அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு உங்களின் “பின் தொடரும் நிழலின் குரல்” நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் நீங்களும் ஒரு கதாபாத்திரமாக வருகிறீர்கள். திரைப்படங்களில் “cameo” என்று வருவது போல, நகைச்சுவை கௌரவ பாத்திரமாக நீங்களே வந்திருக்கிறீர்கள். அதற்கான காரணம் கதையிலேயே இருக்கக்கூடும். இப்போது நான் இருநூறாம் பக்கத்தில் இருக்கிறேன். தத்துவங்களின் தருக்கங்களாகத் தீவிரமாக நகரும் பக்கங்களில், உங்களின் பாத்திரம் புன்முறுவலை வரவழைத்து, வாசிப்பைக் கொஞ்சம் லேசாக்குகிறது. இந்த உத்தி எந்த ரகத்தைச்சார்ந்தது? நன்றி கணேஷ் நியூ டெல்லி …
Category Archive: நாவல்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35634
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35603
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35597
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35442
விஷ்ணுபுரத்தில் காதல்
அன்புள்ள ஜெயமோகன் சார் , விஷ்ணுபுரம் படித்துக்கொண்டிருக்கிறேன்.கலை,தத்துவம்,சாகசம்,சிற்பம், இசை என்று சகல பரிமாணங்களிலும் உயர்ந்து நிற்கும் விஷ்ணுபுரத்தில், இயல்பான-ஆத்மார்த்தமான-காதலர்களே இல்லையா?அதை ஏன் பதிவு செய்ய மறந்து விட்டீர்கள்? எம்.எஸ்.ராஜேந்திரன் திருவண்ணாமலை அன்புள்ள ராஜேந்திரன், விஷ்ணுபுரத்தில் காதல் உள்ளது. எல்லாப் பகுதிகளிலும் குறைந்தது ஒரு தீவிரமான காதலாவது சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் விஷ்ணுபுரம் காலத்தின் கொந்தளிப்பு. ஆகவே அது எதையும் முக்கியப்படுத்தவில்லை. மாபெரும் சிந்தனைமரபுகளே வெறும் கொப்புளங்கள் போல வெடித்து மறைகையில் காதல் என்னவாகும்? ஆனால் இன்னொரு வினாவும் உள்ளது. …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35136
அஞ்ஞாடி ஒரு வாசக அட்டவணை
பூமணியின் அஞ்ஞாடி நாவலை வாசிப்பதற்கும் நினைவில் கொள்வதற்குமான ஒரு வழிகாட்டிக்கட்டுரையை எஸ்.ரங்கசாமி எழுதியிருக்கிறார் பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் தொடர்புடைய பதிவுகள்அஞ்ஞாடி ஒரு கடிதம்அஞ்ஞாடி மதிப்புரைஅஞ்ஞாடி- ஒரு மதிப்புரைபூமணியின் புது நாவல்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36023
ஜெயகாந்தன் பழையவராகிவிட்டாரா?
அன்புள்ள ஜெ, நான் தங்களுடைய எழுத்தைக் கடந்த ஆறு மாதங்களாகத்தான் தீவிரமாக வாசித்து வருகிறேன். அதுவும் உங்கள் வலைப்பூவை என் கண்கள் அசையாமல் நான்கைந்து மணி நேரம் ஒவ்வொரு நாளும் படித்துக்கொண்டிருக்கும். என் சந்தேகத்தை முன் வைக்கும் முன்பு என்னைப் பற்றி சில.. எஸ்.ரா வின் கட்டுரைகளினால் வாசிப்பு என்னும் பிரிவிற்கு வந்தவன் நான். பின்பு சுஜாதா வில் தீவிரமாகி(இப்போது அலுத்து விட்டது என்பது வேறு விஷயம்), சுந்தர ராமசாமி, புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், வண்ணதாசன், வண்ணநிலவன், அசோகமித்திரன், …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35572
கொற்றவை-கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, “என் ஆக்கங்களில் நான் மிகச்சிறப்பானதாக எண்ணுவது கொற்றவை” என்று தாங்கள் சொல்லி இருக்கிறீர்கள். ” முன்னூறு பக்கங்கள் வரை உரைநடையில் எழுதிவிட்டு பின்னர் இது கோரும் வடிவம் வேறு என்பதை உணர்ந்து செய்யுள் நடையில் எழுதியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ” ஒரு யுகத்திற்கு ஒருமுறை ஆதிகேசவப் பெருமாள் புரண்டு படுக்கிறார் ” என்ற சொற்றொடரே விஷ்ணுபுரம் எழுதுவதற்கு ஆதாரமாக அமைந்தது என்றும் ஒரு குறிப்பு உண்டு. அது போல “கொற்றவை” …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35667
விஷ்ணுபுரம் ஒரு கேள்வி
அன்புள்ள ஜெயமோகன் விஷ்ணுபுரம் குறித்து வாசகர் துவாரகாநாத் கேள்விக்கு நீங்கள் பதில் எழுதியிருந்தீர்கள் அதில் கீழ்க்கண்ட வரி படித்தேன். “அது ஓர் எழுத்துவகை. அது ஒரு காலமில்லா வாசிப்பனுபவத்தை அளிக்கிறது” விஷ்ணுபுரம் போல இன்னொரு படைப்பு நான் படித்ததில்லை. “ஓர் எழுத்துவகை:” என்று கூறியிருப்பதால். அந்த வகையில் வேறு ஏதும் கவனிக்கத்தக்க படைப்புகள் உள்ளதா. மேலும்,விஷ்ணுபுரம் முதலில் வரும் அந்த பாலைவனக் காட்சி. அது மணிமுடி காலத்திற்குப் பிந்தையது எனக்கொள்ளலாம். அனால் அதே நேரம் மணிமுடியே ஒரு …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35381
அஞ்ஞாடி ஒரு கடிதம்
அஞ்ஞாடி வாசித்துக் கொண்டு இருக்கிறேன். நாவல் அபாரமான ஒரு வாசிப்பு அனுபவம். ஆண்டி மற்றும் மாறி என்று இரண்டு நண்பர்களின் வாழ்க்கையில் இருந்து தொடங்கும் நாவல். மெல்ல மெல்லப் பல தளங்களில் விரிந்து செல்கிறது. நுட்பமான வாழ்க்கைத் தருணங்கள் , கிராமிய வாழ்க்கையில் கிடைக்கும் அங்கதம், இயற்கைக் காட்சிகள், அபாரமான சொலவடைகள். நாவல் முழுதும் லயிக்கும் பாடல்கள், கவித்துவமான மொழியில் எழுதப்பட்டுள்ள பாடல்கள். நாவலின் பலவீனம் அது மாக்ரோ வரலாறுக்குள் செல்லும் இடங்கள் வெறும் செய்தியாக மாறிவிடுகிறது …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35142


