Category Archive: சமூகம்

ஒரு வெறியாட்டம்

அன்புள்ள ஜெமோ கண்ணனைப் பற்றி உருகி உருகி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் ஃபேஸ்புக்கில் இந்த இணைப்பைப் பார்த்தேன். அதற்குமேல் ஒன்றும் சொல்வதற்கில்லை ராம் https://www.facebook.com/video.php?v=891871817509696 அன்புள்ள ராம் இந்த மோசடி ஆசாமியைக் கண்டுபிடித்து கூண்டிலேற்றுவது மிக எளிது. குழந்தையைக் கொடுத்துவிட்டு கடைசியில் சென்று வாங்கும் அந்தப் பெண்ணையும் தண்டித்தாகவேண்டும் இந்த குரூரம் மதத்தின் பெயரால் நிகழவில்லை. மதமோ ஆன்மீகமோ அல்ல இது. அறியாமை மோசடியை சந்திக்கும் ஒருபுள்ளி மட்டுமே ஜெ

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=61011

ஒரு டாக்டர்!

நண்பர் ஒருவர் இந்த இணைப்பை அனுப்பியிருந்தார். இதில் உள்ள பின்னிணைப்பில் ஒரு டாக்டர் நீயா நானா நிகழ்ச்சிக்கு எதிர்வினையாற்றியிருந்தார். கேட்டு ஒருமாதிரி உடம்பே கூசியது. அடச்சீ என்பதற்கு அப்பால் ஒரு வார்த்தைகூடச் சொல்ல தகுதியற்ற பதிவு அந்நிகழ்ச்சி டாக்டர்களை கோபப் படுத்தியிருக்கலாம். அவர்கள் அதற்கு எதிர்ப்பும் மறுப்பும் தெரிவிக்கலாம். ஏன் கோபத்தைக்கூடக் கொட்டலாம். ஆனால் இந்த ஆசாமியின் பேச்சின் தரத்தைப் பாருங்கள். அதிலுள்ள நம்பமுடியாத அளவு பாமரத்தனம்! பத்தாம் கிளாசும் பாட்டும் பாஸான நம்மூர் பையன்கள் இதைவிட …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=60905

சேவை வணிகர்கள்

அன்புள்ள ஜெயமோஹன் இந்த நிகழ்ச்சி சம்பந்தமாக நானும் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன். உங்கள் மனப்பதிவுபடி பார்த்தால், சட்டரீதியாக தொழில் செய்கிறவர்களாக ஆசிரியர்களும் மருத்துவர்களும் வந்தால், அவர்கள் மதிப்பீடுகளின் ( Exams, Results, Lab tests) அடிப்படையில் தானே செயல்பட முடியும். பிறகு அவர்கள் அளவுக்கு மீறிய பரீட்சை வைக்கிறார்கள் என்றும், மதிப்பெண்களால்/மதிப்பீடுகளால் மாணவர்களின்/நோயாளிகளின் மனச்சுமை கூடுகிறது என்றும் ஏன் ஒப்பாரி வைக்க வேண்டும். மாணவர்களையும்/ நோயாளிகளையும் முதலாளித்துவத்தின் ஒரு மாற்றிகொள்ளும் பொருளாக(commodities) உருவாக்கும் நிலை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=60832

தாய்மை

மதிப்புமிக்க ஆசிரியருக்கு, ஒரு குழப்பமான கேள்வி. ராதையின் அறிமுகத்திற்கு பிறகு கேட்காமல் இருக்க முடியவில்லை. வழக்கம் போல் உங்கள் பதிலுக்கு பின் தெளிவு பிறக்கும் என்று நம்புகிறேன். பொதுவாகவே நீங்கள் தாய்மைக்கும் பெண்மைக்கும் கொடுக்கும் விவரணைகள் கனிதலின் உச்சத்தை நோக்கியே செல்கிறது.உணவளிப்பதன் மூலமே கனிவதையும், பிள்ளை பெறுவதின் மூலமும், தன் குழந்தைக்கு பாலும் சோறும் அளிப்பதன் மூலம் பேரின்பம் அடைவதாகவும் சொல்கிறீர்கள். உங்கள் சொந்த வாழ்க்கையில் அடுத்தவருக்கு உணவும் பாசமும் அளித்து இன்புற்ற தாய்மார்களை பற்றி நிறைய …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=60791

டாக்டர்கள் என்னும் சேவைவணிகர்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபத்தில் மருத்துவர்கள் மேல் பொதுமக்களுக்கு இருக்கக்கூடிய விமர்சனங்களை முன் வைத்து நீயா நானா நிகழ்ச்சி நடந்தது. அது சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிடத் தக்க விவாதத்தை நிகழ்த்தியது. எதிர்பார்த்தது போலவே மருத்துவர்கள் அவர்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டைப் பற்றி எந்தப் புரிந்துணர்வும் இல்லாமல் அதற்கான பொறுப்பு தங்களுக்கு உள்ளது பற்றிய எந்த உணர்வும் இல்லாமல், தனது துறை சார்ந்த பாசம் ஒன்றை மட்டுமே முன்னிறுத்தி, தன்னிடம் வரும் நோயாளிகள் அறிவற்று இருப்பதாகவும், TRP …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=60765

