கணியான் ஒரு கடிதம்

அன்புள்ள எழுத்தாளருக்கு,

கூந்தப்பனை பற்றி தங்களின் இணையதளத்தில் படித்தேன். பிரமிப்பாகவே இருந்தது. அதில் வரும் தலைக்குடை அல்லது ஓலைக்குடை
பற்றி படித்தேன். இது குறித்து ஒரு பின்னூட்டம் இடுவதற்கு பெயர் பதிவு செய்தேன். பாஸ்வேர்டு இன்னும் வந்துசேரவில்லை.

தலைக்குடையை குமரிமாவட்டத்திலும் கேரளாவிலும் கணியான் சாதியினரே செய்துவந்தனர். இந்த சமூகத்தில் தலக்குடைகெட்டு கணியான் என்றும் அடையாளப்பட்டு வந்தனர். இதுதவிர பனையோலையில் பாய் அரிப்பெட்டி,கடவம் போன்றவைகளையும் செய்து வந்தனர்.சிலர் கோவில் பூசாரிகளாகவும் கணியான் கூத்து நடத்தும் ஆட்டக்கலைஞர்களாகவும் இடம் பெயர்ந்து வாழும் இந்த இன மக்களை அரசு கணியான் என்று நம்ப மறுக்கிறது.

தங்களது ஒரு கட்டுரையில் கணியான் சங்கரன் வந்து சொல்லி எங்களூரில் பரவலாக நம்பப்பட்டது என்று எழுதியிருந்தீர்கள். குமரிமாவட்டத்தில் வாழும்
இந்த சமூகம் குறித்து ஏதேனும் தகவல் எழுத முடியுமா?

ஐரேனிபுரம் பால்ராசய்யா

கூந்தப்பனை http://www.jeyamohan.in/?p=6063

அனைத்தும் http://www.jeyamohan.in/?s=%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+&x=50&y=10

முந்தைய கட்டுரைஜெயமோகனுடன் மூன்றாவது நாள்
அடுத்த கட்டுரைபினாங்கில் நான்காம்நாள்..