Category Archive: மொழிபெயர்ப்பு

நேற்றைய புதுவெள்ளம்

சு கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்ப்பாளர்

நவீனத் தமிழிலக்கியத்தின் தொடக்க காலத்தில் வெளிவந்த பலகதைகளின் கதைமாந்தர்களின் பெயர்களை வாசித்தால் ஓர் ஆச்சரியம் இருக்கும். விஸ்வேஸ்வரன், மனமோகனன் என்றெல்லாம். அவற்றுக்கான காரணம் அவை வங்க இலக்கியத்தின் நேரடியான பாதிப்பினால் விளைந்தவை என்பதில் உள்ளது. இந்தியாவெங்கும் நவீன இலக்கியம் உருவானதில் வங்க நவீன இலக்கிய அலையின் பாதிப்பு பெரும்பங்காற்றியிருக்கிறது. தமிழில் பாரதி, வ.வே.சுப்ரமணிய அய்யர் முதலிய முன்னோடிகள் வங்கக்கதைகளை மொழியாக்கம் செய்தும் தழுவியும்தான் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்தார்கள். அதன்பின்னர் மணிக்கொடி காலகட்டத்தில் வங்க இலக்கியம் தமிழில் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=54010

சிந்தாமணி கொட்லகெரே

எஸ்.ராமகிருஷ்ணன் அவரது தளத்தில் பாவண்ணன் மொழியாக்கம் செய்த சிந்தாமணி கொட்லகெரேயின் இரு கவிதைகளை எடுத்துக்கொடுத்திருக்கிறார். 2002 ல் நான் ஊட்டியில் ஏற்பாடுசெய்திருந்த கன்னட-மலையாள-தமிழ் கவியரங்குக்காக பாவண்ணன் மொழியாக்கம் செய்த கவிதைகள் அவை. அடுத்தவருடம் குற்றாலத்திலும் இன்னொரு அரங்கை நடத்தினோம். சிந்தாமணி கொட்லகெரே வந்திருந்தார். இனிமையான உற்சாகமான குண்டு மனிதர். அவருடன் இருந்த நாட்கள் இனியநினைவாக உள்ளன. குற்றாலத்தின் அருவியைக்கண்டு ‘டிவைன்..டிவைன்’ என அவர் குதூகலித்துக்கொண்டே இருந்தது கண்ணில் நிற்கிறது. சிந்தாமணியின் கவிதைகளை நான் நடத்திய சொல்புதிதில் வெளியிட்டோம் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=39991

நித்ய சைதன்ய யதி இணையத்தில்

குழும நண்பர் ஸ்ரீநிவாசன் (சுருக்கமாக கவர்னர் சீனு) அமைதியாக ஒரு நல்ல பணியைச் செய்து வருகிறார். அவர் நடத்தி வரும் குருநித்யா வலைத்தளத்தில் ஸ்ரீநாராயண குருவின் ஆத்மோபதேச சதகத்திற்கு விளக்கவுரையாக ஸ்ரீநித்யசைதன்ய யதி எழுதிய நூலான ‘That Alone, the Core of Wisdom’ என்ற ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். இப்போது மலையாளம் கற்று, மலையாளத்திலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்க்கத் துவங்கியுள்ளார். இன்று வெளியிட்டிருக்கும் ‘அறம்’ கட்டுரை மலையாளத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. காந்தி டுடே, …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=39708

கதைகள் சொல்லும் குட்டி தேவதைக்கு விருது – கடலூர் சீனு

சில நாட்கள் முன்பு நண்பர் கிருஷ்ணன் ஆண்டான் செக்காவ் எழுதிய ”தி பெட் ” சிறுகதை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது  இணையத்தில் ஆங்கிலத்தில் கிடைக்கும் பல கதைகள் பற்றி சொன்னார் . ஆங்கிலம் அறியாததால் நீங்கள் அரைவாசி உலகை மட்டுமே பார்க்கீறீர்கள் என்று சொன்னார் . மெய்தான் . அ .ராமசாமி ஒரிடத்தில் குறிப்பிட்டுள்ளார் போலந்து நாட்டு குடிமகன் சமகால மற்றும் முக்கியப் பிரதிகள் அனைத்தையும் தனது போலிஷ் மொழியிலேயே கற்கிறான் . அவர்கள் பிழைக்கும் மொழி எதுவாக …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=38812

