Jeyamohan

Author's details

Name: Jeyamohan
Date registered: August 24, 2011
URL: http://www.jeyamohan.in

Latest posts

  1. கனசியாம யோகம் — September 1, 2014
  2. அறிவுடையவர்களுக்கு மட்டும்… — September 1, 2014
  3. பாலைவன நிலவு — September 1, 2014
  4. ‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 13 — September 1, 2014
  5. இலக்கியமும் சமூகமும் — August 31, 2014

Author's posts listings

கனசியாம யோகம்

அன்புள்ள ஜெமோ, நீலத்தின் வடிவம், அமைப்பு குறித்து எனக்குள்ள சந்தேகம் இது. இது வரையிலும் வந்திருக்கும் வெண்முரசின் நாவல்களிலிருந்து நீலம் முற்றிலும் மாறுபடுகின்றது. இது வரையிலும் நாவலானது ஒரு வரலாற்றுக் கணத்தில் நடந்த ஒன்றாகத் தான் மகாபாரதத்தை சொன்னது. அதன் புராணத் தன்மைகள் ஒன்று யாரோ ஒரு சூதனால் சொல்லப்படும் அல்லது கிட்டத்தட்ட நடக்க சாத்தியமான ஒன்றாக இருக்கும் (பீஷ்மரின் தமயைன்களின் கதை). ஆனால் எவ்விடத்திலும் கதைமாந்தரை கடவுளாக்கியதில்லை. மேலும் பாரதத்தின் பாத்திரங்களே கதையின் ஓட்டத்தில் பேசும். …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=60858

அறிவுடையவர்களுக்கு மட்டும்…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வெண்முரசு மூலமாக தமிழ் எழுத்து உலகில் நீங்கள் ஒரு புதிய trend create செய்து இருக்கிறீர்கள். என்னை போல் facebook வாசிப்பு தவிர வேறு எதுவும் இல்லாமல் இருந்தவனுக்கு தங்கள் புத்தகங்கள் வரப்பிரசாதமாக வந்து அமைந்தது. நடுவே சில காலம் புத்தகம் படிக்கும் பழக்கம் ஒழிந்து facebook 4 வரிகளே வாசிப்பு என்று இருந்த எனக்கு முதலில் உங்கள் நீண்ட நாவல்களை படிப்பது சோதனையாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது தங்கள் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=60888

பாலைவன நிலவு

வைக்கம் முகமது பஷீரின் சிறுகதை ஒன்றில் ஓர் அனுபவம். பாலைவனத்தில் தனியாக அகப்பட்டுக்கொள்கிறார் பஷீர். ஜெய்சால்மரில். முழுநிலவு எழுகிறது .அகன்ற பால் அலைப் பெருவெளியில் ஆரஞ்சுநிற நிலவு !மிகப்பெரியது, கனிந்தது .பஷீர் அழுகிறார் ‘அல்லா உன் கருணையை தாங்க எனக்கு ஆற்றல் இல்லை! உன் மகத்துவத்தை அள்ள என்னிடம் கலம் இல்லை! எளிய புழு நான் !எனக்குரியவை வளைகள்’ என தப்பி ஓடுகிறார் அந்த நிகழ்ச்சியை நினைவூட்டியது எம் டி எம் எழுதிய இக்கட்டுரை. ஜெய்சால்மரில், அஜ்மீரில் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=60950

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 13

ஓவியம்: ஷண்முகவேல்

பகுதி ஐந்து: 1. பீலிவிழி ஆயர்சிறுகுடிகளின் அடுக்குக்கூரை புல்நுனிப் பிசிறுகள்தான் வான்மழையின் வருகையை முதலில் அறிந்துகொண்டன. இளங்காலை எழுகையிலேயே சிட்டுக்குருவியின் சிறகதிர்வென அவற்றை காற்று மீட்டும் சிற்றொலி எழுந்துகொண்டிருந்தது. சூழ்ந்த மலர்க்கிளைகள் சிந்தைகூரும் யானைச் செவிகளென அசைவற்றிருக்க இலைகளில் காதல் கொண்ட கன்னிவிழிகளின் ஒளியும் துடிப்பும் எழுந்தது. நனைந்த முரசுத்தோலாகியது காற்றுவெளி. அதில் ஈசல்கூட்டமென ஒட்டிச் சிறகடித்தன தொலைதூரத்து ஒலிகள். நீரில் கிளையறைந்து முறிந்துவிடும் பெருமரக்கூட்டங்கள் என செவியதிர எழுந்தன அண்மை ஒலிகள். ஊழ்கத்தில் இருந்தது மண். அதன் மேல் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=60948

