Category Archive: சிறுகதை

காடு, விஷ்ணுபுரம், வெறும்முள்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். ‘காடு’ நாவல் சமீபத்தில் வாசித்து முடித்தேன். ஒரு பிரம்மாண்ட அனுபவத்தை எனக்கு அளித்தது. மிக்க நன்றி. உங்கள் வரிகளில் காடும் காடு சார்ந்த இடங்களும் என்னுள் புது பரிணாமம் பெற்றது. இனி நான் காட்டை நேரில் காண நேர்ந்தால் அங்குள்ள சிறு பூச்சிகளின் ஓசையைக் கூட என் மனம் தவறவிடாது. அணு அணுவாய் ரசிக்கத்தோன்றும். கிரியும் அய்யரும் ரசித்தது போல. நாவலில் காட்டு வாழ்கையையும் நகர வாழ்கையையும் ஆங்காங்கே ஒப்பிடப்பட்டுள்ளது. அவை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35603

கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் , நான் கோவையை சார்ந்த இயந்திரவியல் துறை சார்ந்த நிறுவனத்தில் வடிவமைப்புப் பொறியாளர் (Design Engg Mechanical ). சில வாரங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவரின் மூலம் தங்களது அறிமுகம்… வலைத்தளத்தில் யானை டாக்டர்,அனல் காற்று,பின் சில கட்டுரைகள் எனப் படித்ததில்,எனக்குத் தற்போதுதான் (உண்மையான )இலக்கிய அறிமுகம் ,என்பது சித்தமாகிறது….அடுத்தடுத்த நாட்களில் “இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்’, படித்து முடித்தேன் ….. என்னைப் போன்ற இளம் வாசகனுக்குக் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது தங்கள் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35597

விருது-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், விருது கதை வாசித்தேன். கதையின் மையக் கேள்வி அந்த நடிகருக்கு ஏன் விருதும் பாராட்டும் புகழும் கசப்பை மட்டுமே தருகிறது என்பதுதான். அதற்கான காரணங்களாக என் வாசிப்பில் நான் புரிந்து கொண்டவை: 1. நடிகர் நாடகத் துறையிலிருந்து வருவதால் அத்துறையில் நடிப்பின் உச்சபட்சசாத்தியங்களைக் கண்டும் உணர்ந்தும் இருக்கிறார். மேடையில் இடைவெளியின்றித் தொடர்ந்து நேரடியாக நிகழ்த்துவதால் அடையும் பூரணம் சினிமாவில் சாத்தியப்படாது எனினும் “புகழ்பெற்ற” கலையென்பதால் கிடைக்கும் அங்கீகாரம். அதுவும் கூடப் பலசமயம் தங்களுடைய சுய …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36137

படைப்பு-கடிதங்கள்

அன்புள்ள ஜெ 2006 ல் இருந்து நான் தங்களின் வாசகன் . ஆனாலும் இதுவே முதல் கடிதம் . எனக்கு மிகவும் மன எழுச்சி , வாழ்வின் உன்னத கணங்களை தந்த கட்டுரைகளில் பகவத் கீதை , காந்தி பற்றிய கட்டுரைகள் , அருகர்களின் பாதை மற்றும் அறம் சிறுகதைத் தொகுப்புகள் உள்ளன. ஒவ்வொரு முறையும் கடிதம் எழுத நினைக்கும் போதும் , நான் நினைப்பதை விடக் கூர்மையான விமர்சனம் மற்றும் பல கோண அணுகுமுறை உடைய …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35442

விருது [புதிய சிறுகதை]

டெல்லிக்கு அப்பாவுடன் சென்றிருக்கவேகூடாது என்று அவன் நினைத்துக்கொண்டான். ரயிலில் இருவர் மட்டும் அமரக்கூடிய சிறிய அறைக்குள் அவர் வெளியே பார்த்துக்கொண்டு இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தார். அவருக்குப்பதில் அங்கே அவரது ஆளுயர போஸ்டர்படம்தான் ஒட்டப்பட்டிருக்கிறது என்று அவன் நினைத்துக்கொண்டான். அவரைவிட அவரது போஸ்டர்களைத்தான் அவன் அதிகமும் பார்த்திருக்கிறான். அவன் சின்னக்குழந்தையாக இருக்கும்போதுதான் அப்பாவின் படம் போஸ்டர்களில் வர ஆரம்பித்தது. மருதங்குழி முக்கில் அச்சுதன்மாமனின் டீக்கடை வாசலில் வைக்கப்பட்ட தட்டியில் ஒட்டப்பட்டிருந்த மூன்றுவண்ண போஸ்டரில் நசீரும் ஜெயபாரதியும் முகத்தோடு முகம் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36006

