அன்புள்ள ஜெ., இந்தி பற்றிய விவாதம் கண்டேன். தங்கள் விளக்கத்துக்கு நன்றி. ஒரு மொழியைப் பேசிப் பழக , அம்மொழி புழங்கும் சூழலில் ஆறு மாதத்துக்குமேல் ஆகாது. நான்கு வருடப் பொறியியல் படிப்பில் பல கணிமொழிகளை மூன்று மாதங்களில் படிக்கும் நாம், மனித மொழிகளைப் படிக்க முடியவில்லை என்று புலம்புகிறோம்! காரணம் அலட்சியம், சோம்பேறித்தனம். தமிழ்நாடு தவிர உலகத்தில் எங்கு போனாலும் இந்தியை வைத்தே “சமாளிக்கலாம்” என்பதே இந்திக்கு ஆதரவான முதன்மையான வாதம். இங்கு சமாளிப்பதுதான் வருகிறது. …
Category Archive: மொழி
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36261
இந்தி- கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன், நலம் விழைகிறேன். “இந்தியின் தேவை” மற்றும் “இந்தி,சம்ஸ்கிருதம்,தமிழ்” வாசித்தேன். இராஜீவ் கூறுவது சரிதான். அவரது வட மாநிலங்கள் அளவுக்குத் தேவை இல்லையெனினும் பெங்களூருவில் வசிக்கும் எனக்கும் கூட இதே எண்ணம் இருக்கிறது. அறிவார்ந்த விவாதத்துக்காக இல்லையெனினும் தொடர்பு கொள்ளவேனும் இந்தி தேவையாகிறது. அந்தத் தொடர்பு கொள்ளும் தேவை இப்போது பெருகியிருக்கிறது என்று எண்ணுகிறேன். பல மாநிலத்தவர் உடன் பணிபுரியும் சூழல் இப்போது கட்டயாமாகப் போய்விட்ட நிலையில், வடக்கு – தெற்கு என்றெல்லாம் பேதமில்லாமல் போகச் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36125
இந்தியின் தேவை
அன்புள்ள ஜெயமோகன் , நலமா? இந்தி மொழியின் தேவை குறித்து உங்களிடம் விவாதிக்கத்தான் இந்த கடிதம். இந்தி மொழி நம் பாரத நாட்டில் பெருவாரியான மக்களால் பேசப்படும் ஒரு மொழி. ஓவ்வொரு மாநிலத்தின் மொழிக்கேற்ப உச்சரிப்பு மாறுபடும். ஆனால் எல்லா மாநிலத்தாராலும் இதனைப் புரிந்துகொள்ள முடியும். இதற்கும் சமஸ்கிருத மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்தி மொழிக்கு இலக்கணம் மற்றும் இலக்கிய வளங்கள் மிக குறைவுதான்.அதனால்தான் நாம் முற்றிலும் புறக்கணிக்க முற்படுகிறோம்.ஆனால் அதற்கு இன்றைய காலகட்டத்தில் உள்ள …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35488
வாழும்தமிழ்
யாங்கோன் தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம் நடத்திய தமிழ் மொழித் தேர்வு பரிசளிப்பு விழா நாளது 22-7-2012 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்2.15 மணிமுதல் இரவு 7 மணிவரை வண்ணமயமாக லைன் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்க் கல்வியில் தேறிய 108 மாணவமணிகளுக்கும் 2011-2012 தேசியக்கல்வி கல்லூரிநுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள 61 தமிழ் மாணவமணிகளுக்கும் சிறப்பாகப் பரிசளித்துக் கௌரவிக்கப்பெற்றது. செய்தி. சோலை.தியாகராஜன், செயலாளர்,தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம், Yangon,Myanmar email : solai.thiyagarajan@gmail.com mobile: 00959 43042105 இந்த …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=29570
இலக்கணம், கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் உங்கள் பதிலுக்கு நன்றி. நீங்கள் அ.கி. பரந்தாமனாரின் இலக்கண நூலையும், மற்றொருவர் “தமிழ் நடைக் கையேடு” பற்றியும் குறித்துள்ளீர்கள். அ.கி. பரந்தாமனாரின் நூல் பல இலக்கண நூல்களின் மற்றொரு தகாத குணத்தை காண்பிக்கிறது. அது தூயதமிழ் சாய்பு கொண்டது. அதைப்பற்றிய விமரிசனங்கள் 1. தமிழ் எப்படி சமஸ்கிருதத்திலிருந்து தனி என வாதிடுகிறது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான், இது பேச்சு அல்லது உரைநடை இலக்கண விவகாரம் அல்ல. 2. ஒரு பக்கம் தமிழில் இருக்கும் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=28690
இலக்கணம், அ.ராமசாமி கடிதம்
