நகைச்சுவை அரசு சு.வெங்கடேசன்

[எச்சில் இலை அறிவியல் என்ற பேரில் இந்த தளத்தில் வெளிவந்த பகடிக்கட்டுரையை ‘அப்படியே சாப்பிட்டு’ சு வெங்க்டேசன் கோவை முற்போக்கு எழுத்தாளர் சங்க கூட்டத்தில் ‘கடும் கண்டனங்கள் ‘ தெரிவித்து பொங்கி கொந்தளித்து குமுறி கண்ணீர் மல்கியிருந்தார். அதற்கான எதிர்வினை]

அன்புள்ள ஜெ.,

உங்கள் தளத்தை வாசகர்கள் மட்டும் படிப்பதில்லை.. பலவித போக்கு உள்ளவர்களும் கூட படிக்கிறார்கள், பார்க்கிறார்கள் என்பதை கவனத்தில்கொண்டு இனி வகைப்படுத்துதலை கறாராக கவனத்தில் கொள்ள கோருகிறேன்.

என் கடிதத்திற்கு தாங்கள் எழுதிய பதிலான எச்சில் இலை அறிவியல் என்பதை
நகைச்சுவை >>வாசகர் கடிதம் >> கடிதத்திற்கு நகைச்சுவை பதில்>>அறிவியல் அல்ல >> ஆணாதிக்கம் அல்ல>>அறிவுஜீவித்தனம் அல்ல>>இந்துத்துவா அல்ல>>ஆண், பெண், மாற்று பாலினம், ஊர்வன, பறப்பன, ஓடுவன, நீந்துவன மற்றும் எழுத்தாளர்கள், எழுத போகிறவர்கள், எழுத யோசிப்பவர்கள், கொள்ளு பேரர்களை எழுத்தாளர்களாக ஆக்கப் போகும் இன்றைய இளைய தலைமுறையை குறிப்பிடுவது அல்ல>> மேலும் இது கன்னியாகுமரி பார்வதிபுரம் பாகுலேயேன் மகன் ஜெயமோகன், உடையார்குடி பாரதி மகனும், தற்சமயம் முதலாளித்துவ பூர்ஷ்வ அமெரிக்காவில் வசிக்கும் பிரதீப்-க்கு எழுதிய சற்று குறியீடுகள் கொண்ட அங்கத பதில் என தெள்ளத்தெளிவாக வரையறை செய்யும்படி கேட்டு கொள்கிறேன்.

மேலும்,

தளம் திறக்கும் முன், ஆபாச வலைதளங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் நுழைக என வரும் லுலுலாய்க்கி பட்டன் போல தமிழில் எழுத, பேச தெரியாத, தமிழ் படிக்க மட்டுமே தெரிந்தவர்கள் உள்நுழைக என ஒரு icon செட் செய்ய தள நிர்வாகியை கேட்டு கொள்ளவும்.

கட்டுரைகளின் தன்மைக்கு ஏற்ப இரண்டு எலும்புகள் மண்டையோட்டுடன் கூடிய பெரிய எழுத்துகளில், இந்த கட்டுரை படிப்பது உங்கள் மனநலத்திற்கு தீங்கானது, வம்புசண்டைகளை உருவாக்க கூடியது போன்ற விதவிதமான வாசகங்களை செல்வேந்திரன் & குழுவினரை கொண்டு உருவாக்கி போட்டு கொள்ளவும்.

நற்றிணையில் சொல்லி மழைப்பாடல் பத்து பிரதிகள் வாங்கி வீட்டின்முன் அடுக்கி வைத்து கொள்ளவும்.. மணல் மூட்டைகள், பேரிகார்டுகளை விட இவை அதிக பாதுகாப்பு தரக்கூடும் என உளவுத்துறை பரிந்துரை செய்துள்ளதாக வதந்தி.

