ராய் கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

நேற்று (வியாழன்) மாலை ராய் மாக்ஸ்ஹாம் அவர்களை நண்பர் சிறிலின் இல்லத்தில் சந்தித்தேன்.

உப்பு வேலி நூல் பற்றிய உங்கள் கட்டுரையின் தூண்டுதலில்தான் நான் அதை வாங்கி வாசித்தேன். அந்த நூலின் உந்துதலில் “Outlaw – India’s Bandit Queen and Me” வாங்கி வாசித்தேன், அப்போது அவரது தனி ஆளுமை மீதே எனக்கு மிக பெரிய ஈர்ப்பும் மரியாதையும் ஏற்பட்டது அவரை பாராட்டி ஒரு மின்னஞ்சலாவது அனுப்பலாமென்று எண்ணியிருந்தேன், அவரது முகவரி கிட்டவில்லை. இந்நிலையில் அவரை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.

உப்பு வேலி நூல் தமிழில் வெளிவருவதை அறிந்தேன், நண்பர் சிறிலுக்கு பாராட்டுகளை தெரிவித்தேன். அவசியமான முயற்சி.

என்னை பொறுத்தவரை உப்பு வேலி நூலுக்காக ராய் மாக்ஸ்ஹாம் அவர்களை இந்திய அரசு மரியாதை செய்திருக்கலாம் (கொஞ்சம் அதீதமாக தெரிந்தாலும்!), நீங்கள் செய்வது நிறைவளிக்கிறது, உங்களுக்கு எனது நன்றிகள்.

அன்புடன்

முகம்மது இப்ராகீம்

முந்தைய கட்டுரைபங்குச்சந்தை- கடிதம்
அடுத்த கட்டுரைராய் மாக்ஸம் மற்றும் சிறையிடப்பட்ட கல்லறைகள் – செந்தில்குமார் தேவன்