மின்தமிழ் பேட்டி-கடிதம்

தமிழ் மின் இதழில் உங்களின் பேட்டியை மட்டுமே படித்தேன், மிச்சத்தை அடுத்த இதழ் வருவதற்குள் முடித்துவிடுவேன் என நினைக்கிறேன்.

நீங்கள் கொடுத்த மிக அருமையான பேட்டி அது. கேள்விகளும் உங்களின் , உங்கள் செயல்பாட்டின் அத்தனை தளங்களையும், குடும்பத்தையும், வாசிப்பையும் சேர்த்து அருமையாக வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.

பொன்னியின் செல்வனுடன் ஏன் விஷ்ணுபுரத்தை ஒப்பிடக்கூடாது என்பதற்கான விளக்கம் அருமை. மிக நாகரிகமாக பதில் சொல்லி இருந்தீர்கள்.

அசோகவனம் பற்றிய பேச்சும், அது நீங்கள் நினைத்தால் மூன்று மாதத்தில் முடியும் தருவாயில் உள்ளதாகவும் சொன்னது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. மிக தீவிரமாக அது எப்போது வெளியாகும் என தொடர்ந்து உங்களை சாட்டிலும், மெயிலிலும் கேட்டுக்கொண்டிருந்தவன் நான். திடீரென ஒருநாள் ஆளுயர புத்தகப்படம் போட்டு அசோகவனம் புத்தகத்தை பகடி செய்து வந்த பதிவைப்பார்த்ததும், இவர் சொல்லிக்கொண்டிருக்கும் அசோகவனம் என்ற புத்தகமே ஒரு புனைவோ என நினைத்துக்கொண்டேன். :)

பேட்டியை மீண்டும் இன்னொருமுறை படிக்க வேண்டும்.

ஜெயக்குமார்

தமிழ் மின்னிதழ்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 56
அடுத்த கட்டுரைஇலையப்பம்