அன்புள்ள ஜெமோ, வணக்கம். நான் பூபாலன்.ஏற்கனவே சில கடிதங்கள் தவிர கணிணி,செல்லிடப்பேசி குறுந்திரை என தினமும் தொடர்ந்து உங்களுடன் உரையாடி க்கொண்டிருப்பவன்.பிறந்து வளர்ந்தது,சித்திரங்குடி,முதுகுளத்தூர் வட்டம்,இராமநாதபுரம் மாவட்டம்.தற்போது பிழைப்பிற்காய் சென்னையில்.எங்கள் ஊர் சித்திரங்குடி இந்தியாவின் மிகத்தொன்மையான வலசைப் பறவைகளின் வாழிடம்.(http://www.forests.tn.nic.in/WildBiodiversity/bs_cbs.html).சில நூற்றாண்டுகளாகவே பல்லாயிரக்கணக்கில் வெளிநாட்டுப்பறவைகள் வந்து தங்கி தலைமுறைகளை உற்பத்தி செய்து செல்லும் தொன்மையான பறவைகள் சரணாலயம்.தொண்ணுறுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் அப்பத்தா, தான் இந்த ஊருக்கு வாழ்க்கைப்பட்டு வரும்போதே பல மாமாங்களாக இங்கு பறவைகள் வந்து போவதாக …
Category Archive: தமிழகம்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36050
அற்பத்தனமும் அகங்காரமும்
மதிப்பிற்குரிய ஜெயமோகன், நீங்கள் அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொண்டதை (“இப்படி இருக்கிறார்கள்”) எழுதியிருந்தீர்கள் . என் நெடுநாள் சந்தேகம் , அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொள்வது சரியானதா என்று…. ஏனெனில், சில சமயம் சக மனிதர்களின் அற்பத்தனத்தை கண்டு பொங்கிருக்கிறேன் . கடுமையாக திட்டியிருக்கிறேன் . ஆனால் அதன் பின் வருத்தபட்டிருக்கிறேன். நான் இன்னமும் பண்படவில்லையோ என்று…. நல்ல தந்தை அல்லது ஆசிரியர் , தங்கள் மக்களின் அறியாமையை கண்டு கோபத்தில் தண்டிப்பது சரியானதா? அன்புடன், அருண் . அன்புள்ள …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36883
ஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்?
பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு – நான் உங்களது திருச்சி நட்புகூடலில் கலந்து கொண்டேன். உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இத்தனை எளிதாக கிடைக்கும் என்று நினைக்கவில்லை. மிக மகிழ்ச்சி. உங்களிடம் நான் கேட்க நினைத்த பல கேள்விகளை கேட்கவில்லை. அனால் கேட்க நினைத்து கேட்காமல் விட்ட ஒரு கேள்வி… நீங்கள் M.S.சுப்புலட்சுமி அவர்களது பூர்வீக வாழ்கையை விரிவாக எழுதி இருந்தீர்கள், அவரது ஆரம்ப கால வாழ்கை என்னைபோல பலரும் அறியாத ஒன்று. அதை சுப்புலட்சுமி அவர்களும் மறக்கவும் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36561
செ. இராசுவும் இஆபவும்
ஈரோட்டில் நண்பர்களுடன் சேர்ந்து கொங்குவரலாற்றாய்வாளரும் கல்வெட்டியலாளருமான செ.இராசுவைப் பார்க்கச்சென்றோம். இராசு அவர்களின் பல நூல்களை நான் என் கட்டுரைகளில் மேற்கோள் காட்டியிருக்கிறேன். கொங்குவரலாற்றின் ஆதாரபூர்வமான வரலாற்றை உருவாக்குவதில் சென்ற ஐம்பதாண்டுக்காலமாக செ.இராசு கடும் உழைப்பைச்செலுத்தி வருகிறார்.ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். இந்தவருடம் அவரது எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி நான்கு நூல்கள் வெளியாகவுள்ளன. நாங்கள்செல்லும்போது ஒரு மேஜையில் தன்னுடைய நூல்களின் மெய்ப்புப் பிரதியை வைத்து உருப்பெருக்கிக் கண்ணாடியால் உற்றுநோக்கிக்கொண்டிருந்தார். அவருடைய சிறுநீரகங்கள் பழுதுபட்டு மாற்றப்பட்டிருக்கின்றன. காது மிகக்குறைவாகவே …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=29331
கொடுமணல் அகழாய்வு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபத்தில் நடந்த கொடுமணல் அகழாய்வு குறித்து, பிரன்ட்லைன் இதழில் வெளியான கட்டுரை (http://www.frontline.in/stories/20120810291506200.htm ). தாதுக்களில் இருந்து இரும்பு பிரித்தெடுத்தல், எக்கு தயாரித்தல், பாசிமணிகள் செய்தல் போன்ற பல தொழில்கள் இருந்த தொழில் நகரமாகக் கொடுமணல் இருந்துள்ளது. வட இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் கி மு நான்காம் நூற்றாண்டு முதலே வணிகத் தொடர்பு இருந்துள்ளதை இந்த அகழாய்வு உறுதி செய்கிறது. அதோடு இந்த பகுதியில் பல இன மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. தமிழ் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=29186
கூட்டமோ கூட்டம்
‘’என்னா சார் போங்க…எலக்சன் வருதுல்ல…வேல பெண்டு நிமிருது… காலமடக்கி உக்கார நேரமில்லேன்னா பாத்துக்கிடுங்க… ஆனால் கட்சிவேலைன்னா அது எலக்சனிலதானே, ஏங்க? அதைப்பாத்தா போருமா? நம்ம சோறுல்ல?’’
