக்கிறது என்பது இதுதானோ…. இதுவும் ஒரு சுவாரசியமான விளக்கம் தான். விஜயகிருஷ்ணன் தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35543

ஹோமியோ அறிமுகம்

ஹோமியோபதி பற்றி இரண்டாண்டுகளுக்கு முன்பு நான் வாசித்த ஒரு கட்டுரை அதன் மீது எனக்கிருந்த எல்லா நம்பிக்கையையும் அழித்தது. அது ஒரு placebo முறை மட்டுமே என எண்ண ஆரம்பித்தேன். ஏனென்றால் எனக்கு அதற்குமுன் அம்மருத்துவமுறை அளித்த அனுபவங்களும் மிக எதிர்மறையானவை. அது எந்த விளைவையும் உருவாக்கவில்லை என்றே அறிந்திருக்கிறேன் ஹோமியோபதியின் அடிப்படை நூல்கள் பற்றிய ஓர் அறிமுகக் குறிப்பை ஆம்னிபஸ் இணையதளத்தில் வாசித்தேன். நல்ல கட்டுரை தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36073

அஞ்ஞாடி ஒரு வாசக அட்டவணை

பூமணியின் அஞ்ஞாடி நாவலை வாசிப்பதற்கும் நினைவில் கொள்வதற்குமான ஒரு வழிகாட்டிக்கட்டுரையை எஸ்.ரங்கசாமி எழுதியிருக்கிறார் பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் தொடர்புடைய பதிவுகள்அஞ்ஞாடி ஒரு கடிதம்அஞ்ஞாடி மதிப்புரைஅஞ்ஞாடி- ஒரு மதிப்புரைபூமணியின் புது நாவல்

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36023

பம்பி

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, வணக்கம்.சிறுவயதில் எனது தந்தை ‘ரத்ன பாலா’ என்ற சிறுவர் மலரைத் தொடர்ந்து வாங்கித் தந்தார்.நான் பாடசாலைப் புத்தகத்திற்கு வெளியே வாசிக்கத்தொடங்கியதற்கு ரத்ன பாலாவும் ஈழநாடு பத்திரிகையும் முக்கிய காரணங்களாக அமைந்தன.இன்றைக்கு அப்பாவை நான் நன்றியுடன் நினைத்துக் கொள்ளுபவற்றில் வாசிப்புப் பழக்கத்தை அவர் எனக்கு உருவாக்கியது முதன்மையானது.இல்லாவிட்டால் நான் ஒரு வேலைக்கு மட்டும் படித்த கிணற்றுத் தவளையாகவே இருந்திருப்பேன். இப்பொழுது தமிழ் நாட்டில் ரத்ன பாலா வருகின்றதோ தெரியவில்லை.ரத்ன பாலாவில் பபீனா தீவு என்று …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35370

காற்றுக்குவேலி இல்லை

நண்பர் சார்ல்ஸ் டூரிங் டாக்கீஸ் என்ற பேரில் சினிமா பற்றி எழுதிவரும் கட்டுரைத்தொடர் சமீபத்தில் நான் வாசித்த முக்கியமான கட்டுரை. சினிமாவை அறிந்து எழுதப்பட்ட கட்டுரைகள்.சினிமாபற்றி வெறுமே குத்துமதிப்பான கருத்துக்களையும் மொண்ணையான விமர்சனங்களையும் வாசித்துச் சலித்துப்போன வாசகர்களுக்கு ஒர் ஆறுதலாக அமையக்கூடியவை சார்ல்ஸின் கட்டுரை தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35318

