அறம் அறக்கட்டளை விருதுகள்

தமிழகத்தில் இணையம் பயன்படுத்துவோர் எப்படியும் ஒரு இருபது சதவிகிதம் கூட இருக்க மாட்டார்கள். அதிலும் காந்தியைப் பற்றி தேடி வாசிப்பவர்கள் எத்தனை பேர் இருந்துவிட முடியும்? சராசரியாக ஒரு நாளைக்கு நூற்றி ஐம்பது பார்வையாளர்கள் வருகை தருகிறார்கள். ஒவ்வொரு கட்டுரையையும் குறைந்த பட்சம் நாற்பது பேர் வாசிக்கிறார்கள். இவைகளை கணக்கில் கொண்டால், இந்த தளத்திற்காக தினமும் குறைந்தது இரண்டு மணி நேரங்களாவது செலவழித்து வரும் எங்களின் சமூக பங்களிப்பு என்பது என்ன? இந்த தளத்தின் சமூக பங்களிப்பு தான் என்ன? தெரியவில்லை. காழ்ப்புகளும் கூச்சல்களும் நிரம்பி வழியும் இணையத்தில் காந்தி இன்று அமைதியை நிலைநாட்டிவிட்டதா என்றால் அதுவும் இல்லை. ஆனால் ஒரு சன்னமான ஒலியுடன், நிதானத்துடன், அதற்கே உரிய வசீகரத்துடன் ஊருக்கு வெளியே ஓடிக்கொண்டிருக்கும் நீரோடை போல் காந்தி இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது.

சுனீல் கிருஷ்ணனின் கட்டுரை

அறம் அறக்கட்டளை விருது பெற்றுள்ள சுனீல் கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்.

இவ்விழாவில் விருது பெற்ற

சசிப்பெருமாள் [பூரண மதுவிலக்கு கோரி உண்ணாநோன்பிருந்த காந்தியவாதி]

சதீஷ் குமார் மற்றும் அவரது மனைவி ஹேமா சதீஷ்குமார் [பழங்குடி மக்களின் கல்வியை உயர்த்த களப்பணி ஆற்றி வரும் ஆயுர்வேத மருத்துவர்கள்]

மகேந்திரன் [ கைவிடப்பட்ட மனநோயாளிகளுக்கான ஈர நெஞ்சம் அறக்கட்டளை. கோவை]

செந்தில்நாதன் [விவேகானந்த சேவாலயம்.ஆதரவற்றோர் விடுதி]

சசிதரன் மற்றும் நண்பர்கள் அமைப்பு [ ஆலயமீட்பு சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மென்பொருள்நிபுணர்கள்]

ஆகியோருக்கும் என் வணக்கம்.

முந்தைய கட்டுரைசோபானம் பற்றி…
அடுத்த கட்டுரைகதைகள் கடிதங்கள்