அ.கா.பெருமாள் அறுபது

அ.கா.பெருமாள் அவர்களை எனக்கு இருபது வருடங்களாகத் தெரியும். நாட்டாரியல் அறிஞர். இலக்கிய வரலாற்றாசிரியர். வரலாற்றாசிரியர். சுந்தர ராமசாமியின் வீட்டில்தான் அவரை முதல்முறையாகச் சந்தித்தேன். அப்போது வெங்கட் சாமிநாதனின் யாத்ரா இதழை அவர்தான் பொறுப்பேற்று நடத்திக்கொண்டிருந்தார். சாமிநாதன் டெல்லியில் இருந்து எழுதி அனுப்புவார்.

அதன்பின் அ.கா.பெருமாள் அவர்கள் பல தளங்களில் தன் செயல்பாடுகளை விரித்து இன்று தமிழின் முக்கியமான அறிவுஜீவியாக இருக்கிறார். அவரது ‘தெய்வங்கள் முளைக்கும் நிலம்’ என்ற நூலுக்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன். அவர் தொகுத்த ‘முதலியார் ஆவணங்கள்’ என்ற நூலை அவர் எனக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

அ.கா.பெருமாள் அவர்களுக்கு இவ்வருடம் அறுபது வயது. சம்பிரதாயமான கொண்டாட்டங்கள் ஏதும் இல்லை. ஆனாலும் இத்தருணத்தில் அவரது பங்களிப்பை மதிப்பிடுத் தொகுத்துக் கொள்வதற்காக நான் ஒரு கருத்தரங்கை என் பொறுப்பில் ஏற்பாடு செய்திருக்கிறேன்.

இடம்; ஏ.பி.என் பிளாஸா, செட்டிகுளம் ஜங்ஷன், நாகர்கோயில்

நாள்: 30-11-08 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : மாலை ஆறு மணி

தலைமை:பொன்னீலன் [நாவலாசிரியர்]

அறிமுக உரை: பெர்னாட் சந்திரா [ தூய சவேரியார் கலைக்கல்லூரி பாளையங்கோட்டை]

ஆய்வுரைகள்

தோப்பில் முகமது மீரான் [நாவலாசிரியர்]

‘தென்குமரியின் கதை’

நாஞ்சில்நாடன் [நாவலாசிரியர்]

‘சுண்ணாம்பு கேட்ட இசக்கி”

ராமச்சந்திரன் [ தூய சவேரியார் கலைக்கல்லூரி பாளையங்கோட்டை]

‘திருவட்டார் ஆதிகேசவன் ஆலயம்’

எம். வேத சகாயகுமார் [விமரிசகர்]

‘முதலியார் ஆவனங்கள்’

அனைவரையும் அன்புடன் அழைக்கும்

எம் வேத சகாயகுமார்
ஜெயமோகன்

ராஜமார்த்தாண்டன் 60- விழா http://jeyamohan.in/?p=577
அறக்கோபமே என் எழுத்து-நீலபத்மநாபன் http://jeyamohan.in/?p=299

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு http://jeyamohan.in/?p=263
நாஞ்சில் 60 நிறைவு: நூல் வெளியீட்டுவிழா http://jeyamohan.in/?p=148

முந்தைய கட்டுரைதிரிச்சூரில்
அடுத்த கட்டுரைநகைச்சுவை : இன்னும் சில கடிதங்கள்