சொல்வளர்காடு முன்பதிவு

solvalar

சொல்வளர்காடு – வெண்முரசு நாவல் வரிசையில் பதினொன்றாவது நாவல்.

மெய்ம்மையைத் தேடுவதே தன் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர் தருமன். அவருடைய விழிகளினூடாக வேதம்வளர்ந்த காடுகளை ஒற்றைக் கதைப்பரப்பாக இணைக்கிறது இந்நாவல். நேரடியாக தத்துவ, மெய்ஞான விவாதங்களுக்குள் செல்லவில்லை. கதைகளையே முன்வைக்கிறது. அனேகமாக அத்தனை கதைகளுமே கூறுமுறையில் வளர்ச்சியும் மாற்றமும் அடைந்தவை. நவீன கதைசொல்லல் முறைப்படி மீள்வடிவு கொண்டவை. அக்கதைகள் உருவாக்கும் இடைவெளிகளை, அக்கதைகளின் இணைவுகள் உருவாக்கும் இடைவெளிகளைத் தன் கற்பனையாலும் எண்ணத்தாலும் வாசகன் நிரப்பிக்கொள்ளவேண்டும் எனக் கோருகிறது இந்நாவல்.

ஒன்றின் இடைவெளியில் இருந்து பிறிதொன்றைக் கண்டடைந்து நீளும் இதன் பாதை இந்திய மெய்ஞான மரபின் வளர்ச்சியின் தோற்றமும்கூட. ஆனால் தத்துவத்தை படிமங்கள் வழியாகவே இலக்கியம் பேசுகிறது. அந்த விவாதத்தை முழுமைசெய்ய வாசகனின் பங்களிப்பைக் கோருகிறது.

728 பக்கங்கள் கொண்ட நாவல் இது. 58 வண்ணப் புகைப்படங்களும் இந்நாவலில் உள்ளன.

இந்நூலை முன்பதிவு செய்ய கடைசி நாள்: ஏப்ரல் 25, 2017.

முன்பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு:

* இந்தியா முழுக்க தபால் செலவு இலவசம். எனவே ஆர்டர் செய்யும்போது தபால் செலவு இல்லாத வழியையே தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யவும்.

* முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு பதிவு எண் தரப்படும். அந்தப் பதிவு எண் கிடைக்கப்பெறாதவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொண்டு அதைப் பெற்றிடவேண்டும்.

* ஆசிரியரின் கையெப்பம் வேண்டுமெனில் குறிப்பில் தெரிவிக்கவும்.

* முன்பதிவு திட்டத்தில் கேஷ் ஆன் டெலிவரி, விபிபி கிடையாது. பணம் செலுத்தி பதிவு எண் பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே புத்தகம் அனுப்பப்படும்.

* மே 20ம் தேதிக்கு பிறகு புத்தகம் அனுப்பி வைக்கப்படும். முதலில் பதிவு செய்தவர்களுக்கு முதலில் புத்தகம் அனுப்பப்படும்.

* ஆன்லைனில் பதிவு செய்யமுடியாதவர்கள் டயல் ஃபார் புக்ஸ் 94459 01234 ஐ அழைக்கலாம்.

* எம் ஓ, டிடி, செக் மூலம் பணம் அனுப்ப விரும்புகிறவர்கள் New Horizon Media Private Limited என்ற பெயருக்கு செக் அல்லது டிடி எடுத்து, New Horizon Media Private Limited, 177/103, Ambals building, Royapettah, Chennai – 600 014, Tamilnadu என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மறக்காமல் உங்கள் முகவரி, தொலைபேசி எண்ணோடு அனுப்பி வைக்கவும்.

* Money transfer செய்ய விரும்புபவர்கள் 94459 01234 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, தேவையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும். அல்லது [email protected] என்ற மின்னஞ்சலுக்கு மடல் அனுப்பவும்.

* Paytm மூலம் வாங்க 95000 45609.

* Paypal மூலம் பணம் அனுப்ப விரும்புவர்கள் [email protected] என்ற paypal அக்கவுண்ட்டுக்கு பே பால் மூலம் பணம் அனுப்பவும். பணம் அனுப்பிய விவரத்தை [email protected] என்ற முகவரிக்குத் தெரியப்படுத்தவும்.

* வெளிநாட்டிலிருந்து ஆர்டர் செய்பவர்கள் அதற்கான ஷிப்பிங் சார்ஜையும் சேர்த்தே பணம் செலுத்தவேண்டும். ஷிப்பிங் சார்ஜ் தொகையை ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது அறிந்துகொள்ளலாம்.

* மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால் [email protected] என்ற முகவரிக்கு மடல் அனுப்பவும்.

* FAQ – https://www.nhm.in/shop/FAQ.html

கிழக்கு பதிப்பகம் இணைப்பு மேலதிகத் தகவல்களுக்கு

முந்தைய கட்டுரைஎழுதலின் விதிகள்
அடுத்த கட்டுரைவெண்முரசு சென்னை சந்திப்பு