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=7755
சிற்பச்செய்திகள்
அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, நான் தங்களது விஷ்ணுபுரம் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். நிறைய கோயில் சார்ந்த கலைச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். உதாரணத்திற்கு விமானம், பிரகாரம், முகமண்டபம் மற்றும் பல. இதுபோல சிற்பங்கள் குறித்த கலைச் சொற்கள். இவைகளை எப்படி புரிந்து கொள்வது? தயவுசெய்து வழிகாட்டவும். காட்டுவீர்களா? இப்படிக்கு பா.மாரியப்பன் அன்புள்ள மாரியப்பன் கோயில்சார்ந்த கலைச்சொற்கள் பொதுவாக வையாபுரிப்பிள்ளை பேரகராதியில் உள்ளன. தனியாக ஒரு கலைச்சொல்லகராதி இல்லை. இந்தப் பெருங்குறையை அ.கா.பெருமாள் அவர்களிடம் பேசியதுண்டு. பெருமாள், செந்தீ …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=21461
கல்கியின் சமணம்
அன்புள்ள ஜெ கல்கியின் சமணம் பற்றிய என் கட்டுரை உங்கள் கவனத்துக்காக அன்புடன் நமதன் அன்புள்ள நமதன், உங்கள் கட்டுரை வாசித்தேன் சமணம் மற்றும் பௌத்தம் பற்றி மரபான ஒரு சைவ நோக்கு உள்ளது. அது சைவ பக்தி இயக்கத்தால் உருவாக்கப்பட்டு மடங்கள் வழியாக நிலைநாட்டப்பட்டது. சைவமதம் சமண பௌத்த மதங்களுடன் விவாதித்துப் போட்டியிட்டு உருவானதாகையால் அந்த மனவிலக்கமும், எதிர்மறை நோக்கும் அதனிடம் இருந்தது. சிவகாமியின் சபதத்தில் பௌத்த பிட்சு நாகநந்தி காமகுரோதமோகங்களின் குவியலாகவே வருகிறார் இல்லையா? …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=20677
சென்னை பற்றி…
முழுக்க முழுக்க சென்னையைப்பற்றிய தகவல்களை மட்டுமே அளிக்கக்கூடிய ஓர் இணையதளம் நம்ம சென்னை . ஆச்சரியமான முயற்சிதான். சென்னையை எனக்குப் பிடிக்காது. மாதத்தில் பாதிநாள் நான் சென்னையில்தான் இருக்கிறேன், ஆனால் ஓட்டல் அறை,கார் தவிர வெளியே இறங்குவதே இல்லை. சென்னையின் காற்றே என் மேல் படுவதில்லை. பட்டாலே மூச்சுத்திணறல்,இரவில் தலைவலி. என் நுரையீரலும் எதிர்ப்புசக்தியும் நிறைவாக இருப்பதற்கான ஆதாரம் அது என்கிறார் டாக்டர் நண்பர். [லா.ச.ரா] ஆனால் சென்னைமேல் எனக்கு வரலாற்று ரீதியான ஈடுபாடு உண்டு. ஒரு …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=17982
ஒரு தற்கொலை
என் சாவு, அரசு பள்ளியில் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும், இல்லையானால் என்னை மாதிரி எத்தனை உயிர்களை ஆசிரியர்கள் எடுக்கப்போகிறார்களோ தெரியவில்லை… திறமையான ஆசிரியர்கள் பலர் வேலையில்லாமல் காத்திருக்கிறார்கள், அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், மேல்நிலை வகுப்புகளுக்கு, நல்ல திறமையான ஆசிரியர்களை போடவேண்டும் என முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். பனைமரத்துப்பட்டி அரசுப்பள்ளியில் படித்த சீனிவாசன் என்ற மாணவன் தற்கொலை செய்துகொள்ளும் முன்னர் எழுதிவைத்துப்போன கடிதத்தில் உள்ள வரிகள் இவை. என்னைத் தனிப்பட்ட முறையில் மிகவும் அசைத்தது இது …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=16873