ஜெயமோகனுக்கு தங்களின் இணையத்தில் இடம் பெற்றுள்ள ஒரு கடிதத்திற்கு நீங்கள் அளித்துள்ள பதில் தொடர்பாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ”தமிழில் மரபான இலக்கணம் முழுக்க செய்யுளை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டது. நமக்கு உரைநடைக்கான இலக்கணம் இல்லை.உரைநடைக்கான இலக்கணம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆறுமுகநாவலர், பின்னத்தூர் நாராயணசாமி அய்யர், வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார் போன்றவர்களால் உருவாக்கப்பட்டது. அதிகமும் ஆங்கில இலக்கணத்தை முன்னுதாரணமாகக் கொண்டது.உரைநடை இலக்கணம் என்பது உரைநடை வளர்ந்து மாறும்போது தானும் மாறியாகவேண்டியது. தமிழாசிரியர்கள் அந்த மாற்றத்தை உணராமல் பத்தொன்பதாம் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=28652
இலக்கணம்-கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன், இதில் உரைநடை இலக்கணத்தின் முக்கியத்தைப் பற்றி பேசியுள்ளீர்கள். அது முக்கியம் தான். தொல்காப்பியம், நன்னூல் போன்ற மரபு இலக்கண நூல்கள் நல்ல மரபுச் செய்யுள் செய்வதையே குறிக்கோளாக வைத்துள்ளன. அதனால் பள்ளி மாணவர்களுக்கு மரபு இலக்கண நூல்கள் படிப்பூட்டுவது நிறுத்தப்பட்டால், அல்லது வெகுவாக குறைக்கப்பட்டால், ஒரு நஷ்டமும் இல்லை. மொழி பேசுவதிலிருந்து வருவதால், இலக்கணம் என்பது எப்படி ஒரு மொழி பேசும் குழு, சில விதிகளை (அறிந்தோ, அறியாலமோ) பின்பற்றி பேசுவதை புரிந்து கொள்கின்றனர் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=28203
மலையாளத்தின் பழமை
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, கேரளாவில் உள்ள எடக்கல் குகையில் கி பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி மலையாளக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மலையாளத்தின் தொன்மை ஐநூறு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கின்றது. இது மலையாள மொழி வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு ஆகும். இது குறித்து இந்து நாளிதழில் இன்று வந்த செய்தி: http://www.thehindu.com/arts/history-and-culture/article3501408.ece?homepage=true நன்றி, தங்கள் அன்புள்ள, சரவணக்குமார் அன்புள்ள சரவணக்குமார், நீங்கள் கொடுத்த சுட்டியில் உள்ள செய்தியை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். பொதுவாக சமீபகாலமாக …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=27970
மலையாளம் என்ற தூயதமிழ்
அன்புள்ள ஜெயமோகன், நூறுநாற்காலிகள் விமர்சித்து எழுதிய கடிதத்துக்கு பதிலளிக்கையில் “தமிழ் தூய்மையாகும் தோறும் நல்ல மலையாளம் நோக்கி நகரும் என்பது என் எண்ணம்” என்று நீங்கள் கூறியுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்து விட்டேன். காரணம் கடந்த அறுபத்து மூன்று வருடங்களாக சென்னைத்தமிழனாக, அதுவும் பேட்டைவாசியாக வாழ்ந்து சமீபத்தில் கேரளத்தில் குடியமர்ந்த எனக்கு தினசரி நடைமுறை வாழ்க்கையில் காதில்விழும் நல்ல மலையாச்சொற்கள் அனைத்தும் தூய தமிழ்ச்சொற்களாகவே தெரிகிறது. காலையில் காணும் நபரிடம் நலம் விசாரித்து எங்கேபோய் வருகிறீர்கள் என்றால் “தொழுதிட்டு” …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=12967
ஜெகத்:மலையாள எழுத்துரு மாற்றம்
ஜெயமோகன்.இன் என்ற இந்தத் தளத்தை நடத்தும் சிறில் அலெக்ஸ் [ சிரில் என்று எழுதி அவர் மனதைப் புண்படுத்தக் கூடாது. எங்களூரில் 'றாபின்ஸன் றைஸ் மில்' என்றுதான் எழுதுவோம். அது எங்கள் றைற்.] ஜெகத் என்பவரின் இணையதளத்தை பார்க்கும்படி அடிக்கடிச் சொல்லி இணைப்பு அனுப்புவார். சமீபத்தில் என்னைப்பற்றிய அங்கதம் நன்றாக இருந்தது. ஒருவரை கூர்ந்து நோக்கி அவரது சில உடல் அல்லது பேச்சு அல்லது எழுத்து வழக்கங்களை கண்டுபிடித்து அவற்றை மிகைப்படுத்துவதே எங்கும் பகடியின் வழிமுறையாக இருந்துள்ளது. …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=326



