ஆசிரியர்கள்

கதிர் என்ற வலைப்பதிவரின் வலைப்பதிவில் இந்நீளமைக்கால அனுபவத்தைப் பார்த்தேன். அவர் பிளஸ் டூ படிக்கும்காலத்தில் எந்த வித ஊதியமோ எதிர்பார்ப்போ இல்லாமல் மாணவர் நலனை மட்டுமே நாடி சிறப்பு வகுப்புகள் எடுத்த ஓர் ஆசிரியரைப் பற்றியது இந்தக் குறிப்பு. இத்தகைய ஆசிரியர்களைப் பற்றி நானும் அறிவேன். முன்னர் ஒரு பதிலில் இந்த விஷயம் குறித்து எழுதியிருந்தேன் [ http://www.jeyamohan.in/?p=68  அரசியல்வாதிகள், சாமியார்கள், ஆசிரியர்கள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? இன்றைய அரசியலில் தங்களைக் கவர்ந்தவர் யார்?]

இன்றைய நம் செய்திப்பரவல் முறையில் அடிப்படையில்  ஒரு பிழை உள்ளது. நாம் எச்சரிக்கை மிக்க சமூகமாக ஆகிவிட்டிருக்கிறோம். எப்போதுமே ஐயப்படுகிறோம், அச்சக் கொள்கிறோம். ஆகவே செய்திகள் அனைத்துமே எதிர்மறையானவை. செய்தி என்றாலே கெட்டசெய்திதான். தொலைக்காட்சியில் பிரேக்கிங் நியூஸ் என்று ஒரு நல்ல செய்தியை கற்பனைசெய்து பாருங்கள்

இந்த அலையில் என்ன ஆகிறதென்றால் நல்ல விஷயங்கள் மறைந்துவிடுகின்றன. இன்னமும் இங்கே அர்ப்பணிப்பு சேவை தியாகம் போன்ற பல விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சொல்லப்போனால் நாம் ஒவ்வொருவரும் வேறு யாருடையவோ கொடையைத்தான் நம் வாழ்வாக அறிவாக எடுத்துக்கொண்டு வளர்ந்திருக்கிறோம். ஆனால் அவை குறித்து பேசப்படுவதில்லை

இந்தப்பதிவை மீண்டும் சிலமுறை வாசித்தேன். வர்ணனை விவரணை ஏதுமில்லாத நேரடியான எளிமையான பதிவு.

http://arivhedeivam.blogspot.com/2010/03/blog-post_06.html

முந்தைய கட்டுரைவிவாதங்களின் எல்லை…
அடுத்த கட்டுரைகாமன் வுமன்