மழை- கடிதங்கள்

1iis7d

 

மழையில் நிற்பது வாசித்தேன்.

“இயற்கை என்பது உண்மையில் வெளியே இல்லை. அது நம் மனதுக்குள் உள்ளது. நாம் அளிக்கும் அர்த்தத்தால்தான் இயற்கை அழகாக ஆகிறது. அந்த அர்த்ததை நாம் நமது கற்பனையாலும் கவனிப்பாலும் இயற்கைக்கு அளிக்கவேண்டும்.”

கடந்த சில வருடங்களாக, நினைவறிந்து சூரிய உதய, அஸ்தமனங்களை தவறவிட்டதில்லை….ஒன்றுமற்றிருக்கும் உணர்வு…சில சமயங்களில் கண்ணீருடன்…அல்லது ஓர் எழுச்சி. ஏனென்றரியாமல் புன்னகை.

துங்கநாத்தில், மலைமுடிகள் மேகங்களுடன் இணைந்திருந்தததை பார்த்துக்கொண்டு சிறிது நேரம் நின்றோம். நீங்கள் சிவனின் முடியல்லவா! என்றீர்கள். அதிலிருந்து அப்பயணம் முடியும்வரை, இமயமலை முடிகளனைத்துமே சிவனாகவே கண்டேன்.

எனக்கான அவதானிப்பு.

மிக்க நன்றி.

அன்புடன்,
மகேஷ்.

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

”இயற்கை என்பது உண்மையில் வெளியே இல்லை. அது நம் மனதுக்குள் உள்ளது. நாம் அளிக்கும் அர்த்தத்தால்தான் இயற்கை அழகாக ஆகிறது.” இதை படித்தவுடன் என்னுள் எழுந்த எண்ணங்கள்.

இயற்கையான சூழல் நிறைந்த இடங்களுக்கு செல்லும் போழுது எனக்கு சில நேரங்களில் தோன்றுவது உண்டு ஏன் எல்லா நேரங்களிலும் இந்த இடங்களை ஒரே மாதிரியான மனநிலையில் ரசிக்க முடிவது இல்லையே என்று. இதற்கு நான் கற்பித்து கொண்டது. நம் மனநிலையின் தன்மையாக இது இருக்கும் என்று. ஆனால் உங்களின் இந்த கருத்து என் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதுதான உண்மையான் காரணமாக இருக்கவேண்டும். நம் மனதில் இயற்கை இருக்கவேண்டும் அப்பொழுதுதான் நாம் இயற்கையை முழுவதுமாக ரசிக்கவும் ஆராதிக்கவும் முடியும். இனிவரும் காலங்களில் இதை செயல்படுத்திப் பார்க்கவேண்டும். அதுபோல் ”இயற்கைக்கு முன்னால் கொஞ்சம் அன்றாட வாழ்க்கையை கழற்றி அகற்றி வைக்கவேண்டும்” இது சாத்தியமா என்று தெரியவில்லை ஆனாலும் முயன்று பார்ப்போம்.

மனதின் வேறு நிலைகளை அறிய வைத்த இந்த பதிவிற்கு நன்றி

அன்புடன்

ம.உமாசங்கர்

***

முந்தைய கட்டுரைஜல்லிக்கட்டு பற்றி…
அடுத்த கட்டுரைமொழிங்கடித்தல் -கடிதங்கள்