ஜெ.சைதன்யா ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

இந்த கடிதம் உங்களுக்கல்ல, எங்கள் சின்ன சிந்தனைவாதி சைதன்யாவுக்கு.

தலைவியே, உங்கள் மொழி நோக்கும், சமுதாய நோக்கும் என்னை செயல் இழக்க வைக்கிறது தந்தோச்சத்தால் தான்.
உங்கள் சீடனாகும் வாய்ப்பை வேண்டுகிறேன்.

நீங்கள் எழுதுவதில்லை என்பதால் தான் உங்கள் பிரதம சீடர் மூலமாக இக்கடிதத்தை எழுத நேரிட்டது. உங்கள் நேரடி எழுத்துக்களை அதிகமாக எதிர்நோக்குகிறோம். அதிலும் குறிப்பாக முறுக்கு தின்பது போல் வரும் உணர்வை வெளிப்படுத்தும் எழுத்தைக்காண அதீத ஆர்வத்தோடு இருக்கிறோம்.

உங்கள் பிரதம சீடரும், தந்தையாருமான ஜெயமோகன் எழுதுவதுகூட உங்கள் சிந்தனையின் பாதிப்பு தான் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை. தொடரட்டும் உங்கள் தொண்டு.

இப்படிக்கு,
கிஷோர்
(மலேசிய, சிங்கப்பூர் சைதன்யாவுக்கு சிந்தனையாள‌ர்கள் கழகம்)

அன்புள்ள கிஷோர்,

ஜெ புள்ளி சைதன்யா இப்போது திரைப்படங்கள் பார்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். கலைபப்டங்கள். ஒரு படம் எந்த அளவுக்கு சலிப்பூட்டுகிறதோ அந்த அளவுக்கு அது இவருக்கு பிடித்திருக்கிறது. ஏ பியூட்டிஃபுள் மைன்ட் அல்லது மொமென்டோ போன்ற படங்களை ஒருவர் எட்டுமுறை பார்க்க முடியும் என்பதை உள்ளூர் தினசரிகள் இன்னும் கவனிக்கவில்லை. பொதுவாக இவர் தன் மூத்த சகோதரனின் எதிரொலி. திரைப்பட படவிஷயத்திலும் புகைபப்டங்கள் எடுப்பதிலும் மட்டும் சற்றே சுயமாக சிந்திக்கிறார்கள். மற்றபடி இப்போது விடுமுறையில் லாவண்யா, சிவகோகிலா ,பர்வீன் போன்ற தோழிகளின் நினைவாக நாட்களை எண்ணிக் கொன்டிருக்கிறார்கள். விரைவிலேயே வம்சி புத்த நிலௌயம் சார்பில் ஜெ சைதன்யாவின் சிந்தனைகள் நூலாக வரவுள்ளன

ஜெ.சைதன்யாவின் மொழியியல் நோக்கு

ஜெ சைதன்யாவின் பிரபஞ்சம்

முந்தைய கட்டுரைஇன்னொரு கம்பராமாயணம்:ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஇயற்கைவேளாண்மை, உலகமயம்:ஒரு கடிதம்