«

»


Print this Post

சிற்பக்கலைக்கு ஒரு சமாதி


அன்புள்ள ஜெயமோகன்

கீழ்க்கண்ட செய்தியைப் படித்தீர்களா? ஏற்கனவே தமிழ் நாடு முழுவதும் உள்ள சிற்பங்களை, கோவில்களை, ஓவியங்களை, குடைவரைக் கோவில்களை, மண்டபங்களை, ஆதிச்சநல்லூர் போன்ற அகழ்வாராய்ச்சி இடங்களை எல்லாம் பாதுகாத்து உரிய மதிப்பு அளித்து வைக்க வக்கில்லாதவர்கள், அக்கறையில்லாதவர்கள் இந்த மலையைக் குறி வைத்துக் குடையத் திட்டம் போடும் நோக்கத்தை உணர யாருக்கும் அதிக நேரம் பிடிக்காது.

சிற்பக் கலை ம்யூசியம் வைக்கிறேன் பேர்வழி என்று மலையை உடைத்து கிரானட்டைக் கொள்ளையடிக்கப் போடும் ஒரு மறைமுகத் திட்டமாகவே தெரிகிறது. அப்படி ஒன்றும் இவர்கள் ஏதும் புதிதாக சிற்பக் கலைக்கு அருங்காட்சியகம் வைத்துத் தொலைக்க வேண்டாம். அழிவில் இருக்கும் ஆயிரக்கணக்கான தொன்மையான இடங்களை எல்லாம் அழிவில் இருந்து பாதுகாத்தாலே போதுமானது.

அப்படியே ஒரு அருங்காட்சியகம் வைக்க வேண்டும் என்றால் அதற்கு இந்த ஆனை மலையைக் குடைந்துதானா வைக்க வேண்டும்? அதே மதுரையில் உள்ள புது மண்டபத்தை உருப்படியாக பாதுகாத்து வைக்கத் துப்பில்லாதவர்கள்தானா இந்த மலையைக் குடைந்து புதிதாக சிற்பக் கலையை முன்னேற்றப் போகிறார்கள்? முதலில் கப்பல் விட அகலப் படுத்துகிறோம் என்று பவளப் பாறைகளை இடித்து நாசமாக்கக் கிளம்பினார்கள். அங்கு கடல் மண்ணை அள்ளக் காசு, இங்கு மலையைக் குடையப் போகிறோம் என்று சொல்லி கிரானைட் கற்களுக்காக பாறைகளை வெட்டி எடுக்க இப்படி ஒரு பம்மாத்து.

ஏற்கனவே குடுமியான் மலை, நார்த்தாமலை பகுதிகளில் உள்ள மலைகள் எல்லாமே வெடி வைத்து காலியாகிக் கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டிலும் கடலும், நதியும், மலையும், காடுகளும் போற்றிப் பாதுகாக்கப் படுகின்றன. காடுகளில் இருந்தும் மலைகளில் இருந்தும் ஒரு சின்ன கல், மண் தூசு கூட யாரையும் எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. நமக்கு மட்டும் ஏன் இந்த சாபக்கேடு? ஆயிரக்கணக்கான வருடப் பாரம்பரியம் உள்ள இந்த மலைகளை அழிக்கும் உரிமையை யார் இவர்களுக்குக் கொடுத்தது? இந்த மலைக் குகைகளில்தானே இவர்கள் இன்று பிழைப்புக்காகப் பயன் படுத்தப் படும் தமிழ் வளர்ந்தது? இந்தக் குகைகளும் கல்வெட்டுக்களும் இல்லாமல் போனால் செம்மொழி ஏது?

ஏற்கனவே தமிழ் நாட்டு நதிகளைச் சாக்கடைகளாக மாற்றியாயிற்று, காடுகளை மொட்டை அடித்தாகி விட்டது, கோவில் நிலங்கள் சொத்துக்களை எல்லாம் கொள்ளையடித்து முடித்தாயிற்று, இப்பொழுது இது போன்ற மலைகளின் மீது கண் வைத்திருக்கிறார்கள்.  இவர்கள் புதிதாக எதையும் செய்ய வேண்டாம் இருக்கும் இடங்களை அழித்துக் கொள்ளையடிக்காமல் இருந்தாலே புண்ணியமாகப் போகும். இப்படி கடல், மலை, காடு என்று கொள்ளையடித்துக் கொண்டு போக ஒரு அளவேயில்லையா? இந்த மலை மீது ஒரு சிலுவையோ ஒரு தர்காவோ இருந்திருக்குமானால் இப்படி கை வைக்க கனவில் கூட துணிந்திருந்திருப்பார்களா? சமணர் குகைகளையும், நரசிங்கர் கோவிலையும் அழித்தால் கேள்வி கேட்க்க நாதியில்லை என்ற நினைப்புத்தானே?

