«

»


Print this Post

பகுத்தறிவும் அறிவியலும்


அன்புள்ள ஜெ,

தி ஹிந்து கட்டுரை ‘தேவை இரண்டாவது பகுத்தறிவியக்கம்’ வாசித்தேன். இரண்டாவது மூட நம்பிக்கை காலத்தைப் பற்றி வழக்கம்போல வரலாற்று பின்னணியில் வைத்து ஒரு கோட்டுச் சித்திரத்தை அளித்துள்ளீர்கள்.

நானும் அந்தப் பேராசிரியர் போல என் அனுபவத்தில் சிலரைக் கண்டிருக்கிறேன். உயர்கல்வி கற்றவர்கள். ‘சோதிடம் நியூட்டனின் இயற்பியலின் அடிப்படையில் அமைந்தது. ஏனெனில் நிறைகள் ஒன்றை ஒன்று ஈர்ப்பது போல கிரகங்கள் மனிதனை influence செய்கின்றன.’ மேலும் இ.எம் எனர்ஜி பீல்ட்ஸ் போல என்னென்னவோ சொல்லி ஹீலிங் முறைகளைப் பற்றியும் பேசக் கேட்டிருக்கிறேன்.

/இரண்டையும் புரிந்துகொள்ளாமல் குழப்பிக்கொள்ளும் இன்றைய போலி அறிவியலில் இருந்து தப்ப, இன்னொரு அறிவியக்கம் இங்கே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இரண்டாவது பகுத்தறிவியக்கம் அது./ அறிவியல் பற்றிய நம் குழும விவாதங்களில் இதை நோக்கியே பேசி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

தமிழில் உள்ள அறிவியல் நூல்கள் கூட பெரும்பாலும் explanation வகை நூல்களாகவே இருக்கின்றன. இன்னும் தமிழில் அறிவியலின் வரலாறு மற்றும் தத்துவம் பற்றி ஆழமாக எழுதப்படவே இல்லை என்று நினைக்கிறேன். கிடைக்கும் நூல்கள் கூட அரைகுறை முயற்சிகளாகவே படுகின்றன. ஒரு global view-ல் எழுதப்படவில்லை. பிற இந்திய மொழிகளில் கூட இருக்காது என்றே ஊகிக்கிறேன். ஒருவேளை பெங்காலியில் இருக்கலாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இதை எழுதும் முயற்சியாக சொல்வனம் இதழுக்கு நான் எழுதி அனுப்பிய கட்டுரை ‘இயற்பியலும் தத்துவமும்’. http://solvanam.com/?p=28379. கட்டுரையின் மொழியை http://gurunitya.wordpress.com/ தளத்திலுள்ள உங்கள் மொழிபெயர்ப்பு கட்டுரையில்-இருப்பும் அறிதலும்- இருந்து பெற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம்.

அன்புடன்
ராஜா.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/42949