கபாடபுரம் மின்னிதழ்

கே.என்.செந்தில்
கே.என்.செந்தில்

எழுத்தாளர் கே.என்.செந்தில் ஆசிரியத்துவத்தில் வெளிவந்துள்ள கபாடபுரம் இலக்கிய இணைய இதழ் ஏற்கனவே வந்துகொண்டிருக்கும் அச்சுச் சிற்றிதழ்களின் இணைய வடிவமாக உள்ளது. அறியப்பட்ட பல பெயர்கள். பலரையும் அணுகி படைப்புகளைப் பெற்று தயாரித்திருப்பதில் உள்ள உழைப்பும் இணையப்பக்கத்தின் எளிமையான வடிவமைப்பும் பாராட்டத்தக்கவை

எஸ்.செந்தில்குமார்
எஸ்.செந்தில்குமார்

இவ்விதழின் முக்கியமான அம்சம் எஸ்.செந்தில்குமாரின் நெடுங்கதை அனார்க்கலியின் காதலர்கள். அவரது கதைகளுக்குரிய அடித்தள வாழ்க்கையின் நேரடித்தன்மையும் , சுருக்கமான புறவயச்சித்தரிப்பு வழியாக அளிக்கப்படும் நுண்ணிய அகச்சித்திரங்களும் கொண்ட இப்படைப்பு சமீபத்தில் நான் வாசித்த ஒரு நல்ல ஆக்கம்.

கவிதைகளில் ஸ்ரீநேசனின் ஓரிலைச்சருகு மிகவும் கவர்ந்தது. அதன் சொல்தேர்வும் சரளமும் இதழை மூடிவைத்த பின்னரும் தொடர்ந்தன.

இன்னும் சில நிமிடங்களில்
சிறு காற்றுக்கும் புரளும் ஒரு இலைச் சருகென
நான்

என்னும் வரியே இவ்விதழின் சாரமாக என் நினைவில் எஞ்சியது. சுகுமாரன், எம்.கோபாலகிருஷ்ணன் கட்டுரைகள், பஷீர் [மலையாளம்] கோபிநாதராவ்[ கன்னடம்] என மொழியாக்கங்கள் ஆகியவை அடங்கிய முக்கியமான இலக்கியத்தொகுதி இது

முந்தைய கட்டுரைஓர் எளிய கூழாங்கல்
அடுத்த கட்டுரைமதங்கள்- கடிதங்கள்