தினமலர் 38, அனைவருக்குமான ஆட்சி

 

Morarji_169164f

அன்புள்ள ஜெயமோகன்

அனைவருக்குமான ஆட்சி கட்டுரை வாசித்தேன்

கூட்டணி ஆட்சிக்கும் ஜனநாயகத்துக்கும் இடையே உள்ள உறவைப்பற்றிய இன்றைய கட்டுரைக்கருத்து முக்கியமனாது

உலகில் ஜனநாயகம் சிறந்த பல நாடுகளில் கூட்டணிகள்தான் ஆள்கின்றன

ஆனால் இங்கே கூட்டணிக்குழப்பங்கள் என்ற வார்த்தை வழியாக குழப்பமில்லா ஆட்சி என்றால் சர்வாதிகாரம்தான் என்று ஆக்கிவிட்டார்கள்

ஜெயராமன்

தனித்து நடப்பவர்கள் மீது எனக்கு பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை. காரணம்  அவர்களின் ஒற்றை இலக்கு. உங்களுடைய கட்டுரை சில மாற்றங்களை ஏற்படுத்தும் என தோன்றுகிறது.

அந்தக் குரல் ஜனநாயகத்தின் அடையாளமாகத்தான்.

தனிக்குரல்கள் இல்லாவிடின் சர்வாதிகாரம் ஜனநாயகத்தின் குரல்வளையை நெருக்கும் என்பது உறுதி.

தனிக்குரல்கள் பொதுக்குரலாக வலுப்பெறட்டும்.

நடராஜன்
S.Natarajan

முந்தைய கட்டுரைஇலக்கியத்தை எடுத்துச்செல்லுதல்….
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 34