அருகில் உள்ள அழகர் கோவிலில் உள்ள மண்டபங்களும், வாயில் தோரணங்களும் அசிங்கப் படுத்தப் பட்டு இடிந்து அழிந்து கொண்டிருக்கிறது. அதை மீட்டெடுத்துக் கட்ட யாருக்கும் அக்கறையில்லை,  மண்டபம் இடிந்து விழும் நிலையில் உள்ளது யாரும் உள்ளே போகாதீர்கள் என்று  பலகை வைக்கிறார்கள் வெட்கம் கெட்ட பிறவிகள். கோவில் வருமானம் மட்டும் வேண்டும் மண்டபங்கள் இடிந்து போக வேண்டும் இவர்களுக்கு. அழகர் கோவிலை இவர்கள் வைத்திருக்கும் அழகினை இந்தப் படத்தில் பாருங்கள் http://picasaweb.google.com/strajan123/AzhagarKovil#

அருகில் உள்ள அழகர் கோவில் மண்டபங்களை இடிய விட்டு  விட்டு ஆனை மலையில் புதிதாகக் குடையக் கிளம்பி விட்டார்கள். நாகமலை கீழக்குயில் குடியில் உள்ள சமணர் மலையில் இருக்கும் சிற்பங்களைப் http://picasaweb.google.com/strajan123/SAMANARHILLS# பேண வழியில்லாதவர்களுக்கு, சித்தன்னவாசலை சிறப்பாக வைத்துக் கொள்ளத் தெரியாதவர்களுக்குப் புதிதாகச் சிற்பக் கூடம் என்ன வேண்டிக் கிடக்கிறது?  முதலில் இடிந்து கிடக்கும் அழகர் கோவில் மண்டபங்களை நேராக்கட்டும், புது மண்டபத்தை மீட்டெடுக்கட்டும், பிற சமணர் குகைகளைப் பத்திரமாகப் பாதுகாக்கட்டும் அப்புறம் சிற்பக் கலைக்கு இடம் தேடலாம் இவர்கள்.

அன்புடன்
ராஜன்

அன்புள்ள ராஜன்

நான் தஞை தமிழ்பல்கலைக்கு ஒருமுறை சென்றிருந்தேன். ஏராளமான கட்டிடங்கள் பாழடைந்து கிடந்தன. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் நடமாட்ட்மே இல்லை. ஆனால் இன்னொரு இடத்தில் கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்தது. புதிய கட்டிடம் கட்டுகிறார்கள். கட்டுமானம் இல்லையேல் ஊழல் இல்லை. எல்லா அரசு கட்டுமானஙளும் 60 சதம் வரை ஊழலால் அமைக்கப்படுகின்றன என்பதே நடைமுறை உண்மை.

மெரினாவிலும் கன்யாகுமரியிலும் குப்பை அள்ள ஆள் இல்லை. ஆனால் வருடம் தோறும் கோடிகளை கொட்டி கட்ட்டுமானங்களை எழுப்புகிறார்கள். நூலகங்கள் அழிகின்றன. ஏரிகள் அழிகின்றன. நதிகள் அழிகின்றன. ஆனால் சிமிட்டி பூதங்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன

இத்தகைய மோசடிகளுக்கு எதிராக முதலில் படித்த, விஷயமறிந்த வட்டத்தில் இருந்தாவது எதிர்ப்பு கிளம்ப வேண்டும். அதுவும் இங்கே நடப்பதில்லை. ஒவ்வொரு கட்டுமானமும் தமிழையும் பண்பாடையும் வளர்க்கிறதென நம்பும் கூட்டமே நம்மி அதிகம்

குறைந்தபட்சம் நீதிமன்றம் செல்லவாவது ஓர் அமைப்பை உருவாக்கியாகவேண்டும் இங்கே. இல்லையேல் எதுவுமே எஞ்சாது என்பதே உண்மை நிலை

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/6582

8 comments

Skip to comment form

  1. ganesan

    அன்புள்ள ஜெயமோகன்,
    யானைமலையை குடையும் திட்டம் அதில் “கிடைக்கும் கற்கள் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் கொடுக்கும்” என்ற ஒப்புதலுடனே அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்தை முன் வைத்தது ஒரு குழு கூட அல்ல, தனி நபர். யானை மலையை சுற்றியுள்ள இருபதாயிரம் குடும்பங்கள் எங்கே போகும் என்ற கேள்விக்கு அவரது பதில் “வைகை அணை கட்டியபோது இப்படித்தான் பல குடும்பங்கள் அழிந்தன. பெரிய திட்டம் என்றல் இது மாதிரி அழிவுகள் இருக்கத்தான் செய்யும். முட்டாள்தனமாக எதிர்க்கக்கூடாது”.