கேரளக் குடிநிறுத்தம்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் கட்டுரைகளிலும், தனிப்பட்ட முறையில் நாம் பேசும்போதும் கேரளாவில் மிக மிக அதிகமாகிவிட்ட குடிப்பழக்கம் பற்றியும், அதனால் குடும்பங்கள், குழந்தைகள் நாசமாவது பற்றியும் நீங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். இப்போது படிப்படியாக அங்கே மதுவிலக்கு வரப் போகிறது என்கிற செய்தியை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? இது ஆத்மார்த்தமான, ஆக்கபூர்வமான நல்ல.முயற்சிதானா? அல்லது இது ஒரு மாதிரி அரசியல் ஸ்டண்டா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அன்புடன், லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அன்புள்ள ராம் தமிழகத்திலும் சரி, பொதுவாக …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=60704

பொம்மையும் சிலையும்

அன்புள்ள ஜெயமோகன், இந்து மதத்தின் வழிபாட்டுச் சிலைகளை ஒவ்வொருவரும் தங்களுக்கு தோன்றியபடி விளக்கிக்கொள்ளலாம் என்று நீங்கள் சொல்கிறீர்களா? அவ்வாறு ஆளுக்காள் அதை மாற்றுவார்கள் என்றால் அதன் பின்னர் நம்முடைய விக்ரகங்கள் எப்படி இருக்கும்? வழிபடுவதற்கு சாமிகளே இருக்காதல்லவா? ஒருமதத்தின் அடிப்படைகளை மாற்றிக்கொண்டே இருப்பது எப்படி சரியானதாக ஆகும்? நா.ஸ்ரீதர் அன்புள்ள ஸ்ரீதர் கொஞ்சநாள்முன்னர் மாலை வீட்டில் பாத்திரங்கள் கழுவிக்கொண்டிருந்தேன். அருகே பிள்ளைகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.சமையலறையில் அருண்மொழி சமையல்செய்துகொண்டு, காய்கறி நறுக்கிக்கொண்டு, பாட்டுகேட்டுக்கொண்டு, செல்போனை காதில் இடுக்கியபடி ‘டெலிவரி …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=5121

வரலாற்றின் பரிணாமவிதிகள்

அன்புள்ள ஜெ, நமஸ்காரம். உங்களின் “மூதாதையர் குரல்” படித்தேன். எனக்கு தோன்றியது என்னவென்றால் பத்தாம் நூற்றாண்டிற்கும் பதினைந்தாம் நூற்றாண்டிற்கும் இடையே உள்ள காலகட்டத்தை நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பார்க்கறீர்களோ என நினைக்கிறேன். ”பத்தாம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வரலாறு என்பது செல்வச்செழிப்பின் பண்பாட்டுச்செழிப்பின் வரலாறு. அதன் பின்னர் வரண்ட பாலைநில மக்களின் மூர்க்கமான தாக்குதல்களால் அதன் அனைத்து அமைப்புகளும் ஆட்டம் கண்டன. ”   எந்த நாட்டிற்கும் , மனித கூட்டத்திற்கும் ஏன் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=3992

விலக்கப்பட்டவர்கள்

 கேரளத்தில் இரிஞ்ஞாலக்குடா அருகே உள்ள கொல்லங்கோட்டைச்சேர்ந்தவர் மேலங்கத்துக் கோபால மேனன். கோழிக்கோடு சாமூதிரி மன்னரின் அரசில் அவருக்கு வரிவசூல்செய்யும் ‘அம்சம் அதிகாரி’  வேலை. அம்சம் என்றால் நிலவரிக்கான ஒரு குறைந்தபட்ச பிராந்தியம். இப்போதைய வருவாய் வட்டம் போல. அது அப்பகுதிக்கான நீதிபதி வேலையும்கூட. அவர் திருமணம்செய்துகொண்டது இரிஞ்ஞாலக்குடா வட்டபறம்பில் மீனாட்சி அம்மாவை. 1903ல் திரிச்சூர் அருகே உள்ள குந்நங்குளம் என்ற ஊரில் இருந்த ஒரு நம்பூதிரி மனையில் வாழ்ந்த விதவையான ஒரு நம்பூதிரிப்பெண் கருவுற்றாள். அக்காலத்தில் நம்பூதிரிப்பெண் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=972

ஒரு பேராறு

பகவதி கோபம் கொண்டு கொந்தளித்தது. எம்பி எம்பி குதித்தது. நேராக குருவின் அருகே வந்து ‘ என்னை நீ நம்பலையா? என் மேலே சந்தேகமா? ஊ? திருட்டாந்தம் காட்டணுமா? திருட்டந்தம் காட்டணுமா?’ என்று கூவியது.

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=7941

Older posts «