காகிதக்கப்பல் பற்றி..

அன்புள்ள சுரேந்திரகுமார்

உங்கள் கதையைச் சிறுகதை என்று சொல்லமுடியாது. ஆனால் உருவகக் கதை அல்லது நையாண்டிக்கதை என்று சொல்லலாம். அத்தகைய கதைகளுக்கு இலக்கியத்தில் ஓர் இடம் உள்ளது. அது நீளமானதாக இல்லாமல் சுருக்கமாகச் சொல்லக்கூடியதாக இருக்கும்போது. அதன் மையம் எந்த அளவுக்கு தைக்கும்படி இருக்கிறதோ அந்த அளவுக்கு அது வலிமையானதாக இருக்கும்.

உங்கள் கதையின் மையமே ‘இந்தியாவிலிருந்து வரும்’ கப்பலுக்கும் பிள்ளைகள் விடும் காகிதக்கப்பலுக்கும் இடையே நீங்கள் உருவாக்கியிருக்கும் மௌனமான தொடர்புதான். அதில் உள்ள மெல்லிய , துக்கம் தோய்ந்த , புன்னகைதான். அதுதான் கலையாக ஆகியிருக்கிறது.

உங்கள் கதையை நேரடியாகச் சொல்வதுபோல எழுதியிருப்பதனால் இக்கதையில் சிக்கல் இல்லை. ஆனால் நடை இன்னமும் நுண்ணிய அவதானிப்புகள் கொண்டதாக அமைந்திருக்கலாம். மழையைப்பற்றிய அவதானிப்புகள், குழந்தைகளின் விளையாட்டு பற்றிய அவதானிப்புகள். அவைதான் கதையின் சதைப்பற்று. அவற்றை உருவாக்குபவனே கதைக்கலைஞன்.

வாழ்த்துக்கள்

ஜெ

கதைகள்

12. பயணம் . சிவேந்திரன் [email protected]

11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]

10. வேஷம் பிரகாஷ் சங்கரன் [email protected]>

9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]

8. சோபானம் ராம்

7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்

6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]

5. பீத்தோவனின் ஆவி வேதா

4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]

3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]

2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]

1. உறவு தனசேகர் [email protected]

முந்தைய கட்டுரைஇந்தக் கதைகள்- பாவண்ணன் கடிதம்
அடுத்த கட்டுரைகங்கூலி பாரதம் தமிழில்