    ஆக இவர்கள் சொல்லுவது – கோடிக்கணக்கில் பணம் கிடைத்தால், ஒரு தனி நபர் சொல்லுவதைக் கேட்டு, இருபதாயிரம் குடும்பங்களை அழித்து, பெருமாள் கோவில், சமணர் கோவிலை அழித்து, பாரம்பரிய மலையை தகர்ப்போம்.

    ****************Edited *****************

    . தொலைக்காட்சி, சினிமா என்று எதிலும் பணத்தை பார்க்கும் அந்த business magnet இதிலும் பணத்தை பார்த்துவிட்டார் என்கிறார்கள்.

    இதில் ஒரு நல்ல விஷயம் மக்கள் ஒற்றுமை. உடனடியாக யானைமலை பாதுகாப்புக்குழு என்று ஏற்படுத்தி, பல வழிகளிலும் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள். அப்பகுதி மக்களுக்கு அம்மலை தெய்வம். மலையான் என்று குழந்தைகளுக்கு பெயர் வைப்பார்கள். கடைகளில் யானைமலையின் புகைப்படத்தை காலையில் வழிபட்டு, வியாபாரத்தை ஆரம்பிப்பது வழக்கம்.

    திரு. இறையன்பு அவர்கள் இத்திட்டம் ஒரு தனி நபர் ஆலோசனை மட்டுமே, மக்கள் பயப்பட வேண்டாம் என சொல்லியிருக்கிறார்.

    பார்ப்போம்.

    – கணேசன்

  2. Arangasamy.K.V

    ganesan commend …

    [email protected]

    117.201.37.232 Submitted on 2010/02/19 at 8:13am

    அன்புள்ள ஜெயமோகன்,
    யானைமலையை குடையும் திட்டம் அதில் “கிடைக்கும் கற்கள் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் கொடுக்கும்” என்ற ஒப்புதலுடனே அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்தை முன் வைத்தது ஒரு குழு கூட அல்ல, தனி நபர். யானை மலையை சுற்றியுள்ள இருபதாயிரம் குடும்பங்கள் எங்கே போகும் என்ற கேள்விக்கு அவரது பதில் “வைகை அணை கட்டியபோது இப்படித்தான் பல குடும்பங்கள் அழிந்தன. பெரிய திட்டம் என்றல் இது மாதிரி அழிவுகள் இருக்கத்தான் செய்யும். முட்டாள்தனமாக எதிர்க்கக்கூடாது”.

    ஆக இவர்கள் சொல்லுவது – கோடிக்கணக்கில் பணம் கிடைத்தால், ஒரு தனி நபர் சொல்லுவதைக் கேட்டு, இருபதாயிரம் குடும்பங்களை அழித்து, பெருமாள் கோவில், சமணர் கோவிலை அழித்து, பாரம்பரிய மலையை தகர்ப்போம். காமவெறியில் தாயை புணர நினைப்பவனுக்கும் இந்தக் காசு வெறியர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

    (
    இதில் ஒரு நல்ல விஷயம் மக்கள் ஒற்றுமை. உடனடியாக யானைமலை பாதுகாப்புக்குழு என்று ஏற்படுத்தி, பல வழிகளிலும் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள். அப்பகுதி மக்களுக்கு அம்மலை தெய்வம். மலையான் என்று குழந்தைகளுக்கு பெயர் வைப்பார்கள். கடைகளில் யானைமலையின் புகைப்படத்தை காலையில் வழிபட்டு, வியாபாரத்தை ஆரம்பிப்பது வழக்கம்.

    திரு. இறையன்பு அவர்கள் இத்திட்டம் ஒரு தனி நபர் ஆலோசனை மட்டுமே, மக்கள் பயப்பட வேண்டாம் என சொல்லியிருக்கிறார்.

    பார்ப்போம்.

