இருவழிப்பாதை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

நலமாய் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் பதிவுகள் மூலம் அறிந்துகொண்டிருக்கிறேன்.

நானும் முன்னால் அடிக்கடி கடிதம் எழுதிக்கொண்டிருந்தவன்தான். பின்னர் தொடர்ந்து படித்தாலும் கடிதம் எழுதுவதில் எனக்கு விருப்பமின்றி போனது.

நான் உங்களை தொடர்ந்து வாசிப்பதும் உங்கள் புத்தகங்களை பொக்கிஷமாக கருதி வாங்கிப்படிப்பதுமாக இருந்தாலும் நீங்கள் என்னை சரி, ஆர்வக்கோளாறில்முதலில் கடிதம் எழுதிவிட்டு காணாமல் போன கூட்டம் என நினைத்திருப்பீர்கள்என அவ்வப்போது நினைத்துக்கொள்வதுண்டு.

இன்றைக்கு மகிழவன் என்பவர் குறித்து எழுதிய கட்டுரையின் கீழ்க்கண்டபகுதியை படிக்கையில் மகிழ்ச்சி அளித்தது. :)

//என் இணையதளத்தில் தொடர்ந்து வாசகர் கடிதங்கள் எழுதும் வாசகர்களில் பலர் ஒரு கட்டத்தில் நின்றுவிடுவதுண்டு. அவர்களில் மிகச்சிலரே என்னிடமிருந்து விலகிச்சென்று விட்டவர்கள் என்று நான் அறிவேன். பிறர் தொடக்க நிலையில்எழுதிய கடிதங்களில் இருந்து மேலெழுந்து விட்டவர்கள். கேட்பதற்கும் சொல்வதற்கும் ஏதுமில்லாத நிலையில் என் எழுத்துக்களுடன் மட்டும் மானசீக உறவுள்ளவர்கள்//

வெண்முரசு நானும் என் மனைவியும் தொடர்ந்து விடாமல் வாசிக்கும் தொடர்.இதுவரை வந்த 3 பகுதிகளையும் செம்பதிப்பாகவே வாங்கிக்கொண்டிருக்கிறேன்.முதல் புத்தகம் மட்டுமே வந்திருக்கிறது. மற்ற இரண்டு பகுதிகளும் வந்துசேர வேண்டும்.

நீங்கள் வாசகர்களை சரியாக புரிந்து வைத்திருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.

இதைச் சொல்லவேண்டும் என தோன்றியதால் இக்கடிதம்.

வணக்கங்களுடன்,

ஜெயக்குமார்

அன்புள்ள ஜெயக்குமார்

என்னுடைய நல்ல வாசகர்களை நான் அந்தரங்கமாகவும் அறிவேன் என்பதை பல நிகழ்ச்சிகள் மூலம் உணர்ந்திருக்கிறேன். இலக்கியம் இருவழிப்பாதை

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 19
அடுத்த கட்டுரைஒரு லண்டன் கூட்டம்