முடிவின்மையின் தொடர்பு  ‘எல்லி அரோவே’ யின் குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்குகிறது கதை. மிக இளம் வயதிலேயே அவளுக்குள் பிரபஞ்சம் எப்படி எதனால் செயல்படுகிறது என்ற வினா குழந்தைக்கே உரிய தீவிரத்துடன் எழுந்துவிட்டது. அந்த அடிப்படையான தேடலை அறிவியலாளரான அவள் தந்தை கணிதத்தையும் அறவியலையும் நோக்கித் திருப்பினார். தந்தையுடன் அவளுக்கிருந்த உணர்வுப்பூர்வமான நுட்பமான உறவு அந்த தேடல் வலுப்பெற்று அதை மட்டுமே மையமானதாகக் கொண்டு அவளது ஆளுமை உருவாகக் காரணமாக அமைந்தது. இளமையின் சபலங்களுக்கோ உலகியல் ஆர்வங்களுக்கோ அவள் [...]



ஜெயமோகன் சமீபத்தில் எழுதிய அறிவியல் புனைகதைகளின் தொகுப்பு. அறிவியல் புனைகதைகளின் முன்னோடியான சுஜாதாவுக்குப் புத்தகத்தை அன்புடன் சமர்ப்பித்திருக்கிறார். ஜெயமோகனின் அறிவியல் புனைகதைகளை வெளியிடுவதில் எனிஇந்தியன் பெருமை கொள்வதாகச் சொல்கிறார் பதிப்பாசிரியர் கோபால் ராஜாராம். ஜெயமோகனின் அறிவியல் புனைகதைகளைப் பற்றி அவர் சொல்வதாவது: “விஞ்ஞானத்தின் அடிப்படையிலான தொழில்நுட்பம் ஆர்தர் சி கிளார்க், ஐசக் அசிமோவ் போன்றோரிடம் காணக் கிடைக்கிறது. குர்ட் வானகட், ரே பிராட்பரி விஞ்ஞானக் கதைகளில் சமூக விசாரத்தைப் புகுத்தியவர்கள். அறிவியல் புனைவை தத்துவ அடிப்படைக்கு நகர்த்தியவர்களும் [...]



கேக் ஒரு பெண்ணின் முகம் போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அவள் சிவந்த உதடுகள் மீது ஒரு செர்ரி. கிருஷ்ணன் அந்த செர்ரியை எடுத்தபடி ‘ ‘ அப்துல் லதீஃப் அல் பக்தாதியைப்பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? ‘ ‘ என்றான் நாசர் ‘ ‘ இல்லையே ‘ ‘ என்றார். ‘ ‘ நம்முடைய பங்குதாரரா ? ‘ ‘ ‘ ‘ தொழில்முறையில் மருத்துவர். வேதியியலிலும் ஈடுபாடு இருந்தது. அத்துடன் மத அறிஞரும்கூட ‘ ‘ என்றான் [...]


திடாரென்று ரேடியோ கிர்ர் என்றது. அறைக்குள் இருந்த ஆழ்ந்த அமைதியை அது கிழிக்க அத்தனைபேரும் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தனர். இளைஞன் தகாததுசெய்ததுபோன்ற சிறு உடற்குன்றலுடன் அதை நிறுத்தினான். ‘ ‘ இறைமறுப்பாளர்களின் கருவி ‘ ‘ என்றார் குழுத்தலைவர் வெறுப்புடன். ‘ ‘ அது இறையடியார்களுக்கு ஒருபோதும் உரிய காலத்தில் உதவியது இல்லை ‘ ‘ ‘ ‘சாத்தானின் நாக்கு ! ‘ ‘ என்றார் இன்னொருவர். ‘ ‘ஆனால் இப்போது நமக்கு வேறுவழியில்லை. வெளியுலகத்தொடர்புக்கு இதுமட்டும்தன் இருக்கிறது. [...]


‘துவாத்மர்கள் ‘ என்ற பெயர் அனேகமாக இன்று பழைய திருவிதாங்கூர் – பிரிட்டிஷ் ராணுவ ஆவணங்களில் மட்டும் உள்ள ஓரு சிறிய வரலாற்றுக்குறிப்பு மட்டுமே. பிற்கால வரலாற்றாசிரியர்களான என் சிவசங்கரன் நாயர் , இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை , எம் கெ ராஜப்பன் நாயர் ஆகியோரின் எழுத்துக்களில் இவர்கள் மேற்குமலையடிவாரத்தில் சரல்கோடு என்ற ஊரில் வாழ்ந்த ஒரு பழைய மாடம்பி வம்சம் என்று மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. இவர்களுடைய அட்டூழியம் எல்லைமீறிப்போனமையால் பிரிட்டிஷ் ரெசிடண்ட் மேஜர் எஸ் கல்லன் [...]


உள்வளவு அங்கணத்திண்ணையில் அமர்ந்து நல்லகுத்தாலிங்கம் பிள்ளை கஞ்சி குடித்துக் கொண்டிருந்தபோது நாகலட்சுமி அவசரமாக வாசலில் இருந்து உள்ளே வந்து ‘ ‘ அந்த அகமுடிவான் வந்திருக்கான். சொல்லியாச்சு, ஒத்த ஒரு காசு அவனுக்குக் குடுக்கப்பிடாது. குடுத்ததே போரும். இனி அவன் காசும் கொண்டு போனான்னு சொன்னா எனக்க சுபாவம் மாறும் பாத்துக்கிடுங்க ‘ ‘ என்றாள் பயத்தம்பருப்பு சேர்த்து சமைத்து சூடாக நெய்விட்ட சம்பா அரிசிக்கஞ்சி . துணைக்கு தேங்காயெண்ணை விட்டு மயக்கி இளந்தேங்காய் நசுக்கிப்போட்ட சக்கை [...]


மெளனச்சாமியார் மடத்தின் ஓய்வறையில்தான் டாக்டர் வினோத் பட்டாச்சாரியாவை சந்தித்தேன்.அவர் என் நேர் எதிர் அறை. கதவைத் திறந்தால் அவரது கதவு . ஒருமுறை திறந்தபோது இருவரும் முகத்தோடுமுகம் சந்தித்து திகைத்து நின்றோம். ‘ஹாய் ‘ என்றார். அது உயர்குடிகள் ‘யாரடா நீ புழுவே ? ‘ என்று கேட்கும் முறை என நான் அறிவேன். நான் தொழில்முறைப் பத்திரிகையாளன். ‘என் பெயர் கணேஷ் குமார். பத்திரிகையாளன். ‘ என்றேன். ‘நான் பத்திரிகைகளை வெறுக்கிறேன் ‘ என்று கதவை [...]


எனக்கு இரண்டு எஜமானர்கள். ஏசு சொன்னார், ஒருவன் இரு எஜமானர்களிடம் பணிபுரியமுடியாதென்று. அதே ஏசுதான் சீசருக்கு உரியது சீசருக்கு, தெய்வத்துக்குரியது தெய்வத்துக்கு என்றும் சொன்னார். நான் இரண்டாம் கொள்கையை பின்பற்றினேன். ஆட்டிப்படைத்த சீசரின் பெயர் டாக்டர் நஞ்சுண்ட ராவ். மெளனமாக உயிரை வாங்கிய தெய்வம் அவர் அப்பா டாக்டர் கருணாகர ராவ். என் மூக்கு இன்றுகடைந்த மோரையும் நேற்று கடைந்த மோரையும் அடையாளம் காணும். முளைக்கீரைக் கூட்டையும் அரைக்கீரைக் கூட்டையும் பிரித்தறியும். ஆனால் பறவை எச்சம் என் [...]