«

»


Print this Post

அங்காடித்தெரு வருகிறது


 மார்ச் 26 வெள்ளிக்கிழமை அங்காடித்தெரு வெளியாகிறது. படம் முழுமையாக தயாராகி ஒன்பது மாதம் தாண்டிவிட்டிருக்கிறது. சில வினோகச்சிக்கல்களுக்குப் பின்னர் இப்போது வெளியாகிறது. மார்ச் மாதம் பொதுவாக படங்கள் வெளியாகச் சிறந்த மாதம் என்று சொல்வதுண்டு. ஆனால் அந்தமாதிரியான கணக்குகளுக்கும் நல்ல படங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்றும் சொல்வார்கள். பெரும் வெற்றி பெற்ற பல சிறு படங்கள் ‘தப்பான’ நேரத்தில் வெளிவந்தவை.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், தேர்வுகள் முடியாமை ஆகியவற்றைச் சிலர் சுட்டிக்காட்டினார்கள். ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் தமிழ் சினிமாவை பாதிக்கவேயில்லை என்றுதான் கேள்வி. சென்னையில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ நிறைந்த அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது என்றார்கள். கட்டகடைசியில் படம் சுவாரசியமாக இருக்கிறதா என்பதே கேள்வி.

அங்காடித்தெரு எப்படி என்பதை இனிமேல் ரசிகர்கள்தான் சொல்லவேண்டும். உண்மையான வாழ்க்கையின் தீவிரமான பின்புலத்தில் சொல்லப்பட்ட உணர்ச்சிகரமான காதல்கதை. வசந்தபாலன் வெயில் படத்தின் வெற்றிக்கும் சரவதேச கவனத்திற்கும் பின்பு இப்போதுதான் மீண்டும் அரங்குக்கு வருகிறார். வெயில் சற்றே பரந்த கதைக்களம் கொண்டது. அங்காடித்தெரு கூரிய திரைக்கதையுடன் நேராகச்செல்லும் படம்.

எதிர்பார்ப்புகளுடன் இன்னமும் ஆறுநாட்கள் காத்திருக்க வேண்டியதுதான்

டிரெயிலர்

http://www.youtube.com/watch?v=UdlTz_C2CxY 

http://www.youtube.com/watch?v=snZjsVaif0k 

தொடர்புள்ள பழைய கட்டுரைகள்

http://www.jeyamohan.in/?p=631

http://www.jeyamohan.in/?p=625

http://www.jeyamohan.in/?p=624

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/6812

4 comments

Skip to comment form

  1. tprabakaran

    சேது போன்ற தரமான படங்களும் நீண்ட காத்திருப்புக்குப் பின்னே வெளியாகி பெருவெற்றி கண்டன. தேதி முக்கியமன்று சேதிதான் முக்கியம். வசந்தபாலனுக்கு வாழ்த்துக்கள்.

  2. ramji_yahoo

    இன்னமும் காதல் படங்கள் தமிழ் திரை உலகிற்கு தேவையா.

  3. பிரேம் குமார்

    ராம்ஜிக்கு ரொம்ப வயசாயிடுச்சுன்னு நினைக்கிறேன்.

  4. Vijayashankar

    இது ஒரு காதல் படங்கள் சீசன். அந்த காலத்தில் பாரதிராஜா தான் ஹிந்து கிறிஸ்டியன் காதலை வித்தியாசமாக காட்டினார் ( அவ்வளவு எதிர்ப்பா? சில நண்பர்கள் இந்த மத காம்பிநேசனில் காதல் திருமணம் செய்து நன்றாக வாழ்கிறார்கள்! ) மேலும் கல்லூரிகள் விடுமுறை காலம். நல்ல மெச்செஜ், உணர்வுப்பூர்வமான படங்கள், எக்காலத்திலும் வெற்றி பெரும்! பள்ளி காலத்தில் டிராமா போட்ட ( நடிப்பு மற்றும் டைரக்சன் ) அனுபவம் – மெச்செஜ் இருந்தால் தான் எடுபடும்! கேளிக்கை என்ற கோட்பாட்டில், வெற்றி பெற சில காம்ப்ரமைஸ்கள் செய்து ( குத்துபாட்டு, சண்டைகள், தேவை இல்லாத காமடி ) படம் வெற்றி பெற செய்வதை விட, வெய்யில் போன்ற படங்கள் வெற்றி பெறுவது ( நாடோடிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்… ) காலத்தின் கட்டாயம்! அங்காடி தெரு ஒரு வித்தியாசமான படைப்பாக இருக்கும், நிச்சயம்..,,, ஸ்ட்ராங் கூட்டணி – வசந்த பாலன் மற்றும் ஜெயமோகன் ( நான் கடவுள் பற்றி இன்றும் எகனாமி டைம்ஸில் சிலாகித்து எழுதியிருக்கிறார்கள்… ). ட்ரெயிலர் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

Comments have been disabled.