தமிழ் எழுத்துக்கள்:கடிதங்கள்

உங்கள் ‘க’ வரிசை அபாரம்!

எனக்கு தோன்றியவை
கூ – அரிவாள் மனைக்கு பக்கத்தில் கோழி
கெ – பக்க வாட்டில் நிற்கும் யானையுடன் நிற்கும் பெட்டைக் கோழி
கே – தொலை பேசி உபயோகிக்கும் பெட்டைக்கோழி
கை – பன்றியும் கோழியும்
கொ – பக்கவாட்டு யானை, பெட்டைகோழி, அதன் குஞ்சு.
கோ – தொலை பேசியுடன் பெட்டைக்கோழி, அதன் குஞ்சு
கோ-கோ – தொலை பேசியில் உரையாடும் இரண்டு கோழி குடும்பங்கள்
கௌ – பக்கவாட்டு யானை, பெட்டை கோழி, கட்டெறும்பு
கஃ – பவர் பாயிண்ட் அருகே கோழி

ச – கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் நபர்
சா – கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் நபர் – அருகே நிற்கும் சிறுவன்
சி – கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் பெண் – கூந்தலை முன்னே கொணர்ந்து – அல்லது மாலையில் அமர்ந்து தலை வாரிகொண்டிருக்கும் பெண்.
சீ – கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் பெண் – கூந்தலை கொண்டையிட்டு – அல்லது – அமர்ந்திருக்கும் ஆண்டாள் –

மறப்பதற்கு முன்.. – வடமொழி எழுத்துக்கள்
ஜ  – monarch butterfly
ஷ – அரிவாள் மனையின் குறுக்கே கரண்டி – (அடுக்களைக்கு இதை உபயோகிக்கலாமே! )
ஸ – தப்பி ஓடும் செவியான்
ஹ – கரண்டி தாங்கியின் முனையில் அரிவாள் மனை
க்ஷ – கோழி, அரிவாள்மனை, குறுக்கே கரண்டி – நான் சைவமாக இருந்தாலும் தோன்றும் பிம்பம் – கோழி சமைத்து பரிமாறுகிறார்கள்.

மனதில் உள்ள excitement ஐ கட்டு படுத்த முடியவில்லை..

அன்புடன் முரளி

முந்தைய கட்டுரைஊமைச்செந்நாய்:மேலும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிரிச்சூரில்