இலக்கியமும் சமூகமும்

ஒரு மொழியில் இலக்கியம் ஏன் தேவையாகிறது? ஒரு சமூகத்துக்கு ஏன் இலக்கியம் தேவையாகிறது? தனிமனிதனுக்கு இலக்கியத்தின் பங்களிப்புகள் ஏராளமானவை. ஒவ்வொரு தனிமனிதனும் அறம், ஒழுக்கம், நம்பிக்கைகள் போன்ற அனைத்தையும் இலக்கியம் வழியாகவே அடைந்திருக்கிறான். இங்கிருக்கும் ஒவ்வொருவரும் இலக்கியம் வழியாகத்தான் உங்களுடைய அத்தனை சிந்தனைகளையும் அடைந்திருப்பீர்கள் உடனே சிரித்துவிடவேண்டாம். ஒரு வார்த்தை இலக்கியம் வாசிக்காதவர்கள் கூட இலக்கியத்தை அறிந்திருப்பார்கள். நாம் கருவிலே இருக்கும்போது நம் அம்மா உண்ட உணவும் நம் உடலில் ஓடும் அல்லவா? நம் பாட்டி சாப்பிட்ட …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=60840

பூதனை

mystery_sculpture_from_madurai

பூதனையின் சிற்பம் பற்றிய ஒரு பதிவு p (1) http://poetryinstone.in/lang/ta/tag/boothanai

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=60866

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 12

ஓவியம்: ஷண்முகவேல்

பகுதி நான்கு: 3. சுழலாழி ஆறு கடந்துசெல்லும் ஆநிரைக்குளம்புகளின் ஒலிபோல தயிர்க்கலங்களை மத்துகள் கடையும் ஒலி எழுந்த புறவாயில் திண்ணையில் ஆய்ச்சியர் கூடி அமர்ந்து கள்ளக்குரலில் கதைபேசிச் சிரித்துக்கொண்டிருக்கும் நடுமதிய நேரம். சரடு தாழ்த்தி மத்தை நிறுத்திய ஆயரிளம்பெண் ஒருத்தி “அக்கையீர், இதுகேளீர், நான் கண்ட கொடுங்கனவு. புள்ளும் இளங்காற்றும் பேய்முகம் கொண்டது. வானும் முகில்குவையும் நஞ்சு சொரிந்தது. பைதலிள வாயில் நாகம் படம் விரித்து நாவெனச் சீறியது. அன்னைவிழியில் அனல் எழுந்து கனன்றது. கருவறைப் பீடத்தில் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=60924

வணங்கான்,நூறுநாற்காலிகள்- கேசவமணி

இந்த இரண்டு கதைகளையும் இணைத்து ஒரு வாக்கியம் சொல்லவேண்டும் என்றால் அதை இப்படிச் சொல்லலாம்: நூறு நாற்காலிகளில் அமர்வது பெரிதல்ல, அப்படி அமர்ந்த பிறகு வணங்காதவர்களாக இருக்கவேண்டும். கேசவமணி கட்டுரை

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=60830

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 11

ஓவியம்: ஷண்முகவேல்

பகுதி நான்கு: 2. பாலாழி கைப்பிரம்பும் இடைக்கூடையும் கொண்டு கொண்டைச்சுமையும் கொசுவக்கட்டுமாக மலைக்குற மங்கை ஒருத்தி ஆயர்குடி புகுந்தாள். கன்னி எருமைபோல் கனத்த அடிவைத்து இளமூங்கில் போல் நிமிர்ந்து அசைந்தாடி வந்து “அன்னையரே, கன்னியரே, குறிகேளீர்! குறவஞ்சி மொழி கேளீர்! அரிசியும் பருப்பும் அள்ளிவைத்து அழியாச்சொல் கேளீர்!” என்று கூவினாள். ஆய்ச்சியர் கண்மயங்கும் ஆக்கள் அசைபோடும் நடுமதியம். நிழலுண்டு நிறைந்த நெடுமரங்கள் அசைவழிந்து நின்றன. சிறகொடுக்கி கழுத்து புதைத்து துயின்றன காகங்கள். குறத்தியின்  காற்சிலம்பொலி கேட்டு எழுந்து …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=60838

ஒரு டாக்டர்!

நண்பர் ஒருவர் இந்த இணைப்பை அனுப்பியிருந்தார். இதில் உள்ள பின்னிணைப்பில் ஒரு டாக்டர் நீயா நானா நிகழ்ச்சிக்கு எதிர்வினையாற்றியிருந்தார். கேட்டு ஒருமாதிரி உடம்பே கூசியது. அடச்சீ என்பதற்கு அப்பால் ஒரு வார்த்தைகூடச் சொல்ல தகுதியற்ற பதிவு அந்நிகழ்ச்சி டாக்டர்களை கோபப் படுத்தியிருக்கலாம். அவர்கள் அதற்கு எதிர்ப்பும் மறுப்பும் தெரிவிக்கலாம். ஏன் கோபத்தைக்கூடக் கொட்டலாம். ஆனால் இந்த ஆசாமியின் பேச்சின் தரத்தைப் பாருங்கள். அதிலுள்ள நம்பமுடியாத அளவு பாமரத்தனம்! பத்தாம் கிளாசும் பாட்டும் பாஸான நம்மூர் பையன்கள் இதைவிட …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=60905

Older posts «