«

»


Print this Post

தினமலர் – 2: தனிமனிதனின் அடையாளக்கொடி கடிதங்கள்


Tamil_News_large_1481446

 


ஜனநாயகம் என்பதும் தனிமனிதவாதம் என்பதும் ஒன்றுதான் என்று வாதம் செய்த கட்டுரை
 சிறப்பான ஒன்று. தனித்தனியாக சிந்தித்து ஓட்டு போட்டால் மட்டுமே ஜனநாயகம் சிறக்கும் என்பது உண்மைதான். சுருக்கமாகவும் அடர்த்தியாகவும் எழுதப்பட்ட ஒரு நல்ல கட்டுரை.

சாமி

***

முதல் தேர்தல் பற்றிய வரலாற்றுச்செய்திகளைச்சொல்லி அதன் வழியாக அடிப்படையான தகவல்களை உணர்த்திய கட்டுரை. தனிமனிதனே ஜனநாயகத்தின் அடிப்படை என்பதை சிந்தித்துப்பார்க்கையில் உண்மையாகவே தெரிகிறது

ராஜன் மகாதேவன்

***

ஆழமான கட்டுரை. ஆனால் சுருக்கமானது. அனைவரும் யோசிக்கவேண்டிய ஒரு கருத்து. மேலோட்டமாக மக்களை குறை சொல்வதை விட்டுவிட்டு ஜனநாயக வளர்ச்சிப்பாதையில் உள்ள முக்கியமான குறைபாடு ஒன்றைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.

நன்றி

செல்வராஜ்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/85961