ஸ்பிடி சமவெளி

1

நாளைக்காலை ஒன்பது மணி விமானத்தில் பெங்களூரிலிருந்து சண்டிகர் சென்று அங்கிருந்து காரில் இமாச்சலப்பிரதேசம் சென்று ஸ்பிடி சமவெளிக்கு ஒரு மலைப்பயணம் மேற்கொள்கிறோம். வழக்கமான கூட்டம்தான்.

ஸ்பிடி சமவெளிக்குச் செல்லலாம் என்று கண்டுபிடித்துச் சொன்னது கிருஷ்ணன். இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள இந்தப்பகுதி திபெத்திய பௌத்த மடாலயங்களுக்குப் புகழ்பெற்றது.

இச்சமவெளி கோடைகாலத்தில் மட்டுமே அணுகக்கூடியது. மேமாதம் திறந்திருக்கும் என்பதை உறுதிசெய்துகொண்டு கிளம்பினோம். ஆனால் மழைக்காலம் தொடங்கிவிட்டது. பிரச்சினை ஏதுமிருக்காதென நினைக்கிறேன்

ஸ்பிடி சமவெளி மலையுச்சியிலிருக்கும் ஒரு பெருந்தரிசு நிலம். ஸ்பிடி என்றால் இடைநிலம் என்று பொருள். இதை லடாக் போலவே இந்தியாவுக்குள் இருக்கும் இன்னொரு திபெத் என்று சொல்லமுடியும்

இன்றும் காலம் அசையாது கிடக்கும் இடங்கள் மலைப்பகுதிகளின் பௌத்தமடாலயங்கள்தான். இது அந்த ஆழத்திற்கு ஒரு முக்குளிப்பு

 

 

முந்தைய கட்டுரைபுலிக்கலைஞன், கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61