நீலி

நீலிக்கு மலேசிய ஓவியர் சந்துரு தந்த உருவம்
நீலிக்கு மலேசிய ஓவியர் சந்துரு தந்த உருவம்

அன்புள்ள ஜெயமோகன்

முகநூலில் இன்று இதனைக் கண்டேன் அதனை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்

“தான் கண்ட பெண்ணுக்கு தரைவரை நீண்ட கரிய கூந்தல் எனவும், பச்சை ஒளியூட்டும் கண்கள் எனவும், ரத்தமாக சிவந்த உதடுகள் கொண்டிருப்பதாகவும் அவள் கூறுகிறாள். வெட்டி வந்த காஞ்சிர மரத்தோடு அந்த வனநீலி ஒட்டி வந்துள்ளது என மாந்த்ரீகவாதி கண்டு பிடித்து சொல்கிறார்.

வனநீலியை விரட்ட மிகப்பெரிய சாந்தி பூஜை நடத்தப்படுகிறது. வெளியேறும் நீலியை கட்ட ருத்ரசாந்தி பூஜையும் நடத்தப்படுகிறது. வெட்டி வைத்த எருமைத் தலையில் வந்து நீலி அமர்ந்தாள். எருமையின் காதுகள் அசைந்தன. கண் விழிகள் விழித்து உருண்டன. நூற்றியெட்டு உயிர்பலி தந்து சாந்தி செய்யப்பட்ட பிறகு நீலி ஒரு பித்தளை ஆணியில் ஆவாஹனம் செய்யப்பட்டுக் காட்டில் புதிதாக முளைத்து வந்த காஞ்சிரம் மரத்தில் அறைந்து விட்டு வருகின்றனர்.’ (ஜெயமோகனின் காடு நாவலிருந்து)

யோகி என்னும் எழுத்தாளரின் கணவன் சந்துரு அவர் வரைந்தது இது

see the attachment

மௌனகுரு

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
அடுத்த கட்டுரைஒரு கலையின் வாழ்க்கைவரலாறு