என் மலையாளக்குரல்

 

மாத்ருபூமி யாத்ரா இதழுக்கு நான் ஸ்பிடி சமவெளி பற்றி எழுதித்தருகிறேன் என்று சொன்னேன். அதை நம்பி அவர்கள் தங்கள் நட்சத்திரப் புகைப்படக்காரரை அனுப்பினார்கள். ஆனால் எழுதமுடியவில்லை. ஐரோப்பியப்பயணம். அங்கிருந்து சிங்கப்பூர். நடுவே வெண்முரசு

ஒன்றுசெய்யலாம் என்றார் இதழாசிரியர் விஸ்வநாதன். பேசிப் பதிவுசெய்து அளியுங்கள் எழுதிக்கொள்கிறோம் என்றார். பேசி அனுப்பினேன். அது எழுத்தில் வந்தபோது சிற்சில வார்த்தைகளைச் சீரமைத்தால் சரளமான நேர்த்தியான கட்டுரையாகவே இருந்தது

இப்போது மாத்ருபூமி இணையதளத்தில் அந்த குரல்பதிவையே வலையேற்றிவிட்டார். ஆச்சரியமாக இருக்கிறது, அதற்கும் வாசகர் வட்டம் இருக்கிறது. என்னைக் கூப்பிட்ட ஒரு வாசகி பரவசத்துடன் குரலுக்கு இணையாக எழுத்தே வராது என்றாள். ஏன் என்றேன். காதில் கேட்பானை மாட்டிக்கொண்டு கண்மூடினால் என்னுடன் மட்டும் பேசுவதுபோல் இருக்கிறது என்றாள்.

ஆனால் என் குரல் எனக்குப் பிடிக்கவில்லை. கம்பீரமே இல்லாமல் கெச்சலாக இருக்கிறது. சொல்ல ஆரம்பிக்கும்போது வரும் கனவுத்தன்மை மட்டுமே அதில் ஓரளவு நன்றாக இருக்கிறது என்று பட்டது

என் உச்சரிப்பில் தமிழ் ஒலிக்கிறது. என் மலையாளத்தமிழ்க்குரலைக் கேட்கவிரும்புபவர்களுக்காக—

மாத்ருபூமி யாத்ரா – ஸ்பிட்டி சமவெளி பயணம் பற்றி -1

மத்ருபூமி யாத்ரா ஸ்பிடிசமவெளி பயணம் பற்றி -2

 

முந்தைய கட்டுரைபொதுவழியின் பெரும்சலிப்பு
அடுத்த கட்டுரைசேவை மோசடிகள்