    – கணேசன்

  3. writerlaram

    அன்புள்ள ஜெ,

    நண்பர் ராஜன் ரௌத்திரத்துடன் பொங்கியிருப்பதில் உண்மை தான் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது. இந்தியாவின் புராதன பொக்கிஷங்கள ஆராதனை செய்யத் துப்பில்லாவிட்டாலும் இவர்கள் அழித்து ஒழிக்காமல் இருந்தாலே போதுமானது.

    வடக்கேயும் இதற்குச் சற்றும் குறைவில்லாத கலாசார சீரழிவுக் கொடுமைகளை சென்ற வருடம் நான் கண்டேன்.

    மலையையும் குகையையும் அழிக்க முற்படவில்லையே தவிர,
    அஜந்தாவிலும் எல்லோராவிலும் பள்ளிக் குழந்தைகளை எக்சிபிஷன் மாதிரி கூட்டம் கூட்டமாக அழைத்து வந்து காட்டுகிறார்கள். அங்கே ‘ஹோ’வென்ற கூச்சலுடன் இந்தக் குழந்தைகள் அடிக்கும் கூத்து சொல்லி மாளாது. கன்னாபின்னாவென்று எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் பிக்னிக் மாதிரி அவர்கள் அங்கே கூத்தடிப்பதும், கூச்சலிடுவதும், குப்பைகள் போடுவதும், ஆசிரியர்கள் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பதும் பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது. அந்தக் கொடுமைகளை எல்லாம் பார்த்தாலே நம் கண்ணில் ரத்தம் வந்து விடும்.

    ஆனால், லாஸ் ஏஞ்ஜல்ஸை ஒட்டியுள்ள கடற்கரை ஓரங்களிலும், சதுப்பு நிலக் காடுகளிலும், மலைகளிலும், காடுகளிலும்- அங்கெல்லாம் எந்தவிதமான பாரம்பரிய வரலாற்று சின்னங்கள் இல்லாதபோதிலும் -எந்த தனியாரும் கை வைக்க அனுமதி கிடையாது.

    இந்தியாவுக்கு வெளி எதிரிகளே தேவை இல்லை. இந்தியர்களே அதை அழகாகச் செய்து முடித்து விடுவார்கள்.

  4. perumal

    //////நமக்கு மட்டும் ஏன் இந்த சாபக்கேடு? ஆயிரக்கணக்கான வருடப் பாரம்பரியம் உள்ள இந்த மலைகளை அழிக்கும் உரிமையை யார் இவர்களுக்குக் கொடுத்தது?///////

    என்னங்க சார் இவ்வளவு அப்புராணியா கேக்குறீங்க? வேறு யார் உரிமையை கொடுத்தாங்க? எல்லாம் நம்ம நாட்டு மாக்கள் மன்னிக்கவும் மக்கள்தான். காச வாங்கிக்கிட்டு ஓட்ட வித்த்துப்புட்டாங்களே! அந்த மலையை சுற்றியுள்ள மக்கள் மனசாட்ச்சிய தொட்டு சொல்ல சொல்லுங்க காசு வாங்கிக்கிட்டு ஒட்டு போடலின்னு.
    அப்புறம் எதுக்கு எதுக்குராங்க?

  5. kuppan_yahoo

    இந்த செயல்களை புரியும் கட்சியின் வேட்பாளர்களுக்கு தானே நாம் நம் வாக்குகளை விலைக்கு விற்கிறோம்.

    தேர்தலின் பொது நம் வாக்குகளை விலைக்கு விற்று விட்டு, இப்போது புலம்புவதில் என்ன பயன்.

  6. haranprasanna

    உயர்நீதி மன்றம் ஆனைமலையில் இருந்து ஒரு கல்லைக் கூட பெயர்க்கக் கூடாது என்று உத்தரவிட்டிருப்பதாக துக்ளக்கில் வாசித்தேன்.

  7. senthilkumar

    //ஒவ்வொரு கட்டுமானமும் தமிழையும் பண்பாடையும் வளர்க்கிறதென நம்பும் கூட்டமே நம்மி அதிகம்//
    கட்டுமானம் UUzhlal வளர்கும் என்பதில் என்னக்கு உடன்padu இருந்தாலும் ,இன்றைய சிற்ப கலையின் பதிவாக இத்தகைய முயற்சி மிகவும் தேவை என்பதும் மறுக்க முடியவில்லை ,இத்தகைய இடைப்பட்ட நிலையில்தான் நம்ம் ஊழல் பெருச்சாளிகள் காசு பார்கின்றினர்

  8. RV

    இந்த முயற்சி நிறுத்தப்பட்டுவிட்டதாமே! யாருக்காவது முழு விவரம் தெரியுமா?

Comments have been disabled.