«

»


Print this Post

திரும்புதல்


இன்று காலை மலேசியாவிலிருந்து சென்னை திரும்புகிறேன். விமானநிலையத்தில் நண்பர்கள் வந்து கூட்டிச்செல்வார்கள் என்று தகவல். நாஞ்சில்நாடனும் மரபின்மைந்தன் முத்தையாவும் ஏழாம் தேதிதான் திரும்புகிறார்கள். இங்கே நடக்கும் ஒரு ‘நெசவுத்தொழில்நுட்ப’ கண்காட்சியைக் காண நாஞ்சில் செல்கிறார். முத்தையா துணைக்குச் செல்கிறார்.

நான் சிங்கப்பூர் செல்வதாக இருந்தேன். ஆனால் அங்கே சில ஏற்பாடுகள் முழுமையடையாததனால் நிகழ்ச்சி ரத்து என்றார் முத்தையா. மேலும் நான் ஊர்திரும்பும் மனநிலையிலும் இருக்கிறேன். அருண்மொழிக்குக் காய்ச்சல்  என்று நான் கிளம்பும்போது அஜிதன் ·போன் செய்து சொன்னான். சிக்குன்குனியாவாக இருக்கலாம், மூட்டு வலி உள்ளது என்று டாக்டர் சொன்னாராம். ‘பார்த்துக்கொள்’ என்று அவனிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

பொதுவாக இதைப்பற்றியெல்லாம் நான் அலட்டிக் கொள்வதில்லை. ஆகவே கிளம்பும்போதே அச்சிந்தனையை மனதில் இருந்து உதறி இந்த ஆறுநாட்களில் ஒருமுறைகூட நினைக்கவும் இல்லை. இந்த இடத்தில் இருக்கும்போது இங்கேயே இருப்பதே முறை. மேலும் அஜிதன் எல்லாவற்றையும் திடமாக, புத்திசாலித்தனமாக சமாளிக்கும் திறமை கொண்டவன். நாகர்கோயில் நகரத்தையேகூட அவனிடம்  ஒப்படைத்துவிட்டு கிளம்பலாம். சைதன்யாவுக்கு ஓரளவு சமைக்கவும் தெரியும்.

இருந்தாலும் பயணம் முடியும்போது வீட்டு நினைப்பு. இனிமேல் அங்கிருக்கவே முடியும். மனம் அங்கே சென்றுவிட்டது

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/6425

2 comments

  1. ஜெயமோகன்

    மலேசியாவில் நடைபெற்ற எழுதாளர் சந்திப்பில் தங்களையும் நாஞ்சில் நாடன் அவர்களையும் சந்தித்து கருத்து பரிமற்றம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் சொன்ன பரதேசி வந்தான் கதையை நிகழ்வில் பொருத்தமாக அமைந்தது.

    வாசிப்பு பழக்கம் மலேசியவில் குறைந்து வருகிறது. ஆனால் தீவிர இலக்கியத்தை நேசிக்கும் இளையோர் எண்ணிக்கை கூடி வருக்கிறது.

    சந்திப்பில் உங்களின் சிந்தைகளை ரசித்தேன். மீன்டும் வர வேண்டுகிறென்!

    அன்புடன்
    பச்சைபாலன்

    அன்புள்ள பச்சைபாலன்

    நிகழ்ச்சியில் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நிகழ்ச்சி உற்சாகமான கருத்துப்பரிமாற்றமாக- தொய்வில்லாமல்- நிகழ்ந்தது நிறைவளித்தது.

    பார்ப்போம்
    அன்புடன்’ஜெ

  2. kanaga lakshmanan

    Dear JM,

    இந்த பயணத்தில் உங்களோடு பங்கு பெற்றதில் மகிழ்ச்சி. :-)

Comments have been disabled.