கதைகள் மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

தொலைதல் – ஹரன் பிரசன்னா அருமையான கதை. ஒரு விதமான சுழற்சியில் கதை மாந்தர் ஒவ்வொருவரிலும் நம் ஒவ்வொருவரிடமும் உள்ள பல விதமான எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கிறது. வாழ விரும்புகிறோம், விட்டு ஓட விரும்புகிறோம், உள்ளது உள்ளபடியே இருக்க நினைக்கிறோம்,புதியவைக்கு ஆசைப்படுகிறோம். எல்லாம் யோசிக்கும்வேளையில் …. இங்கு இருக்கத் தான் விரும்புகிறோம். குழப்பமும் தெளிவும் இருக்குமிடத்திலேயே கிடைக்கிறது.விசித்திரம்.

நன்றி

வி மணிகண்டன்

அன்புள்ள ஜெ

தனசேகரின் உறவு கதை [தலைப்பு இன்னும் கொஞ்சம் கேச்சியாக வைத்திருக்கலாம்] நல்ல கதை. உறவு என்பது வசதியினாலோ சுயநலத்தினாலோ உருவாவது அல்ல. உறவு உருவாவதற்கு நம்மால் புரிந்துகொள்ள முடியாத மன எழுச்சிமட்டும்தான் காரணம் என்று சொல்லக்கூடிய கதை. எனக்கு அதேபோல சிவா கிருஷ்ணமூர்த்தியின் கதையும் பிடித்திருந்தது

ஜெயராமன்

அன்புள்ள அண்ணா

சுரேந்திரகுமாரின் காகிதக்கப்பல் நல்ல கதை. மிகவும் பிடித்திருந்தது. கடிதங்களை வாசிக்காவிட்டால் எனக்கு கதையே புரிந்திருக்காது. நாங்கள் வெள்ளத்திலே காகிதக்கப்பல் விட்டவர்கள் தானே. எங்களை உண்மையான கப்பல் வராமலேயே ஏமாற்றிவிட்டது

தவராசா

முந்தைய கட்டுரைபுதியவர்களின் கதைகள் 7, வாசலில் நின்ற உருவம்- கே.ஜே.அசோக்குமார்
அடுத்த கட்டுரைகெ.ஜெ.அசோக்குமார்-வாசலில்நின்ற உருவம்-கடிதங்கள்