«

»


Print this Post

சீன அங்காடித்தெரு


உலகுக்கெல்லாம் லாப்டாப்பும், ஐஃபோனும் செய்து தரும் ஃபாக்ஸ்காம் என்ற சீன நிறுவனத்தின் ஊழியர்கள் அடிமைக் கொடுமை தாங்காமல் வரிசையாக மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழ் நாட்டு ஜவுளிக் கடையில் நடப்பதை வெளியில் சொல்ல ஒரு அங்காடித் தெரு எடுக்கவாவது நமக்கு உரிமை இருக்கிறது ஆனால் தொழிலாளர்களின் சொர்க்க பூமியான சீனாவிலோ அதற்கும் வழியில்லை. இதெல்லாம் நம் காம்ரேடுகள் படிக்கிறார்களா?

http://www.usatoday.com/money/world/2010-05-26-foxconnsuicides_N.htm

அன்புடன்
ராஜன்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/7265

2 comments

  1. ramji_yahoo

    பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள்.

    நம் மாநிலத்திலும் காம்ரேடுகள் வீடுகளிலும் வியாபார நிறுவங்களிலும் தங்கள் சென்று பார்த்தல் தெரியும்., டோளிளர்கள் நிலை எப்படி என்று.,

  2. vks

    சீனா தன் பாதையில் இருந்து விலகி கவர்ச்சிகரமான முதலாளித்துவத்தை மெது மெதுவாக உள்வாங்குவதன் விளைவுதான் இது. நமது விவசாயிகள் எலிக்கறியும், கஞ்சித்தொட்டியும் கிடைக்காமல் தற்கொலை செய்வதை என்ன சொல்லப் போகின்றோம்? கோட்பாட்டளவில் பார்த்தாலும் கூட அனைவருக்கும் அடிப்படை வசதி வேண்டும் என்பதை முதலாளித்துவம் பேச்சளவிற்கு தானும் சொன்னதுண்டா? பத்தோ நுறோ சீனர்கள் தற்கொலை செய்வதை தம்பட்டம் அடிக்கும் நாங்கள், ஆயிரக்கணக்கான விவசாயிகள் கோவணத்துன்டுடன் எலிக்கறியும் கிடைக்காமல் தற்கொலை செய்வதை மற்றவர்கள் எழுதினால் நமது நிலை என்ன?

Comments have been disabled.