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், அய்யப்பண்ணனும் ஆச்சியும் படித்தவுடன் தங்களின் இணைவைத்தல் (நிகழ்தல் புத்தகத்தில் உள்ளது என்று நினைக்கிறேன்) நினைவிற்கு வந்தது.இணைவைத்தல் ஆணின் பெருங்காதலைப் பேசியது.அதை நான் பத்து முறைக்கு மேல் படித்திருப்பேன்.அதில் நீங்கள் உங்கள் பெருங்காதலை விவரிக்கும் பத்தி வரும்.உங்கள் குழந்தைகளைவிட உங்கள் மனைவி பல படி மேலென்ற ஒரு வரி வரும்.அய்யப்பண்ணனும் ஆச்சியும் ஆக்கத்தின் கடைசிப் பத்தியில் நான் அதை முழுமையாகக் கண்டுகொண்டேன். அய்யப்பண்ணனுக்கு ஆச்சியின் மேலிருந்தது நீங்கள் இணைவைத்தலில் சொல்லும் பெருங்காதலல்வா.ஒரு பார்வையில் ஜெயமோகன்தான் அய்யப்பண்ணன் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35437

அம்மையப்பம் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் வெண்கடல் simply brilliant. வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தேன் இந்தக் கதையைப் பற்றி.. இன்று காலை என் கணவரிடம் உங்கள் கதையைச் சொன்னேன். வாசிக்கும் பழக்கம் இல்லாதவர். பொருளாதாரம்தான் அவரின் விருப்பம். எனக்கு நேர் எதிர். ஆனால் நான் சொன்னால் கதைகளைக் கேட்பார். அவரால் இந்தக் கதையை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் நான் பட்ட வலி அது. அவர் பார்த்த வலி அது.ப்ரசவ வலியை விட கொடுமையான வலி அது ஜெயமோகன். ப்ரசவ …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35316

சுந்தர ராமசாமி, அசோகமித்திரன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, மிகக் குளிரான ஒரு நாளின் மாலைப் பொழுதில் எழுதுகிறேன். அசோகமித்திரன் பற்றிய ஒரு வாசகரின் குறிப்பையும் அதற்கான உங்கள் பதிலையும் படித்தேன். சு.ரா.வைப் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து அசோகமித்திரனையும் படித்து வந்திருக்கிறேன். தீபம் சஞ்சிகை அவருடைய எழுத்துகளை அதிகம் பிரசுரித்தது என்று நம்புகின்றேன். கரைந்த நிழல்கள் நாவல் தீபம் இதழில்தான் தொடராக வந்தது. அந்தக் கதை சொன்ன விதமே ரொம்ப அலாதி. பெரிய திரையில் சினிமா பார்த்த மகிழ்வையும் பரவசத்தையும் தந்தது. திடீர் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35366

வெண்கடல்-கடிதங்கள்

.அன்பின் ஜெ எம்., வெண்கடலுக்குள் ஆயிரம் படிமங்களை அனைவரும் அலசினாலும் அவற்றை என்னாலும் இனம் காண முடிந்தாலும் எனக்கென்னவோ அந்தப் பெண் படும் தவிப்பிலும் வலியிலுமே மிகுதியாக ஒன்ற முடிகிறது; அடையாளப்படுத்திக்கொள்ள முடிகிறது.என்ன முயன்றாலும் அதைத் தாண்டி நகர்ந்து செல்வது எனக்குச் சாத்தியமாகவில்லை. ஒரு வேளை என் மன அமைப்பு அதற்குக் காரணமாக இருக்கலாமோ என்னவோ..! எது ஒரு பெண்ணின் அடையாளமாகக் கருதப்படுகிறதோ – எது உலகுக்கெல்லாம் பால் நினைந்தூட்டுகிறதோ – எது அவளுக்கும் அகிலத்துக்கும் வரமாக …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35169

வெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்

அன்புள்ள சார், நலமா? நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களைத் தொடர்பு கொள்கிறேன். எனது பணியில் சிறு மாற்றம். வேறு ஒரு ‘டெஸ்க்’ கில் வேலை செய்கிறேன். புதிய இடத்தில் இணையத்  தொடர்பு கிடைப்பது அபூர்வம். கிடைத்த கொஞ்சநஞ்ச நேரத்தில் உங்கள் கட்டுரைகளை மட்டும் படிக்கிறேன். உங்களுடன்.. தொடர்பு இந்த அளவில் அறுபட்டதற்கே வருத்தமாக, ஏக்கமாக இருக்கிறது. கட்டுரைகளை மட்டும்தான் படிக்கிறேன் என்று சொன்னேன் இல்லையா! ஆனால், ‘நீரும் நெருப்பும்’ அப்படிப் படிக்காமல் போகமுடியவில்லை. கதையின் முதல் வாக்கியத்திலேய …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35186

Older posts «

Switch to our mobile site