«

»


Print this Post

மொண்ணைத்தனம் பற்றி -மேலும் சில


பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன்,


“இப்படி இருக்கிறார்கள்…”
பதிவை கண்டேன். இவரைப் போன்ற மூடர்கள் தமிழகத்தின் தனி சொத்துக்கள் அல்ல. உலகம் முழுவதும் நிறைந்திருக்கிறார்கள்.

ஒத்திசைவு ராமசாமி எழுதிய பதிவு ஒன்றில் இந்த மூடர் கூட்டத்தை பற்றிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை சுட்டிக் காட்டியிருந்தார்.

கட்டுரையின் சாராம்சம் கீழ்க்கண்ட கூற்றுக்களில் அடங்கும்:

டார்வின் – “ignorance more frequently begets confidence than does knowledge”
மில்லர் – “It is one of the essential features of such incompetence that the person so afflicted is incapable of knowing that he is incompetent. To have such knowledge would already be to remedy a good portion of the offense.”
இந்த மூடர்களை சினத்துடன் எதிர்கொண்டு அவர்களின் அகங்காரத்தை உடைப்பதே அவர்களுக்கு செய்யும் பேருதவியாகும். அவர்கள் தன்னுடைய அறிவின்மை நிலையை அறிந்தாலே போதும், அடுத்தவர்கள் தப்பிக்கலாம்!
பணிவன்புடன்

லட்சுமணன்

அன்புள்ள லட்சுமணன்

எங்கும் இத்தகையோர் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் பெரும்பாலானவர்கள் சராசரிகள். ஆனால் அவர்கள் தங்களை உள்ளூர அசாதாரணங்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் அது ஒரு சமூகத்தில் விதிவிலக்காக இருக்கிறதா பொது விதியாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/36828