கங்கூலி பாரதம் தமிழில்

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, ஒரு முறை நீங்கள் யார் என்றே தெரியாமல் விஷ்ணுபுரம் புத்தகம் வாங்கினேன். ஐம்பது பக்கங்கள் படித்திருப்பேன். அதையும் நான் மறுபடி மறுபடி படிக்க வேண்டியிருந்தது. உங்கள் வார்த்தைகளில் அவ்வளவு நிறை இருந்தது. ஒரு வார்த்தையை படிக்காமல் விட்டாலும், நான் கண்ட மனக்காட்சியில் ஒரு காட்சி வெட்டபட்டதுபோல உணர்ந்து. மறுபடியும் மறுபடியும் படித்த பக்கங்களையே படித்துக் கொண்டிருந்தேன். அப்போது யார் இந்த எழுத்தாளர், யார் இவர் வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறாரே என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=38450

மகாபாரதம் கும்பகோணம் பதிப்பு முன்பதிவு

தமிழில் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக சொல்லப்படும் மஹாபாரத கும்பகோணப் பதிப்பு தற்போது அச்சில்இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம். இந்நூல் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் நன்கு தேர்ச்சி பெற்ற பல அறிஞர் பெருமக்களால் நேரடியாக சமஸ்கிருதத்தில் இருந்து ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட முழு வியாச பாரதமும் (பதினெட்டு பருவங்களும்) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ம.வீ. இராமானுஜாசாரியார் அவர்களால் தொகுக்கப்பட்டன. மஹாபாரதம் எளிய தமிழ் மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைப் பல அறிஞர் பெருமக்கள் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=37920

கனவுகளின் மாற்றுமதிப்பு

[ 1 ] ப்ரயன் மகே எழுதிய [ Bryan Magee] எழுதிய தத்துவவாதியின் சுயவாக்குமூலம் [Confessions of a Philosopher] என்ற நூலின் தொடக்கம் சுவாரசியமானது. இளமையில் அவர் தூங்கி விழித்ததும் ஒவ்வொருநாளும் உடன் தூங்கிய அக்காவிடம் கேட்பாராம் ‘நான் நேற்று எப்போது தூங்கினேன்?’ என்று. அக்கா ஒரு விஷயத்தைச் சொல்லி அதை நான் சொல்லிக்கொண்டிருந்தபோது என்பார். இல்லை , அது எனக்குத்தெரியும், அதை நான் கேட்டேன். அதற்குபிறகு எப்போது என்பாராம். அப்படியே கடைசியாக கேட்டதைக்கூட …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=37393

மொழியாக்கங்கள்

  அன்புள்ள ஜெயமோகன் சார், முதலில் இந்த நீளமான கடிதத்தை வாசிக்க நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. என்னைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். பெயர் சிவக்குமார், வயது 29. மனைவி பெயர் மாலதி.பிறந்து வளர்ந்தது மதுரை நகர். பணி பொருட்டு சென்னையில் வசித்து வருகிறேன். பெருங்குடி-தரமணியில் உள்ள சோலார்விண்ட்ஸ் என்கிற மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். அப்பா பெயர் பாலச்சந்திரன், முன்பு மதுரை கோட்ஸ் பஞ்சாலையில் வேலைபார்த்துத் தற்போது கோச்சடையில் சார்பதிவாளார் அலுவலகத்தில் பத்திரப்பதிவராக இருக்கிறார். அம்மா …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35883

ஆரோக்கியநிகேதனம்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் , “மனிதனின் ஆன்மிகத் தேடல் என்பது அவனை மரணத்திற்காகத் தயார் படுத்தவா ?.” ஆரோக்கிய நிகேதனம் நாவலை முடித்த பிறகு எழுந்த கேள்வி இதுதான் . இந்த நாவலில் ஜீவன் பல முனைகளில் இருந்தும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் சிக்கிக் கொண்டாலும் “சடை விரி கோலமான அந்த மரண தேவதையையே ” இறுதி வரை தேடுகிறார். தான் பல முறை அதை மற்றவர்க்கு ஏற்படும்பொழுது கண்டாலும் ,அவருக்கு அது எப்பொழுதும் புதிராகவே உள்ளது . ஏன் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=37042

முழு மகாபாரதம்

ஐயா ஜெயமோகன் அவர்களின் தருமன், கேள்வி பதில் அருமை. கீழ்கண்ட வலை பதிவினை தங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு நான் பெருமைப்படுகிறேன். அரசன் என்பவரின் தன்னலமற்ற தனிஒரு மனிதரின் உழைப்பால் எளிய தமிழில் படங்களுடன் உருவாகும் முழு மகாபாரதம்… http://mahabharatham.arasan.info/ முழு மஹாபாரதம் கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட “The Mahabharata” புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு (முழு மஹாபாரதமும் தமிழில்… இணையத்தில்… தயாரிப்பில்…)

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=37777

Older posts «