«

»


Print this Post

இஸ்ரோ


இந்திய விண்வெளி ஆராய்ச்சிகளைப்பற்றி எப்போதுமே நம் ஊடகங்கள் முட்டாள்தனமான கிண்டல்களைத்தான் செய்து வந்துள்ளன. குறிப்பாக அப்துல் கலாம் அவர்களின் மறைவை ஒட்டி எழுதப்பட்ட அசட்டு ஃபேஸ்புக் குறிப்புகளை உலகில் வேறெந்த நாட்டிலாவது படித்தவர்கள் எழுதியிருப்பார்களா என்றே ஐயம்தான். அறிவியலுக்கு எதிராக அசடுகள் ஒருங்கிணைந்துள்ள சூழல் இது

ஒத்திசைவு ராமசாமி அவரும் ஓர் அறிவியலாளர் என்னும் நிலையில் இஸ்ரோ பற்றி எழுதியிருக்கும் இக்கட்டுரை முக்கியமானது. நம் அற்பத்தனத்தை தெளிவாக சுட்டிக்காட்டி இஸ்ரோவின் சாதனைகளை விளக்குகிறது இது

ராமசாமி எந்த அளவுக்கு அறிவியலாளரை அறிவாரோ அதைவிட அணுக்கமாக நான் இதழியலாளர்களை அறிவேன். மிகச்சில ஊடகவியலாளர்களைத் தவிர பெரும்பாலானவர்கள் எந்த வாசிப்பும், நுண்ணுணர்வும் இல்லாத தற்குறிகள். ஒரு நூறுபக்க நூலை -சேதன் பகத் நாவலாகவே இருக்கலாம்- வாசித்து முடிக்கக்கூடிய தகுதிகொண்ட இதழாளர்கள் ஐந்துசதவீதம்பேர் கூட இருக்கமாட்டார்கள். ஆனால் ராக்கெட் முதல் ராஜ்யசபா விவாதம் வரை இவர்கள்தான் கருத்துக்களை எழுதி உருவாக்குகிறார்கள்.

இணையம் என்பது இந்த அசட்டு இதழாளர்களைக் கடந்துசென்று சிந்திப்பதற்கான ஒரு வழி. ஆனால் நாம் மீண்டும் அந்த இதழியல்குப்பைகளையே இணையத்திலும் விவாதிக்கிறோம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: http://www.jeyamohan.in/78239