வாடிவாசலும் அதிகாரமும்

என்ன இருந்தாலும், மனிதனிடம் உள்ள சாதுர்யம் மிருகத்திற்கு வராதுதான். ஏனென்றால், இது மனிதனால் உருவாக்கப்பட்ட விளையாட்டு. அதில் காளை ஜமீனின் அதிகாரத்தின் பகடைக்காய் தான். பிச்சியின் வீரம் அப்பகடைக்காயை உருட்டித் தள்ள இன்னொரு பகடைக்காய். பிச்சி, தனது முதல் இரண்டு பகடைக்காய்களையும் வீழ்த்திய பின், தனது கடைசி வீழ்த்தமுடியாத பகடைக்காய் என காரிக்காளையை அனுப்புகிறார். ஆனால், அதுவும் வீழ்த்தப்பட்டதும் ஆட்டம் முடிந்துவிடுகிறது. பிச்சி வென்று விட்டான் அனுக்ரகா எழுதிய நல்ல கட்டுரை தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35784

புதியபனுவல்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் நான் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வரும் புதிய பனுவல் என்ற ஆய்விதழைத் தங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன். இந்த இதழ் இணைய இதழாகவும் வெளிவருகிறது.கீழே உள்ள தொடர்பில் இந்த இதழைக் காணலாம். நன்றி https://indianfolklore.org/journals/index.php/panu/ தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35181

தாராவியின் வளம்

அன்புள்ள ஜெ. சமீபத்தில் படித்த புத்தகம் – ரஷ்மி பன்சல் மற்றும் தீபக் காந்தி எழுதியது. மும்பை தாராவியும் – அதன் வளமும் (??) திடீரென எம்பிஏக்கள் கண்களில் பட – வினோதமான புள்ளி விவரங்கள்.. நாம் அங்கு செல்ல வேண்டாம். சில மென்மையான க(வி)தைகள். ‘வெண்தங்கம்’ – திருநெல்வேலி மனிதர் – பஞ்சு சுவாமி – சிறுவயதில் மும்பை வந்து – 40 வருடங்களாக..மிகவும் சுருக்கமாகவும் அடர்த்தியாகவும் சொல்லப்பட்டுள்ளது – தற்போது – ஐயப்பன் இட்லி …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34620

சைதன்யா என்னும் எழுத்தாளர்

நண்பர் கே.பி.வினோத்தின் மகள் சைதன்யாவைக் கைக்குழந்தையாகவே அறிவேன். குழந்தைகள் வளரும் வேகம் பிரமிக்கச்செய்வது. ஒருநாள் அவரைத் தேடிச்சென்றபோது ஒரு நோட்டுப்புத்தகம் நிறைய பென்சிலால் எழுதியிருந்ததைக் கொண்டுவந்து காட்டினாள். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கால்முளைத்த கதைகள் நூலில் உள்ள கதைகள் சிலவற்றை மொழியாக்கம்செய்திருந்தாள். ஒரு மூன்றாம்வகுப்பு மாணவியின் மொழி அல்ல அது. சரளமான ஆங்கிலம். அதேசமயம் ஒருவகை இந்திய ஆங்கிலமும் கூட எஸ்.ராமகிருஷ்ணனிடம் கதைகளைக் காட்டலாம் என்று நான் சொன்னேன். அவளுடைய பள்ளியிலும் காட்டலாம் என்றேன். பள்ளியில் உடனே அவற்றை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34870

நுகர்வெனும் பெரும்பசி-கடலூர் சீனு

கூடங்குளம் பயணம் முடிந்து திரும்பும் வழியில் ,தூரத்தில் அணு மின்நிலையம் புத்தனின் மௌனத்துடன் உறைந்து காட்சி அளித்தது . எத்தனை ஆற்றல் . எத்தனை சக்தி . அத்தனை வழியாகவும் நாம் செய்யப்போவது ஒன்றே ஒன்றுதான் . நமது பூமியை ஒட்ட ஒட்ட சுரண்டி , விஷக் காற்று வீசும் பாலைநிலத்தை , நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்வது . சூழல் மாசுபடாமல் ,பொருளாதாரத் தன்னிறைவு இல்லை . இதற்கு எதிராக எழும் எந்தக் குரலும் தேச …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34486

Older posts «

Switch to our mobile site