«

»


Print this Post

விஷ்ணுபுரம் விழா- ரவி சுப்ரமணியம்


விஷ்ணுபுரம் விருதுவிழா 2013ல் கவிஞர், ஆவணப்பட இயக்குநர், பாடகர் ரவி சுப்ரமணியம் கலந்துகொள்கிறார்

ரவி சுப்ரமணியம் கவிஞராக தமிழில் அறிமுகமானவர். சீம்பாலில் அருந்திய நஞ்சு என்ற வலுவான படிமம் மூலம் கவனிக்கப்பட்டவர். இளமையில் முறையாக இசைப்பயிற்சி பெற்றவர். தமிழிசை மரபை நன்கறிந்தவர். சிறப்பாக பாடக்கூடியவர்

ஆனால் அவரது இடம் காட்சி ஊடகத்தில் என்று விதிக்கப்பட்டிருந்ததுபோல. அவரது சாதனைகளாக நினைக்கப்படுபவை தமிழ் இலக்கிய முன்னோடிகளைப்பற்றி அவர் எடுத்த முக்கியமான ஆவணப்படங்கள் வழியாகத்தான். ஜெயகாந்தன், எம்.வி.வெங்கட்ராம்,மா.அரங்கநாதன் ஆகியோரைப்பற்றிய அவரது ஆவணப்படங்கள் தமிழில் பெரிதும் பேசப்பட்டவை.

காட்சியூடகத்தில் ரவி சுப்ரமணியம் மட்டுமே செய்யக்கூடிய சில உள்ளன. தமிழின் இசைமரபை ஆவணப்படமாகவும் கதைப்படமாகவும் பதிவுசெய்தல். அதில் அவருக்கான வாய்ப்புகள் வரக்கூடும்.

ரவிசுப்ரமணியம் ஓர் ஆவணப்படம்

ரவி சுப்ரமணியம் எம் வி வி

கலைஞனின் உடல்மொழி

ரவிசுப்ரமணியம் பற்றி கூடு


விஷ்ணுபுரம் விழா அழைப்பிதழ்

வரும் டிசம்பர் 22 அன்று கோவையில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.
விழா அழைப்பிதழ்

Invitation_Facebook

2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

நாள் 22. 12. 2013

இடம் நாணி கலையரங்கம், மணி ஸ்கூல், பாப்பநாயக்கன் பாளையம் கோவை

நேரம் மாலை 6 மணி

நிகழ்ச்சிகள்

விருது வழங்குபவர்: இந்திரா பார்த்தசாரதி

தெளிவத்தை ஜோசப்பின் மீன்கள் சிறுகதைத்தொகுதி வெளியீடு

வெளியிடுபவர் பாலசந்திரன் சுள்ளிக்காடு

தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் நாவல் வெளியீடு

வெளியிடுபவர் இயக்குநர் பாலா

தெளிவத்தை ஜோசப்புக்கு பொன்னாடைபோர்த்தி கௌரவிப்பவர் சுரேஷ்குமார் இந்திரஜித்

தெளிவத்தை ஜோசப்பின் மனைவியை கௌரவிப்பவர் சுதா ஸ்ரீனிவாசன்

வரவேற்புரை கே.வி.அரங்கசாமி [அமைப்பாளர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்]

சிறப்புரை இந்திரா பார்த்தசாரதி

வாழ்த்துரை இயக்குநர் பாலா

கவிதைபாடுதல் பாலசந்திரன் சுள்ளிக்காடு

பாலசந்திரன் சுள்ளிக்காடு கவிதை தமிழில் ரவி சுப்ரமணியன்

வாழ்த்துரை பாலசந்திரன் சுள்ளிக்காடு

வாழ்த்துரை சுரேஷ்குமார் இந்திரஜித்

வாழ்த்துரை வி சுரேஷ்

வாழ்த்துரை ஜெயமோகன்

ஏற்புரை தெளிவத்தை ஜோசப்

நன்றியுரை செல்வேந்திரன் [விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்காக]

அரங்கில் எழுத்து, நற்றிணை, சொல்புதிது நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும் .21 காலைமுதல் நண்பர்கள் கூடுவார்கள். இலக்கிய அரட்டைகள் நிகழும்.

விஷ்ணுபுரம் விருது விழா 2013
உதவிக்கு முக்கிய தொடர்புகளும் எண்களும் 
விழா நிகழ்வுகள் குறித்த தகவல்களுக்கு:
அரங்கசாமி ((9894033123)
செல்வேந்திரன் (9003931234)
விஜயராகவன் ( 9843032131)
ஸ்ரீனிவாசன் (9884377787)
விருந்தினர்கள் தங்குமிடம்/உபசரிப்பு/நிர்வாகம்/வழி மற்றும் உதவிகளுக்கு
சேலம் ப்ரசாத் (9500940750)
விஜய் சூரியன் (9965846999)

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/42702