எதற்கும் முன்எச்சரிகையாக அரங்காவிடம் சொல்லி ஜம்முவிலே நல்ல மங்கி கேப் பத்து வாங்கிகொள்ளவும்.. ஒட்டு மீசையும், கன்னத்து மருவும் சேர்த்து வாங்கிக்கொண்டால் சால சிறந்தது.

மற்றபடி,

அறியாமல் சமநிலை இழந்து இச்சிறுவன் அனுப்பிய கடிதத்திற்கு, அவனுக்கு சிரிப்பு காட்டும் பொருட்டு நீங்கள் எழுதிய பதிலுக்கு, வசைபாடப்படுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்..
லிங்க் அனுப்பாமல் முதற்கடிதம் எழுதிவிட்டேனோ என்று கட்டுரையை பார்த்தால் லிங்க் இருந்தது..

https://www.facebook.com/dinakarannews/photos/a.420417614663044.88918.107459262625549/766034726767996/?type=1&theater

மீண்டும் அந்த தவறை செய்தேன்.. லிங்கை கிளிக்கி தினகரன் முகநூல் பக்கதிற்க்கு சென்று பார்த்தல் 8000 மாக லைக்கி இருந்த தாய் தமிழ் சமூகம் இப்போது 25000 லைக்கி இருந்தது.. மேலும் உற்றார் உறவினர் பெண்டு பிள்ளை மனைவிகளுக்கெல்லாம் பத்தாயிரக் கணக்கில் பகிரப்பட்டு இருந்தது.. அதோடு எங்க ஊட்ல எல்லாம் நாப்பது வருசமா நா அதேன் பண்றேன் என ஸ்டேட்மெண்ட் விட்டு லைக்குகளை அள்ளிய தாய் தெய்வங்களை கண்ணுற்று வெறியாகி பத்தினி தெய்வம் கண்ணகியை கண்மூடி தியானித்து சமநிலை அடைந்தேன்.

மேலும், தினகரன் செய்தியை ஒட்டி வாய்வழி புணர்ச்சியால் ஜீன்கள் பெண்ணுக்கு கடத்தபடுகின்றன ..எனவே ******* என்று பருவகாலம் இதழில் தலையங்கமும், அதை ஒட்டி வாய்க்காலில்
நடந்த ******** என்று டர்ட்டிஸ்டோரி தளத்தில் ஒரு கதையும் வெளியாக உள்ளதாம்.

மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன் ஜெ..

அன்புடன்,
பிரதீப்.

பின்குறிப்பு:

1.அந்த லிங்க் அனுப்பின என்னையும் நாலு பேர் திட்டி , அதுல பேமஸ் ஆகி, சன்டிவி விவாதம் நிகழ்ச்சியில் கண் சிவக்க பேசிக்கிட்டு இருப்பதாய் கொடுங்கனவு கண்டு எழுந்து இக்கடிதம் எழுதுகிறேன் ..மாலை கனவு பலிக்காது எனஆசான் ஆசி வழங்க வேண்டும்.

2. இது ஜெயமோகன் பிரதீப் என்ற பெயரில் தனக்கு தானே எழுதிய கடிதம் அல்ல.. நம்ப மறுப்பவர்களுக்கு, பிரதீப் ஆகிய என்னுடைய
பிறப்பு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், இந்திய அரசு வழங்கிய ஆதார் எண், அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் சமூக பாதுகாப்பு எண்ணின் கடைசி இலக்கங்கள் ஆகியவற்றை தர சித்தமாக இருக்கிறேன்.

*

ஒரு கட்டுரை பகடியாக எழுதப்பட்டது என்பதைக் கூட

புரிந்து கொள்ளமுடியாத முட்டாளா,

எழுத்தாளர் சு.வெங்கடேசன்?

ஒருவேளை இருந்தாலும் இருக்கும்.

அவர் இடதுசாரி சிந்தனையுள்ள

முற்போக்கு எழுத்தாளராயிற்றே….!!

எம் எஸ் ராஜேந்திரன்

*

முந்தைய கட்டுரைதேவதை
அடுத்த கட்டுரைஇமயச்சாரல் – 16